||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 85 - பாவங்கள் அழியும்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஆறாம் திருமொழி - பதினொன்றாம் பாசுரம்
தரவு கொச்சகக் கலிப்பா
ஆட் கொள்ளத் தோன்றிய*
ஆயர் தம் கோவினை*
நாட் கமழ் பூம்பொழில்*
வில்லிபுத்தூர்ப் பட்டன்*
வேட்கையால் சொன்ன*
சப்பாணி ஈரைந்தும்*
வேட்கையினால் சொல்லுவார்*
வினை போதுமே| (2)
- ஆள் கொள்ள - அனைவரையும் அடிமை படுத்திக் கொள்வதற்காக
- தோன்றிய - திரு ஆய்ப்பாடியிலேயே திருவவதரித்த
- ஆயர் தம் கோவினை - இடையர்களுக்குத் தலைவனான கண்ணனிடத்தில்
- நாள் - நாள்தோறும்
- கமழ் - மணம் வீசுகின்ற
- பூ - புஷ்பங்கள் நிறைந்துள்ள
- பொழில் - சோலைகளாலே சூழ்ந்த
- வில்லிபுத்தூர் - ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த
- பட்டன் - பெரியாழ்வார்
- வேட்கையினால் - ஆசையினால்
- சொன்ன - அருளிச் செய்த
- சப்பாணி - சப்பாணி கொட்டுதலைக் கூறிய
- ஈர் ஐந்தும் - பத்துப் பாசுரங்களையும்
- வேட்கையினால் - இஷ்டத்தோடு
- சொல்லுவார் - அனுசந்திப்பவர்களிளுடைய
- வினை - பாபங்கள் (துன்பங்கள்)
- போம் - தானாகவே அழிந்து போய் விடும்
அனைவரையும் அடிமை படுத்திக் கொள்வதற்காக திரு ஆய்ப்பாடியிலேயே அவதரித்தவனும், இடையர்களின் தலைவனுமான திருக்கண்ணபிரான் சப்பாணி கொட்டி அநுக்கிரகம் செய்ததை, நாள்தோறும் மணம் கமழும் பூக்களால் திகழும் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த பெரியாழ்வார் ஆசையினால் அருளிச் செய்த இப்பத்து சப்பாணி பாசுரங்களை அன்போடு சொல்லுபர்வகளின் பாபங்கள் விலகும்.
அடிவரவு: மாணிக்கம் பொன் பன் தூநிலா புட்டியில் தாரித்து கரந்து குரக்கினம் அளந்து அடைந்து ஆட்கொள்ள - தொடர்
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment