About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 18 January 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 96

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 66

ஸ்வக்ஷ: ஸ்வங்க³: ஸ²தா நந்தோ³ 
நந்தி³ர் ஜ்யோதிர் க³ணேஸ்²வர:|
விஜிதாத்மா விதே⁴யாத்மா 
ஸத் கீர்த்திஸ்² சி²ந்ந ஸம்ஸ²ய:||

  • 621. ஸ்வக்ஷஸ் - தாமரை போன்ற அழகிய கண்களை உடையவர். கருணையுள்ள இருண்ட அகன்ற கண்களை உடையவர்.
  • 622. ஸ்வங்க³ஸ்² - மங்களமான திருமேனியை உடையவர். அழகான உறுப்புகளையும், வசீகரிக்கும் வான உடலையும் உடையவர். 
  • 623. ஸ²தா நந்தோ³ - எப்பொழுதும் அளவற்ற ஆனந்தம் உடையவர். எல்லையற்ற பேரின்பத்தின் ஆதாரம்.
  • 624. நந்தி³ர் - ஆனந்திப்பவர். நித்ய மகிழ்ச்சியில் இருக்கிறார்.
  • 625. ஜ்யோதிர் க³ணேஸ்²வரஹ - சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் போன்ற ஒளி நிறைந்தவர்களும், குற்றமற்றவர்களும் ஆகிய நித்ய சூரிகளுக்குத் தலைவர்.
  • 626. விஜிதாத்மா - பக்தர்களால் வெல்லப்பட்ட ஆத்ம வடிவினன்.
  • 627. விதே⁴யாத்மா - பக்தர்களுக்குக் கட்டுப்பட்டவர். பக்தர்களுக்கு அடிபணியும் இயல்புடையவர்.  பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்ற மனமுவந்து அடிபணிகிறார். 
  • 628. ஸத் கீர்த்திஸ்² - நிகரில் புகழாளன். உயர்ந்தவர்.
  • 629. சி²ந்ந ஸம் ஸ²யஹ - ஐயத்துக்கு இடமின்றி அணுகுதற்கு எளியவர். எல்லா சந்தேகங்களையும் நீக்குபவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.33

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.33 

அத² சேத் த்வ மிமம் த⁴ர்ம்யம் 
ஸங்க்³ ராமம் ந கரிஷ்யஸி|
தத: ஸ்வத⁴ர்மம் கீர்திம் ச 
ஹித்வா பாப மவாப் ஸ்யஸி||

  • அத² - எனவே 
  • சேத் - எனில் 
  • த்வம் - நீ 
  • இமம் - இந்த 
  • த⁴ர்ம்யம் - அறக்கடமை 
  • ஸங்க்³ ராமம் - போரிடுதல் 
  • ந - இல்லையெனில் 
  • கரிஷ்யஸி - செய்ய 
  • ததஸ் - பின் 
  • ஸ்வத⁴ர்மம் - உனது தர்மம் 
  • கீர்திம் - புகழ் 
  • ச - மேலும் 
  • ஹித்வா - இழத்தல் 
  • பாபம் - பாவ விளைவு 
  • அவாப் ஸ்யஸி - அடைவாய்

எனவே, இந்த போரிடுதல் எனும் அறக்கடமையை, செய்யவில்லை எனில், உனது தர்மங்களையும் புகழையும் இழந்து, பாவ விளைவுகளையே நீ அடைவாய்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.31

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.31

யதா² நப⁴ ஸி மேகௌ⁴ கோ⁴ 
ரேணுர்வா பார்தி²வோ  நிலே|
ஏவம் த்³ரஷ்டரி த்³ருஸ்² யத்வம்
ஆரோ பிதம பு³த்³தி⁴பி:⁴||

  • யதா² நப⁴ ஸி - எவ்வாறு ஆகாயத்தில்
  • மேகௌ⁴ கோ⁴ - மேகக் கூட்டங்கள் உள்ளனவாகவும் 
  • அநிலே பார்தி²வோ  - காற்றில் பூமியில் உள்ள
  • ரேணுர் - பொடி படலம் உள்ளதாகவும் எண்ணப்படுகிறதோ
  • அபு³த்³தி⁴பிஹி⁴ - புத்தியற்றவர்களால்
  • ஏவம் - இவ்வாறு
  • த்³ரஷ்டரி - பரம ஆத்மாவின் இடத்தில்
  • த்³ருஸ்² யத்வம் - ஸரீரமானது
  • ஆரோ பிதம் - ஆரோபிக்கப்பட்டது

மேகங்கள், ஆகாயத்தில் தோன்றி ஆகாயத்தையே மறைத்து விடுகின்றன. பூமியிலுள்ள தூசிகள், காற்றினால் மேல் எழுப்பப்பட்டுக் காற்றையே வியாபித்துக் கொள்கின்றன. அது போல, பகவான் உலகமாக விளங்குகிறார் என்பதை உணராத மந்தமான புத்தி உடையவர், இந்தப் பிரஞ்சத்தையே பகவான் மேல் ஆரோபித்துக் கூறுகிறார்கள். உண்மையில், கண்ணால் காணப்படும் இவ்வுலகம், பகவானின் ஸ்தூல வடிவமான 'விராட் ஸ்வரூபம்'.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.31

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.31

சித்ரகூடமநு ப்ராப்ய 
ப⁴ரத்³வா ஜஸ்ய ஸா²ஸ நாத்|
ரம்யமா வஸத²ம் க்ருத்வா 
ரம மாணா வநே த்ரய:||

  • சித்ரகூடம் - சித்ரகூடத்தில் 
  • அநு ப்ராப்ய - அடைந்து 
  • ப⁴ரத்³வா ஜஸ்ய - பரத்வாஜருடைய 
  • ஸா²ஸ நாத் - ஆஜ்ஞையால் 
  • ரம்யம் - அழகான 
  • ஆவஸத²ம் - வாஸ ஸ்தலத்தை 
  • க்ருத்வா - செய்துக் கொண்டு 
  • ரம மாணா - ரமித்துக் கொண்டு 
  • வநே - வனத்தில் 
  • த்ரய: - மூவர்கள் 

பரத்வாஜரின் ஆணையால் சித்ர கூடத்தை அடைந்து, அந்த அழகிய வனத்தில், வசிப்பதற்கு ஏற்ற  அழகிய பர்ண சாலையை அமைத்துக் கொண்டு, 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - 76 - பெரியாழ்வார் திருமொழி - 1.6.2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 76 - மாயவன் கண்ணன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஆறாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்

பொன்ரை நாணொடு* மாணிக்கக் கிண்கிணி* 
தன்னரை ஆட* தனிச் சுட்டி தாழ்ந்தாட* 
என்னரை மேல் நின்றிழிந்து* உங்கள் ஆயர் தம்* 
மன்னரை மேல் கொட்டாய் சப்பாணி* 
மாயவனே! கொட்டாய் சப்பாணி|

  • பொன் - ஸ்வர்ண மயமான
  • அரை நாணொடு - அரை நாணோடு கூட
  • மாணிக்கம் கிண்கிணி - உள்ளே மாணிக்கமிட்ட அரைச் சதங்கையும்
  • தன் அரை - தனக்கு உரிய இடமாகிய இடுப்பிலே
  • ஆட - அசைந்து ஒலிக்கவும்
  • தனி - ஒப்பற்ற
  • சுட்டி - அழகுடைய சுட்டியானது
  • தாழ்ந்து - திருநெற்றியில் தொங்கி
  • ஆட - அசையவும்
  • என் அரை மேல் நின்று - என்னுடைய மடியிலிருந்து
  • இழிந்து - இறங்கிப் போய்
  • உங்கள் - உன்னுடைய பிதாவான
  • ஆயர் - இடையர்கட்கெல்லாம் தலைவரான 
  • தம் மன் - நந்த கோபருடைய
  • அரை மேல் - மடியிலிருந்து கொண்டு 
  • சப்பாணி கொட்டாய் - சப்பாணி கொட்டி அருள வேணும் 
  • மாயவனே - அற்புதமான செயல்களைப் புரிபவனே!
  • சப்பாணி கொட்டாய் - சப்பாணி கொட்டி அருள வேணும்

இடுப்பில் அணிந்த பொன்னால் செய்யப்பட்ட அரைநாண் கயிற்றோடும் , மாணிக்கங்கள் வைத்துக் கட்டிய சதங்கைகள் அழகான ஒலியெழுப்ப, நிகரற்ற நெற்றிச்சுட்டி கீழே தொங்கிய படி அசைய, என் மடியில் இதுவரை அமர்ந்திருந்த கண்ணனே எழுந்து போய் ஆயர்களின் தலைவனான உன் தந்தை நந்தகோபரின் மடியில் உட்கார்ந்து கொண்டு கைகளைக் கொட்டு. திருமாலே ! நீ கைகளை கொட்டி விளையாட வேண்டும் ! கண்ணனின் அழகை முழுமையாக அநுபவிப்பதின் பொருட்டே, தன் எதிரில் நந்தகோபர் அமர்ந்திருப்பதாக பாவித்து, கண்ணனை அவர் மடியில் அமரும்படி ஆழ்வார் முறையிட்டதாக வியாக்யானம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 021 - திருநந்திபுர விண்ணகரம் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

021. திருநந்திபுர விண்ணகரம் 
நாதன் கோயில் - கும்பகோணம்
இருபத்தி ஒன்றாவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் – 10 பாசுரங்கள்

1. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) 

  • திவ்ய ப்ரபந்தம் – 1438 - 1447 ஐந்தாம் பத்து - பத்தாம் திருமொழி

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி

செயற்கு அரிய செய்வோமைச் செய்யாமை நெஞ்சே*
மயக்குவார் ஐவர் வலியால் நயக்கலவி*
சிந்தி புர விண்ணகரம் என்பர் திருச் செங்கண் மால்*
நந்தி புர விண்ணகரம் நாடு*

  • நெஞ்சே - மனமே! 
  • செயற்கு அரிய செய்வோமை - செய்வதற்கு அருமையான தொழில்களையும் செய்யவல்ல நம்மை
  • செய்யாமல் - செய்யவொட்டாமல்
  • வலியால் மயக்குவார் - தமது வலிமையால் மயங்கச் செய்பவர்களாகிய
  • ஐவர் - ஐந்து புலன்கள் உன்னை நோக்கி
  • ‘நயம் கலவி சிந்தி - இனிமையைத் தருகின்ற சிற்றின்பத்தையே எப்போதும் நினைப்பாய்
  • விண் நகரம் புர - ஸ்வர்க்க லோகத்தை அரசாட்சி செய்வாய்
  • என்பர் - என்று துர்ப்போதனை செய்வார்கள். நீ அந்தப் பஞ்சேந்திரியங்கட்கு வசப்பட்டு அவற்றைக் கொள்ளாமல்
  • திரு செங் கண் மால் - அழகிய செந்தாமரை மலர் போன்ற சிவந்த திருக்கண்களை டைய திருமாலினது
  • நந்திபுர விண்ணகரம் - திருநந்திபுரவிண்ணகரம் என்னும் ஸ்தலத்தை
  • நாடு - எப்போதும் விரும்புவாயாக

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 87

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ராஜ சூய யாகம்|

ஜராசந்தன் இறந்தான். கிருஷ்ணர், அர்ஜுனனுடனும், பீமனுடனும் கிரி விரஜத்தில் இருந்து இந்திரப் பிரஸ்தம் நோக்கிப் பயணமானார். இதற்கிடையில் யுதிஷ்டிரர் தம்முடைய மற்றச் சகோதரர்களை எல்லாத் திக்குகளிலும் அனுப்பி, எல்ல அரசர்களும் அவரைச் சக்ரவர்த்தி என்று ஒப்புக்கொள்ளும்படி செய்து விட்டார். 

பெரும்பாலும் எல்லா அரசர்களும் யுதிஷ்டிரரிடம் அதிக மரியாதை வைத்து இருந்ததனால் அவரை எதிர்க்கவில்லை. பிறகு யுதிஷ்டிரர் கிருஷ்ணரின் அனுமதியுடன் யாகம் செய்யச் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்தார். 


யாகத்திற்கு அவர் அக்காலத்தில் சிறந்த ரிஷிகளான துவைபாயனர், பரத்வாஜர், கௌதமர், வசிஷ்டர், சியவனர், கண்வர், மைத்ரேயர், விசுவாமித்ரர் போன்றவர்களை வரவழைத்தார். பீஷ்மர், திருதராஷ்டிரர், துரோணர், கிருபர், விதுரர் முதலானவர்களை அழைத்து வருவதற்காக சகாதேவன் அஸ்தினாபுரம் சென்றான்.

பாரத நாட்டின் எல்லா அரசர்களும் யாகத்திற்கு விஜயம் செய்தார்கள். யுதிஷ்டிரர் யாகசாலையை உழுதார். அதற்குப் பிறகு யாகம் ஆரம்பித்தது. நாரதர் போன்ற தேவலோகத்து ரிஷிகளும் யாகத்திற்கு வந்தனர். 

அந்த யாகத்தின் சிறப்பைப் பற்றியும், பெருமையைப் பற்றியும் இந்திர சபையிலும் கூடப் பேசப்பட்டது. வருணன் முன்னொரு தடவை செய்த யாகத்தோடு அது ஒப்பிடப்பட்டது. யாகம் முடிந்ததும் ஒரு பிரட்சனை எழுந்தது. அக்கிரப்புஜை (முதல் பூஜை) என்னும் ஒரு பூஜை செய்யப்பட வேண்டும். அங்கு வந்திருந்தவர்களுக்குள் யார் மிகப் பெரியவரோ அவரே எல்லோராலும் பூஜிக்கப்பட வேண்டும். 

யாரை மிகப் பெரியவர் என்று தேர்ந்தெடுப்பது? யுதிஷ்டிரர் எல்லோரிடமும் மரியாதை வைத்திருந்தார். அதனால் அவருக்கு பெரிய தர்ம சங்கடமாக இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் அவர் திகைத்துக் கொண்டு இருந்தப் போது, பாண்டவர்களில் கடைசிச் சகோதரனான சகாதேவன் எழுந்து நின்று, "இங்கு முதல் மரியாதையை ஏற்க தகுதி உள்ளவர் ஒருவரே ஒருவர்தாம் இருக்கிறார். அவர்தாம் ‘கிருஷ்ணர்’. அவர் மனிதரல்ல, கடவுள், அதனால் அவரே முதல் பூஜிக்கப்பட வேண்டும்”.

இப்படிச் சொல்லிவிட்டுக் கிருஷ்ணரின் பெருமையை நன்கு உணர்ந்திருந்த சகாதேவன் தன் இருக்கையில் அமர்ந்தான். சபையில் இருந்த எல்லாப் பெரியவர்களும் அவன் கூறியதுதான் சரி என்று ஒப்புக் கொண்டார்கள். 

யுதிஷ்டிரரின் மனத்திலும் அதே எண்ணம்தான் இருந்தது. அதனால் சகாதேவனின் வார்த்தைகளை எல்லோரும் ஒப்புக் கொண்டது அவருக்கு மகிழ்ச்சியை அளித்தது. மிக்க மகிழ்ச்சியுடன், அவர் கிருஷ்ணரின் பாதங்களைப் பூஜை செய்ய ஆரம்பித்தார். ஒரு தங்கக்குடத்திலிருந்து திரௌபதி தண்ணீர் ஊற்ற, அவர் கிருஷ்ணரின் பாதங்களை அலம்பினார். அந்தத் தீர்த்தத்தை எல்லோரும் தலையில் தெளித்துக் கொண்டனர். பிறகு இப்படிப் பூஜிக்கப்பட்ட கிருஷ்ணரை எல்லோரும் கைக் கூப்பி வணங்கினர்; காலில் விழுந்து வணங்கினர்; "நமோ நாம; ஜெய, ஜெய" என்று கோஷித்தனர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 40

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

அண்டத்தின் தோற்றம்

ஸ்கந்தம் 02

ப்ரம்மா நாரதரிடம் கூறலானார். "இறைவன் முக்குணங்களுக்கு அப்பாற்பட்டவர். அவரது மாயை ரஜோ குணத்தை ஏற்று படைத்தலையும், ஸத்வ குணம் கொண்டு காத்தலையும், தமோ குணம் கொண்டு அழித்தலையும் செய்கிறது. ப்ரளய காலத்தில் ஜீவன்களும் அவற்றின் கர்மங்களும் சுபாவமும் பகவானிடமே லயித்து இருந்தன. படைக்க வேண்டிய காலம் வரும் போது, இறைவன் தன்னையே பல்வேறு ரூபங்களில் தோற்றுவிக்க எண்ணி தன் ஜீவன்களின் கர்மங்கள் மற்றும் ஸ்வபாவங்களைத் தானே ஏற்றுக் கொண்டார்.


ரஜோ குணம், ஸத்வ குணம் ஆகியவற்றால் பெருகிய மஹத் தத்வம் மாறுதல் அடைந்து மஹாபூதங்கள், பொறிகள், அவற்றின் அபிமான தேவதைகள் மற்றும் தமோ குணத்தையே மிகுதியாய்க் கொண்ட அஹங்கார தத்வம் ஆகியவற்றைத் தோற்றுவித்தது.

அஹங்கார தத்வம் மேலும் மாறுதலை அடைந்து மஹாபூதங்களின் சக்தியான வைகாரிகம், தைஜஸம், தாமசம் ஆகியவை வெளிப்பட்டன. இவை முறையே அறிவு, செயல், பொருள் எனப்படும்.


தாமஸ அஹங்காரமே ஐம்பெரும் பூதங்களின் தோற்றத்திற்குக் காரணம். இதில் இருந்து ஆகாயம் தோன்றியது. இதன் தன்மாத்திரையும் குணமும் ஒல் இ ஆகும். இதன் வழியே பார்ப்பவனையும் பார்க்கப்படும் பொருளையும் அறியலாம்.

ஆகாயத்தில் இருந்து வாயு வெளிப்பட்டது. அது ஒலியையும், தொடு உணர்வையும் குணங்களாகக் கொண்டது. இதுவே உயிர் வாழக் காரணமான ப்ராணனாகவும், பொறிகளின் வல் இமைக்குக் காரணமான ஓஜஸ் திறனாகவும், மன வல் இமைக்குக் காரணமான ஸஹஸ் (உற்சாகம்) திறனாகவும், உடல் வலிமைக்குக் காரணமான பலமாகவும் ஆகிறது.

காலம், கர்மம், சுபாவம் ஆகியவற்றால் தூண்டப்பட்ட வாயுவில் இருந்து தேஜஸ் (அக்னி) தோன்றியது. வாயுவில் இருந்து தோன்றியதால், ஒலி, தொடு உணர்ச்சி ஆகிய குணங்களும் உண்டு.


தேஜஸில் இருந்து (ஒளி) நீர் தோன்றியது. இதன் குணம் ரஸம் (சுவை) ஆகும். இதற்கு ஒலி, உருவம், தொடு உணர்ச்சி ஆகிய குணங்களும் உண்டு.

நீரில் இருந்து மண் தோன்றியது. இதன் குணம் மணம். நீரில் இருந்து தோன்றியதால் ஒலி, தொடு உணர்ச்சி, உருவம், சுவை ஆகிய குணங்களும் உண்டு.

மண் ஒன்றிலேயே ஐங்குணங்களும் உள்ளன. இவை அனைத்தும் தாமஸ அஹங்காரத்தில் இருந்து வந்தவை. ஸாத்வீக அஹங்காரத்தில் இருந்து மனமும் அதன் தேவதையான சந்திரனும் வந்தார்கள். மேலும், செயற் புலன்கள் ஐந்து மற்றும் அறிவுப் புலன்கள் ஐந்தின் தேவதைகள் அனைத்தும் தோன்றின.

ஒலிக்கு எண் திசைக் காவலர்களும், தொடு உணர்ச்சிக்கு வாயு தேவனும், ஒளிக்கு சூரியனும், சுவைத் திறனுக்கு வருணனும், (மணம்) கந்த சக்திக்கு அசுவினி தேவர்களும், வாக் சக்திக்கு அக்னியும், கைகளுக்கு இந்திரனும், கால்களுக்கு உபேந்திரனும், ஜீரண சக்திக்கு மித்திரனும், உபஸ்தம் என்ற ஜனன சக்திக்கு ப்ரஜாபதியும் பத்து தேவதைகள் ஆவார்கள்.

ராஜஸ அலங்காரத்தில் இருந்து காது, தோல், மூக்கு, கண், நாக்கு ஆகிய ஐந்து அறிவுப் புலன்களும், சொல் (வாக்கு), கைகள், பாதங்கள், விஸர்ஜன இந்திரியம் (பாயு), ஜநநேந்திரியம் (உபஸ்தம்) ஆகிய ஐந்து செயற் புலன்களும் தோன்றின. அறிவுச் சக்தியான புத்தியும், செயல் திறனான ப்ராணனும் ராஜஸ அஹங்காரத்தின் செயல்கள். இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணையாததால், அவைகள் தங்கி இன்பம் அனுபவிக்க கருவியான உடலை உண்டாக்க முடியவில்லை.

இறைவன் இவைகளைத் தூண்டியதும் அவை ஒன்று இணைந்து இந்த ப்ரும்மாண்டத்தையும், பிண்டத்தையும் (உடல்) தோற்றுவித்தன.  

உயிரற்ற ப்ரும்மாண்டம் பல்லாயிரம் ஆண்டுகள் நீரிலேயே கிடந்தது. அனைத்திற்கும் ஜீவனை அளிக்கும் இறைவன் காலம், கர்மம், சுபாவம் இவற்றை ஏற்று அதை ஜீவன் உள்ளதாக்கினார். அந்த அண்டத்தைப் பிளந்து கொண்டு விராட் புருஷனாகத் தோன்றினார்.

ப்ரும்ம ஸ்வரூபத்தை அறிந்தவர்கள் விராட் புருஷனின் தொடைகளுக்குக் கீழாக அதலம் முதலிய கீழ் ஏழு லோகங்களையும், தொடைகளுக்கு மேல், பூமி முதலான மேல் ஏழு லோகங்களையும் உணர்கிறார்கள்." முன்பே விளக்கப்பட்ட விராட் புருஷரின் ஸ்வரூபத்தை இங்கு மீண்டும் வர்ணிக்கிறார் ப்ரும்மா.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்