About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 18 January 2024

திவ்ய ப்ரபந்தம் - 76 - பெரியாழ்வார் திருமொழி - 1.6.2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 76 - மாயவன் கண்ணன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஆறாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்

பொன்ரை நாணொடு* மாணிக்கக் கிண்கிணி* 
தன்னரை ஆட* தனிச் சுட்டி தாழ்ந்தாட* 
என்னரை மேல் நின்றிழிந்து* உங்கள் ஆயர் தம்* 
மன்னரை மேல் கொட்டாய் சப்பாணி* 
மாயவனே! கொட்டாய் சப்பாணி|

  • பொன் - ஸ்வர்ண மயமான
  • அரை நாணொடு - அரை நாணோடு கூட
  • மாணிக்கம் கிண்கிணி - உள்ளே மாணிக்கமிட்ட அரைச் சதங்கையும்
  • தன் அரை - தனக்கு உரிய இடமாகிய இடுப்பிலே
  • ஆட - அசைந்து ஒலிக்கவும்
  • தனி - ஒப்பற்ற
  • சுட்டி - அழகுடைய சுட்டியானது
  • தாழ்ந்து - திருநெற்றியில் தொங்கி
  • ஆட - அசையவும்
  • என் அரை மேல் நின்று - என்னுடைய மடியிலிருந்து
  • இழிந்து - இறங்கிப் போய்
  • உங்கள் - உன்னுடைய பிதாவான
  • ஆயர் - இடையர்கட்கெல்லாம் தலைவரான 
  • தம் மன் - நந்த கோபருடைய
  • அரை மேல் - மடியிலிருந்து கொண்டு 
  • சப்பாணி கொட்டாய் - சப்பாணி கொட்டி அருள வேணும் 
  • மாயவனே - அற்புதமான செயல்களைப் புரிபவனே!
  • சப்பாணி கொட்டாய் - சப்பாணி கொட்டி அருள வேணும்

இடுப்பில் அணிந்த பொன்னால் செய்யப்பட்ட அரைநாண் கயிற்றோடும் , மாணிக்கங்கள் வைத்துக் கட்டிய சதங்கைகள் அழகான ஒலியெழுப்ப, நிகரற்ற நெற்றிச்சுட்டி கீழே தொங்கிய படி அசைய, என் மடியில் இதுவரை அமர்ந்திருந்த கண்ணனே எழுந்து போய் ஆயர்களின் தலைவனான உன் தந்தை நந்தகோபரின் மடியில் உட்கார்ந்து கொண்டு கைகளைக் கொட்டு. திருமாலே ! நீ கைகளை கொட்டி விளையாட வேண்டும் ! கண்ணனின் அழகை முழுமையாக அநுபவிப்பதின் பொருட்டே, தன் எதிரில் நந்தகோபர் அமர்ந்திருப்பதாக பாவித்து, கண்ணனை அவர் மடியில் அமரும்படி ஆழ்வார் முறையிட்டதாக வியாக்யானம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment