About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 7 August 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

பூர்வ பாகம் (முற்பகுதி) பாகம் 2

ஓம் நமோ விஷ்ணவே ப்ரப⁴ விஷ்ணவே||
ஸ்ரீ வைஸ²ம் பாயந உவாச|
ஸ்²ருத்வா த⁴ர்மா ந ஸே²ஷேண 
பாவநாநி ச ஸர்வஸ:| 
யுதி⁴ஷ்டிர: ஸா²ந்த நவம் 
புநரே வாப்⁴ய பா⁴ஷத||


ஸர்வஸ: - ஸர்வஸஹ
யுதி⁴ஷ்டிர: - யுதி⁴ஷ்டிரஸ்²

வியாஸரின் மாணாக்கர் வைஸம் பாயனர். ஜனமே ஜயன் என்னும் மன்னனுக்குப் பாரதத்தை உபதேசித்தவர். ஜனமே ஜயன் என்னும் மன்னவன் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் பெருமையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்னும் அவாவினால், வைஸம் பாயனர் ஜனமே ஜயனுக்கு இதனை உபதேசித்தார்.

ஸ்ரீ ஸஹஸ்ர நாமத்துக்குப் பீடிகையாகத் தொடங்குகிறது இந்த வரி. ஸ்ரீவைஸம் பாயனர் ஜனமே ஜயனிடம் கூறியது. இப்படித் தொடங்குகிறது ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம உபதேசம். எல்லாத் தருமங்களையும், பாவங்கள் அனைத்தையும் போக்கும் முறைகளையும் பீஷ்மர் தருமருக்குக் கூறி வந்தார். இவை அனைத்தையும் ஒன்று விடாமல் தருமர் பீஷ்மரிடம் கேட்டறிந்தார். மேலும் பீஷ்மரை நோக்கித் தருமர் மீண்டும் கேட்கலானார். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - ஆறாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

006 பிண விருந்திட்டேனோ கண்டா கர்ணனைப் போலே|

கண்டா கர்ணன் என்பவன் பரம சிவ பக்தன். அவன் பிணத்தை தின்னு பிழைப்பவன். சிவ பக்தனாக இருந்ததால் விஷ்ணு நாமமே ஆகாது. காதுல மணி கட்டி கொண்டு இருப்பான். யாராவது விஷ்ணுவின் நாமத்தை சொன்னால் அந்த நாமம் காதில் விழக் கூடாது என்று உடனே தலையை ஆட்டுவான். அப்பொழுது காதில் இருக்கும் மணி ஆடி சத்தத்தை எழுப்பும். அந்த சத்தத்தில் நாமம் காதில் விழாது. 


காதில் மணி இருந்ததால் அவனுக்கு கண்டா கர்ணன் என்று பெயர். அந்த அளவுக்கு சிவ பக்தன். அவனுக்கு வேண்டிய அனைத்தையும் சிவபெருமான் பண்ணினார்.  ஒரு நாள் கண்டா கர்ணனுக்கு இந்த வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டு விட்டது. அடியேனுக்கு முக்தி குடுக்க வேண்டும் என்று சிவபெருமானிடம் பிரார்த்தித்தான். "இது வரை நீ கேட்டதையெல்லாம் கொடுத்தேன். இது குடுக்க என்னால் இயலாது. அதை நீ மோக்ஷத்தை கொடுக்க கூடிய சக்தி படைத்த ஜனார்தனனிடம் தான் கேட்க வேண்டும். அங்கு போய் கேள்" என்று சிவபெருமான் சொல்லி அனுப்பினார். 


கண்டா கர்ணனுக்கு இப்போது பயம் வந்து விட்டது. அவன் நாமமே கேட்க கூடாது என்று இருந்தவன். முதல் முறையாக பார்க்க போறோம் என்ற நடுக்கம். தன் காதுகளில் கட்டியிருந்த மணிகளை அகற்றினான். முதன் முறையாக போகும் போது வெறும் கையோடு போக முடியாதே. ஏதாவது சமர்ப்பிக்க வேண்டுமே! அவனிடம் எதுவுமே கிடையாது. அவன் எப்பொழுதும் பிணத்தோடேயே இருப்பவன். யோசித்து அப்பொழுது தான் உயிர் பிரிந்த ஒரு பிராமணப் பிணமாக எடுத்துக் கொண்டு சமைத்து பக்குவப் படுத்தினான். கண்டா கர்ணன், கிருஷ்ண அவதாரக் காலத்தில் வாழ்ந்ததால், துவாரகைக்கு செல்ல கிளம்பினான். பகவானை நேரில் சந்தித்து தான் கொண்டு வந்ததை நிவேதனம் செய்தான். "இதை தேவரீர் போஜனம் பண்ணி உபகாரமாக கொள்ள வேண்டும்" என்று பெருமானிடம் கூறினான். அதையும் பெருமான் ஸ்வீகரித்துக் கொண்டார். அந்த இடத்தில் அவன் என்ன கொண்டு வந்தான் என்று பார்க்கவில்லை பெருமான். அவனுடைய நோக்கத்தையும், பக்தியையும், நம்பிக்கையையும் பார்த்தார். அதனால் அதை ஏற்றுக் கொண்டு அவனுக்கு முக்தி கொடுத்தார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “எது கொடுத்தாலும் அவன் ஏற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கை என்னிடம் இல்லையே! அனைவரையும் ஒரே மாதிரியாக தான் பெருமான் பார்க்கிறான் என்ற ஞானம் எனக்கில்லையே! சிவ பக்தனாக இருந்தாலும் அந்த ஞானம் இருந்து பெருமானுக்கு கொண்டு போய் சமர்ப்பித்தானே! அப்படி எனக்கு தோன்றவில்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 001 - திருவரங்கம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

001. திருவரங்கம் 
ஸ்ரீரங்கம் - திருச்சி 
முதலாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ ரங்கநாத பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ ரங்கநாயகி தாயார் ஸமேத ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் 
திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: ஸ்ரீ ரங்கநாதர்
  • பெருமாள் உற்சவர்: பெரிய பெருமாள், நம்பெருமாள், அழகிய மணவாளன் 
  • தாயார் மூலவர்: ஸ்ரீரங்க நாச்சியார்
  • தாயார் உற்சவர்: பெரிய பிராட்டியார்
  • திருமுக மண்டலம் திசை: தெற்கு
  • திருக்கோலம்: புஜங்க சயனம்
  • புஷ்கரிணி: சந்திர    

  • தீர்த்தம்:  வில்வ, சம்பு, பகுள, பலாச, அசுவ, ஆம்ர, கதம்ப, புன்னாக, காவேரி, வேதச் சுரங்கம், கொள்ளிடம்         

  • விமானம்: ப்ரணவாக்ருதி
  • ஸ்தல விருக்ஷம்: புன்னை
  • ப்ரத்யக்ஷம்: தர்ம வர்மா, ரவிதர்மன், காவேரி, விபீஷணன், சந்திரன் 
  • ஆகமம்: பாஞ்சராத்ரம் 
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்: 11 ஆழ்வார்கள்
  • பாசுரங்கள்: 249

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

தானாகவே உண்டான ஸ்தலம். (ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரம்). பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்தலம். பட்டர், வடக்குத் திருவீதிப் பிள்ளை, பிள்ளை உலகாசிரியன், பெரிய நம்பி இவர்களின் அவதார ஸ்தலம். ஸ்வாமி தேசிகனுக்குப் பெரிய பெருமாள் "கவிதார்க்சிக ஸிம்ஹம்" என்றும், தாயார் "ஸர்வந்தந்த்ர ஸ்வதந்த்ரர்" என்றும் விருதுகள் வழங்கிய ஸ்தலம். இப்பெருமானின் பாதுகைகள் மீது தான் "பாதுகா ஸஹஸ்ரம்" என்ற உயர்ந்த காவியத்தை ஸ்ரீ தேசிகன் இயற்றினார். கம்ப ராமாயணம் அரங்கேற்றப்பட்ட இடம். திருமங்கை ஆழ்வார் மதில் கட்டி கைங்கர்யம் செய்த ஸ்தலம். தொண்டரடிப்பொடி ஆழ்வார் நந்தவனம் அமைத்து திருவரங்கனை அழகு செய்த ஸ்தலம். நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தை ராக தாளத்தோடு இசைக்கும் அரையர் சேவை நடைபெறும் ஸ்தலம். 

108 திவ்ய தேசங்களிலே முதன்மையானதாக "கோயில்" என்ற சிறப்பு பெயருடனும் விளங்குகிறது. காவிரி கொள்ளிட நதிகளின் நடுவே அமைந்துள்ளது. நம்பெருமாளின் திவ்ய ஆக்ஞையின்படி ஸ்ரீ மணவாள மாமுனிகள் இத்தலத்தில் திருவாய்மொழி காலக்ஷேபம் ஸாதித்தார். நம்பெருமாள், பகவத் விஷய சாற்றுமுறை அன்று குழந்தையாக வந்து நின்று "ஸ்ரீ சைலேச தயாபாத்ரம்" தனியனை அருளிச் செய்து மணவாள மாமுனிக்கு பஹுமானமாக அளித்தார் என்பது தனிச்சிறப்பு. 

இத்தல ரங்கநாதர் திருப்பாற்கடலில் இருந்து தோன்றியவர். இவரை பிரம்மா நெடுங்காலமாக பூஜித்து வந்தார். ரங்கநாதருக்கு நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார். சூரிய குலத்தின் வழித் தோன்றலான ராமபிரான் அயோத்தியில் இந்த ரங்கநாதரை வழிபாடு செய்து வந்தார். ராவணன் சீதையை கடத்தி சென்ற போது, அவனிடமிருந்து சீதையை மீட்க விபீஷணன் உதவினான். ராமரின் முடிசூட்டு விழாவை காண வந்த விபீஷணனுக்கு, தான் பூஜித்து வந்த ரங்கநாதரை அளித்தார் ராமர். விபீஷணன் அதை இலங்கைக்கு எடுத்து செல்லும் வழியில் காவிரி ஆற்றங் கரையில் வைத்து ஓய்வெடுத்து விட்டு திரும்ப எடுக்கும் போது தரையை விட்டு வரவில்லை. அது கண்டு கலங்கிய விபீஷணனுக்கு அப்பகுதி மன்னன் தர்மவர்மன் ஆறுதல் கூறினான். ரங்கநாதரும் காவிரிக் கரையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றார். விபீஷணனைத் தேற்றும் பொருட்டு அவர், தாம் விபீஷணன் இருக்கும் தென் திசை இலங்கை நோக்கி பள்ளி கொண்டு அருள்வதாக உறுதியளித்தார். இஷ்வாகு மன்னராலே சரயூ நதியில் தென்கரையில் அயோத்தியில் ஸ்தாபிக்கப்பட்டு, ஸ்ரீராமர் வரை அனைத்து மன்னர்களாலும் ஆராதிக்கப்பட்டார் அக்கோயில் காலப் போக்கில் வெள்ளப் பெருக்கில் மண்ணில் மறைந்து போக, தர்ம சோழ மரபில் வந்த கிள்ளி வளவன் இக்கோயிலை சிறப்புற அமைத்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - பொது தனியன் 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

நம்மாழ்வார் தனியன்
(ஆளவந்தார் அருளிச் செய்தது)

4. மாதா பிதா யுவதயஸ் தநயா விபூ⁴தி:*
ஸர்வம் யதே³வ நியமேந மத³ந்வயாநாம்* 
ஆத்³யஸ்ய ந: குலபதேர் வகுளா பி⁴ராமம்* 
ஸ்ரீமத் தத³ங்க்⁴ரி யுக³ளம் ப்ரணமாமி மூர்த்⁴நா|

  • மாதா - பிரியத்தையே வேண்டி இருக்கும் மாதாவைப் போலே உபகாரராய் இருக்கை
  • பிதா - பாத்ரமாத்ரம் என்னும்படி உத்பாதகனாய் பிதா பண்ணும் உபகாரத்தை பண்ணுமவர் என்கை
  • யுவதயஸ் - இவ்விருவரையும் மறந்து விரும்பும் யுவதிகளைப் போலே நெஞ்சுக்கு இனியராய் இருக்கை
  • தனயா - அவர்களுடைய யௌவனத்தை அழிய மாறி பெற்றவராய் புத்ரர் பண்ணும் உபகாரத்தை பண்ணுமவர் என்கை
  • விபூதிஸ் - ஐஸ்வர்யம் போலே உத்தேச்யராய் இருக்குமவர் என்கை
  • சர்வம்- சர்வ ஐஹிகங்களுமாய் இருக்கை
  • யதேவ - அவதாரணத்தால் 
  • நியமேன - அவருக்கு பிரியம் என்று போமது ஒழிய ப்ராமாதிகமாகவும் புறம்பு போகக் கடவது அன்றிக்கே இருக்கை
  • மத் அந்வயாநாம் - என்ற உபய சந்தான ஜாதர்க்கு
  • ஆத்யஸ்ய ந - ஸ்ரீ வைஷ்ணவ சந்தானத்துக்கு பிரதம ஆச்சார்யர் என்கை 
  • குலபதேர் - ஸ்திரீக்கு பர்த்ரு குலம் போலே கோத்ர ரிஷியும் அவரே 
  • வகுளாபிராமம் - திருத் துழாயால் அலங்க்ருதமான பகவத் சரணார விந்தங்களை வ்யாவர்த்திக்கிறது
  • ஸ்ரீ மத் - ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயுடன் நித்ய சம்யுக்தமாயிருக்கை
  • தத் அங்க்ரி யுகளம் - அது என்னுமது ஒழிய பேசி முடிய ஒண்ணாது என்கை
  • யுகளம் - சேர்த்தியால் வந்த அழகை யுடைத்தாய் இருக்கை
  • ப்ரணமாமி மூர்த்நா - ஆழ்வார் உடைய படிகளை நினைத்தவாறே நம-என்று நிற்க மாட்டாதே அவர் திருவடிகளில் தலையை சேர்க்கிறார்

இதுவரை பெறு மதிப்புடன் கருதி வந்த என்னுடய தாய், தந்தை, குழந்தைகள் மற்றும் சம்பத்துக்கள் யாவும் இனி நம்மாழ்வார் திருவடியல்லாது மற்றொன்றாகாது. வகுளாபரண மாலை சூடப்பட்டவரும், எல்லோராலும் போற்றப் படுபவருமான நம்மாழ்வானின் திருவடிகளை என் தலையால் வணங்குகின்றேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - த்யான ஸ்லோகம் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்⁴யான ஸ்லோகம் - 3

ப்ரபன்ன பாரிஜா தாய, 
தோத்ர வேத் ரைக பாணயே|
ஜ்ஞான முத்³ராய க்ருஷ்ணாய, 
கீ³தாம் ருத து³ ஹே நம꞉||

ஆச்ரயித்தவர்களுக்கு கற்பகத் தருவைப் போல் வேண்டுவதையும் மேலும் அவர்க்கு நன்மை தரும் எல்லாவற்றையும் அளிக்கும், சாட்டைக் குச்சியையும் கடிவாளத்தையும் கையில் கொண்டு பார்த்தசாரதியாக, இன்னொரு கையில் ஞான முத்திரையுடன், கீதை என்கிற பாலைக் கறந்து, அர்ஜுனனுக்கு உபதேசம் அளித்த கிருஷ்ணனுக்கு நமஸ்காரம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - த்யான ஸ்லோகங்கள்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே|
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே||

ஶுக்லாம் பரதரம் விஷ்ணும் ஸஸிவர்னம் சதுர்புஜம்|
ப்ரஸந்ந வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே||

ரமாபதி பதாம் போஜ பரிஸ்புரித மானஸம்|
ஸேநாபதிம் அஹம் வந்தே விச்வக்ஷேனம் நிரந்தரம்||
ஸ்ரீகாந்தோ மாதுலோ யஸ்ய ஜனனீ ஸர்வ மங்களா|
ஜனக: சங்கரோ தேவ: தம்வந்தே குஞ்ஜராரனனம்||

பகவன் நாம ஸாம்ராஜ்ய லக்ஷ்மீ ஸர்வஸ்ய விக்ரஹம்|
ஸ்ரீமத் போதேந்த்ர யோகேந்த்ர தேஸீகேந்த்ரம் உபாஸ்மஹே||
ப்ரஹ்லாத நாரத பராஸர புண்டரீக வ்யாஸ 
அம்பரீஷ ஸுக ஸௌநக பீஷ்ம தால்ப்யான்|
ருக்மாங்கத அர்ஜுன வஷிஷ்ட விபீஷனாதீன் 
புன்யாநிமான் பரம பாகவதான் ஸ்மராமி||

ஜந்மாத்யஸ்ய யதோன்வயா திதரத ச்சார்தேஷ் ஸ்வபிந்ஞ: ஸ்வராட்|
தேநே ப்ரஹ்ம ஹ்ருதாய ஆதிகவயே முஹ்யந்தி யத்ஷூரய:||
தேஜோ வாரி ம்ருதாம் யதா விநிமயோ யத்ர த்ரிஸர்கோ ம்ருஷா|
தாம்நா ஸ்வேத ஸதா நிரஸ்த குஹகம் சத்யம் பரம் தீமஹி||

தர்ம ப்ரோஜ்ஜித கைதவோ த்ர பரமோ நிர்மத்ஸராநாம் ஸதாம்|
வேத்யம் வாஸ்தவ மத்ர வஸ்து ஸிவதம் தாபத்ர யோன்மூலனம்||
ஸ்ரீமத் பாகவதே மஹா முனிக்ருதே கிம் வா பரைரீஸ்வர:|
ஸத்யோ ஹ்ருத் ய வ்ருத்யதே அத்ரக்ருதிபி: ஶூஶ்ரூஷிபி ஸ்தத்க்ஷ்ணாத்||

நிகம கல்பதோர் களிதம் பலம் ஸுகமுகா தம்ருத த்ரவஸம்யுதம்|
பிபத பாகவதம் ரஸமாலயம் முஹுரஹோ ரஸிகா புவிபாவுகா:||

யம் பிரவ்ரஜந்த மநுபேத மபேத க்ருத்யம் 
த்வைபாயனோ விரஹகாதர ஆஜுஹாவ|
புத்ரேதி தன்மய தயா தரவோ பிநேது 
ஸ்தம் சர்வ பூதஹ்ருதயம் முநிமானதோஸ்மி||

ய: ஸ்வாது பாவ மகில ஸ்ருதிசாரம் ஏகமத்யாத்ம 
தீப மதி திதீர்ஷதாம் தமோந்தம்|
ஸம்ஸாரிணாம் கருணயா ஆஹ புராண குஹ்யம் 
தம் வ்யாஸ ஶூநும் உபயாமி குரூம் முனீநாம்||

நாராயணம் நமஸ்க்ருத்ய நரம் சைவ நரோத்தமம்|
தேவீம் சரஸ்வதீம் வ்யாஸம் ததோ ஜயமுதீரயேத்||

கிருஷ்ணாய வாசு தேவாய தேவகி நந்தநாய ச|
நந்தகோப குமாராய கோவிந்தாய நமோ நம:||

நம: பங்கஜ நாபாய நம: பங்கஜ மாலினே|
நம: பங்கஜ நேத்ராய நமஸ்தே பங்கஜாங்க்ரயே||

ஸ்ரீமத் பாகவதாக்யோ யம் பிரத்யக்ஷ: க்ருஷ்ண ஏவஹி|
ஸ்வீக்ருதோ ஸி மயாநாத முக்தை யர்தம் பவசாகரே||

யோகீந்த்ராணாம் த்வதங்கேஷ்வதி 
கஸு மதுரம் முக்தி பாஜாம் நிவாஸோ|
பக்தாநாம் காம வர்ஷத்யுதரு கிஸலயம் நாததே பாதமூலம்||
நித்யம் சித்தஸ்திதம் மே பவனபுரபதே 
க்ருஷ்ண காருண்ய ஸிந்தோ|
ஹ்ருத்வா நிஸ்ஸேஷ தாபான் பிரதிஷது 
பரமானந்த ஸந்தோஹ லக்ஷ்மீ||

நாம சங்கீர்த்தனம் யஸ்ய சர்வ பாப ப்ரநாஸநம்|
ப்ரணாமோ துக்க ஸமனஸ் தம் நமாமி ஹரிம் பரம்||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

யஸ்ய ஸ்மரண மாத்ரேண 
ஜந்ம ஸம்ஸார ப³ந்த⁴நாத்:| 
விமுச்யதே நமஸ் தஸ்மை 
விஷ்ணுவே ப்ரப⁴ விஷ்ணவே||


ப³ந்த⁴நாத்: - ப³ந்த⁴நாத்து

ஸர்வ வல்லமை பொருந்தியவர் விஷ்ணு. பிறவித் துன்பமாகிய தளையானது, அப்பெருமானை நினைத்த மாத்திரத்திலேயே விடுபட்டுப் போய் விடும். அப்படிப்பட்ட ஸர்வ வல்லமை பொருந்திய மகா விஷ்ணுவை வணங்குவோம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - ஐந்தாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

005 பிணம் எழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே|

தொண்டைமான் சக்கரவர்த்தி ஸ்ரீனிவாச பெருமானிடம் மிகவும் பக்தி கொண்டிருந்தான். பெருமாள் தன்னிடம் இருந்த சங்கு சக்கரத்தையே அவனிடம் கொடுத்திருந்தார். அந்த அளவுக்கு பெருமானுக்கு மிகவும் நெருங்கினவர்.


கூர்மம் என்றொரு பிராமணர் இருந்தார். அவருக்கு காசி சென்று ஸ்ரார்தம் பண்ண வேண்டும் என்று மிகவும் ஆசை. ஆனால் அப்படி பண்ண முடியாமலேயே ப்ராணம் போய் விட்டது. அவருடைய குமாரர் பெயர் கிருஷ்ணன் ஷர்மா. அவருக்கும் காசிக்கு போகணும்னு ஆசை. போய்ட்டு வர நாட்கள் ஆகும் என்று தன்னுடைய பத்தினி பிள்ளைகளை சக்கரவர்த்தியிடம் ஒப்படைத்து விட்டு சென்றார். பிரஜை என்ன கேட்டாலும் ராஜா செய்ய வேண்டும் என்பதால் சக்கரவர்த்தியும் பார்த்துக் கொள்வதாக சொன்னார். அலுவல் விவகாரங்களில் ஈடுபட்டிருந்த சக்கரவர்த்தி, ஷர்மாவின் குடும்பம் என்ன ஆயிற்று என்பதை கவனிக்க மறந்து விட்டார். அவர்கள் சாப்பாடு சரி இல்லாமல் இறந்தே விட்டனர். 

ஷர்மாவும் காரியங்கள் முடித்து விட்டு திரும்பி வந்தார். வந்ததும் சக்கரவர்த்தியிடம் சென்று தன்னுடைய பத்தினி பிள்ளைகளை கேட்கிறான். அப்பொழுது தான் சட்டென்று ராஜாவிற்கு ஞாபகமே வந்தது. இரு என்று சொல்லி உள்ளே போய் பார்த்தவர் அங்கு அவர்கள் உயிரோடு இல்லாமல் பிணமாகி போனதை பார்த்தார். ராஜாவிற்கு என்ன பண்ணுவது என்று புரியவில்லை. தன் கடமையிலிருந்து தவறி விட்டதாக வருந்தினார். பயத்தில் அவரிடம் வந்து "ஸ்ரீனிவாச பெருமாளை சேஷாசலத்தில் சேவிக்க போய் இருக்கிறார்கள். இரண்டு நாட்கள் கழித்து வருவார்கள் என்று பொய் சொன்னார் சக்கரவர்த்தி. பொய் சொல்லிவிட்டு வந்தவருக்கு என்ன பண்ணுவது என்று புரியாமல் நேராக ஸ்ரீனிவாச பெருமானிடம் போய் நின்றார். தொண்டைமானுக்கு ஏதோ ஒரு ஆவேசமான நம்பிக்கை பெருமான் கை விட்டுட மாட்டான் என்று. "அடியேன், தேவரீர் கைங்கர்யம் பண்ணினது உண்மை, ராஜ்யத்தை பார்த்து கொண்டது உண்மை. அறியாமல் தப்பு பண்ணி விட்டேன். தேவரீர் தான் என்னை ரக்ஷித்து ஆக வேண்டும். வேறு வழியே இல்லை" என்று சொல்லி திருவடிகளை பற்றி கொண்டார்.  அதற்கு பெருமான் அந்த பிணத்தை எடுத்துக் கொண்டு வா என்று சொன்னார். அந்த இரண்டு பிணங்களையும் பெருமான் முன்னால் வைக்கிறார் சக்கரவர்த்தி. பெருமான் அனுக்ரஹத்தாலே அவர்கள் உயிருடன் எழுந்து, பின் ஷர்மாவோடு அவர்களை திருப்பி அனுப்பி வைக்கிறார் சக்கரவர்த்தி. 

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “ஸ்ரீனிவாச பெருமானிடத்தில் சக்கரவர்த்திக்கு இருந்த உறுதி, நிகரற்ற பக்தி எனக்கு இல்லையே! அந்த பக்தியினால் தானே ஒரு பிணத்தை கூட எழுப்ப முடியும் என்கிற நம்பிக்கை அவருக்கு வந்தது. இதெல்லாம் எனக்கு இல்லையே!  திருவடிகளை பற்றினவனை பெருமான் ஒருபோதும் கைவிடுட மாட்டான் என்ற நம்பிக்கையும் பக்தியும் நான் வைக்கலையே!  ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - சோழ நாடு அறிமுகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

முதலில் சோழ நாட்டு திவ்ய தேசங்கள் 40 பற்றி பார்ப்போம். 

சோழ நாட்டு திவ்ய தேசங்கள் Area Wise:

திருச்சி – 6 

  • DD 1 - திருவரங்கம் (ஸ்ரீரங்கம்)
  • DD 2 - திருக்கோழி (உறையூர்)
  • DD 3 - திருக்கரம்பனூர் (உத்தமர் கோயில்)
  • DD 4 - திருவெள்ளறை (ஸ்வேதகிரி)
  • DD 5 - திரு அன்பில்
  • DD 6 - திருப்பேர் நகர் (கோவிலடி)


தஞ்சாவூர் – 2

  • DD 7 - திருக்கண்டியூர் 
  • DD 20 - திரு தஞ்சைமாமணி கோவில்


கும்பகோணம் – 10 

  • DD 8 - திருக்கூடலூர் (ஆடுதுறை)
  • DD 9 - திருக்கவித்தலம் (கபிஸ்தலம்) (க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம்)
  • DD 10 - திருப்புள்ளம் பூதங்குடி
  • DD 11 - திருஆதனூர்
  • DD 12 - திருக்குடந்தை
  • DD 13 - திருவிண்ணகரம் (ஒப்பிலியப்பன் கோயில்)
  • DD 14 - திருநறையூர் (நாச்சியார் கோயில்)
  • DD 15 - திருச்சேறை
  • DD 21 - திருநந்திபுர விண்ணகரம் (நாதன் கோயில்)
  • DD 22 - திருவெள்ளியங்குடி


நாகப்பட்டினம் - 3 

  • DD 17 – திருக்கண்ணபுரம் (க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம்)
  • DD 18 – திருக்கண்ணங்குடி (க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம்)
  • DD 19 - திருநாகை


திருவாரூர் – 3 

  • DD 16 – திருக்கண்ணமங்கை (க்ருஷ்ண மங்கள க்ஷேத்ரம்)
  • DD 24 - திருசிறுப்புலியூர்
  • DD 25 - திருத்லைச்சங்க நாண்மதியம் (தலசங்காடு)


மாயவரம் – 2

  • DD 23 - திருவழுந்தூர் (தேரெழுந்தூர்)
  • DD 26 - திருஇந்தளூர்


சீர்காழி - 1 

  • DD 28 - திருக்காழி சீராம விண்ணகரம்


திருநாங்கூர் - 12 

  • DD 27 - திருக்காவளம்பாடி
  • DD 29 - திரு அரிமேய விண்ணகரம்
  • DD 30 - திருவண் புருஷோத்தமம்
  • DD 31 - திருச்செம்பொன்செய் கோவில்
  • DD 32 - திருமணி மாடகோவில்
  • DD 33 - திருவைகுந்த விண்ணகரம்
  • DD 34 - திருவாலி திருநகரி
  • DD 35 - திருதேவனார் தொகை
  • DD 36 - திருத்தெற்றியம்பலம்
  • DD 37 - திருமணிக்கூடம்
  • DD 38 - திருவெள்ளக்குளம் (அண்ணன் கோயில்)
  • DD 39 - திரு பார்த்தன்பள்ளி


சிதம்பரம் -1

  • DD 40 – திருச்சித்திரகூடம்

இனி ஒவ்வொரு திவ்ய தேசமாக அநுபவிப்போம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - பொது தனியன் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

எம்பெருமானார் தனியன்
(கூரத்தாழ்வான் அருளிச் செய்தது)

3. யோ நித்ய மச்யுத பதா³ம் பு³ஜ யுக்³ம ருக்ம*
வ்யாமோ ஹதஸ் ததி³தராணி த்ருணாய மேநே*
அஸ்மத்³ கு³ரோர் ப⁴க³வ தோஸ்ய த³யைக ஸிந்தோ⁴:*
ராமாநுஜஸ்ய சரணௌ ஸ²ரணம் ப்ரபத்³யே|


பகவான் அச்சுதனிடம் கொண்ட அதீத பிரேமையினால் ஸ்ரீ ராமாநுஜர் உலகத்திலுள்ள பொருட்களையும் ஆசைகளையும் ஒரு புல்லுக்கு சமானமாகவே கருதினார். கல்யாண குணங்களை கொண்ட வரும், தயையின் கடலுமான அவரே நமக்கெல்லாம் குரு. அவர் திருவடிகளுக்குச் சரணம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - த்யான ஸ்லோகம் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 
த்⁴யான ஸ்லோகம் - 2

நமோ அஸ்து தே வ்யாஸ விஸால பு³த்³தே⁴ 
பு²ல்லார விந்தா³ யத பத்ர னேத்ர|
யேன த்வயா பா⁴ரத தைல பூர்ண꞉
ப்ரஜ் வாலிதோ ஜ்ஞான மய꞉ ப்ரதீ³ப꞉||

அளவற்ற ஞானம் உடைய விரிந்த தாமரைக் கண்களை உடைய வ்யாச குருவே, உமக்கு நமஸ்காரம். உங்களால் ஞானமாகிற தீபம் பாரதம் என்கிற தைலத்தால் நிரப்பப்பட்டு ஒளி வீசுகிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - அறிமுகம் 6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

ஸ்ரீமத் பாகவதம் கிருஷ்ண சொரூபமாகும் என்கிறது. பாகவததத்தின் முதல் மற்றும் இரண்டாவது காண்டம் ஸ்ரீ கிருஷ்ணரின் கால்களாகவும், மூன்றாவது, நான்காவது காண்டங்கள் அவரது தொடையாகவும், ஐந்தாவது காண்டம் அவரது தொப்புள், ஆறாவது காண்டம் அவரது மார்பு, ஏழாம், எட்டாம் காண்டங்கள் அவரது கைகள், ஒன்பதாவது காண்டம் அவரது தொண்டை, பத்தாவது காண்டம், தசம ஸ்கந்தம் கிருஷ்ணனுடைய பிறப்பு, வளர்ப்பு, அவருடைய  லீலைகள் அனைத்துமே பேசி  பாகவதத்தின் சிரசாக விளங்குகிறது. பதினோராம் காண்டம் யாதவ குலத்தின் அழிவு பற்றி சொல்கிறது, அது அவரது நெற்றி, பன்னிரெண்டாம் காண்டம் கிருஷ்ணன் விஷ்ணு லோகம் செல்லுதல் பற்றிய விவரங்கள், அவரது தலையாகவும் உள்ளன என்கிறது. அதற்கும் அடுத்துள்ள ராஜ வம்சக் கதைகள் பாகவதத்தின் புஜப் பகுதி. அஜாமிளனின் கதை, நாமத்தினுடைய மகிமையைச் சொல்வதால் பாகவதத்தில் இதயமாக ஒளிர்கிறது.  இப்படி பாகவத புருஷனை கற்பனை செய்து கொண்டே வந்தோமானால் ஏகாதச ஸ்கந்தம் என்கிற பதினோராவது அத்யாயம், ரத்ன கிரீடமாக பாகவதத்தை தகதகக்க வைக்கிறது. ஏனெனில் அத்தனையும் உபதேச ரத்னங்கள். 

சுகப் பிரும்மரிஷி, ஸ்ரீமத் பாகவதத்தை பரீக்ஷித்துக்கு அவன் மோட்சம் பெறுவதற்காக அவன் உயிரோடு இருக்கும் ஏழு நாட்களுக்குக் கூறினார். பாகவதக் கதைகளை கவனமாகக் கேட்ட பரீட்சித்து பரமபதம் அடைந்தான் என்கிறது புராணம். இந்த நிகழ்வின் காரணமாக ஸ்ரீமத் பாகவதம் சப்தாகமாக, அதாவது ஏழு நாட்களுக்கு உபன்யாசமாகக் கூறப்படும் வழக்கம் உண்டானது. இதுவே சப்தாகம்/சப்தாஹம் எனப்பட்டது. இப்படிப்பட்ட சப்தாகத்தில்  கலந்துகொண்டு கேட்பது மிகவும் புண்ணியம் என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். பாகவத ஸ்ரவணத்தாலே ஸ்ரீ மகாவிஷ்ணு நம் மனத்தில் ஆவிர்பவிக்கிறார். ஸ்ரீ மகா விஷ்ணுவிற்கும், பாகவதத்திற்கும், வாசுதேவரின் மந்திரத்திற்கும் இடையே எந்த வித்தியாசமும் கிடையாது.

பாகவதம் என்கிற அம்ருதத்தை பருகியவர்களுக்கு மோக்ஷம் கிடைத்து விடுகிறது. நம் ஆச்சார்யனை சேவித்து விட்டு தான் எந்த காரியத்தையும் தொடங்க வேண்டும். பாகவத பாராயணமும் அவ்வணமே செய்ய வேண்டும். பாகவதத்தை கேட்ட கணத்தில் பகவான் இதயத்தில் வந்து அமர்ந்து விடுகிறார். பிரியமான சிஷ்யரிடம் ரொம்ப கஷ்டமான ரகசியத்தை புரிய வைத்து அனுக்கிரகித்து விடுவார் குரு. கண்ணனேதான் பாகவதத்துக்கு செய்தி. கண்ணனுடைய அனைத்து அவதாரங்கள், அவனைப் பற்றிய தர்மம், நாம் கடைபிடிக்க வேண்டிய பக்தி, மோக்ஷத்துக்கு வேண்டிய வழிமுறைகள், இவை அனைத்தும் பாகவத புராணத்தில் உள்ளது. ஆதிசங்கரர் எழுதிய கோவிந்தாஷ்டகத்தில் பாகவதம் பற்றிய குறிப்பு வருகிறது. உயிர்களாகிய ஜீவாத்மா பகவானாகிய பரமாத்மாவுடன் இணைய அதுவே வழிவகுக்கும்’ என்று சூரிய பகவான் உபதேசித்ததாக பாகவத மஹாத்மியம் கூறுகிறது.

ஏக ஸ்லோக பாகவதம்!
ஆதௌ தேவகி தேவ கர்ப்ப ஜனனம்
கோபி க்ருஹே வர்த்தனம்
மாயா பூதன ஜீவிதாபஹரணம்,
கோவர்தன உத்தாரணம்
கம்சச் சேதன கௌரவாதி ஹரணம்
குந்தீ சுதா பாலனம்
சைதத் பாகவதம் புராண கதிதம்
க்ருஷ்ண லீலாம்ருதம்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

மகாவிஷ்ணு வணக்கம்||

அவிகாராய ஸு²த்தா⁴ய 
நித்யாய பரமாத்மநே|
ஸதை³க ரூப ரூபாய 
விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே||


மாறுபாடு இல்லாதவராகவும், தூய்மை உடையவராகவும், என்றும் நித்யமாய் உள்ளவராகவும், எப்பொழுதும் ஒரே வடிவத்தை உடையவராகவும், அனைத்தையும் வெற்றி கொள்பவராகவும், பரம் பொருளாகவும் விளங்குகின்ற மகாவிஷ்ணுவை வணங்குவோம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - நான்காவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

004 தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே|

தசமுகன் இராவணனின் மற்றொரு பெயர். பிராட்டி என்பவள் சீதை. செற்று என்றால் கொல்வது. கற்பு சக்தியால் இராவணனை சீதை கொன்றாள் என்று அர்த்தம். சீதை நேரிடையாக கொல்லவில்லை என்றாலும் அவளுடைய கற்பினால் தான் இராவணன் மடிந்தான். 


ஸ்ரீராமன், ராவணனை வதம் செய்தார். ஆனால், திருக்கோளூர் பெண்ணோ, ராவணனை வதைத்தது சீதா பிராட்டியே என்கிறாள். தசமுகனான, ராவணன் அழிய வேண்டும் என்பதற்காகவே சீதை, ராமனுடன் காட்டிற்கு வந்தாள். தசமுகனுக்கு அழிவு ஏற்படும் வகையில் மாயமானைக் கேட்டாள், லட்சுமணனைத் திட்டி அனுப்பினாள். ராவணன் வந்தான். சீதையைத் தூக்கிச் சென்றான். இலங்கையில் சிறை வைத்தான்.


அனுமான் சீதையை தூக்கி கொண்டு போய் ராமரிடத்தில் சேர்ப்பதாக சொல்ல அதை சீதை மறுத்து விடுகிறாள். ஏன் என்று அனுமான் கேட்க, அதற்கு சீதை சொல்கிறாள்.  “கணவரிடமிருந்து பிரித்து வேறு இடத்தில் சிறை வைக்கும் போது ஒருவர் கூட்டிக் கொண்டு போனார். கணவரிடம் கொண்டு போய் சேர்க்கும் போது வேறொருவர் கூட்டிக் கொண்டு வந்தார். அப்படியானால் ராமர் என்ன பண்ணினார் என்று உலகம் கேட்கும். ராமருடைய பத்தினி ஏன் மற்ற பேரால் ரக்ஷிக்கப் படுகிறாள்? அப்படியானால் ராமனுக்கு தன்னை அண்டி வருபவர்களை ரக்ஷிக்கும் சக்தி கிடையாதா? அந்த உள்ளமே பகவானுக்கு இல்லையா? என்று கேட்பார்கள். அப்படியானால் சாஸ்திரமே பொய்த்து போய் விடும். அந்த குற்றத்தை நான் ஒருபொழுதும் செய்ய மாட்டேன். சரணாகதர்கள் நம்மை நாமே ரக்ஷித்துக் கொள்ள தகுதி அற்றவர்கள். பெருமான் தான் நம்மை ரக்ஷிக்க வேண்டும். உம்முடைய வாலை நெருப்பு சுடாது என்று சொன்ன எனக்கு இராவணனை நெருப்பு சுட்டு விடும் சென்று சொல்வதற்கு சுலபம். என் கற்பு கனலாலேயே அழித்து விடுவதும் சுலபம். நான் அப்படி பண்ணினால் அது ராமனுக்கு தேவையற்ற குற்றத்தை விளைவித்து விடும். அவனுடைய வில்லை பார்த்து தான் நான் இருக்கணுமே தவிர என் சொல்லை பார்த்து நான் இருக்க கூடாது. அதனால் அவரே வந்து தான் என்னை ரக்ஷிக்க வேண்டும்" என்று சீதை சொல்கிறாள்.  உண்மையில் ராமர் சண்டை போட்டதினால் மட்டும் இராவணன் மடிந்து விடவில்லை. சீதையின் கற்பும் சேர்ந்து தான் அவனை கொன்று விட்டது.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “அப்படி என்ன எனக்கு கற்பு? அப்படி ஒன்றும் பதிவிரதத்தை நான் வளர்த்துக்க வில்லையே! சக்தி இருந்தாலும் தன்னை ராமர் தான் ரக்ஷிக்க வேண்டும் என்று இருந்தாளே! அப்படி நான் இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - அறிமுகம் 5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

இனி 108 திவ்ய தேசங்களின் வரலாற்றைக் காண்போம்.

திவ்ய தேசங்கள் என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன.

ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும். அவையே 108 திவ்ய தேசங்கள் எனப்படுகின்றன. இவற்றில் 105 தலங்கள் இந்தியாவிலும், ஒன்று நேபாளிலும் உள்ளன. கடைசியாக உள்ள இரு தலங்கள் இவ்வுலகில் இல்லை. இவற்றைத் தவிர மற்ற 106 தலங்களுக்கும் தம் வாழ்நாளில் சென்று அத்தலத்திற்குரிய பாடல்களைப் பாடுதல் ஒரு வைணவ சமய வழிபாடாக உள்ளது. 108 திவ்ய தேசங்களில் நின்ற திருக்கோலத்தில் எம்பெருமான் எழுந்தருளியுள்ள தலங்களின் எண்ணிக்கையே அதிகமாகும்.

  • சோழநாட்டு திருப்பதிகள் - 40
  • தொண்டைநாட்டு திருப்பதிகள் - 22
  • நடுநாட்டு திருப்பதிகள் - 2
  • நில உலகில் காணமுடியாத திருப்பதிகள் - 2
  • பாண்டியநாட்டுத் திருப்பதிகள் - 18
  • மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
  • வடநாட்டு திருப்பதிகள் - 11
திவ்ய தேசங்கள் அமைந்துள்ள இடங்கள்

  • 84 திருத்தலங்கள் தமிழ்நாட்டிலும்,
  • 11 திருத்தலங்கள் கேரளாவிலும்,
  • 2 திருத்தலங்கள் ஆந்திராவிலும்,
  • 4 திருத்தலங்கள் உத்தரப் பிரதேசத்திலும்,
  • 3 திருத்தலங்கள் உத்தராகண்டத்திலும்,
  • 1 திருத்தலம் குஜராத்திலும்,
  • 1 திருத்தலம் நேபாளத்திலும்,
  • 2 திருத்தலங்கள் வானுலகிலும் உள்ளது.

12 ஆழ்வார்களில் மதுரகவியாழ்வார் திவ்யதேசங்கள் எதனையும் மங்களாசாசனம் செய்யவில்லை. அவர் நம்மாழ்வாரைப் பற்றி மட்டும் ஒரு பதிகம் அருளிச் செய்தார். வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ் செய்த மாறன் என்று நம்மாழ்வாரிடம் மட்டும் ஆழங்கால் பட்டு அவர் ஆழ்வாரானார். மீதி பதினொரு ஆழ்வார்களும் கீழ்க்கண்டவாறு மங்களாசாசனம் செய்துள்ளனர். 

ஆழ்வாரின் பெயர், மங்களாசாசனம் செய்த 
திவ்ய தேசங்களின் எண்ணிக்கை 

  •   1. பொய்கையாழ்வார்
  •   2. பூதத்தாழ்வார் 13 
  •   3. பேயாழ்வார் 15 
  •   4. திருமிழிசையாழ்வார் 17 
  •   5. நம்மாழ்வார் 37 
  •   6. குலசேகராழ்வார்
  •   7. பெரியாழ்வார் 19 
  •   8. ஸ்ரீ ஆண்டாள் 11 
  •   9. தொண்டரடிப் பொடியாழ்வார் 4
  •  10.  திருப்பாணாழ்வார்   
  •  11. திருமங்கையாழ்வார்    86 


நின்ற திருக்கோலத்தில் எம்பெருமான் எழுந்தருளியுள்ள 
ஸ்தலங்கள்  62. இதில், 

  • கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்  46 
  • மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்   12 
  • தெற்கு நோக்கி நின்ற திருக்கோலம்    3 
  • வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம்    1 

அமர்ந்த திருக்கோலத்தில் எம்பெருமான் எழுந்தருளியுள்ள 
ஸ்தலங்கள் 24. இதில் 

  • கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்  16 
  • மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்  6 
  • தெற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்  1
  • வடக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்  1 


யனத் திருக்கோலத்தில் எம்பெருமான் எழுந்தருளியுள்ள 
ஸ்தலங்கள் 22. இதில், 

  • கிழக்கு நோக்கி நோக்கிய சயனம் 15 
  • மேற்கு நோக்கி நோக்கிய சயனம்  2 
  • தெற்கு நோக்கி நோக்கிய சயனம்  5 
  • வடக்கு நோக்கி நோக்கிய சயனம் இல்லை. 

திருமாலின் சயனங்கள் 10 வகைப்படும். அவைகள் 

  • 1. ஜல சயனம் 
  • 2. தல சயனம் 
  • 3. புஜங்க சயனம் (சேஷசயனம்) 
  • 4. உத்தியோக சயனம் 
  • 5. வீர சயனம் 
  • 6. போக சயனம் 
  • 7. தர்ப்ப சயனம் 
  • 8. பத்ர சயனம் (பத்ர எனில் ஆலமரத்து இலை) 
  • 9. மாணிக்க சயனம் 
  • 10. உத்தான சயனம் 

எந்தெந்த தலத்தில் எவ்வகையான சயனம் என்பதை இந்நூலில் அந்தந்த ஸ்தல வரலாற்றில் காணலாம். 

ஒரே சன்னிதியில் நின்ற, இருந்த, கிடந்த என்ற மூன்று திருக்கோலம் உண்டு. அவ்வாறு அமைந்த ஸ்தலங்கள் பல உண்டு. உதாரணத்திற்கு திருநீர்மலை, திருக்கோட்டியூர், மதுரை, கூடலழகர், திருவல்லிக்கேணி போன்றவைகளைக் கூறலாம். 

பொதுவாக திசையைக் குறிக்குமிடத்து அவைகள் மூலவர் நோக்கியுள்ள திசையினையே குறிப்பதாகும். மூலவர் எந்தெந்த ஸ்தலத்தில் எந்த திசை நோக்கியுள்ளாரோ அவ்வண்ணமே மேற்கண்ட கணக்கீடு கூறப்பட்டுள்ளது. 

அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள பெருமாள் ஒரு கரத்தை மேல் நோக்கி (அருளும் முகத்தான்) வைத்துள்ளதற்கு அபயஹஸ்தம் என்று பெயர். மற்றொரு கரத்தை கீழ்நோக்கி வைத்திருப்பதற்கு தன்னடிக் கீழ் சரணடைந்து உய்யுங்கள் என்பது பொருள். 

திருவரங்கம் முதல் தில்லை வரை சோழ நாற்பதும் 
அயிந்திரபுரமும் கோவில் ஊரும் நாடு இரண்டும் 
கச்சி கடிகை கொண்ட இருபத்திரண்டும் தொண்டை 
வட அயோத்தி பத்தோடு திருவேங்கடம் ஒன்றை 
மலை நாவாய் ஆறிரண்டு ஒன்றும் பரிசாரம் வரை 
குறுங்குடி முடியும் மெய்யம் பாண்டிய மூவாறை 
விண்ணில் ஈறு பாற்கடலும் பரமபதமும் இறுதியென 
கண்ணில் காணாமல் கண்டாரே செந்தமிழ் சுருதியென


||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - பொது தனியன் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

குருபரம்பரை தனியன்
(கூரத்தாழ்வான் அருளிச் செய்தது)

2. லஷ்மீ நாத² ஸமாரம்பா⁴ம்* 
நாத² யாமுந மத்⁴யமாம்* 
அஸ்மதா³சார்ய பர்யந்தாம்* 
வந்தே³ கு³ரு பரம்பராம்|


லக்ஷ்மி நாதனை தொடங்கி, நடுவிலுள்ள நாதமுனி மற்றும் முடிவிலுள்ள என்னுடய ஆச்சார்ய குரு பரம்பரையை வணங்குகின்றேன். முதல் ஆசார்யானான ஸ்ரீதரன் சாஸ்திரங்களை லக்ஷ்மியிடம் வழங்கினார். இதை தொடர்ந்து விஷ்வக்ஸேனர், நம்மாழ்வார் மற்றும் ஒருவருடய ஆசாரியன் வரை வழி வழியாக இவை வழங்கப்பட்டு வருகின்றன.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - த்யான ஸ்லோகம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

த்⁴யான ஸ்லோகம் - 1

பார்தா²ய ப்ரதி போ³தி⁴தாம், 
ப⁴க³வதா நாராயணேன ஸ்வயம்
வ்யாஸேன க்³ரதி²தாம், 
புராண முனினா மத்⁴யே மஹாபா⁴ரதம்|
அத்³வைதாம் ருத வர்ஷிணீம், 
ப⁴க³வதீம் அஷ்டாத³ ஸாத்⁴ யாயினீம்
அம்ப³த் வாமனு ஸந்த³தா⁴மி, 
ப⁴க³வத்³ கீ³தே ப⁴வத்³ வேஷிணீம்||

புராண முனிவராகிய வியாசரால் மஹாபாரதத்தின் நடுவில் வைக்கப்பட்டவளும், அர்ஜுனனுக்காக பகவான் நாராயணனாலேயே உபதேசிக்கப்பட்டவளும், அத்வைதமாகிய அமுதத்தை வர்ஷிப்பவளும், பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்டவளும், சம்சார சாகரத்தின் எதிரியும் ஆன பகவத் கீதா என்ற அன்னையை நமஸ்கரிக்கிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்