||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
இனி 108 திவ்ய தேசங்களின் வரலாற்றைக் காண்போம்.
திவ்ய தேசங்கள் என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும். அவையே 108 திவ்ய தேசங்கள் எனப்படுகின்றன. இவற்றில் 105 தலங்கள் இந்தியாவிலும், ஒன்று நேபாளிலும் உள்ளன. கடைசியாக உள்ள இரு தலங்கள் இவ்வுலகில் இல்லை. இவற்றைத் தவிர மற்ற 106 தலங்களுக்கும் தம் வாழ்நாளில் சென்று அத்தலத்திற்குரிய பாடல்களைப் பாடுதல் ஒரு வைணவ சமய வழிபாடாக உள்ளது. 108 திவ்ய தேசங்களில் நின்ற திருக்கோலத்தில் எம்பெருமான் எழுந்தருளியுள்ள தலங்களின் எண்ணிக்கையே அதிகமாகும்.
- சோழநாட்டு திருப்பதிகள் - 40
- தொண்டைநாட்டு திருப்பதிகள் - 22
- நடுநாட்டு திருப்பதிகள் - 2
- நில உலகில் காணமுடியாத திருப்பதிகள் - 2
- பாண்டியநாட்டுத் திருப்பதிகள் - 18
- மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
- வடநாட்டு திருப்பதிகள் - 11
திவ்ய தேசங்கள் அமைந்துள்ள இடங்கள்
- 84 திருத்தலங்கள் தமிழ்நாட்டிலும்,
- 11 திருத்தலங்கள் கேரளாவிலும்,
- 2 திருத்தலங்கள் ஆந்திராவிலும்,
- 4 திருத்தலங்கள் உத்தரப் பிரதேசத்திலும்,
- 3 திருத்தலங்கள் உத்தராகண்டத்திலும்,
- 1 திருத்தலம் குஜராத்திலும்,
- 1 திருத்தலம் நேபாளத்திலும்,
- 2 திருத்தலங்கள் வானுலகிலும் உள்ளது.
12 ஆழ்வார்களில் மதுரகவியாழ்வார் திவ்யதேசங்கள் எதனையும் மங்களாசாசனம் செய்யவில்லை. அவர் நம்மாழ்வாரைப் பற்றி மட்டும் ஒரு பதிகம் அருளிச் செய்தார். வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ் செய்த மாறன் என்று நம்மாழ்வாரிடம் மட்டும் ஆழங்கால் பட்டு அவர் ஆழ்வாரானார். மீதி பதினொரு ஆழ்வார்களும் கீழ்க்கண்டவாறு மங்களாசாசனம் செய்துள்ளனர்.
ஆழ்வாரின் பெயர், மங்களாசாசனம் செய்த
திவ்ய தேசங்களின் எண்ணிக்கை
- 1. பொய்கையாழ்வார் 6
- 2. பூதத்தாழ்வார் 13
- 3. பேயாழ்வார் 15
- 4. திருமிழிசையாழ்வார் 17
- 5. நம்மாழ்வார் 37
- 6. குலசேகராழ்வார் 9
- 7. பெரியாழ்வார் 19
- 8. ஸ்ரீ ஆண்டாள் 11
- 9. தொண்டரடிப் பொடியாழ்வார் 4
- 10. திருப்பாணாழ்வார் 3
- 11. திருமங்கையாழ்வார் 86
நின்ற திருக்கோலத்தில் எம்பெருமான் எழுந்தருளியுள்ள
ஸ்தலங்கள் 62. இதில்,
- கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம் 46
- மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம் 12
- தெற்கு நோக்கி நின்ற திருக்கோலம் 3
- வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம் 1
அமர்ந்த திருக்கோலத்தில் எம்பெருமான் எழுந்தருளியுள்ள
ஸ்தலங்கள் 24. இதில்
- கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம் 16
- மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம் 6
- தெற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம் 1
- வடக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம் 1
ஸயனத் திருக்கோலத்தில் எம்பெருமான் எழுந்தருளியுள்ள
ஸ்தலங்கள் 22. இதில்,
- கிழக்கு நோக்கி நோக்கிய சயனம் 15
- மேற்கு நோக்கி நோக்கிய சயனம் 2
- தெற்கு நோக்கி நோக்கிய சயனம் 5
- வடக்கு நோக்கி நோக்கிய சயனம் இல்லை.
திருமாலின் சயனங்கள் 10 வகைப்படும். அவைகள்
- 1. ஜல சயனம்
- 2. தல சயனம்
- 3. புஜங்க சயனம் (சேஷசயனம்)
- 4. உத்தியோக சயனம்
- 5. வீர சயனம்
- 6. போக சயனம்
- 7. தர்ப்ப சயனம்
- 8. பத்ர சயனம் (பத்ர எனில் ஆலமரத்து இலை)
- 9. மாணிக்க சயனம்
- 10. உத்தான சயனம்
எந்தெந்த தலத்தில் எவ்வகையான சயனம் என்பதை இந்நூலில் அந்தந்த ஸ்தல வரலாற்றில் காணலாம்.
ஒரே சன்னிதியில் நின்ற, இருந்த, கிடந்த என்ற மூன்று திருக்கோலம் உண்டு. அவ்வாறு அமைந்த ஸ்தலங்கள் பல உண்டு. உதாரணத்திற்கு திருநீர்மலை, திருக்கோட்டியூர், மதுரை, கூடலழகர், திருவல்லிக்கேணி போன்றவைகளைக் கூறலாம்.
பொதுவாக திசையைக் குறிக்குமிடத்து அவைகள் மூலவர் நோக்கியுள்ள திசையினையே குறிப்பதாகும். மூலவர் எந்தெந்த ஸ்தலத்தில் எந்த திசை நோக்கியுள்ளாரோ அவ்வண்ணமே மேற்கண்ட கணக்கீடு கூறப்பட்டுள்ளது.
அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள பெருமாள் ஒரு கரத்தை மேல் நோக்கி (அருளும் முகத்தான்) வைத்துள்ளதற்கு அபயஹஸ்தம் என்று பெயர். மற்றொரு கரத்தை கீழ்நோக்கி வைத்திருப்பதற்கு தன்னடிக் கீழ் சரணடைந்து உய்யுங்கள் என்பது பொருள்.
திருவரங்கம் முதல் தில்லை வரை சோழ நாற்பதும்
அயிந்திரபுரமும் கோவில் ஊரும் நாடு இரண்டும்
கச்சி கடிகை கொண்ட இருபத்திரண்டும் தொண்டை
வட அயோத்தி பத்தோடு திருவேங்கடம் ஒன்றை
மலை நாவாய் ஆறிரண்டு ஒன்றும் பரிசாரம் வரை
குறுங்குடி முடியும் மெய்யம் பாண்டிய மூவாறை
விண்ணில் ஈறு பாற்கடலும் பரமபதமும் இறுதியென
கண்ணில் காணாமல் கண்டாரே செந்தமிழ் சுருதியென
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment