||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
006 பிண விருந்திட்டேனோ கண்டா கர்ணனைப் போலே|
கண்டா கர்ணன் என்பவன் பரம சிவ பக்தன். அவன் பிணத்தை தின்னு பிழைப்பவன். சிவ பக்தனாக இருந்ததால் விஷ்ணு நாமமே ஆகாது. காதுல மணி கட்டி கொண்டு இருப்பான். யாராவது விஷ்ணுவின் நாமத்தை சொன்னால் அந்த நாமம் காதில் விழக் கூடாது என்று உடனே தலையை ஆட்டுவான். அப்பொழுது காதில் இருக்கும் மணி ஆடி சத்தத்தை எழுப்பும். அந்த சத்தத்தில் நாமம் காதில் விழாது.
காதில் மணி இருந்ததால் அவனுக்கு கண்டா கர்ணன் என்று பெயர். அந்த அளவுக்கு சிவ பக்தன். அவனுக்கு வேண்டிய அனைத்தையும் சிவபெருமான் பண்ணினார். ஒரு நாள் கண்டா கர்ணனுக்கு இந்த வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டு விட்டது. அடியேனுக்கு முக்தி குடுக்க வேண்டும் என்று சிவபெருமானிடம் பிரார்த்தித்தான். "இது வரை நீ கேட்டதையெல்லாம் கொடுத்தேன். இது குடுக்க என்னால் இயலாது. அதை நீ மோக்ஷத்தை கொடுக்க கூடிய சக்தி படைத்த ஜனார்தனனிடம் தான் கேட்க வேண்டும். அங்கு போய் கேள்" என்று சிவபெருமான் சொல்லி அனுப்பினார்.
கண்டா கர்ணனுக்கு இப்போது பயம் வந்து விட்டது. அவன் நாமமே கேட்க கூடாது என்று இருந்தவன். முதல் முறையாக பார்க்க போறோம் என்ற நடுக்கம். தன் காதுகளில் கட்டியிருந்த மணிகளை அகற்றினான். முதன் முறையாக போகும் போது வெறும் கையோடு போக முடியாதே. ஏதாவது சமர்ப்பிக்க வேண்டுமே! அவனிடம் எதுவுமே கிடையாது. அவன் எப்பொழுதும் பிணத்தோடேயே இருப்பவன். யோசித்து அப்பொழுது தான் உயிர் பிரிந்த ஒரு பிராமணப் பிணமாக எடுத்துக் கொண்டு சமைத்து பக்குவப் படுத்தினான். கண்டா கர்ணன், கிருஷ்ண அவதாரக் காலத்தில் வாழ்ந்ததால், துவாரகைக்கு செல்ல கிளம்பினான். பகவானை நேரில் சந்தித்து தான் கொண்டு வந்ததை நிவேதனம் செய்தான். "இதை தேவரீர் போஜனம் பண்ணி உபகாரமாக கொள்ள வேண்டும்" என்று பெருமானிடம் கூறினான். அதையும் பெருமான் ஸ்வீகரித்துக் கொண்டார். அந்த இடத்தில் அவன் என்ன கொண்டு வந்தான் என்று பார்க்கவில்லை பெருமான். அவனுடைய நோக்கத்தையும், பக்தியையும், நம்பிக்கையையும் பார்த்தார். அதனால் அதை ஏற்றுக் கொண்டு அவனுக்கு முக்தி கொடுத்தார்.
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “எது கொடுத்தாலும் அவன் ஏற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கை என்னிடம் இல்லையே! அனைவரையும் ஒரே மாதிரியாக தான் பெருமான் பார்க்கிறான் என்ற ஞானம் எனக்கில்லையே! சிவ பக்தனாக இருந்தாலும் அந்த ஞானம் இருந்து பெருமானுக்கு கொண்டு போய் சமர்ப்பித்தானே! அப்படி எனக்கு தோன்றவில்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment