About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 7 August 2023

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - ஐந்தாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

005 பிணம் எழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே|

தொண்டைமான் சக்கரவர்த்தி ஸ்ரீனிவாச பெருமானிடம் மிகவும் பக்தி கொண்டிருந்தான். பெருமாள் தன்னிடம் இருந்த சங்கு சக்கரத்தையே அவனிடம் கொடுத்திருந்தார். அந்த அளவுக்கு பெருமானுக்கு மிகவும் நெருங்கினவர்.


கூர்மம் என்றொரு பிராமணர் இருந்தார். அவருக்கு காசி சென்று ஸ்ரார்தம் பண்ண வேண்டும் என்று மிகவும் ஆசை. ஆனால் அப்படி பண்ண முடியாமலேயே ப்ராணம் போய் விட்டது. அவருடைய குமாரர் பெயர் கிருஷ்ணன் ஷர்மா. அவருக்கும் காசிக்கு போகணும்னு ஆசை. போய்ட்டு வர நாட்கள் ஆகும் என்று தன்னுடைய பத்தினி பிள்ளைகளை சக்கரவர்த்தியிடம் ஒப்படைத்து விட்டு சென்றார். பிரஜை என்ன கேட்டாலும் ராஜா செய்ய வேண்டும் என்பதால் சக்கரவர்த்தியும் பார்த்துக் கொள்வதாக சொன்னார். அலுவல் விவகாரங்களில் ஈடுபட்டிருந்த சக்கரவர்த்தி, ஷர்மாவின் குடும்பம் என்ன ஆயிற்று என்பதை கவனிக்க மறந்து விட்டார். அவர்கள் சாப்பாடு சரி இல்லாமல் இறந்தே விட்டனர். 

ஷர்மாவும் காரியங்கள் முடித்து விட்டு திரும்பி வந்தார். வந்ததும் சக்கரவர்த்தியிடம் சென்று தன்னுடைய பத்தினி பிள்ளைகளை கேட்கிறான். அப்பொழுது தான் சட்டென்று ராஜாவிற்கு ஞாபகமே வந்தது. இரு என்று சொல்லி உள்ளே போய் பார்த்தவர் அங்கு அவர்கள் உயிரோடு இல்லாமல் பிணமாகி போனதை பார்த்தார். ராஜாவிற்கு என்ன பண்ணுவது என்று புரியவில்லை. தன் கடமையிலிருந்து தவறி விட்டதாக வருந்தினார். பயத்தில் அவரிடம் வந்து "ஸ்ரீனிவாச பெருமாளை சேஷாசலத்தில் சேவிக்க போய் இருக்கிறார்கள். இரண்டு நாட்கள் கழித்து வருவார்கள் என்று பொய் சொன்னார் சக்கரவர்த்தி. பொய் சொல்லிவிட்டு வந்தவருக்கு என்ன பண்ணுவது என்று புரியாமல் நேராக ஸ்ரீனிவாச பெருமானிடம் போய் நின்றார். தொண்டைமானுக்கு ஏதோ ஒரு ஆவேசமான நம்பிக்கை பெருமான் கை விட்டுட மாட்டான் என்று. "அடியேன், தேவரீர் கைங்கர்யம் பண்ணினது உண்மை, ராஜ்யத்தை பார்த்து கொண்டது உண்மை. அறியாமல் தப்பு பண்ணி விட்டேன். தேவரீர் தான் என்னை ரக்ஷித்து ஆக வேண்டும். வேறு வழியே இல்லை" என்று சொல்லி திருவடிகளை பற்றி கொண்டார்.  அதற்கு பெருமான் அந்த பிணத்தை எடுத்துக் கொண்டு வா என்று சொன்னார். அந்த இரண்டு பிணங்களையும் பெருமான் முன்னால் வைக்கிறார் சக்கரவர்த்தி. பெருமான் அனுக்ரஹத்தாலே அவர்கள் உயிருடன் எழுந்து, பின் ஷர்மாவோடு அவர்களை திருப்பி அனுப்பி வைக்கிறார் சக்கரவர்த்தி. 

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “ஸ்ரீனிவாச பெருமானிடத்தில் சக்கரவர்த்திக்கு இருந்த உறுதி, நிகரற்ற பக்தி எனக்கு இல்லையே! அந்த பக்தியினால் தானே ஒரு பிணத்தை கூட எழுப்ப முடியும் என்கிற நம்பிக்கை அவருக்கு வந்தது. இதெல்லாம் எனக்கு இல்லையே!  திருவடிகளை பற்றினவனை பெருமான் ஒருபோதும் கைவிடுட மாட்டான் என்ற நம்பிக்கையும் பக்தியும் நான் வைக்கலையே!  ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment