||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
நம்மாழ்வார் தனியன்
(ஆளவந்தார் அருளிச் செய்தது)
4. மாதா பிதா யுவதயஸ் தநயா விபூ⁴தி:*
ஸர்வம் யதே³வ நியமேந மத³ந்வயாநாம்*
ஆத்³யஸ்ய ந: குலபதேர் வகுளா பி⁴ராமம்*
ஸ்ரீமத் தத³ங்க்⁴ரி யுக³ளம் ப்ரணமாமி மூர்த்⁴நா|
- மாதா - பிரியத்தையே வேண்டி இருக்கும் மாதாவைப் போலே உபகாரராய் இருக்கை
- பிதா - பாத்ரமாத்ரம் என்னும்படி உத்பாதகனாய் பிதா பண்ணும் உபகாரத்தை பண்ணுமவர் என்கை
- யுவதயஸ் - இவ்விருவரையும் மறந்து விரும்பும் யுவதிகளைப் போலே நெஞ்சுக்கு இனியராய் இருக்கை
- தனயா - அவர்களுடைய யௌவனத்தை அழிய மாறி பெற்றவராய் புத்ரர் பண்ணும் உபகாரத்தை பண்ணுமவர் என்கை
- விபூதிஸ் - ஐஸ்வர்யம் போலே உத்தேச்யராய் இருக்குமவர் என்கை
- சர்வம்- சர்வ ஐஹிகங்களுமாய் இருக்கை
- யதேவ - அவதாரணத்தால்
- நியமேன - அவருக்கு பிரியம் என்று போமது ஒழிய ப்ராமாதிகமாகவும் புறம்பு போகக் கடவது அன்றிக்கே இருக்கை
- மத் அந்வயாநாம் - என்ற உபய சந்தான ஜாதர்க்கு
- ஆத்யஸ்ய ந - ஸ்ரீ வைஷ்ணவ சந்தானத்துக்கு பிரதம ஆச்சார்யர் என்கை
- குலபதேர் - ஸ்திரீக்கு பர்த்ரு குலம் போலே கோத்ர ரிஷியும் அவரே
- வகுளாபிராமம் - திருத் துழாயால் அலங்க்ருதமான பகவத் சரணார விந்தங்களை வ்யாவர்த்திக்கிறது
- ஸ்ரீ மத் - ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயுடன் நித்ய சம்யுக்தமாயிருக்கை
- தத் அங்க்ரி யுகளம் - அது என்னுமது ஒழிய பேசி முடிய ஒண்ணாது என்கை
- யுகளம் - சேர்த்தியால் வந்த அழகை யுடைத்தாய் இருக்கை
- ப்ரணமாமி மூர்த்நா - ஆழ்வார் உடைய படிகளை நினைத்தவாறே நம-என்று நிற்க மாட்டாதே அவர் திருவடிகளில் தலையை சேர்க்கிறார்
இதுவரை பெறு மதிப்புடன் கருதி வந்த என்னுடய தாய், தந்தை, குழந்தைகள் மற்றும் சம்பத்துக்கள் யாவும் இனி நம்மாழ்வார் திருவடியல்லாது மற்றொன்றாகாது. வகுளாபரண மாலை சூடப்பட்டவரும், எல்லோராலும் போற்றப் படுபவருமான நம்மாழ்வானின் திருவடிகளை என் தலையால் வணங்குகின்றேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment