About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 2 January 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 91

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 61

ஸுத⁴ந்வா க²ண்ட³ பரஸு²ர்
தா³ருணோ த்³ரவிண ப்ரத³:|
தி³விஸ் ப்ருக் ஸர்வ த்³ருக்³ வ்யாஸோ
வாஸஸ் பதி ரயோ நிஜ:||

  • 572. ஸுத⁴ந்வா - சிறந்த வில்லினை ஏந்தியவர்.
  • 573. க²ண்ட³ பரஸு²ர் - கோடரியை ஆயுதமாக உடையவர்.
  • 574. தா³ருணோ - பகைவர்களைப் பிளப்பவர்.
  • 575. த்³ரவிண ப்ரத³ஹ - செல்வங்களைக் கொடுப்பவர்.
  • 576. தி³விஸ் ப்ருக் - பரம பதத்தைத் தொட்டவர், அபரிமிதமான அறிவை உடையவர், பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்டவர்
  • 577. ஸர்வ த்³ருக்³ - அனைத்தையும் நேரில் கண்டறிந்தவ, ஒவ்வொரு வகையான அறிவின் வடிவில் இருப்பவர், எல்லா வகையான நிலைமைகளிலும் காணக்கூடிய அனைத்து வடிவங்களையும் படைத்தவர். 
  • 578. வ்யாஸோ - வியாசன், ஏற்பாடு செய்பவர்.
  • 579. வாஸஸ் பதிர் - வாக்குக்குத் தலைவர். (இங்கு மகாபாரதத்தை உரைத்தவர் என்பது பொருள்.)
  • 580. அயோ நிஜஹ - கருவில் தங்கிப் பிறக்காதவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.28

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.28 

அவ்யக்தா தீ³நி பூ⁴தாநி 
வ்யக்த மத்⁴யாநி பா⁴ரத|
அவ்யக்த நித⁴நாந் யேவ 
தத்ர கா பரி தே³வநா||

  • அவ்யக்தா தீ³நி - ஆரம்பத்தில் தோற்றமற்று 
  • பூ⁴தாநி - படைக்கப்பட்டவையெல்லாம் 
  • வ்யக்த - தோன்றுகின்றன 
  • மத்⁴யாநி - இடையில் 
  • பா⁴ரத - பரத குலத்தில் உதித்தவனே! 
  • அவ்யக்த - தோற்றமற்ற 
  • நித⁴நாநி - அழியும் போது 
  • ஏவ - இவையெல்லாம் அது போன்றதே 
  • தத்ர - எனவே 
  • கா - என்ன 
  • பரி தே³வநா - கவலை

பரத குலத்தில் உதித்தவனே! படைக்கப் பட்டவை எல்லாம் ஆரம்பத்தில் தோற்றமற்றது, இடையில் தோன்றுகின்றன, இவையெல்லாம், அழியும் போது அது போன்றதே. எனவே, இதில் ஏன் கவலைப்படுகிறாய்?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.26

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.26

அவதாராஹ்ய ஸங்க்²யேயா 
ஹரே: ஸத்வ நிதே⁴ர் த்³விஜா:|
யதா² விதா³ஸிந: குல்யா: 
ஸரஸ: ஸ்யு: ஸஹஸ் ரஸ²:||

  • யதா² - எவ்வாறு 
  • அவிதா³ஸிநஹ் - என்றும் வற்றாதான 
  • ஸரஸஸ் - குளத்திலிருந்து 
  • ஸஹஸ் ரஸ²ஹ குல்யாஹ - ஆயிரம் வாய்க்கால் கிளைகள் 
  • ஸ்யுஸ் - ஏற்படுமோ 
  • த்³விஜாஹ - ஹே! பிராமணர்களே! 
  • ஸத்வ நிதே⁴ர் - ஸத்வ ஸ்வரூபியான 
  • ஹரேஸ் - மஹா விஷ்ணுவின் 
  • அவதாரா - அவதாரங்கள் 
  • அஸங்க்²யேயா ஹி - எண்ணற்றவை அன்றோ!

முனிவர்களே! வற்றாத ஏரியில் இருந்து எண்ணற்ற வாய்க்கால்கள் தோண்டப்படுவது போல், 'ஸத்வ' ஸ்வரூபியான பகவான் ஸ்ரீஹரியின் அவதாரங்களும் எண்ணற்றவை அல்லவா!

குறிப்பு: இங்கு இருபத்திரண்டு திரு அவதாரங்கள் மட்டும் தான் கூறப்பட்டு உள்ளன. ஆனால், இது தவிர பகவான் ஹம்ஸாவதாரம், ஹயக்ரீவ அவதாரம் எடுத்ததாகவும் பிற இடங்களில் கூறப்பட்டுள்ளன.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.26

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.26

ப்⁴ராதரம் த³யிதோ ப்⁴ராது: 
ஸௌ ப்⁴ராத்ரம் அநு த³ர்ஸ²யந்|
ராமஸ்ய த³யிதா பா⁴ர்யா 
நித்யம் ப்ராண ஸமா ஹிதா|| 

  • ப்⁴ராதுஹு - உடன் பிறந்தவருக்கு
  • த³யிதோ - அன்புள்ள
  • ப்⁴ராதரம் - உடன் பிறந்தவரான 
  • ஸௌ ப்⁴ராத்ரம் - நல்ல சகோதரத் தன்மையை 
  • அநு த³ர்ஸ²யந் - காண்பித்து
  • ராமஸ்ய - ஸ்ரீராமருடைய
  • த³யிதா - ப்ரியையான
  • பா⁴ர்யா - பார்யையான
  • நித்யம் - இடைவிடாமல்
  • ப்ராண ஸமா - உயிருக்கு நிகரானவளான
  • ஹிதா - ஹிதையான

அன்புள்ள உடன் பிறந்தவருக்கு, உடன்பிறந்த பற்றை வெளிப் படுத்தும் வகையில், ராமனின் அன்புக்குரிய மனைவியும்,  ராமனின் உயிருக்கு இணையானவளும்,  எப்போதும் நல்ல மனம் கொண்டவளும்,

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - 72 - பெரியாழ்வார் திருமொழி - 1.5.9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 72 - வேதங்களின் பொருளாய் இருப்பவனே! 
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்

பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு சண்பகமும்* 
பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வர* 
கோல நறும் பவளச் செந்துவர் வாயினிடைக்* 
கோமள வெள்ளி முளை போல் சில பல்லிலக* 
நீல நிறத்தழகார் ஐம்படையின் நடுவே* 
நின் கனி வாயமுதம் இற்று முறிந்து விழ* 
ஏலும் மறைப் பொருளே! ஆடுக செங்கீரை* 
ஏழுலகும் உடையாய்! ஆடுக ஆடுகவே|

  • பாலொடு - பாலோடே கூட
  • நெய் - நெய்யும்
  • தயிர் - தயிரும் உண்பதாலும்
  • ஒண் சாந்தொடு - அழகிய சந்தனமும்
  • செண்பகமும் - செண்பகம் முதலிய மலர்களும்
  • பங்கயம் - தாமரைப் பூவும் தரிப்பதாலும்
  • நல்ல - உத்தமமான
  • கருப்பூரமும் - பச்சைக் கர்ப்பூரமும்
  • நாறி வர - கலந்து பரிமளிக்க
  • கோலம் - அழகிய
  • நறு பவளம் - நற் பவளம் போல்
  • செம் - அழகியதாய்
  • துவர் - சிவந்திருக்கிற
  • வாயின் இடை - திரு அதரத்தினுள்ளே (வாயினுள்ளே)
  • கோமளம் - அழகிய இளைய
  • வெள்ளி முளை போல் - வெள்ளி முளை போலே
  • சில பல் - சில திரு முத்துக்கள்
  • இலக - விளங்க (தெரிய)
  • நீலம் நிறத்து - நீல நிறத்தை உடைய
  • அழகு ஆர் - அழகு மிகுந்திருக்கும்
  • ஐம்படையின் நடுவே - பஞ்சாயுதத்தின் நடுவே
  • நின் - உன்னுடைய
  • கனி - கொவ்வைக் கனி போன்ற
  • வாய் - அதரத்தில் ஊறுகின்ற
  • அமுதம் - அமுதம் போன்ற ஜலமானது
  • இற்று முறிந்து விழ - கீழே விழும்படியாக
  • ஏலும் - தகுதியான
  • மறை - வேதத்தினுடைய
  • பொருளே - அர்த்தமானவனே!
  • ஆடுக செங்கீரை - ஆடுக செங்கீரை
  • ஏழ் உலகும் உடையாய்! - ஏழ் உலகும் உடையவனே!
  • ஆடுக ஆடுகவே - ஆடிக் காட்டுவாயாக

கண்ணன் செங்கீரை ஆடும்போது, அவனிடமிருந்து பலவிதமான நறுமணங்கள் வீசுகிறதாம். பால், தயிற், நெய், இவைகளை அடிக்கடி புசிப்பதால் ஏற்படும் நறுமணம், சந்தனம், செண்பகம் இவைகளை சாத்தி கொள்வதால் ஏற்படும் நறுமணம் இப்படியாக பலவித பரிமளங்கள் அவனைச் சூழ்ந்திருக்கும். திருவாயைத் திறந்து சிரிக்கும் போதோ கற்பூரத்தின் பரிமளமும் தாமரையின் நறுமணமும், வீசும். திருவாய் மலரும் போது, சிவந்து இருக்கும் பவள வாயின் நடுவே சில பற்கள் வெள்ளி அரும்பு போல் பிரகாசிக்கும். நீல நிறத்தையுடையவனே, பஞ்சாயுதத்தின் நடுவே அமைந்து உள்ள உன்னுடைய கொவ்வை பழம் போன்ற வாயிலிருந்து ஊரும் அம்ருதமான நீர் கீழே விழும்படியாக ஆடவேண்டும். ஏழு உலகங்களையும் படைத்து ஆள்பவனே. நீ ஆடவேண்டும், என்கிறாள் யசோதை!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 019 - திருநாகை 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

019. திருநாகை (நாகப்பட்டினம்)
பத்தொண்பதாவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10

திருமங்கையாழ்வார்

001. திவ்ய ப்ரபந்தம் - 1758 - அச்சோ! இவர் எவ்வளவு அழகு!
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - இரண்டாம் திருமொழி - முதலாம் பாசுரம்
பொன் இவர் மேனி மரகதத்தின்* பொங்கு இளஞ் சோதி அகலத்து ஆரம்மின்* 
இவர் வாயில் நல் வேதம் ஓதும்* வேதியர் வானவர் ஆவர் தோழீ*
என்னையும் நோக்கி என் அல்குலும் நோக்கி*
ஏந்து இளங் கொங்கையும் நோககுகின்றார்*
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன்* அச்சோ ஒருவர் அழகியவா|

002. திவ்ய ப்ரபந்தம் - 1759 - குடந்தையில் கிடக்கும் பெருமாளா இவர்?
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - இரண்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
தோடு அவிழ் நீலம் மணம் கொடுக்கும்* சூழ் புனல் சூழ் குடந்தைக் கிடந்த*
சேடர்கொல் என்று தெரிக்கமாட்டேன்* செஞ் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி*
பாடக மெல் அடியார் வணங்கப்* பல் மணி முத்தொடு இலங்கு சோதி*
ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும்* அச்சோ ஒருவர் அழகியவா|

003. திவ்ய ப்ரபந்தம் - 1760 - உலகம் அளந்த உத்தமர் தான் இவர்?
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - இரண்டாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
வேய் இருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த* 
மெய்ய மணாளர் இவ் வையம் எல்லாம்*
தாயின நாயகர் ஆவர் தோழீ* தாமரைக் கண்கள் இருந்த ஆறு*
சேய் இருங் குன்றம் திகழ்ந்தது ஒப்பச்* செவ்விய ஆகி மலர்ந்த சோதி*
ஆயிரம் தோளொடு இலங்கு பூணும்* அச்சோ ஒருவர் அழகியவா|

004. திவ்ய ப்ரபந்தம் - 1761 - சங்கு சக்கரதாரியின் அழகு தான் என்னே!
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - இரண்டாம் திருமொழி - நான்காம் பாசுரம் 
வம்பு அவிழும் துழாய் மாலை தோள் மேல்* கையன ஆழியும் சங்கும் ஏந்தி*
நம்பர் நம் இல்லம் புகுந்து நின்றார்* நாகரிகர் பெரிதும் இளையர்*
செம் பவளம் இவர் வாயின் வண்ணம்* தேவர் இவரது உருவம் சொலலில்*
அம் பவளத் திரளேயும் ஒப்பர்* அச்சோ ஒருவர் அழகியவா|

005. திவ்ய ப்ரபந்தம் - 1762 - கடல் வண்ணர் கட்டழகு உடையவர்
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
கோழியும் கூடலும் கோயில் கொண்ட* கோவலரே ஒப்பர் குன்றம் அன்ன*
பாழி அம் தோளும் ஓர் நான்கு உடையர்* 
பண்டு இவர்தம்மையும் கண்டறியோம்*
வாழியரோ இவர் வண்ணம் எண்ணில்* 
மா கடல் போன்று உளர் கையில் வெய்ய*
ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி* அச்சோ ஒருவர் அழகியவா|

006. திவ்ய ப்ரபந்தம் - 1763 - கம்சனை வதைத்த காளையைக் கண்டேன்
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
வெம் சின வேழ மருப்பு ஒசித்த* வேந்தர்கொல்? ஏந்திழையார் மனத்தை*
தஞ்சு உடையாளர்கொல்? யான் அறியேன்* தாமரைக் கண்கள் இருந்த ஆறு*
கஞ்சனை அஞ்ச முன் கால் விசைத்த* காளையர் ஆவர் கண்டார் வணங்கும்*
அஞ்சன மா மலையேயும் ஒப்பர்* அச்சோ ஒருவர் அழகியவா|

007. திவ்ய ப்ரபந்தம் - 1764 - இவரைக் கண்டு என் மனம் பணிகின்றதே!
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும்*
பேர் அருளாளர்கொல்? யான் அறியேன்*
பணியும் என் நெஞ்சம் இது என்கொல்? தோழீ*
பண்டு இவர்தம்மையும் கண்டறியோம்*
அணி கெழு தாமரை அன்ன கண்ணும்*
அம் கையும் பங்கயம் மேனி வானத்து*
அணி கெழு மா முகிலேயும் ஒப்பர்* அச்சோ ஒருவர் அழகியவா|

008. திவ்ய ப்ரபந்தம் - 1765 - கருட வாகனர் வந்தார்: யாவரும் பாருங்கள்
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - இரண்டாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
மஞ்சு உயர் மா மதி தீண்ட நீண்ட* மாலிருஞ்சோலை மணாளர் வந்து* என்
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார்*
நீர்மலையார்கொல்? நினைக்கமாட்டேன்*
மஞ்சு உயர் பொன்மலைமேல் எழுந்த*
மா முகில் போன்று உளர் வந்து காணீர்*
அம் சிறைப் புள்ளும் ஒன்று ஏறி வந்தார்* அச்சோ ஒருவர் அழகியவா|

009. திவ்ய ப்ரபந்தம் - 1766 - ஆலிலையில் பள்ளி கொண்டவர் இவர் தாமோ?
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
எண் திசையும் எறி நீர்க் கடலும்* ஏழ் உலகும் உடனே விழுங்கி*
மண்டி ஓர் ஆல் இலைப் பள்ளி கொள்ளும்* 
மாயர்கொல்? மாயம் அறிய மாட்டேன்*
கொண்டல் நல் மால்வரையேயும் ஒப்பர்*
கொங்கு அலர் தாமரைக் கண்ணும் வாயும்*
அண்டத்து அமரர் பணிய நின்றார்* அச்சோ ஒருவர் அழகியவா|

010. திவ்ய ப்ரபந்தம் - 1767 - தேவர்களாகி மகிழ்வர்
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - இரண்டாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
அன்னமும் கேழலும் மீனும் ஆய* ஆதியை நாகை அழகியாரை*
கன்னி நல் மா மதிள் மங்கை வேந்தன்* காமரு சீர்க் கலிகன்றி* 
குன்றா இன் இசையால் சொன்ன செஞ்சொல் மாலை*
ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்*
மன்னவர் ஆய் உலகு ஆண்டு* மீண்டும் வானவர் ஆய் மகிழ்வு எய்துவரே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 82

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ராஜ சூய யாகம் பற்றி ஆலோசனை|

ஒரு நாள் அரச சபையில் யுதிஷ்டிரர் வழக்கம் போல தமது அறிவிற் சிறந்த அமைச்சர்களுடனும் அறிஞர்களுடனும் மற்றவர்களுடனும் அமர்ந்திருந்தார். அப்பொழுது அவர் கிருஷ்ணரைப் பார்த்து, "கோவிந்தா! நான் ராஜசூய யாகம் செய்ய விரும்புகிறேன், என் ஆசையைத் தாங்கள் தாம் நிறைவேற்றவேண்டும். தாங்கள் இதற்குச் சம்மதம் தெரிவித்தால் தான் நான் இந்தக் காரியத்தில் மேற்கொண்டு ஈடுபடுவேன்" என்று சொன்னார். 


கிருஷ்ணர் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பிறகு, யுதிஷ்டிரரைப் பார்த்து, "யுதிஷ்டிரரே! எல்லா அரசர்களையும் வெல்லும் திறமை தங்களுக்கு இருக்கிறது, தங்களுடைய பலம் வாய்ந்த சகோதரர்கள் உலகையே தங்களுக்கு வென்று கொடுப்பார்கள். "ஆனால், இதற்கு ஒரே ஒரு தடை இருக்கிறது. அதை தாங்கள் தீவிரமாகக் கவனிக்க வேண்டும்" என்று சொன்னார். இதைக் கேட்டதும் யுதிஷ்டிரர் தமது ஆசனத்தில் இருந்து எழுந்து நின்று, "அது என்ன தடை, கிருஷ்ணா?" என்று வினவினர்.

கிருஷ்ணர் எல்லாரையும் ஒரு தடவை பார்த்தார். பிறகு, "என்னுடைய கடும் எதிரியான ஜராசந்தன் தான்" என்றார். யுதிஷ்டிரரின் முகம் வெளியேறி விட்டது. ஜராசந்தனை வெற்றி கொள்ள முடியாது என்று அவருக்குத் தெரியும், ஆனால் கிருஷ்ணர், அவருக்கு ஆறுதல் கூறினார்: "ஒரு பலசாலியான எதிரி இருக்கிறான் என்பதற்காக நீங்கள் ராஜசூய யாகம் செய்யும் எண்ணத்தைக் கைவிட்டுவிடக் கூடாது. இதற்கு ஒரு வழியைக் கண்டு பிடிப்போம்" என்று சொன்னார். 

யுதிஷ்டிரர் ஆச்சர்யத்தோடு கிருஷ்ணரிடம், "என்ன காரணத்தினால் அவனை யாராலும் வெற்றிகொள்ள முடியவில்லை? அவன் பதினெட்டு முறை தங்களைத் தாக்கியும், தாங்களும்கூட அவனை விட்டு விட்டீர்களே, என்?" என்று கேட்டார். 

கிருஷ்ணர் சொன்னார், "நீங்கள் சொல்லுவது சரி, இரண்டு விஷயங்கள் குருகே நிற்கின்றன; ஒன்று, அவனுடைய பிறவி; இன்னொன்று அவனுடைய சிவபக்தி, இருந்தும் உத்தவர் சொன்னது போல அவனிக் கொள்ள ஒரு வழி இருக்கிறது".

இதற்கு யுதிஷ்டிரர், "கிருஷ்ணா, தாங்கள் சொல்லுவது புரியவில்லை. அவனுடைய பிறவியை பற்றியும், உத்தவர் திட்டத்தைப பற்றியும் சற்றுச் சொல்லுங்கள்" என்று கேட்டார்கள். 

"ஜராசந்தனின் பிறப்பை பற்றி கூறுகிறேன், கேட்டுக் கொள்ளுங்கள்" என்றார் கிருஷ்ணர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 35

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

பாதாதி கேச அழகு

ஸ்கந்தம் 02

ஸ்ரீ சுகாசார்யார் தொடர்ந்தார்.

“சப்த ப்ரும்மமான வேதம், அதன் பொருளை இலை மறை காயாகத் தான் கூறுகிறது. மனிதனின் அறிவோ, அதில் கூறப்படும் ஸ்வர்கம் போன்ற பலன்களை மட்டும் தேடி அலைகிறது.

மனிதன் மாயையினால் சுற்றிக் கொண்டு, கர்ம வாசனைகளால் அலைக் கழிக்கப்பட்டு இன்பத்தைத் தேடுகிறான். இவ்வுலகில் உண்மையான இன்பம் என்று ஒன்று இருந்தால் தானே அது அவனுக்குக் கிடைக்கும்?


ஒவ்வொரு முயற்சியையும் இது உண்மையான இன்பத்தை அளிக்க வல்லதா? என்று ஆராய்ந்து பார்த்துச் செய்ய வேண்டும். இல்லையெனில் கைவிட வேண்டும்.

பகவானை நம்புபவர்களுக்கு என்ன குறை வந்து விடப் போகிறது?

இறைவனை நம்பி வீட்டை விட்டுக் கிளம்புபவனுக்கு படுக்க இறைவன் அளித்த பூமி இருக்கிறது. பஞ்சு மெத்தை எதற்கு? உணவு நீர் அருந்த கைகள் இருக்க, ஆடம்பரமான பாத்திரங்கள் எதற்கு? உடுத்த பட்டாடைகள் அவசியமா? பசித்தால் காய் கனிகள் தர, பிறருக்காகவே வாழும் மரங்கள் உண்டு. தங்குவதற்கு குகைகள் இல்லையா? தாகம் தீர்க்க நதிகள் இல்லையா? இப்படி இயற்கையே எல்லாவற்றையும் அளிக்க மனிதன் இன்னொருவனை அண்டிப் பிழைக்க வேண்டிய அவசியம் என்ன?

வேண்டுபவர் வேண்டாதவர் அனைவர்க்கும் பாகுபாடின்றி அனைத்தையும் வழங்குகிறான். ஸத்யமே உருவான பகவான் அனைவரிடமும் அன்பு செலுத்துகிறான். அவனை வணங்கினால் பிறப்பு இறப்புச் சுழலிலிருந்து விடுபடலாம். இவ்வுலக வாழ்வே யம பட்டணத்தில் ஓடும் வைதரணி நதி போன்றது. மனிதன் கர்மத்தில் திளைக்கும் விலங்காவான்.”

இவ்வாறு சொன்ன ஸ்ரீ சுகர், பகவானின் ரூபத்தை வர்ணிக்கிறார்.

"சிலர் ஹ்ருதய ஆகாசத்தில் பகவானை ஒரு சாண் உயரம் உள்ளவராக தியானம் செய்கின்றனர். சங்கு, சக்கரம், கதை, தாமரை மலர் ஆகியவற்றை நான்கு திருக்கரங்களிலும் ஏந்தியவர். மலர்ந்த முகம் கொண்டவர், தாமரை இதழ் போன்ற அழகிய கண்கள், கதம்ப மலரின் அழகிய இதழ்களைப் போன்ற மஞ்சள் பட்டாடை, ஒளிரும் ரத்தினங்கள் கொண்ட தோள் வளைகள், கிரீடங்கள், மென்மையான திருவடித் தாமரைகள், திருமகள் வசிக்கும் ஸ்ரீ வத்ஸம் என்ற மரு, கழுத்தில் கௌஸ்துபம், வாடாத வனமாலை, அரையில் நவரத்தினங்கள் இழைத்த அரை ஞாண்,விரல்களில் மோதிரங்கள், திருவடிகளில் கொலுசும் தண்டையும், வழவழப்பான மாசற்ற கறுத்த சுருண்ட கேசங்கள், அழகுற விளங்கும் திருமுக மண்டலத்தில் புன்னகை, கம்பீரமான பார்வை, அசைகின்ற புருவ நெளிவுகள், கண்ணசைவில் அடியார்களுக்கு அருளை வாரி வழங்கும் ஒய்யாரம்.

நினைத்த பொழுதே காக்கும் அப்பரமனை மனம் தாரணையில் நிலை பெறுகிற வரையில் சலிக்காது தியானம் செய்ய வேண்டும். அதனால் சித்தம் தூய்மை அடையும். இடையறாது தியானம் நிலைக்கும். இவ்வாறு பாதாதி கேசமாக (முதலில் திருவடி, பின் கணுக்கால், முழந்தாள், தொடை, இடுப்பு, திருவயிறு, திருமார்பு, கழுத்து, திருக்கரங்கள், திருமுக மண்டலம் என்பதாக) ஒவ்வொரு அங்கமாக தியானம் செய்ய வேண்டும்.”

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்