||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 61
ஸுத⁴ந்வா க²ண்ட³ பரஸு²ர்
தா³ருணோ த்³ரவிண ப்ரத³:|
தி³விஸ் ப்ருக் ஸர்வ த்³ருக்³ வ்யாஸோ
வாஸஸ் பதி ரயோ நிஜ:||
- 572. ஸுத⁴ந்வா - சிறந்த வில்லினை ஏந்தியவர்.
- 573. க²ண்ட³ பரஸு²ர் - கோடரியை ஆயுதமாக உடையவர்.
- 574. தா³ருணோ - பகைவர்களைப் பிளப்பவர்.
- 575. த்³ரவிண ப்ரத³ஹ - செல்வங்களைக் கொடுப்பவர்.
- 576. தி³விஸ் ப்ருக் - பரம பதத்தைத் தொட்டவர், அபரிமிதமான அறிவை உடையவர், பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்டவர்
- 577. ஸர்வ த்³ருக்³ - அனைத்தையும் நேரில் கண்டறிந்தவ, ஒவ்வொரு வகையான அறிவின் வடிவில் இருப்பவர், எல்லா வகையான நிலைமைகளிலும் காணக்கூடிய அனைத்து வடிவங்களையும் படைத்தவர்.
- 578. வ்யாஸோ - வியாசன், ஏற்பாடு செய்பவர்.
- 579. வாஸஸ் பதிர் - வாக்குக்குத் தலைவர். (இங்கு மகாபாரதத்தை உரைத்தவர் என்பது பொருள்.)
- 580. அயோ நிஜஹ - கருவில் தங்கிப் பிறக்காதவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment