||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ராஜ சூய யாகம் பற்றி ஆலோசனை|
ஒரு நாள் அரச சபையில் யுதிஷ்டிரர் வழக்கம் போல தமது அறிவிற் சிறந்த அமைச்சர்களுடனும் அறிஞர்களுடனும் மற்றவர்களுடனும் அமர்ந்திருந்தார். அப்பொழுது அவர் கிருஷ்ணரைப் பார்த்து, "கோவிந்தா! நான் ராஜசூய யாகம் செய்ய விரும்புகிறேன், என் ஆசையைத் தாங்கள் தாம் நிறைவேற்றவேண்டும். தாங்கள் இதற்குச் சம்மதம் தெரிவித்தால் தான் நான் இந்தக் காரியத்தில் மேற்கொண்டு ஈடுபடுவேன்" என்று சொன்னார்.
கிருஷ்ணர் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பிறகு, யுதிஷ்டிரரைப் பார்த்து, "யுதிஷ்டிரரே! எல்லா அரசர்களையும் வெல்லும் திறமை தங்களுக்கு இருக்கிறது, தங்களுடைய பலம் வாய்ந்த சகோதரர்கள் உலகையே தங்களுக்கு வென்று கொடுப்பார்கள். "ஆனால், இதற்கு ஒரே ஒரு தடை இருக்கிறது. அதை தாங்கள் தீவிரமாகக் கவனிக்க வேண்டும்" என்று சொன்னார். இதைக் கேட்டதும் யுதிஷ்டிரர் தமது ஆசனத்தில் இருந்து எழுந்து நின்று, "அது என்ன தடை, கிருஷ்ணா?" என்று வினவினர்.
கிருஷ்ணர் எல்லாரையும் ஒரு தடவை பார்த்தார். பிறகு, "என்னுடைய கடும் எதிரியான ஜராசந்தன் தான்" என்றார். யுதிஷ்டிரரின் முகம் வெளியேறி விட்டது. ஜராசந்தனை வெற்றி கொள்ள முடியாது என்று அவருக்குத் தெரியும், ஆனால் கிருஷ்ணர், அவருக்கு ஆறுதல் கூறினார்: "ஒரு பலசாலியான எதிரி இருக்கிறான் என்பதற்காக நீங்கள் ராஜசூய யாகம் செய்யும் எண்ணத்தைக் கைவிட்டுவிடக் கூடாது. இதற்கு ஒரு வழியைக் கண்டு பிடிப்போம்" என்று சொன்னார்.
யுதிஷ்டிரர் ஆச்சர்யத்தோடு கிருஷ்ணரிடம், "என்ன காரணத்தினால் அவனை யாராலும் வெற்றிகொள்ள முடியவில்லை? அவன் பதினெட்டு முறை தங்களைத் தாக்கியும், தாங்களும்கூட அவனை விட்டு விட்டீர்களே, என்?" என்று கேட்டார்.
கிருஷ்ணர் சொன்னார், "நீங்கள் சொல்லுவது சரி, இரண்டு விஷயங்கள் குருகே நிற்கின்றன; ஒன்று, அவனுடைய பிறவி; இன்னொன்று அவனுடைய சிவபக்தி, இருந்தும் உத்தவர் சொன்னது போல அவனிக் கொள்ள ஒரு வழி இருக்கிறது".
இதற்கு யுதிஷ்டிரர், "கிருஷ்ணா, தாங்கள் சொல்லுவது புரியவில்லை. அவனுடைய பிறவியை பற்றியும், உத்தவர் திட்டத்தைப பற்றியும் சற்றுச் சொல்லுங்கள்" என்று கேட்டார்கள்.
"ஜராசந்தனின் பிறப்பை பற்றி கூறுகிறேன், கேட்டுக் கொள்ளுங்கள்" என்றார் கிருஷ்ணர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment