About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 27 August 2023

லீலை கண்ணன் கதைகள் - 29

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

பிரம்மன் கிருஷ்ணனைச் சோதிக்கிறார்l

படைப்புக் கடவுளான பிரம்மன், பிருந்தாவனத்தின் அதிசியச் சிறுவனான கண்ணனைப்பற்றி நிறையக் கேள்விபட்டிருந்தார். கிருஷ்ணனிடம் ஒரு வேடிக்கை செய்து, அவனுடைய சக்திகளைக் கண்டறிய வேண்டும் என்று நினைத்தார். அதனால் கன்றுகளை அவர் மறைத்துவைத்துவிட்டார்.! கிருஷ்ணன் எங்கெல்லாமோ தேடித் பார்த்தான். கன்றுகள் அகப்படவில்லை. அதனால் அவன் ஏமாற்றத்துடன் தன் நண்பர்களைத் தேடிக்கொண்டு திரும்பி வந்தான். ஆனால் என்ன ஆச்சரியம்! அங்கே நண்பர்களையும் காணவில்லை!


பிறகு தன் நண்பர்களை எங்கெல்லாமோ தேடினான். நண்பர்களையும் காணோம், கன்றுகளையும் காணோம்! பிறகு யோசனை செய்து பார்த்து, இவ்விதம் யாரோ சூது செய்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். கண்களை மூடிச் சற்று நேரம் தியானம் செய்தான். உண்மையில் அவன் கடவுள் அல்லவா! ஒரு நொடியில் அவனுக்கு எல்லாம் விளங்கி விட்டது. கிருஷ்ணன் புன்னகை பூத்து, "ஓ! இது பிரம்மனின் வேலையா? 


அவருக்கு மேல் எனக்கும் விளையாட தெரியும்" என்று சொல்லி கொண்டான். உடனேயே அவன் அந்த கன்றுகளையும் சிறுவர்களையும் சிருஷ்டித்தான். அதாவது, தானே அந்தக் கன்றுகளாகவும், சிறுவர்களாகவும் ஆனான். பிரம்மன் சிருஷ்டித்த அந்தச் சிறுவர்களுக்கும் கன்றுகளுக்கும் கிருஷ்ணன் இப்பொழுது சிருஷ்டித்த சிறுவர்களுக்கும் கன்றுகளுக்கும் ஒரு வித்தியாசமும் இருக்கவில்லை.


இது பெரிய வேடிக்கையாகத்தான் இருந்தது. கிருஷ்ணனே கன்றுகள், கிருஷ்ணனே அந்த கன்றுகளை மேய்க்கும் சிறுவர்கள், கிருஷ்ணனே அவர்கள் வைத்துகொண்டிருந்த விளையாட்டு பொருட்கள் எல்லாம் பல உருவங்களைக் கொண்ட கிருஷ்ணன் பிருந்தாவனத்தை அடைந்தான். தண்டைகளின் ஒலியும், புல்லாங்குழல்களின் ஒலியும் கேட்டதுமே, தாய்மார்கள் தங்கள் குழந்தைகளைப் பார்க்க வெளியே ஓடிவந்தார்கள். அந்தச் சிறுவர்கள் தாங்கள் ஈன்றெடுத்த பிள்ளைகள் அல்லர் என்பதை அவர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த சிறுவர்களுக்கு அன்னமூட்டுவதிலும், அவர்களுடன் கொஞ்சிவிளையாடுவதிலும் இவர்கள் முன்பைவிட அதிக மகிழ்ச்சியடைந்தார்கள். பகவானுக்கே அவர்கள் அன்னமூட்டினார்கள், பகவானுடனேயே அவர்கள் கொஞ்சி விளையாடினார்கள் என்பதை அவர்கள் எப்படி அறிவார்கள்! இப்படி ஒரு வருடம் கழிந்தது.. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 006 - திருப்பேர் நகர் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

006. திருப்பேர் நகர் 
கோவிலடி – திருச்சி
ஆறாவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த 
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
4 ஆழ்வார்கள் – 33 பாசுரங்கள்

1. திருமழிசையாழ்வார் - 1 பாசுரம் 
1. நான்முகன் திருவந்தாதி (மூன்றாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 2417 - நான்காம் திருமொழி - ஆறாம் பாசுரம் (36)

------------
2. நம்மாழ்வார் - 11 பாசுரங்கள்
1. திருவாய்மொழி (நான்காம் ஆயிரம்) 

  • திவ்ய ப்ரபந்தம் - 3860 - 3870 - பத்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி

------------
3. பெரியாழ்வார் - 2 பாசுரங்கள்
1. பெரியாழ்வார் திருமொழி (முதலாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 173 - இரண்டாம் பத்து - ஆறாம் திருமொழி - இரண்டாம் பாசுரம் – 1 பாசுரம்            
  • திவ்ய ப்ரபந்தம் - 205 - இரண்டாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - நான்காம் பாசுரம் - 1 பாசுரம்     

------------
4. திருமங்கையாழ்வார் - 19 பாசுரங்கள்
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) 12 பாசுரங்கள்

  • திவ்ய ப்ரபந்தம் - 1428 - 1437 - ஐந்தாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 1851, 1857 - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - (4 & 10) - 2 பாசுரங்கள்
2. திருக்குறுந்தாண்டகம் (இரண்டாம் ஆயிரம்) - 2 பாசுரங்கள்

  • திவ்ய ப்ரபந்தம் - 2048, 2050 - இரண்டாம் திருமொழி - 7 & 9 பாசுரங்கள் (17, 19)
3. திருநெடுந்தாண்டகம் (இரண்டாம் ஆயிரம்) - 3 பாசுரங்கள்

  • திவ்ய ப்ரபந்தம் - 2059, 2060 - முதலாம் திருமொழி - 8 & 9 பாசுரங்கள் (8, 9) - 2 பாசுரங்கள்                 
  • திவ்ய ப்ரபந்தம் - 2070 - இரண்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (19) - 1 பாசுரம்
4. சிறிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் - 2706 - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம் (34)
5. பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் - 2774 - ஏழாம் திருமொழி - இரண்டாம் பாசுரம் - (62
------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி
போம்மானை எய்து பொரும் ஆனைக் கொம்பு பறித்து
ஆம் ஆனை மேய்த்து உவந்த அம்மானை தாமச்
செழும் திருப் பேரானை சிறு காலே சிந்தித்து
எழுந்து இருப்பேற்கு உண்டோ இடர்

  • போம் மானை எய்து - தனக்கு முன்னே மாயமாக ஓடிச் சென்ற மாரீசனாகிய பொன் மானை அம்பெய்து கொன்றும்
  • பொரும் ஆனை கொம்பு பறித்து - யுத்தஞ் செய்ய வந்த குவலயாபீடமென்னும் யானையினது தந்தங்களைப் பிடுங்கியும்
  • ஆம் ஆனை மேய்த்து - மந்தையாகத் திரண்ட பசுக்களை மேய்த்தும்
  • உவந்த - மகிழ்ந்த
  • அம்மானை - ஸ்வாமியும்
  • தாமம் செழுந் திருப்பேரானை - வளப்பமமைந்த திருப்பேர் என்னும் ஸ்தலத்தில் எழுந்தருளி இருப்பவனுமான திருமாலை
  • சிறுகாலை - சிற்றஞ் சிறு காலையில்
  • சிந்தித்து - தியானித்துக் கொண்டே
  • எழுந்திருப்பேற்கு - எழுந்திருக்கும் எனக்கு
  • இடர் - பிறவித் துன்பம்
  • உண்டோ - உள்ளதாகுமோ? இல்லை

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - பெரியாழ்வார் திருமொழி - 1.2 அறிமுகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - 21 பாசுரங்கள்
திவ்ய ப்ரபந்தம் - 23 - 43

கண்ணனது திருமேனி அழகைப் பாதாதி கேசாந்தமாக அனுபவித்தல்

திருப்பாதாதிகேச வண்ணம் கண்ணனின் திருமேனியழகை
திருவடி முதல் திருமுடி வரை அனுபவித்தல்

வெண்டளையால் வந்த கலித்தாழிசை

கண்ணனை மகனாகப் பெற்ற பாக்கியத்தைப் பெறாப் பெரும் பேறாக நினைக்கிறாள் யசோதை! ஆயர்பாடியில் உ ள்ள பெண்களை அழைத்துக் கண்ணணின் திருமேனி அழகைக் காட்டுகிறாள். 


தான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற வேண்டும் என்பதே யசோதையின் நோக்கமாகும். திருவடி முதல் திருமுடி வரை இத்திருமொழியில் புகழப்படுகிறது!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.23

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.23 

யோத்ஸ்ய மாநாந வேக்ஷேஹம்
ய ஏதேத்ர ஸமாக³தா:|
தா⁴ர்த ராஷ்ட்ரஸ்ய து³ர் பு³த்³தே⁴: 
யுத்³தே⁴ ப்ரிய சிகீர்ஷவ:||

  • யோத்ஸ்ய மாநாந் - போர் செய்ய திரண்டு நிற்பவர்களை 
  • அவேக்ஷே - பார்க்க வேண்டும் 
  • அஹம் - நான் 
  • யே - யார் 
  • ஏதே - அவர்கள் 
  • அத்ர - இங்கே 
  • ஸமாக³தாஹ - வந்துள்ள 
  • தா⁴ர்த ராஷ்ட்ரஸ்ய - திருதராஷ்டிரரின் மகனுக்கு 
  • து³ர் பு³த்³தே⁴ஹே - கெட்ட புத்தியுடைய 
  • யுத்³தே⁴ - போரில் 
  • ப்ரிய - நன்மை 
  • சிகீர்ஷவஹ - விரும்பி

கெட்ட புத்தியுடைய திருதராஷ்டிரின் மகனின் நன்மையை விரும்பி போர் புரிய இங்கே கூடி உள்ள அவர்களை போர் புரிய போகிறவர்களை நான் பார்க்க வேண்டும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.7

வாஸுதே³வே ப⁴க³வதி
ப⁴க்தி யோக³: ப்ரயோஜித:।
ஜநயத் யாஸு² வைராக்³யம்
ஜ்ஞாநம் ச யத³ ஹைதுகம்॥

  • ப⁴க³வதி - இறைவனான 
  • வாஸுதே³வே - வாஸுதேவனிடத்தில் 
  • ப்ரயோஜித - செலுத்தப்பட்ட 
  • ப⁴க்தி யோக³ஃ - பக்தி யோகமானது 
  • வைராக்³யம் - பற்றின்மையையும் 
  • யத்³ - யாதென்று 
  • அஹைதுகம் - காரணமற்ற 
  • ஜ்ஞாநம் ச - அந்த பிரம்ம ஞானத்தையும் 
  • ஸு² - விரைவில் 
  • ஜநயதி - உண்டாக்குகிறது

பகவான் வாசுதேவனிடம் செய்யப்படும் பக்தியோகம், உலகியல் பொருள்களில் பற்றற்ற தன்மையை, வைராக்கியத்தை  அளிக்கும். தர்க்கங்களுக்கு எட்டாத உயரிய பிரும்ம ஞானத்தைக் கொடுக்கும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 38

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 8

ஈஸா²ந: ப்ராணத³: ப்ராணோ 
ஜ்யேஷ்ட²: ஸ்²ரேஷ்ட²: ப்ரஜாபதி:|
ஹிரண்ய க³ர்ப்போ⁴ பூ⁴க³ர்ப்போ⁴ 
மாத⁴வோ மது⁴ஸூத³ந:||

  • 65. ஈஸா²நஃ - அடக்கி ஆள்பவர். அனைத்து உயிரினங்களையும் பொருட்களையும் கட்டுப்படுத்துபவர். 
  • 66. ப்ராணத³ஃ - பிராணனைக் கொடுப்பவர், பலன் தருபவர்.
  • 67. ப்ராணோ - உயிராக இருப்பவர். உன்னதமானவர்.
  • 68. ஜ்யேஷ்ட²ஸ்² - முதன்மையானவர்.
  • 69. ஸ்²ரேஷ்ட²ஃ - மிகவும் மேன்மையுற்றவர். மகிமை வாய்ந்தவர்.
  • 70. ப்ரஜா பதிஹி - நித்ய சூரிகளுக்குத் தலைவர். அமரர்கள் அதிபதி. அனைத்து உயிரினங்களுக்கும் தலைவர். 
  • 71. ஹிரண்ய க³ர்ப்போ⁴ - பிரம்மா உட்பட அனைவரின் ஆத்மாவாக இருப்பவர். மிகவும் விரும்பத்தக்க பரம பதத்தில் நித்யவாசம் செய்பவர்.
  • 72. பூ⁴க³ர்ப்போ⁴ - பூமிப்பிராட்டிக்கு நாயகன். உலகைப் படைத்தவர்.
  • 73. மாத⁴வோ - திருமகள் கேள்வர். அவரை மௌனம், தியானம் மற்றும் யோகா மூலம் அடைய முடியும்.
  • 74. மது⁴ஸூத³நஹ - மது என்னும் அரக்கனை அழித்தவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - முப்பத்தி ஐந்தாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

035 இரு மன்னர் பெற்றேனோ வால்மீகியைப் போலே|

வால்மீகி முனிவர் இந்தியாவின் பழம்பெரும் இதிகாசங்களில் ஒன்றான, இராமாயணம் எனும் இதிகாசத்தை இயற்றியவர் ஆவார். 

இலங்கையில் இருந்து சீதையை மீட்டு, வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய ஸ்ரீ ராமர், அயோத்தி மன்னராக தரும நெறி வழுவாது பல ஆண்டுகள் ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தார். அயோத்தியே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தது. ஒரு நாள், நகர்வலம் வந்த காவலாளி, அங்கே ஒரு வீட்டில் உள்ளவர்கள் ராமரைப் பற்றி பேசுவதைக் கேட்டார். சலவை தொழில் செய்யும் குடும்பத் தலைவன் அங்கே சீதா தேவியைப் பற்றி தவறான விவாதம் நடந்து கொண்டிருப்பதை அறிந்து, ஸ்ரீ ராமரிடம் கூறினார். அந்த வார்த்தைகள் ராமனுடைய நெஞ்சில் முள் போல் குத்தியது. தர்மத்திற்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்து வந்த நாம் இப்படி ஒரு விஷயத்தை எண்ணிப் பார்க்கவில்லையே என்றெண்ணி, மக்களின் நலனுக்காகவும், தர்மத்திற்காகவும் கர்ப்பிணியான தன் சீதையைக் காட்டில் கொண்டு போய் விட்டு வர லட்சுமணரைப் பணித்தார். 


கங்கை ஆறு பாயும் பித்தூரில் வால்மீகி ஆசிரமம் அமைந்துள்ளது. அதன் அருகே சீதா தேவியை காட்டில் விட்டு விட்டு, லக்ஷ்மணர் அயோத்தி திரும்ப, தாங்க முடியாத துயரத்துடன் வந்த சீதா தேவிக்கு வால்மீகி அடைக்கலம் குடுத்தார். சீதா தேவிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். அக்குழந்தைகளை கையில் வாங்கிக் கொண்டார் வால்மீகி. தன் தர்ப்பைப் புல்லின் மேல் பாகமான குசம் என்ற பெயரை ஒரு குழந்தைக்கும், கீழ் பாகமான இலவம் என்ற பெயரை ஒரு குழந்தைக்கும் பெயரிட்டார்.


அவர்கள் வால்மீகியின் ஆசிரமத்திலேயே வளர்ந்தனர். ராமாயணத்தை வால்மீகி முதல் முதலில் கற்றுக் கொடுத்தது லவ மற்றும் குசனுக்கு மட்டுமே! நற்பண்புடனும், நற்குணங்களுடனும், அறிவில் சிறந்தவர்களாகவும், ஆயுதங்களை கையாள்வதில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாகவும் லவ குசனை வால்மீகி வளர்த்தார். ராமாயணத்தை அவர்களுக்குச் சொல்லி ஊரெல்லாம் அதை பாட வைத்தார்.

ஸ்ரீராமன் அசுவமேத யாகம் செய்தார். பரதன் ஒருநாள் இரு சிறுவர்களையும் அவரிடம் அழைத்து வந்தான். அவர்கள் பாடிய ராமாயணத்தை ஸ்ரீராமனேக் கேட்டார். இதற்குக் காரணமானவர் வால்மீகி. 

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "ஸ்ரீராமனின் இரு குழந்தைகளை வளர்க்கும் பெரும் பேறினைப் பெற்றவர் வால்மீகி. அப்படிப்பட்ட பேறு எனக்குக் கிடைக்கவில்லையே!!” ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்