||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 8
ஈஸா²ந: ப்ராணத³: ப்ராணோ
ஜ்யேஷ்ட²: ஸ்²ரேஷ்ட²: ப்ரஜாபதி:|
ஹிரண்ய க³ர்ப்போ⁴ பூ⁴க³ர்ப்போ⁴
மாத⁴வோ மது⁴ஸூத³ந:||
- 65. ஈஸா²நஃ - அடக்கி ஆள்பவர். அனைத்து உயிரினங்களையும் பொருட்களையும் கட்டுப்படுத்துபவர்.
- 66. ப்ராணத³ஃ - பிராணனைக் கொடுப்பவர், பலன் தருபவர்.
- 67. ப்ராணோ - உயிராக இருப்பவர். உன்னதமானவர்.
- 68. ஜ்யேஷ்ட²ஸ்² - முதன்மையானவர்.
- 69. ஸ்²ரேஷ்ட²ஃ - மிகவும் மேன்மையுற்றவர். மகிமை வாய்ந்தவர்.
- 70. ப்ரஜா பதிஹி - நித்ய சூரிகளுக்குத் தலைவர். அமரர்கள் அதிபதி. அனைத்து உயிரினங்களுக்கும் தலைவர்.
- 71. ஹிரண்ய க³ர்ப்போ⁴ - பிரம்மா உட்பட அனைவரின் ஆத்மாவாக இருப்பவர். மிகவும் விரும்பத்தக்க பரம பதத்தில் நித்யவாசம் செய்பவர்.
- 72. பூ⁴க³ர்ப்போ⁴ - பூமிப்பிராட்டிக்கு நாயகன். உலகைப் படைத்தவர்.
- 73. மாத⁴வோ - திருமகள் கேள்வர். அவரை மௌனம், தியானம் மற்றும் யோகா மூலம் அடைய முடியும்.
- 74. மது⁴ஸூத³நஹ - மது என்னும் அரக்கனை அழித்தவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment