||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 83
ஸமா வர்த்தோ நிவ்ருத் தாத்மா
து³ர்ஜயோ து³ரதி க்ரம:|
து³ர்லபோ⁴ து³ர்க³மோ து³ர்கோ³
து³ரா வாஸோ து³ராரிஹா||
- 779. ஸமா வர்த்தோ - திரும்பத் திரும்ப அவதரிப்பவர். தனது படைப்பின் செயல்பாட்டை சுழற்சியில் மீண்டும் மீண்டும் செய்கிறார். அவருடைய எண்ணங்கள், எப்பொழுதும் தன் பக்தர்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதைச் சுற்றியே சுழல்கின்றன.
- 780. நிவ்ருத் தாத்மா - ஒன்றிலும் சேராத தனித்த திருப்பப்பட்ட மனதை உடையவர். முதன்மையானவர், ஒப்பற்றவர். உயர்ந்தவர். பெரியவர்களை விட பெரியவர். உலகப் பற்றுகளிலிருந்து மனம் திரும்பியவர். நிவிருத்தி தர்மத்தை கடைப்பிடிப்பவர்களின் ஆத்மாவாக இருப்பவர். கர்மாவின்படி பலன்களை வழங்குபவர்.தனது அவதாரங்களை நம்மிடையே எடுத்துக் கொண்டாலும், அவர் சம்சாரத்தின் பந்தங்களிலிருந்து விடுபட்டவர். எங்கும் நிறைந்திருப்பதால் எதையும் விட்டு எங்கும் விலகாதவர். பிரளய காலத்தில் ஜீவாத்மாக்களை தன்னுள் இழுத்துக் கொண்டவர். அனைத்தையும் முழுமையாக ஊடுருவியவர். சிருஷ்டியின் (படைப்பு) பிரளய (அழித்தல்) விளைவுகளால் பாதிக்கப்படாதவர்.
- 781. து³ர்ஜயோ - வெற்றி கொள்ள முடியாதவர். அன்பாலும் பக்தியாலும் தவிர கட்டுப்படுத்த முடியாதவர்.
- 782. து³ரதி க்ரமஹ - மீற முடியாதவர். மோட்சத்தை நாடுபவர்களால் அவருக்கு கீழ்ப்படியவோ அல்லது புறக்கணிக்கவோ முடியாது.
- 783. து³ர்லபோ⁴ - அடைவதற்கு அரியவர். ஒரே மனப்பான்மையின் மூலம் மட்டுமே அடைய முடியும்.
- 784. து³ர்க³மோ - நெருங்க முடியாத ஒளியை உடையவர். அவரது பிரகாசத்தால் அவரை அடைவது கடினம்.
- 785. து³ர்கோ³ - அடைய முடியாதவர். பெரும் தடைகள் காரணமாக அவர் எளிதில் உணரப்படுவதில்லை.
- 786. து³ரா வாஸோ - நெருங்க முடியாத இருப்பிடத்தை உடையவர். அவரது இருப்பிடமான ஸ்ரீ வைகுந்தம் அடைவது எளிதல்ல.
- 787. து³ராரிஹா - தன்னை அடைய ஓட்டாமல் தீயவரை விலக்கி வைப்பவர். தீய எண்ணம் கொண்ட எதிரிகளை விரட்டுபவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்