||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 92 - சார்ங்கம் என்னும் வில்லை ஏந்தியவன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஏழாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
படர் பங்கைய மலர் வாய் நெகிழப்*
பனி படு சிறு துளி போல்*
இடங் கொண்ட செவ்வாய் ஊறி ஊறி*
இற்றிற்று வீழ நின்று*
கடுஞ் சேக்கழுத்தின் மணிக் குரல் போல்*
உடை மணி கணகணென*
தடந் தாளிணை கொண்டு சாரங்கபாணி*
தளர் நடை நடவானோ!
- படர் - படர்ந்திருக்கிற
- பங்கயம் மலர் - தாமரைப் பூ
- வாய் நெகிழ - மொட்டாக இல்லாமல் வாய் திறந்து மலரும் போது அதில் இருந்து பெருகுகி்ன்ற
- பனி படு - குளிர்ச்சி பொருந்திய மதுவாகிய தேனானது
- சிறு துளி போல - சொட்டுச்சொட்டாக விழும் துளியைப் போலே
- இடம் கொண்ட - பெருமை கொண்டுள்ள
- செவ்வாய் - தனது சிவந்த வாயில் இருந்தும்
- ஊறி ஊறி - ஜலமானது இடைவிடாமல் சுரந்து
- இற்று இற்று - நடுவே முறிந்து முறிந்து சொட்டு சொட்டாக
- வீழ நின்று - கீழே விழும் படி நின்று
- கடும் சே - முரட்டு ரிஷபத்தின்
- கழுத்தில் - கழுத்திலே கட்டப்பட்டுள்ள
- மணி - மணியினுடைய
- குரல் போல் - ஒலி போலே
- உடை மணி - தனது இடுப்பில் கட்டிய மணி
- கண கண என - கண கண என்று ஒலிக்க
- தடம் தாளிணை கொண்டு - அழகியதாய் பருத்த இரண்டு பாதங்களாலும்
- சார்ங்க பாணி - சார்ங்கம் என்னும் வில்லை ஏந்தியவனே!
- தளர் நடை - அழகிய இளம் நடையை
- நடவானோ - நடக்க மாட்டானோ? நடக்க வேணும்
மலர்ந்த தாமரைப் பூவில் இருந்து குளிர்ந்த தேன் சிறு சிறு துளியாக ஒழுகுவதைப் போல், கண்ணனின் சிவந்த வாயில் இருந்து ஊரும் ஜலமானது தொடர்ந்து கீழே முறிந்து விழ, இடுப்பில் கட்டின மணியின் ஓசை கொடிய ரிஷபத்தின் கழுத்தில் கட்டின மணியின் ஓசையைப் போல கண கண என்றொலிக்க, பெரிய கால்களையுடைய சார்ங்கபாணியான கண்ணன் தளர் நடையிட்டு வருவானோ என ஏங்குகிறார் ஆழ்வார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment