About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 29 September 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 54

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 24

அக்³ரணீர் க்³ராமணீ: ஸ்ரீமாந் 
ந்யாயோ நேதா ஸமீரண:|
ஸஹஸ்ர மூர்த்தா⁴ விஸ்²வாத்மா 
ஸஹஸ் ராக்ஷ: ஸஹஸ்ர பாத்:||

  • 220. அக்³ரணீர் - அடியார்களை மேலும் மேலும் உயரச் செய்பவன்.
  • 221. க்³ராமணீஸ் - தலைவன்.
  • 222. ஸ்ரீமாந் - சிறப்புடையவன்.
  • 223. ந்யாயோ - நீதிமான்.
  • 224. நேதா - கரைசேர்ப்பவன், தின் திருவடிக் கீழ் சேர்ப்பவன்
  • 225. ஸமீரணஹ - சிறந்த செயல்களைச் செய்பவன்.
  • 226. ஸஹஸ்ர மூர்த்தா⁴ - ஆயிரம் தலைகளுடையவன்.
  • 227. விஸ்²வாத்மா - எங்கும் நிறைந்துள்ளவன்; பரவியுள்ளவன்.
  • 228. ஸஹஸ் ராக்ஷஸ் - ஆயிரம் கண்களை உடையவர், விராட்ரூபி
  • 229. ஸஹஸ்ர பாத்து - ஆயிரம் கால்களை உடையவர்.

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.39

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.39 

கத²ம் ந ஜ்ஞேயமஸ்மாபி⁴: 
பாபாத³ஸ் மாந் நிவர்திதும்|
குல க்ஷயக்ருதம் தோ³ஷம் 
ப்ரபஸ்² யத்³ பி⁴ர் ஜநார்த³ந||

  • கத²ம் - ஏன் 
  • ந - இல்லை 
  • ஜ்ஞேயம் - இதை அறிய 
  • அஸ்மாபி⁴ஹி - நம்மால் 
  • பாபாத் - பாவங்களிலிருந்து
  • அஸ்மாந் - இவர்கள் 
  • நிவர்திதும் - விடுபட 
  • குல க்ஷய - குலநாசத்தால் 
  • க்ருதம் - செய்த 
  • தோ³ஷம் - குற்றம்
  • ப்ரபஸ்² யத்³பி⁴ர் - காணக் கூடியர்களால் 
  • ஜநார்த³ந – கிருஷ்ணரே

ஜனார்த்தனா! குல நாசத்தினால் வரும் குற்றம் தெளிவாக அறிந்து இருக்கின்ற நாம் ஏன் அந்த பாவத்திலிருந்து விலக அறியாமல் இருப்பது ஏன்?

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.23

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.23

ஸத்த்வம் ரஜஸ் தம இதி ப்ரக்ருதேர் கு³ணாஸ்தைர்
யுக்த: பர: புருஷ ஏக இஹாஸ்ய தத்தே|
ஸ்தி²த் யாத³யே ஹரி விரிஞ்சி ஹரேதி ஸம்ஜ்ஞா:
ஸ்²ரேயாம்ஸி தத்ர க²லு ஸத்த்வ தநோர் ந்ருணாம் ஸ்யு:

  • ஸத்த்வம் - நற்குணம்
  • ரஜஸ் - தீவிர குணம்
  • தம - அறியாமை இருள்
  • இதி - என்று சொல்லக்கூடிய
  • ப்ரக்ருதேர் - ஜட இயற்கையின்
  • கு³ணாஸ் - குணங்கள்
  • தைர் - அவற்றால்
  • யுக்த - தொடர்புகொண்டு
  • பர - உன்னதமான
  • புருஷ - புருஷர்
  • ஏக - ஒருவரே
  • இஹாஸ்ய - இந்த உலகத்தினுடைய
  • தத்தே - ஏற்கிறார்
  • ஸ்தி²த் யாத³யே - படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் முதலான செயல்களுக்காக
  • ஹரி - பரம புருஷ பகவானாகிய விஷ்ணு
  • விரிஞ்சி - பிரம்மா
  • ஹரே - சிவபெருமான்
  • இதி - இவ்வாறாக
  • ஸம்ஞாஹா - வேறுபட்ட அம்சங்களை
  • ஸ்²ரேயாம்ஸி - முடிவான நன்மை
  • தத்ர - அவைகளில்
  • க²லு - மத்தியில்
  • த்த்வ - ஸத்வ குண ரூபியான
  • தநோர் - வாசுதேவனாலேயே (உருவம்)
  • நிரணாம் - இந்த உலகில் மக்களுக்கு
  • ஸ்யுஹு - ஏற்படுகின்றன

ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களும் பிரகிருதியான மாயையின் குணங்கள். இம்முக்குணங்களையும் ஏற்று பரம்பொருளான பகவான் ஒரவரே, இவ்வுலகின் ஆக்கல், அளித்தல், அழித்தல், ஆகியவற்றின் பொருட்டு, பிரும்மா, விஷ்ணு, சிவன் என்ற பெயர் பெயர்களையும் ஏற்கிறார். அந்த மூவருள் சத்துவ மூர்த்தியாகிய பகவான் வாசூதேவானால்தான் இவ்வுலக மக்களுக்கு நன்மைகள் உண்டாகின்றன.

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - த்யான ஸ்லோகம் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்⁴யான மங்க³ல ஸ²லோகா꞉ 2
 ஶ்ரீ வால்மீகி நமஸ்க்ரியா:

ய꞉ பிப³ன் ஸததம் ராம
ஸரிதாம்ருத ஸாக³ரம்|
அத்ருப்தஸ் தம் முநிம் வந்தே³ 
ப்ராசேதஸ மகல்மஷம்||

  • யஃ - எவர்
  • ஸததம் - எப்போதும்
  • ராம ஸரித அம்ருத ஸாக³ரம் - ராம ஸரிதமாகிய அமுதக் கடலை
  • பிப³ன் - குடித்தும்
  • அத்ருப்தஸ் - திருப்தி இல்லாமல் இருக்கிறாரோ
  • தம் முநிம் - அந்த வால்மீகி முனிவரை
  • வந்தே³  - நமஸ்கரிக்கிறேன்
எவர் எப்போதும் ராம ஸரிதமாகிய அமுதக் கடலை குடித்தும் திருப்தி இல்லாமல் இருக்கிறாரோ, அந்த வால்மீகி முனிவரை நமஸ்கரிக்கிறேன்.

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திவ்ய ப்ரபந்தம் - 38 - பெரியாழ்வார் திருமொழி - 1.2.16

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 38 - வாசுதேவனின் கண்கள்
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - பதினாறாம் பாசுரம்

விண் கொள் அமரர்கள்* 
வேதனை தீர* 
முன் மண் கொள் வசுதேவர்* 
தம் மகனாய் வந்து*
திண் கொள் அசுரரைத்* 
தேய வளர்கின்றான்* 
கண்கள் இருந்தவா காணீரே* 
கன வளையீர்! வந்து காணீரே|

  • விண் கொள் - ஸ்வர்க்காதி லோகங்களை இருப்பிடமாகக் கொண்ட
  • அமரர்கள் - தேவர்களின்
  • வேதனை தீர - துன்பங்களை தீர்ப்பதற்காக
  • முன் - முன்பு
  • மண் கொள் - பூமியை இருப்பிடமாகக் கொண்ட
  • வசுதேவர் தம் - வஸுதேவர்க்கு
  • மகனாய் வந்து - மகனாக வந்து பிறந்து
  • திண்கொள் - வலிமை கொண்ட
  • அசுரர் - அஸுரர்கள்
  • தேய - அழியும் படி
  • வளர்கின்றான் - வளர்கின்ற கண்ணனுடைய 
  • கண்கள் இருந்வா காணீரே - கண்களின் அழகை வந்து பாருங்கள்
  • கனம் வளையீர் - தங்க வளையல்கள் அணிந்துள்ள பெண்களே 
  • வந்து காணீரே! - வந்து பாருங்கள்! 

விண்ணுலகத்தில் வாழ்கின்ற தேவர், தேவிகளுக்கு அசுரர்களால் விளைவிக்கப்படும் துன்பங்களை எல்லாம் தீர்ப்பதற்காக, மண்ணுலகத்தில், வசுதேவர் என்பவருக்கு மகனாகப் பிறந்து, திண்மையானத் தோள்களை உடைய அசுரனான கம்சனை அழிப்பதற்காக ஆயர்பாடியில் (கண்ணனின்) வளர்கின்றவனுடைய திருக்கண்ணழகைப் பாருங்கள். பெண்களே, வந்து, அசுரனை அழிப்பதற்காக வளர்கின்ற பேராற்றலுடைய கண்ணனின் திருக்கண்கள் எத்தனை அழகாய் இருக்கின்றது என்பதை வந்து பாருங்கள் என்று நெருக்கமாய் வளையல் அணிந்துள்ள பெண்களை அழைக்கிறாள் யசோதை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 012 - திருக்குடந்தை 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

012. திருக்குடந்தை 
 பாஸ்கர க்ஷேத்ரம் - கும்பகோணம் 
பன்னிரெண்டாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ ஸார்ங்கபாணி பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ கோமளவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ ஸார்ங்கபாணி பெருமாள் 
திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: ஸார்ங்கபாணி
  • பெருமாள் உற்சவர்: ஆராவமுதன்
  • தாயார் மூலவர்: கோமளவல்லி
  • திருமுக மண்டலம் திசை: தெற்கு 
  • திருக்கோலம்: உத்யோக ஸயனம்
  • புஷ்கரிணி: ஹேமவல்லி
  • தீர்த்தம்: காவிரி, அரசலாறு 
  • விமானம்: வேதவேத, வைதிக
  • ப்ரத்யக்ஷம்: ஹேம மஹரிஷி
  • ஆகமம்: பாஞ்சராத்திரம்
  • ஸம்ப்ரதாயம்: வட கலை
  • மங்களாஸாஸநம்: 7 ஆழ்வார்கள்
  • பாசுரங்கள்: 51

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

பெருமாள் பள்ளி கொண்டிருக்கும் தலங்களில் பலவிதமான ஸயனங்களில் காட்சி தருவார். இங்கு "உத்தான ஸயன' கோலத்தில் பள்ளி கொண்டு இருக்கிறார். இத்தலத்திற்கு வந்த திருமழிசை ஆழ்வார், ஸ்வாமியை வணங்கி மங்களா ஸாஸநம் செய்தார். அப்போது அவர், "நடந்த கால்கள் வலிக்கிறது என்றா பள்ளி கொண்டிருக்கிறாய்!' என்ற பொருளில் பாடினார். அவருக்காக ஸ்வாமி எழுந்தார். திருமாலின் அருளைக் கண்டு மகிழ்ந்த திருமழிசை ஆழ்வார், "அப்படியே காட்சி கொடு!' என்றார். ஸ்வாமியும் அவ்வாறே அருளினார். முழுமையாக பள்ளி கொண்டிராமல் சற்று எழுந்த கோலத்தில் இருப்பதை "உத்தான ஸயனம்' என்பர்.

பெருமாளை குறித்து, பன்னிரு ஆழ்வார்கள் மங்களா ஸாஸனம் செய்த பாடல்கள், நாலாயிர திவ்ய பிரபந்தமாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்த பாடல்கள் கிடைப்பதற்கு காரணமாக இருந்தவர் இத்தலத்து பெருமாளே ஆவார். நாதமுனி என்பவர் ஸார்ங்கபாணியை வணங்க வந்தார். அப்போது சில பக்தர்கள் ஸ்வாமியின் பெருமையை "ஓராயிரத்துள் இப்பத்தும்' என்று சொல்லி பாடினர். இதைக் கேட்ட நாதமுனி, "இன்னும் ஆயிரம் பாடல்கள் உள்ளதா!' என வியந்து மீதி பாடல்களையும் பாடும் படி கேட்டார். ஆனால், அவர்களுக்கு தெரியவில்லை. அப்போது அவரது கனவில் தோன்றிய பெருமாள், ஆழ்வார் திருநகரி சென்று, நம்மாழ்வரை வணங்க மீதி பாடல்கள் கிடைக்கும் என்றார். அதன் படியே அவர் நம்மாழ்வாரை வணங்கினார். ஆயிரம் பாடல்கள் கிடைக்குமென வந்த இடத்தில், நாலாயிரம் பாடல்கள் கிடைத்தது. இவற்றை நாதமுனி தொகுத்தார். ஆழ்வார்கள் பல தலங்களிலும் மங்களா ஸாஸநம் (பாடல்) செய்த இப்பாடல்களின் தொகுப்பே "நாலாயிர திவ்ய பிரபந்தம்' ஆனது. ஆழ்வார்களின் பாடல்களை தொகுக்க காரணமாக இருந்தவர் என்பதால் இத்தலத்து ஸார்ங்கபாணிக்கு, "ஆராவமுதாழ்வார்' என்ற பெயரும் உண்டானது.

திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை 11 ஆழ்வார்களும், திருப்பதி வெங்கடாஜலபதியை 10 ஆழ்வார்களும் மங்களா ஸாஸநம் செய்தனர். 108 திருப்பதிகளில் அதிக ஆழ்வார்களால் மங்களா ஸாஸநம் செய்யப்பட்ட தலங்கள் இவையிரண்டு மட்டுமே. இதற்கு அடுத்து கும்பகோணம் ஸார்ங்கபாணி கோயிலே அதிக (ஏழு) ஆழ்வார்களால் மங்களா ஸாஸநம் செய்யப்பட்டிருக்கிறது. 

திருமணத்திற்காக இத்தலம் வந்த பெருமாள், தாயாரிடம் விளையாடுவதற்காக பூமிக்கு கீழே ஒளிந்து கொண்டார். திருமாலைக் காணாத தாயார் கலக்கமடைந்தார். அதன் பிறகு அவள் முன் தோன்றிய ஸ்வாமி, தாயாரை மணந்து கொண்டார். திருமால் ஒளிந்த இடம், "பாதாள ஸ்ரீநிவாசர் சந்நதி' என்ற பெயரில் உள்ளது. திருமணத்துக்குப் பிறகு, இவர், மேடான இடத்தில், மேட்டு ஸ்ரீனிவாசராக' தாயார்களுடன் தனிச்சந்நதியில் இருக்கிறார். பிரம்மச்சாரிகள், இல்லறத்தை தழுவிய பின்பே, மேன்மை பெற முடியும் என்ற வாழ்க்கை தத்துவத்தை இந்த அமைப்பு உணர்த்துவதாக உள்ளது.

திவ்ய தேசங்களில் பெரும்பாலும் சொர்க்க வாசல் இருக்கும். ஆனால், இத்தலத்தில் சொர்க்க வாசல் கிடையாது. இதற்கு காரணம் இருக்கிறது. இத்தலத்து ஸ்வாமி நேரே வைகுண்டத்தில் இருந்து இங்கே வந்தார். எனவே, இவரை வணங்கினாலே பரமபதம் (முக்தி) கிடைத்தது விடும் என்பதால், சொர்க்க வாசல் கிடையாது. மேலும், இங்குள்ள உத்ராயண, தெட்சிணாயன வாசலைக் கடந்து சென்றாலே பரமபதம் கிட்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது. உத்ராயண வாசல் வழியே தை முதல் ஆனி வரையும், தெட்சிணாயண வாசல் வழியே ஆடி முதல் மார்கழி வரையும் ஸ்வாமியை தரிசிக்க செல்ல வேண்டும். ஏதாவது ஒரு வாசல் தான் இங்கு திறக்கப்பட்டிருக்கும்.

திவ்ய தேசங்களில் மூலவர் மட்டுமே பிரதானம் பெற்றிருப்பார். அவருக்கே பூஜையின் போது அனைத்து அலங்காரங்களும் செய்யப்படும். ஆனால் இக்கோயிலில் உற்சவருக்கு, மூலவருக்கான மரியாதைகள் செய்யப் படுகிறது. அதாவது உற்சவர் மூலவரின் பொறுப்பில் இருந்து, உபயமாக (அவருக்கு பதிலாக) செயல் படுபவராக இருக்கிறார். எனவே இத்தலம், "உபய பிரதான திவ்ய தேசம்' எனப்படுகிறது.

பெருமாள் சங்கு, சக்கரத்துடன் மட்டும் காட்சி தருவார். ஆனால், இத்தலத்தில் ஸார்ங்கம் என்னும் வில்லும் வைத்திருக்கிறார். மூலஸ்தானத்தில் இருக்கும் ஸ்வாமி, உற்சவர் இருவருமே ஸார்ங்கம் வைத்திருப்பது விசேஷம். இதன் பெயராலேயே இவர், "ஸார்ங்கபாணி' என்று அழைக்கப் பட்டார். மூலவரிடம் இருக்கும் ஸார்ங்கத்தை பார்க்க முடியாது. கும்பகோணம் தீர்த்த ஸ்தலம் என்பதால், மூலவரை மகா மகத்திற்கு வரும் நதி தேவதைகளும், தேவர்களும் வணங்கியபடி காட்சி தருவதைக் காணலாம்.

இந்த தலம் தாயாரின் பிறந்த வீடு ஆகும். திருமால், அவளைத் திருமணம் செய்து வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார். எனவே, இங்கு தாயாருக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. தாயாரை வணங்கிய பிறகே பெருமாளை வணங்க வேண்டும் என்பது பொதுவான அம்சமானாலும், இத்தலத்தைப் பொறுத்தவரை, தாயார் சந்நதிக்கு சென்ற பிறகே, பெருமாள் சந்நதிக்குள் செல்லும் வகையில் வடிவமைப்பும் செய்யப் பட்டிருக்கிறது. நடை திறக்கும் போது, ஸ்வாமி சந்நதியில் செய்யப்படும் கோமாதா பூஜையை, இக்கோயிலில் கோமளவல்லி தாயார் சந்நதி முன்பாக நடத்துகின்றனர். தாயாரே பிரதானம் என்பதால், கோமாதா பூஜை தாயார் சந்நதியில் நடத்தப்பட்ட பிறகே, ஸ்வாமி சந்நதியில் நடக்கிறது.

பக்தனுக்கு சிரார்த்தம் செய்யும் பரந்தாமன்! லட்சுமி நாராயணசாமி என்னும் பக்தர் ஸார்ங்கபாணியின் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். இறுதிக் காலம் வரையில் சேவை செய்தார். இக்கோயிலின் கோபுரத்தை கட்டியவரும் இவரே. அவருக்கு குழந்தைகள் இல்லை. ஒரு தீபாவளியன்று அவர் பெருமாளின் திருவடியை அடைந்தார்.  சிரார்த்தம் செய்ய குழந்தைகள் இல்லாமல் போனால், நரகம் செல்ல வேண்டி வரும் என்பதால், தனக்கு சேவை செய்த தன் பக்தருக்கு தானே மகனாக இருந்து, இறுதிச் சடங்குகள் செய்தார் ஸார்ங்கபாணி. இது நடந்த மறுநாள் கோயிலை திறந்து பார்த்த போது, பெருமாள் ஈர வேட்டியுடனும், மாற்றிய பூணூலுடனும், தர்ப்பைகளுடனும் காரியம் செய்து வந்த கோலத்தில் காட்சியளித்தார். அதாவது பெருமாளே தன் பக்தனுக்கு ஈமக்கிரியை செய்து வைத்து கருணைக் கடலாக விளங்கினார். தீபாவளியன்று உச்சிக் காலத்தில் அந்த பக்தருக்கு ஸார்ங்கபாணி, திதி கொடுக்கும் நிகழ்ச்சி இப்போதும் நடக்கிறது. ஆனால், இதை பக்தர்கள் பார்க்க முடியாது.

ஒரு சமயம் வைகுண்டம் சென்ற பிருகு மகரிஷி, திருமாலின் சாந்த குணத்தை சோதிப்பதற்காக அவரது மார்பில் உதைக்கச் சென்றார். இதைத் திருமால் தடுக்கவில்லை. "உங்கள் மார்பில் நான் வசித்தும் பிற புருஷனின் பாதம் பட இருந்ததை தடுக்காமல் இருந்து விட்டீர்களே'' என கோபப்பட்ட லட்சுமி, கணவரைப் பிரிந்தாள். தவறை உணர்ந்த பிருகு மகரிஷி, திருமாலிடம் மன்னிப்பு வேண்டினார். லட்சுமியிடம், "அம்மா! கோபிக்க வேண்டாம். ஒரு யாகத்தின் பலனை அளிக்கும் பொருட்டு, தெய்வங்களில் சாத்வீகமானவர் யார் என அறியும் பொறுப்பை என்னிடம் தேவர்கள் ஒப்படைத்தனர். அந்த சோதனையின் விளைவே, உன் கணவனை நான் எட்டி உதைக்க வந்தது போல் நடித்தது. லோகத்தின் தாயாராகிய உனக்கு நான் தந்தையாக இருக்க விரும்புகிறேன். நீ என் மகளாகப் பிறக்க வேண்டும்,'' என்றார். லட்சுமி தாயார் மனம் குளிர்ந்து பிருகுவை ஆசிர்வதித்தாள். தன் சபதப்படி திருமாலைப் பிரிவதாகவும், பூலோகத்தில் பிருகுவின் மகளாகப் பிறக்கப் போவதாகவும், தன்னை மகளாக அடைய வேண்டுமானால், தவமிருக்க வேண்டும் என்றும் சொன்னாள். அதன்படி, பிருகு புண்ணிய பூமியான கும்பகோணம் பகுதியில் தவமிருந்தார். இங்குள்ள ஹேம புஷ்கரிணியில் தாமரை மலரில் லட்சுமி அவதரித்தாள். அவளுக்கு "கோமளவல்லி' என பெயரிட்டு வளர்த்து, திருமாலுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். பெருமாள் ஸார்ங்கம் என்னும் வில்லேந்தி வந்ததால், "ஸார்ங்கபாணி' எனப்பட்டார். இவ்வூரை தாயாரின் அவதார ஸ்தலம் என்கிறார்கள்..

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 45

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

கேசி - வ்யோமா வதம்|

கம்சனால் ஏவி விடப்பட்ட கேசி, பிருந்தாவனத்திற்கு வந்தான். ஒரு பெரிய குதிரை உருவத்தை போல மாறினான், அவன் கண்கள் பெரியதாக இருந்தது, சுவாசம் நெருப்பை வெளியிட்டது. பிருந்தாவனத்தில் உள்ள அனைத்து மக்களும் அதன் கனைத்த குரலை கண்டு அஞ்சி நடுங்கினர். அது சிங்கத்தின் கர்ஜனை போல் இருந்தது, கிருஷ்ணனை அனைத்து இடத்திலும் தேடி திரிந்தது, இந்த விஷயம் கிருஷ்ணனுக்கு தெரியவந்தது. கிருஷ்ணன் அது கம்சன் ஏவிய மற்றொரு அரக்கன் என்று அறிந்தான், உடனே அதை தேடி சென்றான்.


கிருஷ்ணனை பார்த்ததும் அதிக சத்தத்துடன் கனைத்து கொண்டே அதன் இரண்டு பினங்கல்களால் அவனை எட்டி உதைத்தது. அதை கிருஷ்ணன் தவிர்த்து, அதன் கால்களுக்கு இடையில் சென்று அதனை சுழற்றி தூரம் எறிந்தான். அந்த குதிரை மயக்கமுற்றது. ஆனாலும் கிருஷ்ணன் விடவில்லை. அதன் வாய்க்குள் அவன் இடது கையை விட்டு அதன் பற்களை பிடித்து கொண்டான். உடனே குதிரை அவன் கையை கடிக்க முயன்றது, ஆனால் கிருஷ்ணனின் கை தான் எரியும் ஜோதியாயிற்றே, அவன் கைகள் வளர தொடங்கின, அந்த குதிரையால் முச்சு கூட விட முடியவில்லை, முழு உடலும் வியர்க்க ஆரம்பித்தது, வேதனையால் நெளிய ஆரம்பித்தது, தரையில் விழுந்து இரத்தத்தை கக்க ஆரம்பித்தது, அது இறக்கும் வரை கிருஷ்ணன் குதிரை வாயில் இருந்து கையை வெளியே எடுக்கவில்லை, சில மணி துளிகளில் அது இறந்தது. பிறகு கையை வெளியே எடுத்தான் கிருஷ்ணன். 


இதனை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த நாரதர், கிருஷ்ணனிடம் வந்து அவர் கால்களில் சாஷ்டங்கமாக விழுந்து வணங்கினர். அந்த தெய்வமே கிருஷ்ணன் உருவில் மனிதனாக பூமியில் தோன்றியதாக எண்ணி அவரை போற்றி பாடல்களை பாடினார். கம்சனின் எல்லா திட்டங்களையும் கிருஷ்ணனிடம் கூறினார். கிருஷ்ணன் அதை கேட்டு புன்னகைத்தான். இதை கூறிவிட்டு நாரதர் கிளம்பினர்.மற்றொரு நாள் கிருஷ்ணன் அவனது நண்பர்களுடன் பசுக்களை மேய்க்க கிளம்பினான், அவர்கள் கண்ணாமூச்சி விளையாட எண்ணினார்கள். அதில் சிலர் பசுவை காப்பவராகவும், சிலர் பசுக்களை திருடுபவராகவும் விளையாடினர். அந்த நேரம் பார்த்து பல மாய சக்திகளை உடையவனான வ்யோமா என்ற அசுரன், கோபியர் உருவம் கொண்டு அந்த குழந்தைகள் கூட்டத்தில் கலந்தான். அவர்களை ஒவ்வொருவராக கூட்டி சென்று ஒரு மலை குகையில் அடைத்தான். ஐந்து ஆறு சிறுவர்கள் தான் மிச்சம் இருந்தனர், இதை கிருஷ்ணன் அறிந்து கொண்டான், பிறகு கிருஷ்ணனையும் அந்த அசுரன் பிடித்து கொண்டான். உடனே கிருஷ்ணன் மலை போன்று பெரியதாக உருவம் எடுத்தான், அந்த அசுரனை கிருஷ்ணன் இறுக்கி பிடுத்து கொண்டான். அசுரனால் நகர கூட முடியவில்லை. எவளவோ முயற்சிதான், ஒன்றும் நடக்கவில்லை. கிருஷ்ணன் அசுரனை தரையில் தூக்கி அடித்து கொன்றான். பிறகு அவன் நண்பர்கள் அனைவரையும் குகையில் இருந்து வெளியே கொண்டு வந்தான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - ஐம்பத்தி ஒன்றாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

051 இங்கும் உண்டு என்றேனோ ப்ரஹ்லாதனைப் போலே|

கொடிய அரக்கனான இரண்யகசிபுக்கும் (இரணியன்) கயாதுக்கும் மகனாகப் பிறந்த பிரகலாதன், தெய்வத்தன்மை வாய்ந்த மிகச் சிறந்த விஷ்ணு பக்தன். ஹிரண்யகசிபு தவத்தில் அமர்ந்த பொழுது, அவன் மனைவியான கயாது கர்ப்பம் தரித்தாள். இரணியன் இல்லாத காரணத்தால், தேவர்கள் அவனது நாட்டை அழிக்க வந்த பொழுது, நாரத மாமுனி கயாதுவை தேவேந்தரனிடம் இருந்து காப்பாற்றி, அவரை தனது ஆஷ்ரமத்தில் வைத்து கவனித்து வந்தார். அப்பொழுது, அனுதினமும் நாரத மாமுனி, ஸ்ரீமன் நாராயணன் (விஷ்ணு) தான் ஈரேழு உலகத்திற்கும் கடவுள் என்று போதித்தார். பின்னாளில் இரணியன் வரங்கள் பெற்று நாடு திரும்ப, அரண்மனை சென்ற கயாதுவுக்கு பிரஹலாதன் பிறந்து, அக்குழந்தை சிறுவயது முதலே சிறந்த ஸ்ரீமன் நாராயணனின் பக்தனாக வளர்ந்து வந்தது.


இரணியகசிபு, பிரம்மாவிடம் இருந்து தான் பெற்ற வரத்தால் ஈரேழு உலகத்திலும் ஆட்சி புரிந்து வந்தான். தான்தான் கடவுள் என்றும், அனைவரும் தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றும் அனைவரையும் கட்டாயப்படுத்தி வந்தான். குருகுலத்தில் குரு அனைத்து குழந்தைகளுக்கும் “இரணியகசிபு தான் முழுமுதற் கடவுள்”, என்று கற்றுக்கொடுக்க, பிரஹலாதனோ, “ஸ்ரீமன் நாராயணனே முழுமுதற் கடவுள்” என்றான். இச்செய்தியறிந்த இரணியன், விஷ்ணு உண்மையான கடவுள் அல்லர், அவர் நம் குல விரோதி, உன் சித்தப்பாவைக் கொன்றவன் என்று நயமாகவும் மிரட்டியும் சித்திரவதைப் படுத்திப் பார்த்தும் அவனால் பிரகலாதன் மனதை மாற்ற முடியவில்லை. துன்பப்பட்டாலும் விஷ்ணுதான் மூல முதற்கடவுள் என்ற தனது எண்ணத்திலிருந்து பிரகலாதன் பிறழாது உறுதியாக நின்றான். 


பிரகலாதனை மாற்ற பலவிதங்களில் துன்புறுத்தினான். ஆனால், எதையுமே கண்டுகொள்ளாத பிரஹலாதன் “நாராயணா நாராயணா” என்றபடி இருந்ததால், ஸ்ரீமன் நாராயணன் அவனைக் காப்பாற்ற, இரணியனின் முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தன. ஆத்திரமடைந்த இரணியன் தன் மகன் என்றும் பாராமல் பிரகலாதனைக் கொலை செய்ய ஆணையிட்டான். ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வியே அடைந்தான். யானையின் காலால் இடரச் செய்தல், கொடிய விஷம் கொண்ட பாம்புகளோடு அடைத்து வைத்தல், விஷமருந்தச் செய்தல், தீக்குள் இறங்கச் செய்தல் போன்ற அவனது கொடு முயற்சிகளில் இருந்தும் பிரகலாதன், தான் கொண்ட அசைக்க முடியாத விஷ்ணு பக்தியினால் விஷ்ணுவின் உதவியால் காப்பாற்றப்பட்டான். 


பிரகலாதனைக் கொல்லத் தான் எடுத்த முயற்சிகளில் எல்லாம் தோற்றுப் போன இரணியன் தானே நேராகப் பிரகலாதனைக் கொல்லப் போன போதும் பிரகலாதன் பயமின்றி தான் வணங்கும் கடவுள் தன்னைக் காப்பார் என்றான். அது கேட்டு ஆத்திரத்தில் அறிவிழந்த இரணியன், விஷ்ணுவைத் தானே கொல்லப் போவதாகக் கூறி, ‘உன் கடவுளைக் காட்டு’, என பிரகலாதனிடம் கேட்க, பிரகலாதனோ, “ஸ்ரீமன் நாராயணன் எங்கும் இருப்பார் எதிலும் இருப்பார், ஏன் தூணிலும் இருப்பார் எந்தத் துரும்பிலும் இருப்பார்” என்று கூறினான். இரணியன் ஒரு தூணைக் காட்டி, இந்த தூணில் உள்ளாரா என்று கேட்க, பிரகலாதனோ, “தூணிலும் இருப்பார், தூணின் தூசியிலும் இருப்பார், தந்தையே” என்று கூறினான். இரணியன் அந்தத் தூணை உடைக்க, ஸ்ரீமன் நராயணர், நரசிம்ம அவதாரம் (மனிதன் பாதி சிங்கம் பாதி) பூண்டு தூணில் இருந்து வெளிவந்து இரணியன் பெற்ற வரங்கள் பொய்க்காத வகையில் அவனை வதம் செய்து பிரகலாதனைக் காத்தருளினார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "பிரகலாதனைப் போல், மாறுபாடில்லா நம்பிக்கையுடன், ‘ஸ்ரீமன் நாராயணன் எங்கும் உள்ளார், இங்கும் உள்ளார்’, என்று கூறினேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்