||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 38 - வாசுதேவனின் கண்கள்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - பதினாறாம் பாசுரம்
விண் கொள் அமரர்கள்*
வேதனை தீர*
முன் மண் கொள் வசுதேவர்*
தம் மகனாய் வந்து*
திண் கொள் அசுரரைத்*
தேய வளர்கின்றான்*
கண்கள் இருந்தவா காணீரே*
கன வளையீர்! வந்து காணீரே|
- விண் கொள் - ஸ்வர்க்காதி லோகங்களை இருப்பிடமாகக் கொண்ட
- அமரர்கள் - தேவர்களின்
- வேதனை தீர - துன்பங்களை தீர்ப்பதற்காக
- முன் - முன்பு
- மண் கொள் - பூமியை இருப்பிடமாகக் கொண்ட
- வசுதேவர் தம் - வஸுதேவர்க்கு
- மகனாய் வந்து - மகனாக வந்து பிறந்து
- திண்கொள் - வலிமை கொண்ட
- அசுரர் - அஸுரர்கள்
- தேய - அழியும் படி
- வளர்கின்றான் - வளர்கின்ற கண்ணனுடைய
- கண்கள் இருந்வா காணீரே - கண்களின் அழகை வந்து பாருங்கள்
- கனம் வளையீர் - தங்க வளையல்கள் அணிந்துள்ள பெண்களே
- வந்து காணீரே! - வந்து பாருங்கள்!
விண்ணுலகத்தில் வாழ்கின்ற தேவர், தேவிகளுக்கு அசுரர்களால் விளைவிக்கப்படும் துன்பங்களை எல்லாம் தீர்ப்பதற்காக, மண்ணுலகத்தில், வசுதேவர் என்பவருக்கு மகனாகப் பிறந்து, திண்மையானத் தோள்களை உடைய அசுரனான கம்சனை அழிப்பதற்காக ஆயர்பாடியில் (கண்ணனின்) வளர்கின்றவனுடைய திருக்கண்ணழகைப் பாருங்கள். பெண்களே, வந்து, அசுரனை அழிப்பதற்காக வளர்கின்ற பேராற்றலுடைய கண்ணனின் திருக்கண்கள் எத்தனை அழகாய் இருக்கின்றது என்பதை வந்து பாருங்கள் என்று நெருக்கமாய் வளையல் அணிந்துள்ள பெண்களை அழைக்கிறாள் யசோதை.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment