||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 108
வநமாலீ க³தீ³ ஸா²ர்ங்கீ³
ஸ²ங்கீ² சக்ரீ ச நந்த³கீ:|
ஸ்ரீமாந் நாரயணோ விஷ்ணுர்
வாஸுதே³வோ பி⁴ரக்ஷது|| (2)
ஸ்ரீ வாஸுதே³வோ பி⁴ரக்ஷது ஓம் நம இதி||
- வநமாலீ - வைஜெயந்தி மலர்களின் மாலையை அலங்கரிப்பவர்
- க³தீ³ - சூலாயுதத்தை ஏந்துபவர்
- ஸா²ர்ங்கீ³ - ஷார்ங்கம் என்று அழைக்கப்படும் வில் ஏந்தியவர்
- ஸ²ங்கீ² - பாஞ்சஜன்யம் என்ற சங்கு தாங்குபவர்
- சக்ரி ச - சுதர்சனம் என்று அழைக்கப்படும் சக்கரத்தை ஆயுதமாக தாங்குபவர்
- நந்த³கீ - நந்தகா என்ற வாளை ஏந்தியவர்
- ஸ்ரீமாந் - லட்சுமி தேவியை உடையவர்
- நாரயணோ - நர என்றால் ஆத்மா, அயனம் என்றால் பயணம் அல்லது தங்குமிடம். நாராயணன் எல்லா உயிர்களிலும் வசிக்கும் ஒருவர்.
- விஷ்ணுர் - அகிலம் முழுவதையும் வியாபித்திருப்பவர்
- வாஸுதே³வ - பிரபஞ்சம் முழுவதையும் மாயாவால் மறைக்கும் தெய்வீகம்
- அபி⁴ரக்ஷது - பக்தர்களைக் காப்பவர்
வைஜயந்தி எனப்படும் வாடாத வநமாலையை அணிந்தவரும், சங்கு சக்கரம் சாரங்கம் கதை நந்தகம் ஆகியவற்றைத் திவ்ய ஆயுதங்களாக உடையவரும், விஷ்ணு என்றும், வாசுதேவர் என்றும் பெயர் கொண்டவரும், பிராட்டியாரோடு கூடியவருமான நாராயணன் நம்மைக் காப்பாராக|
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் ஆயிரம் திருநாமங்கள் முற்றும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்