About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 12 April 2024

திவ்ய ப்ரபந்தம் - 115 - பெரியாழ்வார் திருமொழி - 1.9.8

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 115 - மறையோர் வணங்கும் எம்பிரான்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - எட்டாம் பாசுரம்

மூத்தவை காண* முது மணற் குன்று ஏறிக்* 
கூத்து உவந்து ஆடிக்* குழலால் இசை பாடி* 
வாய்த்த மறையோர் வணங்க* 
இமையவர் ஏத்த வந்து என்னைப் புறம் புல்குவான்* 
எம்பிரான் என்னைப் புறம் புல்குவான்|

  • மூத்தவை - ஆச்சார்யம், வயசு, ஞானம், இவற்றால் முதிர்ந்த  இடைச் சனங்கள்
  • காண - பார்ப்பதற்காக
  • முது மணல் - நெடு நாளாய் குவிந்து மேடாயிருந்த 
  • குன்று ஏறி - மணல் குன்றின் மேலேறி இருந்து
  • உவந்து - ஸந்தோஷித்து
  • கூத்து ஆடி - கூத்தாடியும் நின்று
  • குழலால் - புல்லாங்குழலினால் 
  • இசைபாடி - ராகம் பாடிக் கொண்டும்
  • வாய்த்த - தன்னுடைய சேஷ்டிதத்தைக் காணும் படி கிட்டின
  • மறையோர் - ப்ரஹ்ம ரிஷிகள், வேத விற்பன்னர்கள்
  • வணங்க - தன்னைக் கண்டு வணங்கவும்
  • இமையவர் - தேவர்கள்
  • ஏத்த - ஸ்தோத்ரம் செய்யவும்
  • வந்து - ஓடி வந்து
  • என்னை - என்னுடைய
  • புறம் - முதுகை
  • புல்குவான் - கட்டிக் கொள்வான்
  • எம்பிரான் - எம்பெருமான் 
  • என் புறம் - என்னுடைய 
  • புல்குவான்! - முதுகை கட்டிக் கொள்வான்

வயதில் முதிர்ந்த இடையர்கள் காணும்படியாகவும், ஒரு பழமையான மணற் குன்றின் மேலேறி ஆடிப் பாடியும், வேணு கானம் இசைத்தும், பிரம்மரிஷிகள் தன்னை வணங்க, தேவர்கள் துதிக்க, மிக்க ஆனந்தமாய் என் பின்னால் வந்து என்னைக் கட்டிக் கொள்வான்! எம்பெருமான், என்னைப் பின்புறம் வந்து கட்டிக் கொள்வான்! 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment