||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
இராமாயணம் என்னும் பெயர் இராமன், அயனம் என்னும் சொற்களின் கூட்டாகும். காவியத்தின் மையப் பாத்திரத்தின் பெயரான இராம, இரண்டு சூழ்நிலை அர்த்தங்களைக் கொண்டுள்ளது. அதர்வவேதத்தில், இது 'அடர், அடர் நிறம், கருப்பு' என்று பொருள்படும் மற்றும் 'இரவின் இருள் அல்லது அமைதி' என்று பொருள்படும் இராத்திரி என்ற வார்த்தையுடன் தொடர்புடையது. அயனம் என்னும் சொல் ஸமஸ்க்ருதத்தில் பயணம் என்னும் பொருளுடையது. இதனால், இராமாயணம் என்பது "இராமனின் பயணம்" என்று பொருள்படும்.
தமிழில் கம்பரும், வடமொழியில் வால்மீகியும், இந்தியில் துளசி தாசரும், மலையாளத்தில் எழுத்தச்சனும், அசாமியில் மாதவ் கங்குனியும், ஒரியாவில் பலராம்தாசுவும் இயற்றியுள்ளனர்.
இராமாயணத்தின் கதை பல மட்டங்களில் தொழிற்படுகின்றது. ஒரு மட்டத்தில் இது அக்காலத்துச் சமூகத்தை விவரிக்கின்றது. பரந்த பேரரசுகள், அடுத்த அரசர்களாக வரவிருக்கும் இளவரசர்களின் வாழ்க்கை, தாய்மாருக்கும் மாற்றாந் தாய்களுக்கும் இடையிலான போட்டி, உடன் பிறந்தோருக்கு இடையிலான அன்புப் பிணைப்பும் விசுவாசமும், இளவரசிகளை மணம் முடிப்பதற்கான போட்டிகள் போன்றவை இவற்றுள் அடக்கம். இன்னொரு மட்டத்தில் இது, நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் ஒரு மனிதன், ஒரு தலைவனாக எவ்வாறு நடந்துகொள்கிறான் என்பதையும், நிலைமைகளை ஒன்று போல எதிர்கொண்டு, சமயத்துக்குத் தக்கபடி நடந்து, தனது சொந்தத் துன்பங்கள் முதலியனவற்றுக்கும் அப்பால் குடிமக்களை எவ்வாறு வழிநடத்துகிறான் என்பதையும் காட்டுகிறது. வேறொரு மட்டத்தில் இது, தீமையை ஒழித்து நீதியை நிலை நாட்டுவதற்காக மனிதனாகத் தனது ஏழாவது அவதாரத்தை எடுத்த விஷ்ணுவின் கதையும் ஆகும்.
வால்மீகி இராமாயணம் 24,000 பாடல்களைக் கொண்டது. இவை மொத்தம் ஏழு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை இராமரின் பிறப்பில் இருந்து இறப்பு வரை விளக்குகின்றன. அவை:
பால காண்டம்
ராமன் மற்றும் அவன் சகோதரர்களின் பிறப்பு. ராமனது குழந்தைப் பருவம், அவனது குறும்பான விளையாட்டுக்கள், திருமணம். எதிர்காலத்தில் அவன் சந்திக்க போகும் சோதனைகளின் அடிப்படை போன்றவை இந்த பாலகாண்டத்தில் இருந்துதான் தொடங்குகிறது.
- ராமாயணத்தின் உருவாக்கம்
- ராம் பிறப்பு
- விஸ்வாமித்திரரின் யாகத்தைப் பாதுகாத்தல்
- ஜனக்புரியில் ராமரும் லட்சுமணனும்
- ராம் - திருமணம்
அயோத்தியா காண்டம்
ராமாயணத்தின் இரண்டாம் பாகம். ராமன் சீதையை கண்டது. சீதையுடன் திருமணம். இளவரசனாக அயோத்தியில் வாழ்ந்த காலத்தின் சம்பவங்களை ஸ்ரீராமரின் முடிசூட்டுக்கான ஏற்பாடுகள், அரச குடும்பத்தில் ஒருத்தியாக மரியாதை தரப்பட்ட கூனி, அதே அரச குடும்பத்தை பாதகத்தில் தள்ளி, ராமன் காட்டுக்குச் அனுப்பப்பட்ட சம்பவங்ககள் அடங்கும்.
- ராமர் பிரதிஷ்டை மற்றும் கைகேயியின் இரண்டு ஆசீர்வாதங்களுக்கான ஏற்பாடுகள்
- ராமரின் வன நடை
- வன பயணம்
- அயோத்தியில் கூச்சல்
- சித்ரகூடத்திற்கு பாரதத்தின் வருகை
ஆரண்ய காண்டம்
ராமாயணத்தின் மூன்றாம் பகுதி. ராமனது வனவாசத்தை காட்டுகிற பகுதி. ராமர், சீதை மற்றும் லட்சுமணன் தண்டகாரண்யத்திற்குள் நுழைகின்றனர்.
- முனிவர்களுடன் சந்திப்பு
- களை மாசுபாட்டிற்கு எதிரான போர்
- மாரிச் மாயை மற்றும் தங்க மான்
- ராமனிடமிருந்து பிரிந்து சீதையைத் தேடுதல்
கிஷ்கிந்தா காண்டம்
ராமாயணத்தின் நான்காம் பகுதி. ராமனது வனவாசத்தின் போது கடத்திச் செல்லப்பட்ட சீதையைத் தேடி போக, வானரப் படை உருவானதையும், ஸ்ரீ அநுமான் என்கிற மகிமை பொருந்திய வானரரின் நட்பு ராமனுக்கு அமைந்த சம்பவத்தையும், வானரர் நாட்டில் இராமன் வாழ்ந்ததையும் சொல்கிற பகுதி. ஸ்ரீ ராமர் - அனுமன் மற்றும் சுக்ரீவரின் சந்திப்பு, சுக்ரீவரின் துக்கத்தைக் கேட்பது, பாலியின் முக்தி, சீதையைத் தேடி அனைவரும் புறப்படுவது மற்றும் ஹனுமானின் வலிமையை நினைவுபடுத்தும் ஜம்வந்த் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
- ராமர் மற்றும் சுக்ரீவரின் நட்பு
- குழந்தை படுகொலை
- குரங்குகளால் சீதையைத் தேடுதல்
சுந்தர காண்டம்
ராமாயணத்தின் ஐந்தாம் பகுதி. சீதையைத் தேடி அனுமன் இலங்கைக்குப் புறப்பட்டது, சுர்சாவின் சந்திப்பு, லங்கானி கொலை, சீதா மற்றும் அனுமன் உரையாடல், இலங்காவை எரித்தல், ஹனுமான் திரும்புதல், ராவணன் - விபீஷண உரையாடல், விபீஷணன் ஸ்ரீ ராமரிடம் தஞ்சம் புகுந்தது மற்றும் கடல் மீது கோபம் வரையிலான நிகழ்வுகள்.
- அனுமனின் இலங்கைப் பிரவேசம்
- லங்கா - தஹான்
- அனுமன் இலங்கையிலிருந்து திரும்புதல்
யுத்த காண்டம்
ராமாயணத்தின் ஆறாம் பகுதி. ராமனுக்கும் ராவணனுக்கும் இடையே நடந்த கடுமையான யுத்தத்தை சொல்கிற பகுதி யுத்தகாண்டம். இலங்கை சம்பவத்தில், நல் நீல் கடலில் பாலம் கட்டியது, அனைவரும் கடல் கடந்தது, அங்கத் - ராவணன் உரையாடல், லக்ஷ்மணன் - மேகநாதர் போர், சஞ்சீவனியை கொண்டுவர செல்லும் அனுமன், கும்பகர்ணனின் எழுச்சி மற்றும் அவரது இறுதி பாதை, மேகநாத் போர், ராமர் - ராவண போர், சீதாவின் அக்னிச் சோதனை, விபீஷணனின் முடிசூட்டு விழா மற்றும் ஸ்ரீ சீதா ராம் அவத் புறப்பாடு ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
- போர் அணிவகுப்பு மற்றும் பாலம் கட்டுமானம்
- போருக்கான ஆயத்தங்கள் மற்றும் அங்கத் இலங்கைக்கு புறப்பட்டது
- கடுமையான முன்
- கும்பகர்ண போர்
- லட்சுமணன் - மேகநாத் போர்
- ராமர் - ராவணன் போர்
- அயோத்தியில் ராமருக்கு முடிசூட்டு விழா
உத்தர காண்டம்
இலங்கை போரில் ராவணன் வீழ்ந்து, ராமன் வெற்றி பெற்று, ராமன் அயோத்திக்கு மீண்டும் அரசனானதும், சீதை மீண்டும் காட்டுக்கு அனுப்பப்பட்டதையும் சொல்கிற சம்பவ பகுதி இது. இப்படியாக ஏழு காண்டங்களை கொண்டது வால்மீகி ராமாயண காவியம்.
இராமாயணத்தின் முக்கிய கதை மாந்தனான இராமன், இந்துக்களின் முதன்மைக் கடவுளரில் ஒருவர். மும்மூர்த்திகளுள் ஒருவரான திருமாலின் 10 அவதாரங்களுள் ஒருவராகப் போற்றி வழிபடப்படுபவர். உலகில் தீமையை ஒழித்து அறத்தை நிலைநாட்டுவதற்காக திருமால் இப் புவியில் தோன்றியதாக இந்துக்கள் நம்புகின்றனர். ஆண்டு தோறும் பலர் இராமர் பயணம் செய்த பாதையைப் பின்பற்றி யாத்திரை செய்கின்றனர். இந்த இதிகாசம், ஒரு இலக்கியமாக மட்டுமன்றி, இந்து சமயத்துடன் இரண்டறக் கலந்துள்ளது. இதனைப் படிப்பவர்களதும், படிக்கக் கேட்பவர்களதும் பாவங்கள் நீங்கி, இறைவன் அருள் கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
வால்மீகியினால் இயற்றபட்ட ராமாயணந்தான் சமஸ்கிருத பாஷையின் முதல் இலக்கியமாகும். ஆகவே அது ஆதி காவியம் என்ற புகழையடைந்தது.
வால்மீகி ராமாயணம் நவாஹ பாராயண முறை.
04-05-14, 15:05 ராமாயண நவாஹ பாராயண விதி.
ஶ்ரீ ராம நவமி புண்ய காலத்தில் ஶ்ரீ மத் ராமாயணத்தை நவாஹ க்ரமத்தில் அதாவது ஒன்பது நாட்கள் , தானோ அல்லது தகுந்த நபர்கள் மூலமாகவோ வீட்டில் பராயணம் செய்யலாம். அல்லது காதால் கேட்கலாம். ஒவ்வொரு நாளும் எந்த கட்டம் வரை பாராயனம் செய்ய வேண்டும்.
- 1. பாலகாண்டம் ஒன்று முதல் 70 ஆவது ஸர்க்கம் வரை
- 2. பாலகாண்டம் 71 முதல் அயோத்யா காண்டம் - 64 ஆவது ஸர்க்கம் வரை
- 3. அயோத்யா கான்டம் 65 முதல் 119 ஆவது ஸர்க்கம் வரை
- 4. ஆரண்ய கான்டம் ஒன்று முதல் 68 ஆவது ஸர்க்கம் வரை
- 5. ஆரண்ய காண்டம் 69 முதல் கிஷ்கிந்தா காண்டம் 49 ஆவது ஸர்க்கம் வரை
- 6. கிஷ்கிந்தா காண்டம் 50 முதல் சுந்தர காண்டம் 57 ஆவது ஸர்க்கம் வரை
- 7. சுந்தர காண்டம் 58 முதல் யுத்த காண்டம் 50 ஆவது ஸர்க்கம் வரை
- 8 . யுத்த காண்டம் 51 முதல் 111 ஆவது ஸர்க்கம் வரை
- 9. யுத்த காண்டம் 112 முதல் 131 ஆவது ஸர்க்கம் வரை
இம்மாதிரி பாராயணம் செய்ய வேண்டும்.
ஶ்ரீ ராம பக்தி கல்பலதா என்னும் நூலில் சிற்சில ஸர்க்க பாரயணத்தின் முடிவில் விசேஷ பொருட்கள் நிவேதனம் செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.
ஸர்க்கம் எண் முடிவில் செய்ய வேண்டிய நிவேதனம். காண்டம். ஸர்க்கம் எண்.
பால காண்டம்
- 1. மூன்று தேங்காய்
- 16. வெல்ல பாயாசம்
- 18. பால், கல்கண்டு, சுக்கு பொடி போட்டு
- 30. குங்குப்பூ கலந்த திரட்டுப்பால்
- 73. ஏதோ ஒன்று சித்ரான்னத்தில்.
அயோத்யா காண்டம்
- 40. வெண்ணை, சக்கரை, கொழுக்கட்டை
- 50. பல வித பழங்கள்
- 56. எள்ளு சாதம்
- 99. நெய் கொழுக்கட்டை
- 112. பலா. மாதுளை, வாழைப்பழம்
- 117. நெய் பாயஸம்
ஆரண்ய காண்டம்
- 30. தேங்காய் சாதத்தில் சக்கரை சேர்த்து
- 68. திராக்ஷை, தேன்
- 74. வேக வைத்த கிழங்கு, மாதுளம் பழம்
கிஷ்கிந்தா காண்டம்
- 3. நெய் வடை
- 16. பானகம்
- 22. பயறு சுண்டல்
- 26. மாம்பழம், எண்ணையில் வறுத்த கடலை
ஸுந்தர காண்டம்
- 1. தயிரன்னம், ஊறுகாய், வெண்ணை
- 15. புளி அன்னம், ஊறுகாய், தாம்பூலம்
- 36, விசேஷ பக்ஷணம், சக்கரை பொங்கல்
- 66. பயத்தம் பருப்பு பால் பாயஸம்
யுத்த காண்டம்:
- 16. தேங்காய் துருவல் சக்கரை கலந்து
- 19. நெய்யில் செய்த முறுக்கு
- 50 . பசும்பால்
- 67. இளநீர், நாகப்பழம்
- 74. பால் போளி
- 91. எள்ளு சாதம், தயிர்
- 94. சித்ரான்னங்கள்
- 107. கரும்பு, தேங்காய், நெய் பாயசம்
- 111. நெய்யில் செய்த அதிரசம்
- 121. பால் பாயசம் வெண்ணையுடன்
ஶ்ரீ ராமாவதாரம் கர்போத்சவம், ஜனனோத்சவம் என இரு வகையாக கொண்டாடபடுகிறது.
கர்போத்சவம்: அமவாசைக்கு அடுத்த ப்ரதமை முதல் ராம நாமி முடிய கொன்டாடுவது. மஹா விஷ்ணு ஶ்ரீ ராமராக தோன்றி எல்லா அரக்கர்களையும் அழிக்க போகிறார் என அறிந்த ரிஷிகள் கெளசல்யையின் கர்ப வாசத்தை கொண்டாடினார்கள்.
ஜனனோத்ஸவம்: ஶ்ரீ ராமர் பிறந்த நவமி முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடுவது.. ஶ்ரீ ராமாயண பாராயணம், ப்ரவசனத்துடன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்