About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 10 January 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 95

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 65

ஸ்ரீத³: ஸ்ரீஸ²: ஸ்ரீநிவாஸ:
ஸ்ரீநிதி⁴: ஸ்ரீவிபா⁴வந:|
ஸ்ரீத⁴ர: ஸ்ரீகர: ஸ்²ரேய:
ஸ்ரீமாந் லோக த்ரயாஸ்²ரய:||

  • 612. ஸ்ரீத³ஸ் - செல்வம், புகழ், அழகு முதலான அனைத்து செழிப்பையும் கொடுப்பவர். 
  • 613. ஸ்ரீஸ²ஸ் - திருவுக்கும் திருவாகியவர்.
  • 614. ஸ்ரீநிவாஸஸ் - பிராட்டி உறையும் திருமார்பினன்.
  • 615. ஸ்ரீநிதி⁴ஸ் - பிராட்டியை செல்வமாக உடையவர்.
  • 616. ஸ்ரீவிபா⁴ வநஹ - பிராட்டியினால் புகழ் பெருகியவர். கர்மாவின்படி செழிப்பை விநியோகிக்கிறார்.
  • 617. ஸ்ரீத⁴ரஸ் - பிராட்டியைத் தாங்குபவர்.
  • 618. ஸ்ரீகரஸ் - தன்னைப் பின்பற்றுமாறு பிராட்டியைச் செய்பவர். அவர் தனது அவதாரங்களில் ஸ்ரீயைக் கொண்டு வருகிறார். மோட்சம் (நித்ய ஸ்ரீ) உட்பட பக்தர்களுக்கு ஸ்ரீ (ஆன்மீக செல்வம்) வழங்குபவர். தன் பக்தர்களை ஸ்ரீ (மகிமை) கொண்டு பிரகாசிக்கச் செய்பவர். ஸ்ரீ (மகாலட்சுமி) கையைப் பிடித்தவர்.
  • 619. ஸ்²ரேயஸ் - எல்லாராலும் வழிபடப்பெறும் பிராட்டியை உடையவர். அவர் இறுதி பேரின்பம்.
  • 620. ஸ்ரீமாந் லோக த்ரயாஸ்² ரயஹ - மூவுலகத்தாருக்கும் அடைக் கலப் பொருளாக இருப்பவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.32

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.32 

யத்³ருச் ச²யா சோப பந்நம் 
ஸ்வர்க³ த்³வாரம பாவ்ருதம்|
ஸுகி²ந: க்ஷத்ரியா: பார்த² 
லப⁴ந்தே யுத்³த⁴ மீத்³ருஸ²ம்||

  • யத்³ருச் ச²யா - தானாகவே 
  • ச - மேலும் 
  • உப பந்நம் - வந்த 
  • ஸ்வர்க³ - ஸ்வர்கத்தின் 
  • த்³வாரம் - வாயில் 
  • அபாவ்ருதம் - திறந்து கிடக்கும் 
  • ஸுகி²நஹ் - மிக்க மகிழும் 
  • க்ஷத்ரியாஃ - அரச குலத்தோர் 
  • பார்த² - பார்த்தா 
  • லப⁴ந்தே - பெறுகின்றனர் 
  • யுத்³த⁴ம் - போர் 
  • ஈத்³ருஸ²ம் - இது போன்ற

பார்த்தா! இது போன்ற, போர்கள் தானாகவே வருவதால், ஸ்வர்கத்தின் வாயில்கள் திறந்து இருக்கின்றன. இத்தகைய போர் பாக்கியமுடைய மன்னரே அடைகிறார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.30

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.30

ஏதத்³ ரூபம் ப⁴க³வதோ
ஹ்ய ரூபஸ்ய சிதா³த் மந:|
மாயா கு³ணைர் விரசிதம் 
மஹதா³ தி³பி⁴ராத் மநி||

  • அரூபஸ்ய - உருவமற்றவரும் 
  • சிதா³த் மநஹ - சித் ஸ்வரூபனுமான ஜீவனுக்கு 
  • ஏதத்³ ரூபம் - இந்த உருவம் ஸ்தூல ப்ரபஞ்சம் 
  • ப⁴க³வதோ - பகவானான இறைவனது 
  • மாயா கு³ணைர் - மாயா குண ஸ்வரூபமான 
  • மஹதா³ தி³பி⁴ர் - மஹத ஹங்காராதிகளால் உண்டாக்கப்பட்டு 
  • ஆத்மநி - ஆத்ம ஸ்தானத்தில் பகவானிடத்திலேயே 
  • விரசிதம் - உண்டாக்கப்பட்டது

உருவமற்றவனும் ஞான ஸ்வரூபனுமான பகவானுக்கு ஸ்தூலமான வெளியில் தெரிகின்ற இந்த உலகமாகிற உருவம், பகவானது மாயையின் குணங்களான, 'மஹத் தத்துவம், அஹங்காரத் தத்துவம்' முதலியவைகளால் பகவான் மேல் கற்பித்துக் கூறப்படுகிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.30

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.30

கு³ஹே ந ஸஹிதோ ராமோ 
லக்ஷ்மணே ந ச ஸீதயா|
தே வநேந வநம் க³த்வா 
நதீ³ஸ் தீர்த்வா ப³ஹூ த³கா:||

  • ராமோ - ஸ்ரீ ராமர் 
  • கு³ஹே ந - குஹனோடும் 
  • லக்ஷ்மணே ந - லக்ஷ்மணனோடும் 
  • ஸீதயா ச - ஸீதையோடும் 
  • ஸஹிதோ - கூட இருந்தார்
  • தே - அவர்கள் 
  • வநேந - ஒரு வனத்திலிருந்து 
  • வநம் - மற்றுமுள்ள வனத்தை 
  • க³த்வா - அடைந்து 
  • ப³ஹூ த³காஹ - மிகுந்த ஜலத்தை உடைய 
  • நதீ³ஸ் தீர்த்வா - நதிகளை தாண்டி

பிறகு ஸ்ரீ ராமர், குஹன், லக்ஷ்மணன், ஸீதை ஆகியோருடன் சேர்ந்து அவர்கள் காடு விட்டுக் காடு சென்று, நீர் நிறைந்த ஆறுகளைக் கடந்து, 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்  

திவ்ய ப்ரபந்தம் - 75 - பெரியாழ்வார் திருமொழி - 1.6.1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 75 - பண்டு காணி கொண்ட கைகள்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஆறாம் திருமொழி - முதலாம் பாசுரம்

மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப* மருங்கின் மேல்* 
ஆணிப் பொன்னால் செய்த* ஆய் பொன்னுடை மணி* 
பேணி பவளவாய்* முத்திலங்க* 
பண்டு காணி கொண்ட கைகளால் சப்பாணி* 
கருங்குழற் குட்டனே! சப்பாணி| (2)

  • ஆணிப் பொன்னால் செய்த - தூய தங்கத்தால் செய்த
  • ஆய் - வேலைப் பாட்டில் குறையும், தோஷமும் இல்லாதபடி ஆராய்ந்து செய்த
  • பொன் மணி - பொன் மணிக் கோவையை
  • உடை - உடைய அரை வடமும்
  • மருங்கின் மேல் - இடுப்பின் மேலே
  • மாணிக்கம் கிண்கிணி - உள்ளே மாணிக்கத்தை இட்ட அரைச் சதங்கை
  • ஆர்ப்ப - ஒலி செய்யவும்
  • பேணி - விரும்பி
  • பவளம் - பவழம் போன்ற
  • வாய் - வாயிலே
  • முத்து - முத்துப் போன்ற பற்கள்
  • இலங்க - பிரகாசிக்கவும்
  • பண்டு - முன்பு ஒரு காலத்தில்
  • காணி - பூமியை
  • கொண்ட - மஹாபலிச் சக்ரவர்த்தியிடமிருந்து பெற்றுக் கொண்ட
  • கைகளால் - திருக் கைகளாலே
  • சப்பாணி - சப்பாணி கொட்டி அருள வேணும்
  • கரு - கரு நிறமான
  • குழல் - கூந்தலையுடைய
  • குட்டனே - குழந்தாய்!
  • சப்பாணி - சப்பாணி கொட்டி அருள வேணும்

திருக்கால்களில் மாணிக்கக் கற்களை வைத்துக் கட்டப்பட்ட சதங்கைகள் எழுப்பும் ஒலியுடனும், சுத்தமான, தேர்ந்தெடுத்த பொன்னால் செய்த இடுப்பில் அணிந்த பொன் மணிக் கோவையுடனும், பவழ வாயில் பற்கள் முத்துப் போல் தெரியும் படியும், முன்பொரு சமயம் மகாபலி சக்ரவர்த்தியிடம் பூமியை பெற்றுக் கொண்ட அத்திருக் கைகளை சேர்த்துக் கொட்ட வேண்டும். கரு நிற கூந்தலுடைய பிள்ளாய் நீ கைகளை கொட்டி விளையாட வேண்டும்! என்கிறார் யசோதை பாவத்திலிருந்த ஆழ்வார். சப்பாணி என்பது குழந்தைகள் இரு கைகளையும் சேர்த்துக் கொட்டி விளையாடும் விளையாட்டாகும். குழந்தைகளின் அந்த வயதை சப்பாணிப் பருவம் என்றும் அழைப்பது வழக்கம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 021 - திருநந்திபுர விண்ணகரம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

021. திருநந்திபுர விண்ணகரம் 
நாதன் கோயில் - கும்பகோணம்
இருபத்தி ஒன்றாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ ஜெகந்நாதன் பெருமாள் திருக்கோயில் 

ஸ்ரீ செண்பகவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ ஜெகந்நாதன் பெருமாள் 
திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: விண்ணகரன், நாதநாதன்
  • பெருமாள் உற்சவர்: ஜெகந்நாதன்
  • தாயார் மூலவர்: செண்பகவல்லி
  • திருமுக மண்டலம் திசை: மேற்கு
  • திருக்கோலம்: வீற்றிருந்த
  • புஷ்கரிணி/தீர்த்தம்: நந்தி
  • விமானம்: மந்தர
  • ஸ்தல விருக்ஷம்: செண்பகம்
  • ப்ரத்யக்ஷம்: நந்தி, சிபி சக்கரவர்த்தி
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
  • பாசுரங்கள்: 10

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

திருப்பாற்கடலில் மகாலட்சுமி எப்போதும் திருமாலின் பாதத்தின் அருகே இருந்து சேவை செய்து வந்தார். அவருக்கு திடீரென திருமாலின் திருமார்பில் இடம் பிடிக்க ஆசை வந்தது. எனவே செண்பகாரண்யம் என்ற இத்தலத்தில் வந்து தவம் செய்தாள். திருமகளின் பிரிவை தாங்காத திருமால், ஐப்பசி மாதம் வளர்பிறை வெள்ளிக் கிழமையில் திருமகளை தன் திருமார்பில் ஏற்றுக் கொண்டார். எனவே ஐப்பசி வெள்ளிக் கிழமைகளில் இங்குள்ள தாயாருக்கு செய்யப்படும் அபிஷேகங்கள் பக்தர்களின் வேண்டுதலை விரைவில் நிறைவேற்றும் என்பது நம்பிக்கை. கிழக்கு நோக்கி தவம் செய்த திருமகளை திருமால் ஏற்றதால், இத்தல பெருமாள் மேற்கு நோக்கி அருள் பாலிக்கிறார். செண்பகாரண்ய தலத்தில் லட்சுமி தவம் செய்ததால் இத்தல தாயாரின் திருநாமம் "செண்பகவல்லி' ஆனது. இங்குள்ள பெருமாளின் திருநாமம் ஜெகநாதன். இவர் திருநாமத்திலேயே இவ்வூர் "நாதன் கோயில்' என்று ஆனது.

நந்தி தேவர் வைகுண்டத்தில் பெருமாளை காணச் சென்றார். அப்போது காவலுக்கு நின்றவர்களை உதாசீனப்படுத்தி விட்டு, கேட்காமல் உள்ளே செல்ல முயன்றதால் அவர்கள் கோபம் கொண்டு, "எங்களை அவமதித்ததால் உன் உடம்பு உஷ்ணத்தினால் எரியும்,'' என சாபமிட்டனர். நடந்த விஷயத்தை சிவனிடம் கூறினார் நந்தி. அதற்கு அவர், "பூமியில் திருமகள் தவம் செய்து கொண்டிருக்கும் செண்பகாரண்ய தலத்திற்கு நீயும் சென்று தவம் செய்து சாபம் விமோசனம் பெறுவாய்,'' என்றார். நந்தியும் அவ்வாறே தவம் செய்ய, மகிழ்ந்த பெருமாள் அவருக்கு சாப விமோசனம் தந்தார். தன்னைப் பார்க்கும் ஆர்வத்தில் தவறு செய்த நந்தியின் பெயரால், "நந்திபுர விண்ணகரம்' என தனது தலம் வழங்கப்படும்,''என்று அருள் பாலித்தார்.

சந்திர தோஷ பரிகார ஸ்தலம். இத்தல பெருமாள் தன் கையில் வாள், வில், சக்கரம், தண்டாயுதம், சங்கு ஆகிய ஆயுதங்களுடன் அருள் பாலிக்கிறார். ஆரம்ப காலத்தில் கிழக்கு பார்த்து அருள் பாலித்த பெருமாள், லட்சுமி மார்பில் ஏற்பதற்காகவும், புறாவுக்கு அடைக்கலம் தந்த சிபி சக்கரவர்த்தியின் தியாக உணர்வை காண்பதற்காகவும் மேற்கு பார்த்து அருள் பாலிக்கிறார் என்று தல புராணம் கூறுகிறது. சைவ வைணவ ஒற்றுமையை எடுத்துக் காட்டும் வகையில், மூலஸ்தானத்தில் நந்தியும், பிரமனும் பெருமாளை வணங்கிய நிலையில் உள்ளனர். விஜயரங்க சொக்கப்ப நாயக்க மன்னர், தீராத நோயால் சிரமப்படும் தன் அன்னை விரைவில் குணமாக இத்தலத்தில் வேண்டினார். பெருமாளின் அருளால் தன் அன்னை குணமானவுடன், ஒரு ராஜா அணிய வேண்டிய அனைத்து விதமான நகைகளை கொடுத்ததுடன், பல அரிய திருப்பணிகள் செய்தார். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 86

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஜராசந்தனின் அழிவு|

சண்டை திரும்பவும் ஆரம்பித்தது. சண்டையில் பீமன் ஜராசந்தனைத் தரையில் தள்ளினான். அப்பொழுது கிருஷ்ணர் ஒரு சமிக்ஞை செய்தார். ஓர் இலையை எடுத்து அதை இரண்டாகக் கிழித்தார். பீமன் அவர் கருத்தைப் புரிந்து கொண்டார். உடனே ஜராசந்தனின் ஒரு காலைத் தன் காலால் அமுக்கிக் கொண்டு, இன்னொரு காலைத் தன் கைகளால் பிடித்துக் கொண்டு, யானை மரக்கிளையை உடைப்பது போல, அவன் உடலை இரண்டாகப் பிளந்தான். உடனே வெகு வலிமை, வல்லமை பொருந்திய அரசன் ஜராசந்தன் இறந்தான். 


கிருஷ்ணரும், அர்ஜுனனும், பீமனைக் கட்டித் தழுவிக் கொண்டனர். கிருஷ்ணர் ஜராசந்தனின் மகனை அந்த நாடு அரசனாகப் பட்டாபிஷேகம் செய்துவைத்தார், பிறகு ஜராசந்தன் சிறைப்படுத்தி வைத்திருந்த எல்லா நாடு அரசர்களையும் விடுதலை செய்தார். 

அந்த அரசர்கள் தங்களை விடுவித்த கிருஷ்ணரைப் பார்த்தார்கள். நன்றி உணர்வு மேலிட்ட அவர்களால் பேசவே முடியவில்லை. அதற்குப் பதில் அவர்கள் அழுது, தங்கள் கண்ணீரால் கிருஷ்ணரின் பாதங்களைக் கழுவினார்கள். அதற்குப் பிறகு அவர்கள் கிருஷ்ணருக்கு நன்றி தெரிவித்தார்கள். கிருஷ்ணர் அவர்களைப் பார்த்து, "அரசர்களே! நீங்கள் எல்லோரும் அவரவர் நாட்டுக்குத் திரும்பிச் சென்று தர்மம் தவறாது நாட்டை ஆளுங்கள், என்றும் கடவுளை மறவாதீர்கள். இது உங்களுக்கு என் அறிவுரை. பின்பு யுதிஷ்டிரர் ராஜசூய யாகம் நடத்தும்போது, அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து யாகத்தை வெற்றிகரமாக்குங்கள்" என்று சொன்னார். 

பிறகு கிருஷ்ணர் அர்ஜுனனுடனும், பீமனுடனும் கிரி விரஜத்திலிருந்து இந்திரப் பிரஸ்தம் நோக்கிப் பயணமானார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 39

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

நாரதரின் கேள்விகள்

ஸ்கந்தம் 02

நாரதர் ப்ரும்மாவிடம் கேட்டார். "தந்தையே தாங்களே அனைத்திற்கும் முன் தோன்றியவர். ஆன்ம தத்துவங்களை விளங்கும் படிச் செய்யும் வழியை உபதேசித்து அருளுங்கள். 


ப்ரபஞ்சத்தை விளங்கச் செய்வது யார்? எந்த சக்தியால் இது இயங்குகிறது? இதைப் படைத்தது யார்? கடைசியில் இது எங்கு லயமாகிறது? எவரை அண்டி இது நிற்கிறது? இதன் உண்மை ஸ்வரூபம் என்ன? உலகைப் படைக்கும் அறிவு தங்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது? தங்களுக்கு ஆதாரமாய் இருப்பவர் யார்? உங்கள் தலைவர் யார்? யாருக்குக் கட்டுப்பட்டு நீங்கள் உலகைப் படைக்கிறீர்கள்? தங்களுடைய உண்மை லக்ஷணம் என்ன? தாங்கள் ஒருவராகவே ஐம்பூதங்களைக் கொண்டு தங்கள் மாயையால் அனைத்து உலகையும் படைக்கிறீர்கள். சிலந்தி தன் வாயில் ஊறும் நீர் கொண்டு நூல் இழுத்து வலை பின்னி அதில் அங்கும் இங்கும் சென்று விளையாடுவது போல் நீங்கள் எவ்வித துன்பமும் இன்றி உலகைப் படைக்கிறீர்களே. இவ்வுலகில் உள்ள உயிருள்ள, உயிரற்ற, உயர்ந்த, தாழந்த எத்தன்மை கொண்டதாயினும் அது தங்களாலேயே படைக்கப் படுகிறது. ஆனால், தாங்களும் தவம் செய்கிறீர்கள். உங்களை விட உயர்ந்த சக்தி உள்ளதா? எனக்கு விளக்கமாகச் சொல்லுங்கள்" என்று கேட்டார்.

ப்ரும்மா இக்கேள்விகளின் பதிலாக படைப்பின் ரகசியத்தைக் கூறினார். "மகனே, நீ உயர்ந்த கேள்விகளைக் கேட்டாய். என்னை விட உயர்ந்த பகவானைப் பற்றி நீ இன்னும் அறியாததால் என்னை உயர்ந்தவன் என்கிறாய்.

சூரியன், சந்திரன், கிரகங்கள் நக்ஷத்ரங்கள், அக்னி ஆகிய அனைத்துமே இறைவனிம் இருந்து ஒளியைப் பெற்று ஒளிர்கின்றன. அது போல் நானும் ஸ்வயம் ப்ரகாசரான இறைவனிடம் இருந்து சக்தி பெற்று இவ்வுலகைப் படைக்கிறேன். ஆனால், இறைவனின் வெற்றி கொள்ள இயலாத மாயா சக்தியினால், எல்லோரும் என்னை குரு என்கின்றனர். மாயை அவர் எதிரில் பயத்தோடு நிற்கிறது.

பஞ்ச மஹா பூதங்களும், பிறவிக்குக் காரணமான கர்மாவும், இவற்றை இயக்கும் காலமும், அவற்றின் மாறுதலுக்கான சுபாவமும், அவற்றை நுகரும் ஜீவாத்மாவும், அனைத்துமே உண்மையில் பகவான் ஸ்ரீ வாசுதேவனே. வேதங்கள் ஸ்ரீமந் நாராயணனையே காரணமாகவும், குறிக்கோளாகவும் கொண்டவை. தேவர்களோ ஸ்ரீமந் நாராயணனின் திருமேனியில் தோன்றியவர்கள். வேள்விகள் அனைத்தும் அவரை மகிழ்விக்கவே செய்யப்படுகின்றன. ஸ்வர்கம் முதலிய உலகங்களும் அவரிடமே கற்பிக்கப் படுகின்றன. ப்ராணாயாமம் முதலான அஷ்டாங்க யோகங்களும் அவரை அடையும் ஸாதனங்களே.

தவங்கள் அனைத்தும் நம்மை அவரிடமே அழைத்துச் செல்கின்றன. நாம் பெற்ற அறிவும் அவரை அறிய உதவும் காரணம் ஆகும். அனைத்து ஸாதனைகளும் அவற்றால் உண்டாகும் பயன்களும் ஸ்ரீமந் நாராயணனிடமே அடைக்கலம். படைப்புத் தொழிலை நான் அவரது விருப்பப்படியே நடத்துகிறேன்." என்று சொல்லி மேற்கொண்டு எவ்வாறு பஞ்ச பூதங்களைக் கொண்டு படைப்பு நடக்கிறது என்பதை விளக்கினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 94

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 64

அநிவர்த்தீ நிவ்ருத் தாத்மா 
ஸம்க்ஷேப்தா க்ஷேம க்ருச் சி²வ:|
ஸ்ரீ வத்ஸ வக்ஷா: ஸ்ரீவாஸ: 
ஸ்ரீபதி: ஸ்ரீமதாம் வர:||

  • 603. அநிவர்த்தீ - பிறவி தோன்றுவதற்கான செயல்களைச் செய்யாதவர். ஒரு போதும் கை விடாதவர்.
  • 604. நிவ்ருத்தாத்மா - பலன் கருதாமல் பகவத் கைங்கர்யம் செய்பவருக்குத் தலைவர். உலக இன்பங்களிலிருந்து விலகிய மனதைக் கொண்டவர்.
  • 605. ஸம்க்ஷேப்தா - பிறவி எடுத்துக் கொண்டே இருப்பவருக்கு ஞானத்தைச் சுருங்கச் செய்பவர். கட்டுப்படுத்துபவர் அல்லது வரம்புகள் செய்பவர் 
  • 606. க்ஷேம க்ருச் - மோட்சமாகிய க்ஷேமத்தைச் செய்பவர். பக்தர்களின் செல்வத்தைப் பாதுகாக்கிறார்.
  • 607. சிவஹ - மங்களத்தைச் செய்பவர்.
  • 608. ஸ்ரீவத்ஸ வக்ஷாஸ் - ஸ்ரீவத்ஸம் என்னும் வட்ட வடிவமான மறுவைத் திருமார்பில் உடையவர்.
  • 609. ஸ்ரீவாஸஸ் - திருமகளுக்கு உறைவிடமானவர்.
  • 610. ஸ்ரீபதிஸ் - திருமகளின் தலைவர்.
  • 611. ஸ்ரீமதாம் வரஹ - செல்வர்களுக்கெல்லாம் செல்வர். ஐஸ்வரியத்தை உடையவர்களில் சிறந்தவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.31

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.31 

ஸ்வ த⁴ர்ம மபி சாவேக்ஷ்ய 
ந விகம் பிது மர்ஹஸி|
த⁴ர்ம் யாத்³தி⁴ யுத்³தா⁴ச் ச்²ரேயோ அந்யத்
க்ஷத்ரி யஸ்ய ந வித்³யதே||

  • ஸ்வ த⁴ர்மம் அபி - சுய தர்மத்தை
  • சாவேக்ஷ்ய - கருதினாலும்
  • விகம்பிதும் - நீ நடுங்குதல்
  • ந அர்ஹஸி - தகாது
  • க்ஷத்ரி யஸ்ய த⁴ர்ம்யாத் - மன்னருக்கு
  • யுத்³தா⁴த் - அறப்போரைக் 
  • அந்யத்து - காட்டிலும்
  • ஸ்ரேயோ - உயர்ந்ததொரு
  • ந வித்³யதே - நன்மை இல்லை 

தர்மத்திற்காக போரிடுதலைக் காட்டிலும், சத்திரியனுக்கு சிறந்த கடமை வேறேதும் இருப்பது இல்லை. எனவே, ஒருவனுக்குரிய சுய தர்மங்களை எண்ணி தயங்க உனக்கு தகுதி இல்லை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.29

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.29

ஜந்ம கு³ஹ்யம் ப⁴க³வதோ 
ய ஏதத் ப்ரயதோ நர:|
ஸாயம் ப்ராதர் க்³ருணந் ப⁴க்த்யா 
து:³ க² க்³ராமாத்³ விமுச்யதே||

  • ய நரஹ - எந்த மனிதன் 
  • ப்ரயதோ - பரிசுத்தனாய் 
  • ஸாயம் ப்ராதர் - காலையிலும் மாலையிலும் 
  • ப⁴க³வதோ - இறைவனது 
  • ஏதத் - இந்த 
  • கு³ஹ்யம் - பரம ரகசியமான 
  • ஜந்ம - ஸ்ரீ பகவானது அவதாரத்தை 
  • ப⁴க்த்யா - பக்தி ஸ்ரத்தையோடு 
  • க்³ருணந் - சொல்கிறானோ 
  • து³ஹ்க² க்³ராமாத்³ - அவன் கஷ்டங்கள் பலவற்றிலிருந்து 
  • விமுச்யதே - விடுபடுகிறான்

மிக்க ரகசியமான பகவானது திரு விளையாடல்களைக் காலையிலும் மாலையிலும் தூய்மையோடும் பக்தியோடும் துதிப்பவன், இவ்வுலகியல் துன்பங்கள் அனைத்தினின்றும் விடுபடுகிறான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.29

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.29

ஸ்²ருங்கி³ பே³ர புரே ஸூதம் 
க³ங்கா³ கூலே வ்யஸர் ஜயத்|
கு³ஹ மாஸாத்³ ய த⁴ர்மாத்மா 
நிஷாதா³தி⁴ பதிம் ப்ரியம்||

  • த⁴ர்மாத்மா - தர்மாத்மா
  • நிஷாதா³தி⁴ பதிம் - வேடருக்கு தலைவனான
  • ப்ரியம் - ப்ரியமுள்ளவனான 
  • கு³ஹம் - குஹனை 
  • ஆஸாத்³ ய - அணுகி 
  • க³ங்கா³ கூலே - கங்கை கரையில் 
  • ஸ்²ருங்கி³ பே³ர புரே - ஸ்ருங்கி பேர புரத்தில்
  • ஸூதம் - ஸாரதியை 
  • வ்யஸர் ஜயத் - விடை கொடுத்து அனுப்பி விட்டார்

தர்மாத்மாவுமான ராமன், கங்கைக் கரையில் உள்ள சிருங்கி பேர புரத்தில் தன் தேரோட்டிக்கு {சுமந்திரனுக்கு} விடை கொடுத்து அனுப்பினான். தன் மீது அன்பு கொண்ட நிஷாதிபதியான {நிஷத நாட்டு மன்னனான} குகனை அடைந்தான்.  

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - பெரியாழ்வார் திருமொழி - 1.6 அறிமுகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஆறாம் திருமொழி - 11 பாசுரங்கள்
திவ்ய ப்ரபந்தம் - 75 - 85

சப்பாணிப் பருவம்

கை கொட்டி விளையாடுதல்

வெண்டளையால் வந்த கலித்தாழிசை

கண்ணன் தன் திருமேனியைச் சிறிது அசைக்கிறான். இடுப்பில் கட்டிய சதங்கைகள் ஒலிக்கின்றன! தன் முத்துப் பற்களைக் காட்டிப் புன்முறுவல் செய்கிறான். பெருஞ் செயல்களைச் செய்த இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டுகிறான்! அரிய செயலைச் செய்து விட்டதாக நினைக்கிறான்! 


கை தட்டுவதால் ஏற்பட்ட ஓசையைக் கேட்டு மேலும் மகிழ்கிறான். இதைக் கண்டு பேரானந்தம் அடைகிறாள் யசோதை. 'கண்ணா! மீண்டும் ஒரு முறை சப்பாணி கொட்டு; உலகம் மகிழட்டும்' என்று வேண்டுகிறாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 020 - திரு தஞ்சைமாமணி கோவில் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

020. திரு தஞ்சைமாமணி கோவில் (தஞ்சாவூர்)
இருபதாவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 5

திருமங்கையாழ்வார்

001. திவ்ய ப்ரபந்தம் - 953 - தஞ்சை மாமணிக் கோயிலை வணங்கு
பெரிய திருமொழி - முதலாம் பத்து - முதலாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்* 
எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்*
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி* 
அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்**
வம்பு உலாம் சோலை மா மதிள்* 
தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி*
நம்பிகாள்! உய்ய நான் கண்டு கொண்டேன்* 
நாராயணா என்னும் நாமம்|

002. திவ்ய ப்ரபந்தம் - 1090 - உலகுய்ய நின்றான் இடம் கடல்மல்லை
பெரிய திருமொழி - இரண்டாம் பத்து - ஐந்தாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறு ஆய்* 
உலகு உய்ய நின்றானை அன்று பேய்ச்சி*
விடம் பருகு வித்தகனைக் கன்று மேய்த்து* 
விளையாட வல்லானை வரைமீ கானில்**
தடம் பருகு கரு முகிலைத் தஞ்சைக் கோயில்* 
தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை வையம் காக்கும்*
கடும் பரிமேல் கற்கியை நான் கண்டு கொண்டேன்* 
கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1576 - என் மனம் திருமாலையே போற்றும்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
என் செய்கேன் அடியேன் உரையீர்* 
இதற்கு என்றும் என் மனத்தே இருக்கும் புகழ்*
தஞ்சை ஆளியைப் பொன் பெயரோன்* 
நெஞ்சம் அன்று இடந்தவனை தழலே புரை**
மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்பட*
சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும்*
பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை அன்றி* 
என் மனம் போற்றி என்னாதே|

பூதத்தாழ்வார்

004. திவ்ய ப்ரபந்தம் – 2251 - எந்தை எழுந்தருளி ள்ள இடங்கள்
இரண்டாம் திருவந்தாதி - ஏழாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (70)
தமர் உள்ளம் தஞ்சை* தலை அரங்கம் தண்கால்*
தமர் உள்ளும் தண் பொருப்பு வேலை*
தமர் உள்ளும் மாமல்லை கோவல்* 
மதிள் குடந்தை என்பரே* ஏ வல்ல எந்தைக்கு இடம்|

நம்மாழ்வார்

005. திவ்ய ப்ரபந்தம் - 3255 - தோழீ! ஊரார் பழிச் சொல் என்ன செய்யும்?
திருவாய்மொழி - ஐந்தாம் பத்து - மூன்றாம் திருவாய்மொழி - முதலாம் பாசுரம்
மாசு அறு சோதி* என் செய்ய வாய் மணிக் குன்றத்தை*
ஆசு அறு சீலனை* ஆதி மூர்த்தியை நாடியே**
பாசறவு எய்தி* அறிவு இழந்து எனை நாளையம்?*
ஏசு அறும் ஊரவர் கவ்வை* தோழீ என் செய்யுமே?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

லீலை கண்ணன் கதைகள் - 85

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

பீமன் ஜராசந்தனின் போர்|

இரண்டு கதாயுதங்கள் கொண்டு வரும்படி ஜராசந்தன் உத்தரவிட்டான். ஒன்றைப் பீமனுக்குக் கொடுத்தான். இன்னொன்றைத் தான் வைத்துக் கொண்டான். இருவரும் வெளியே திறந்தவெளிக்கு வந்து சண்டையிடத் தொடங்கினார்கள்.


இருவரும் சரமாரியாகச் சண்டையிட்டனர். விருப்பத்துடன் சண்டையிட்டனர். வைரத்தைப் போன்று உறுதியாக இருந்த கதாயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டார்கள். வெகு லாவகமாக, இடப்பக்கமும் வலப்பக்கமும் வளைந்து கொடுத்துச் சண்டை இட்டார்கள். மேடையில் நடிகர்கள் போன்று அவர் தூகாக் கொண்டிருந்த போது கிளம்பிய சப்தம் இரண்டு யானைகள் தங்கள் தந்தங்களால் தாக்கிக்கொள்ளும் பொழுது ஏழும் சப்தத்தை ஒத்திருந்தது, இரண்டு கருமேகங்கள் இடித்துக் கொண்டு எழுப்பும் இடி முழக்கதைப் போன்று இருந்தது. 

இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. அதனால் சண்டைக்கு முடிவே இருக்காது என்று தோன்றியது. கடைசியில் கதாயுதங்கள் ஒன்றுக்கொன்று மோதித் துண்டு துண்டாகவே, அவர்கள் மல்யுத்தம் செய்யத் தொடங்கினார்கள். 

இப்படி இருபத்தேழு நாட்கள் சென்றன. இருவரும் நடந்து கொண்ட விதம் வெகு விசித்திரமாக இருந்தது. பகலில் இருவரும் மிகவும் உக்கிரமாகச் சண்டை போடுவார்கள். இரவானால், நண்பர்களைப் போல சேர்ந்து உட்கார்ந்து உணவருந்துவார்கள். 

இருபத்தெட்டாம் நாளன்று, பீமன் கிருஷ்ணரைப் பார்த்து, "இதோ பார், கிருஷ்ணா! என்னால் ஜராசந்தனை வெற்றி கொள்ள முடியும் என்று தோன்றவில்லை. எல்லா அம்சங்களிலும் அவன் எனக்குச் சரிநிகராக இருக்கிறான். அதனால் சண்டை ஓயாமல் போய்க் கொண்டேயிருக்கும் போலத் தோன்றுகிறது" என்று சொன்னான். கிருஷ்ணர் அவனுக்குத் தைரியம் கொடுத்து, "கவலைப்படாதே பீமா, இன்று நீ அவனை கொல்லுவாய் பார்" என்று சொன்னார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 38

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

எங்கும் நிறைந்த இறை

ஸ்கந்தம் 02

ஸூதர் சொன்னார். “ஸ்ரீ சுகாசார்யாரின் விளக்கங்களைக் கேட்ட பரிக்ஷித் ஸ்ரீ க்ருஷ்ணனிடம் மனத்தைப் பறி கொடுத்தான். பற்றுக்கள் அனைத்தையும் துறந்தான். பிறகு, நீங்கள் (ரிஷிகள்) என்னிடம் கேட்ட கேள்விகளையே அவனும் சுகரிடம் கேட்டான்.


“மாசற்றவரே! தாங்கள் அனைத்தும் அறிந்தவர். தங்களது வாக்கினால் என் மன இருள் அகல்கிறது. ப்ரும்மா எவ்விதம் இவ்வுலகைப் படைக்கிறார்? எவ்விதம் காப்பாற்றுகிறார்? எவ்விதம் அழிக்கிறார்? கற்பனைக் கெட்டாத சக்திகளை உடைய பகவான் எந்தெந்த சக்திகளைக் கொண்டு மணல் வீடு கட்டி விளையாடுவது போல் தன்னைத் தானே பல உருவங்கள் ஆக்கிக் கொண்டு பலவித லீலைகளைச் செய்கிறார்? பகவானின் லீலைகள் ஊகித்து அறிய முடியாதவையாக விநோதமாக உள்ளன. பல வித ரூபங்களை ஏற்கும் பகவான் எல்லாச் செயல்களையும் முறைப்படி செய்கிறார். எல்லா சக்திகளையும் ஒரே நேரத்தில் மேற் கொள்கிறாரா? அல்லது ஒவ்வொன்றாகவா?” இவ்வாறு வேண்டப்பட்ட ஸ்ரீ சுகர், பகவானை தியானம் செய்து கூறலானார்.

“புருஷோத்தமனான பகவான், ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய மூன்று குணங்களையும் ஏற்று, ப்ரும்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று திருவுருவங்களிலும் விளங்குகிறார். எல்லா உயிரினங்களிலும் அந்தர்யாமியாகக் காட்சி அளிக்கிறார். ஸாதுக்களின் துன்பத்தைத் துடைத்துப் பாவங்களைப் போக்கி பக்தியை அளிக்கிறார். தீயோரை அடக்கி, நற்கதி தருபவர். துறவிகளுக்கு ஆத்ம அநுபவம் அளிக்கிறார். அசையும் அசையாப் பொடுள்கள் அனைத்தையும் தன்னுள் கொண்டவர். தானும் அவற்றுள் விளங்குபவர். பக்ஷபாதம் அற்றவர். பக்தர்களைப் பரிபாலிக்கிறார். பிடிவாதத்துடன் சாதனை செய்யும் வேஷதாரிகளால் அறிய முடியாதவர். அவருக்கு ஒப்பானவரே இல்லை எனும்போது மேலானவர் எப்படி இருக்க முடியும்? 

ஒத்தார் மிக்கார் இலையாய மாமாயா என்கிறார் ஆழ்வார். அவரைப் பற்றிப் பேசினாலும், நினைத்தாலும், கண்டாலும், வணங்கினாலும், பூஜை செய்தாலும் ஜீவராசிகளின் பாவங்கள் உடனே அழிகின்றன. தவம் செய்பவர்கள், புகழ் படைத்தவர்கள், நல்மனம் படைத்தவர்கள், மந்திரமும், அதன் பொருளும் அறிந்து கர்ம அநுஷ்டானம் செய்பவர்கள், ஒழுக்கம் தவறாத பக்தர்கள் யாராகினும், தங்களது தவம், தானம் முதலியவற்றின் பலனை பகவத் அர்ப்பணம் செய்தால் ஓழிய அவற்றின் பயனைப் பெறுவதில்லை. பல்வேறு பிரிவைச் சேர்ந்த மாபாவிகள் ஆயினும் அவர்கள் இறை அடியாரை அண்டி பாவங்களைத் தொலைத்து தூய்மை பெறுகிறார்கள்.

பகவான் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் அளிப்பவர். வேள்விகள் அனைத்திற்கும் தலைவர். அவற்றை அநுபவித்து பலன் அளிப்பவர். அவரே யது குலத்தில் அவதரித்தார். பகவானே ஸாது ஜனங்களின் ஒரே பற்றுக் கோடாவார்.

ப்ரம்ம தேவருக்கு படைப்புத் திறனைத் தூண்டுவதற்காக ஞானத்தின் தலைவியான ஸரஸ்வதி தேவியை பகவான் ஏவினார். அவள், ப்ரும்மாவின் திரு முகத்தில் இருந்து, சிக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜோதிஷம், கல்பம் ஆகிய ஆறு அங்கங்களுடன் வேத ரூபமாக வெளித் தோன்றினாள். இறைவனே ஐம்புலன்களின் சேர்க்கையால் இவ்வுடலை ஆக்கித் தந்து அதில் ஜீவாத்மாவாக குடி புகுகிறார். அதனாலேயே அவன் புருஷன் என்று அழைக்கப்படுகிறான். ஐந்து ஞானேந்திரியங்கள் (அறிவுப் புலன்கள்), ஐந்து கர்மேந்திரியங்கள் (செயற் புலன்கள்), ஐந்து ப்ராணன்கள், மனம் ஆகிய பதினாறு சாதனங்களைக் கொண்டு குணங்களை வெளிப்படுத்துகிறார். இப்படிப்பட்ட பகவானுக்கு நமஸ்காரம். அவர் அனைவர்க்கும் நலம் புரியட்டும். ப்ரும்மா இது விஷயமாக பகவானிடம் கேட்டு அறிந்ததை தன் மகனான நாரதர்க்குச் சொன்னார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்