About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 10 January 2024

லீலை கண்ணன் கதைகள் - 86

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஜராசந்தனின் அழிவு|

சண்டை திரும்பவும் ஆரம்பித்தது. சண்டையில் பீமன் ஜராசந்தனைத் தரையில் தள்ளினான். அப்பொழுது கிருஷ்ணர் ஒரு சமிக்ஞை செய்தார். ஓர் இலையை எடுத்து அதை இரண்டாகக் கிழித்தார். பீமன் அவர் கருத்தைப் புரிந்து கொண்டார். உடனே ஜராசந்தனின் ஒரு காலைத் தன் காலால் அமுக்கிக் கொண்டு, இன்னொரு காலைத் தன் கைகளால் பிடித்துக் கொண்டு, யானை மரக்கிளையை உடைப்பது போல, அவன் உடலை இரண்டாகப் பிளந்தான். உடனே வெகு வலிமை, வல்லமை பொருந்திய அரசன் ஜராசந்தன் இறந்தான். 


கிருஷ்ணரும், அர்ஜுனனும், பீமனைக் கட்டித் தழுவிக் கொண்டனர். கிருஷ்ணர் ஜராசந்தனின் மகனை அந்த நாடு அரசனாகப் பட்டாபிஷேகம் செய்துவைத்தார், பிறகு ஜராசந்தன் சிறைப்படுத்தி வைத்திருந்த எல்லா நாடு அரசர்களையும் விடுதலை செய்தார். 

அந்த அரசர்கள் தங்களை விடுவித்த கிருஷ்ணரைப் பார்த்தார்கள். நன்றி உணர்வு மேலிட்ட அவர்களால் பேசவே முடியவில்லை. அதற்குப் பதில் அவர்கள் அழுது, தங்கள் கண்ணீரால் கிருஷ்ணரின் பாதங்களைக் கழுவினார்கள். அதற்குப் பிறகு அவர்கள் கிருஷ்ணருக்கு நன்றி தெரிவித்தார்கள். கிருஷ்ணர் அவர்களைப் பார்த்து, "அரசர்களே! நீங்கள் எல்லோரும் அவரவர் நாட்டுக்குத் திரும்பிச் சென்று தர்மம் தவறாது நாட்டை ஆளுங்கள், என்றும் கடவுளை மறவாதீர்கள். இது உங்களுக்கு என் அறிவுரை. பின்பு யுதிஷ்டிரர் ராஜசூய யாகம் நடத்தும்போது, அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து யாகத்தை வெற்றிகரமாக்குங்கள்" என்று சொன்னார். 

பிறகு கிருஷ்ணர் அர்ஜுனனுடனும், பீமனுடனும் கிரி விரஜத்திலிருந்து இந்திரப் பிரஸ்தம் நோக்கிப் பயணமானார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment