||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 65
ஸ்ரீத³: ஸ்ரீஸ²: ஸ்ரீநிவாஸ:
ஸ்ரீநிதி⁴: ஸ்ரீவிபா⁴வந:|
ஸ்ரீத⁴ர: ஸ்ரீகர: ஸ்²ரேய:
ஸ்ரீமாந் லோக த்ரயாஸ்²ரய:||
- 612. ஸ்ரீத³ஸ் - செல்வம், புகழ், அழகு முதலான அனைத்து செழிப்பையும் கொடுப்பவர்.
- 613. ஸ்ரீஸ²ஸ் - திருவுக்கும் திருவாகியவர்.
- 614. ஸ்ரீநிவாஸஸ் - பிராட்டி உறையும் திருமார்பினன்.
- 615. ஸ்ரீநிதி⁴ஸ் - பிராட்டியை செல்வமாக உடையவர்.
- 616. ஸ்ரீவிபா⁴ வநஹ - பிராட்டியினால் புகழ் பெருகியவர். கர்மாவின்படி செழிப்பை விநியோகிக்கிறார்.
- 617. ஸ்ரீத⁴ரஸ் - பிராட்டியைத் தாங்குபவர்.
- 618. ஸ்ரீகரஸ் - தன்னைப் பின்பற்றுமாறு பிராட்டியைச் செய்பவர். அவர் தனது அவதாரங்களில் ஸ்ரீயைக் கொண்டு வருகிறார். மோட்சம் (நித்ய ஸ்ரீ) உட்பட பக்தர்களுக்கு ஸ்ரீ (ஆன்மீக செல்வம்) வழங்குபவர். தன் பக்தர்களை ஸ்ரீ (மகிமை) கொண்டு பிரகாசிக்கச் செய்பவர். ஸ்ரீ (மகாலட்சுமி) கையைப் பிடித்தவர்.
- 619. ஸ்²ரேயஸ் - எல்லாராலும் வழிபடப்பெறும் பிராட்டியை உடையவர். அவர் இறுதி பேரின்பம்.
- 620. ஸ்ரீமாந் லோக த்ரயாஸ்² ரயஹ - மூவுலகத்தாருக்கும் அடைக் கலப் பொருளாக இருப்பவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment