||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 64
அநிவர்த்தீ நிவ்ருத் தாத்மா
ஸம்க்ஷேப்தா க்ஷேம க்ருச் சி²வ:|
ஸ்ரீ வத்ஸ வக்ஷா: ஸ்ரீவாஸ:
ஸ்ரீபதி: ஸ்ரீமதாம் வர:||
- 603. அநிவர்த்தீ - பிறவி தோன்றுவதற்கான செயல்களைச் செய்யாதவர். ஒரு போதும் கை விடாதவர்.
- 604. நிவ்ருத்தாத்மா - பலன் கருதாமல் பகவத் கைங்கர்யம் செய்பவருக்குத் தலைவர். உலக இன்பங்களிலிருந்து விலகிய மனதைக் கொண்டவர்.
- 605. ஸம்க்ஷேப்தா - பிறவி எடுத்துக் கொண்டே இருப்பவருக்கு ஞானத்தைச் சுருங்கச் செய்பவர். கட்டுப்படுத்துபவர் அல்லது வரம்புகள் செய்பவர்
- 606. க்ஷேம க்ருச் - மோட்சமாகிய க்ஷேமத்தைச் செய்பவர். பக்தர்களின் செல்வத்தைப் பாதுகாக்கிறார்.
- 607. சிவஹ - மங்களத்தைச் செய்பவர்.
- 608. ஸ்ரீவத்ஸ வக்ஷாஸ் - ஸ்ரீவத்ஸம் என்னும் வட்ட வடிவமான மறுவைத் திருமார்பில் உடையவர்.
- 609. ஸ்ரீவாஸஸ் - திருமகளுக்கு உறைவிடமானவர்.
- 610. ஸ்ரீபதிஸ் - திருமகளின் தலைவர்.
- 611. ஸ்ரீமதாம் வரஹ - செல்வர்களுக்கெல்லாம் செல்வர். ஐஸ்வரியத்தை உடையவர்களில் சிறந்தவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment