About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 22 September 2023

லீலை கண்ணன் கதைகள் - 43

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

அறிஷ்தா வதம்|

பல்வேறு அசுரர்கள் கிருஷ்ணனை கொள்ள நினைத்தன, ஆனால் அவை அனைத்தும் கிருஷ்ணன் கைகளில் மடிந்தன. இதில் அறிஷ்தா என்ற காளை மாட்டினை எப்படி வதம் செய்தார் என்று பார்ப்போம். அறிஷ்தாவின் முதுகில் பெரிய கூனல் இருந்தது, உடல் மிக பெரியது, ஓடினால் பூமி அதிரும். அது மிகவும் கோபமுற்று இருந்தது, கால்களால் பூமியை தோண்டியது, வாலினை மேலே தூக்கியது, அனைவரையும் அழிக்க பிருந்தாவனத்தை நோக்கி ஓட ஆரம்பித்தது, அதன் கொம்புகளால் அனைத்து மரங்களையும் வேரோடு சாய்த்தது. எல்லோரும் அதை பார்த்து நடுங்கி கிருஷ்ணன் காலடியில் சரணடைந்தனர்.


புதிய ஆபத்தை அறிந்த கிருஷ்ணன், "அனைவரும் பயப்படாதீர்கள். நான் உங்களை காப்பாற்றுகிறேன்" என்றான். அந்த காளையை கண்டதுமே இது கம்சனால் ஏவப்பட்டது என்று உணர்ந்தான். அதனை நோக்கி, "ஏ முட்டாளே, இந்த அப்பாவி மக்களை ஏன் பயமுறுத்துகிறாய், உன்னை போன்ற அசுரர்களை அழிக்கவே நான் இங்கு உள்ளேன்".


கிருஷ்ணன் அதன் முன்னே இருக்கைகளை தட்டினான். அதற்கு கோபம் அதிகமானதும் கிருஷ்ணனை நோக்கி ஓடி வந்தது. ஆனால் கிருஷ்ணன் அங்கு இருந்து ஒரு அடி கூட நகரவில்லை. அதன் கொம்புகளை பிடித்து பதினெட்டு அடி தூரம் தூக்கி அடித்தான். அது திரும்பவும் எழுந்து வந்து கிருஷ்ணன் முன் நின்று மூச்சினை இழுத்து இழுத்து விட்டது. அடுத்து அதன் கொம்புகளை பிடித்து தூக்கி தரையில் அடித்தான், அதன் மீது ஏறி அமர்ந்து அதன் கொம்பினை தலையிலிருந்து பிடுங்கினான். பிறகு ரத்தம் தெறித்து அது அந்த இடத்திலயே இறந்தது. கோபியர்கள் அவர்கள் உயிரை காப்பாற்றியதற்காக கிருஷ்ணனுக்கு நன்றியை கூறினார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 011 - திரு ஆதனூர் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

011. திருஆதனூர் (கும்பகோணம்)
பதினொன்றாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ ரங்கநாயகி தாயார் ஸமேத ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் பெருமாள் 
திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: ஆண்டளக்கும் ஐயன்
  • பெருமாள் உற்சவர்: ஸ்ரீ ரங்கநாதர் 
  • தாயார் மூலவர்: ரங்கநாயகி
  • தாயார் உற்சவர்: பார்க்கவி
  • திருமுக மண்டலம் திசை: கிழக்கு 
  • திருக்கோலம்: புஜங்க சயனம்
  • புஷ்கரிணி: சூர்ய  
  • தீர்த்தம்: சந்திர 
  • விமானம்: ப்ரணவ
  • ஸ்தல விருக்ஷம்: புன்னை, பாடலி
  • ப்ரத்யக்ஷம்: காமதேனு, திருமங்கையாழ்வார்
  • ஆகமம்: பாஞ்சராத்ரம்
  • ஸம்ப்ரதாயம்: வட கலை
  • மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
  • பாசுரங்கள்: 1

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

திருமங்கை ஆழ்வார் ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலை திருப்பணி செய்த போது அவர் வைத்திருந்த பணம் அனைத்தும் செலவாகி விட்டது. பணியாளர்களுக்கு கூலி கொடுக்கக் கூட அவரிடம் பணமில்லை. எனவே, தனக்கு பண உதவி செய்யும்படி பெருமாளை வேண்டினார். அவருக்கு அசரீரியாக ஒலித்த பெருமாள், கொள்ளிடம் ஆற்றின் கரையில் ஒரு இடத்தை சுட்டிக் காட்டி அங்கு வந்தால் பணம் தருவதாக சொன்னார். திருமங்கை ஆழ்வாரும் அங்கு சென்றார். அப்போது வணிகர் ஒருவர் தலைப் பாகை அணிந்து கொண்டு, கையில் மரக்கால், ஏடு மற்றும் எழுத்தாணியுடன் அங்கு வந்தார். அவர் திருமங்கை ஆழ்வாரிடம், "உங்களுக்கு உதவி செய்ய ரங்கநாதன் என்னை அனுப்பி வைத்தான். என்ன வேண்டுமென கேளுங்கள்' என்றார். திருமங்கை அவரிடம் பணம் கேட்டார். தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லிய வணிகர் தான் வைத்திருந்த மரக்காலைக் காட்டி "இம்மரக்கால் கேட்டதைத் கொடுக்கக் கூடியது. ரங்கநாதனை வேண்டி உங்களுக்கு என்ன வேண்டுமோ அதைக் கேட்டால் இம்மரக்கால் கொடுக்கும்'' என்றார். திருமங்கை ஆழ்வார் பணியாளர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும் என்றார். அப்போது வணிகர், "மரக்காலில் தான் பணியாளர்களுக்கு மணலை அளந்து தருவதாகவும், உண்மையாக உழைத்தவர்களுக்கு மட்டும் அம்மணல் பொன்னாகவும், ஏமாற்றியவர்களுக்கு அது மணலாகவுமே இருக்கும்' என்றார். திருமங்கை ஆழ்வாரும் சரியென ஒப்புக் கொள்ள நிறைய பேருக்கு மணலாகவே இருந்தது. கோபம் கொண்ட பணியாளர்கள் வந்திருப்பவன் தந்திரக்காரன் என எண்ணி அவரை அடிக்க பாய்ந்தனர். வணிகர் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடினார். திருமங்கை ஆழ்வார் அவரை பின் தொடர்ந்து ஓடினார். நீண்ட தூரம் ஓடி வந்த வணிகர் இத்தலத்தில் நின்றார். அவரிடம் திருமங்கை ஆழ்வார் "நீங்கள் யார்? எதற்காக எனக்கு உதவி செய்வதாக சொல்லி ஏமாற்றினீர்கள்?' என்றார். மகாவிஷ்ணு, வணிகனாக வந்து அருளியது தானே என உணர்த்தி அவருக்கு காட்சியளித்தார். ஏட்டில், எழுத்தாணியால் எழுதி அவருக்கு உபதேசமும் செய்தார்.

கருவறையில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நாபிக் கமலத்தில் பிரம்மாவுடன் பள்ளி கொண்ட கோலத்தில் இருக்கிறார். இவர் மரக்காலை தலைக்கு வைத்து, இடது கையில் எழுத்தாணி, ஏடுடன் காட்சி தருகிறார். இதனை உலகுக்கு படியளந்த பெருமாள் ஓய்வாக பள்ளி கொண்டிருக்கும் கோலம் எனவும் சொல்கிறார்கள். காமதேனு ஸ்வாமியின் பாதத்திற்கு அருகில் அவரை வணங்கியபடி இருக்கிறாள். சிவன், பிரம்மாவின் ஒரு தலையை எடுக்க அந்த தலை அவரது கையுடனே ஒட்டிக் கொண்டது. சிவனால் தலையை தனியே எடுக்க முடியவில்லை. எனவே அந்த தலையை எரிக்கும்படி அக்னி பகவானிடம் கேட்டுக் கொண்டார் சிவன். அக்னி எவ்வளவோ முயன்றும் அவராலும் தலையை எரிக்க முடியாமல் போனதோடு பிரம்மஹத்தி தோஷமும் பிடித்துக் கொண்டது. அவர் இங்கு பெருமாளை வணங்கி சாபம் நீங்கப் பெற்றார். இவர் கருவறையில் ஸ்வாமியின் பாதத்திற்கு அருகில் இருக்கிறார். அருகில் பிருகு மகரிஷி, திருமங்கை ஆழ்வார் ஆகியோரும் இருக்கின்றனர்.

பரமபதத்தில் இருக்கும் மகாவிஷ்ணுவிற்கு முன்புறம் இரண்டு தூண்கள் இருக்கும். ஜீவன்கள் மேலே செல்லும் போது, இந்த தூண்களைத் தழுவிக் கொண்டால் பாவங்களில் இருந்து விடுபட்டு மோட்சம் கிடைக்கும். அதே போல் இத்தலத்தில் கருவறைக்கு முன்புறம் அர்த்த மண்டபத்தில் ஸ்வாமியின் பாதம், தலைக்கு நேரே இரண்டு தூண்கள் இருக்கிறது. இரட்டைப் படை எண்ணிக்கையில் வலம் வந்து இந்த தூண்களை பிடித்துக் கொண்டு ஸ்வாமியின் திருமுகம் மற்றும் திருப்பாதத்தை தரிசனம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்பதும், திருமணமாகாதவர்கள் தூண்களை தழுவி வணங் கினால் அப்பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. 108 திவ்ய தேசங்களில் இங்கும், ஸ்ரீரங்கத்திலும் இந்த தூண்கள் இருக்கிறது.

பிருகு மகரிஷி பாற்கடலில் மகாவிஷ்ணுவை தரிசனம் செய்த போது, மகாலட்சுமி அவருக்கு ஒரு மாலையை பரிசாக கொடுத்தாள். அம்மாலையை பிருகு இந்திரனிடம் கொடுத்தார். இந்திரனோ மாலையை தன் யானையின் மீது வைக்க அது காலில் போட்டு மிதித்தது. இதைக் கண்ட பிருகு கோபம் கொண்டு, இந்திரனை பூலோகில் சாதாரண மனிதனாக பிறக்கும்படி சபித்தார். தான் செய்த தவறை மன்னிக்கும்படி மகாவிஷ்ணுவிடம் வேண்டினான் இந்திரன். அப்போது மகாலட்சுமி "தான் பூலோகத்தில் பிருகு மகரிஷியின் மகளாக பிறந்து பெருமாளை திருமணம் செய்யும் போது சாபம் நீங்கப் பெறும்' என்றார். அதன்படி மகாலட்சுமி பிருகுவின் மகளாக பிறந்தாள். பெருமாள் இத்தலத்தில் அவளை திருமணம் செய்து கொண்டார். இங்கு வந்த இந்திரன் பெருமாளையும், மகாலட்சுமியையும் வணங்கினான். மகாவிஷ்ணு அவனுக்கு பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தந்து சாப விமோசனம் கொடுத்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 36 - பெரியாழ்வார் திருமொழி - 1.2.14

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 36 - ஆய்ச்சியர் விரும்பும் அழகிய சிவந்த வாய்
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - பதிநான்காம் பாசுரம்

எந்தொண்டை வாய்ச் சிங்கம்* 
வா ன்றெடுத்துக் கொண்டு* 
அந்தொண்டை வாய்* 
அமுதாதரித்து* 
ஆய்ச்சியர் தம் தொண்டை வாயால்* 
தருக்கிப் பருகும்* 
இச் செந் தொண்டை வாய் வந்து காணீரே!* 
சேயிழையீர்! வந்து காணீரே|

  • எம் - எமது
  • தொண்டை - கோவைப்பழம் போன்ற
  • வாய் - அதரத்தை உடைய 
  • சிங்கம் - சிங்கக்குட்டியே
  • வா என்று - எம் பக்கம் வா என்று
  • எடுத்துக் கொண்டு - இடுப்பில் எடுத்துக் கொண்டு 
  • அம் தொண்டை - அழகிய சிவந்த 
  • வாய் - கண்ணனுடைய அதரத்தில் 
  • அமுது - ஊறுகிற அம்ருதத்தை 
  • ஆதரித்து - மிகுந்த அன்பினால் விரும்பி
  • ஆய்ச்சியர் - இடைப்பெண்கள் 
  • தம் - தங்களுடைய 
  • தொண்டை வாயால் - கோவை வாயால் 
  • தருக்கி பருகும் - கண்ணன் வாயோடு நெருக்கி விரும்பி சுவைக்கும்  
  • இச் செம் தொண்டை வாய் வந்து காணீரே - இந்தச் சிவந்த கோவை வாயழகை வந்து பாருங்கள்!
  • சேயிழையீர்! - சிவந்த ஆபரணம்  பூண்ட, புன்னகை மிளிரும் சிங்காரப் பெண்களே!
  • வந்து காணீர்! - வந்து பாருங்கள் 

இடைப்பெண்கள், கண்ணனின் வாயழகில் மயங்கி, கோவைப்பழம் போல் சிவந்த நிறமுடைய என் சிங்கமே'', என்னிடம் வாடா என்று கொஞ்சி அவனை அழைத்து, கையிலெடுத்து அள்ளி இடுப்பில் எடுத்து அணைத்துக் கொண்டு, மிகுந்த அன்போடு தங்கள் இதழ்களால் முத்தமிட்டு, கிடைக்காத அரிய செல்வம் கிடைத்துவிட்ட செருக்குடன் அவன் வாயோடு முத்தம் வைத்து, அவன் செவ்விதழில் ததும்புகின்ற திருவாய் அமுதினை, விரும்பி சுவைப்பர். அத்தகைய தித்திக்கும் மதுரமான கண்ணனின் தேனமுது தத்தளிக்கும், கோவைப்பழம் போல் சிவந்த வாயினை வந்து பாருங்கள் செவ்விய அணிகலன் பூண்ட, புன்னகை மிளிரும் சிங்காரப் பெண்களை அழைக்கிறாள் யசோதை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.37

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.37

தஸ்மாந் நார்ஹா வயம் ஹந்தும் 
தா⁴ர்தராஷ்ட்ராந் ஸ்வபா³ந் த⁴வாந்|
ஸ்வஜநம் ஹி கத²ம் ஹத்வா 
ஸுகி²ந: ஸ்யாம மாத⁴வ||

  • தஸ்மாத் - அதனால் (இதிலிருந்து)
  • ந - என்றுமில்லை 
  • அர்ஹா - தகுதியுடைய 
  • வயம் - நாம் 
  • ஹந்தும் - கொல்ல 
  • தா⁴ர்தராஷ்ட்ராந் - திருதராஷ்டிரரின் மகன்கள் 
  • ஸ்வபா³ந்த⁴வாந் - நண்பர்களுடன் 
  • ஸ்வஜநம் - உறவினர்கள் 
  • ஹி - நிச்சயமாக 
  • கத²ம் - எவ்வாறு 
  • ஹத்வா - கொல்வதால் 
  • ஸுகி²நஸ் - மகிழ்ச்சி 
  • ஸ்யாம - நாம் அடைவோம் 
  • மாத⁴வ - செல்வத் திருமகளின் நாயகரே கிருஷ்ணரே 

மாதவா! கெளரவரோ நம் உறவினர்கள் அவர்களைக் கொல்வது தகாது, பந்துக்களைக் கொன்ற பின் எங்ஙனம் இன்பம் பெற முடியும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.21

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.21

பி⁴த்³யதே ஹ்ருத³ய க்³ரந்தி² 
சி²த்³யந்தே ஸர்வ ஸம்ஸ²யா:|
க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி 
த்³ருஷ்ட ஏவாத்ம நீஸ்²வரே||

  • ஆத்மந் - தனது ஜீவாத்மாவில்
  • ஈஸ்²வரே - இறைவனான பரமாத்மா
  • த்³ருஷ்டே ஏவ - பார்க்கப்பட்ட அளவில்
  • ஹ்ருத³ய க்³ரந்தி² - ஹ்ருதயத்தில் ஏற்பட்ட அஹங்கார ரூபமான முடிச்சானது
  • பி⁴த்³யதே - நாசத்தை அடைகிறது
  • ஸர்வ ஸம்ஸ²யா - அசம்பாவனை முதலிய எல்லா ஐயங்களும்
  • சி²த்³யந்தே - நாசத்தை அடைகின்றன
  • அஸ்ய - இந்த மனிதனின்
  • கர்மாணி ச - கர்ம வினைகளும்
  • க்ஷீயந்தே - நாசத்தை அடைகின்றனை 

பகவத் ஸ்வரூப ஞானம் ஏற்பட்டு, பகவானைத் தானாகவே அவிழ்த்து விடுகின்றன; ஐயங்கள் அனைத்தும் சிதறிப் போகின்றன; முன்வினைப் பயன்கள் அழிந்து போகின்றன. (மனத்தால் நினைத்தாலே இவ்வித நன்மைகளை தருபவர் நேரில் பார்க்கப்பட்டால் எதைத்தான் கொடுக்க மாட்டார்) 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 52

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 22

அம்ருத்யு: ஸர்வத்³ருக் ஸிம்ஹ: 
ஸந்தா⁴தா ஸந்தி⁴மாந் ஸ்தி²ர:|
அஜோ து³ர் மர்ஷண: ஸா²ஸ்தா 
விஸ்²ருதாத்மா ஸுராரிஹா||

  • 200. அம்ருத்யுஸ் - இறப்பில்லாதவன். நித்ய மூர்த்தி

இரண்டாம் நூறு திருநாமங்கள் நிறைவு

  • 201. ஸர்வத்³ருக் - அனைவரையும் பார்த்துக் கொண்டிருப்பவன்.
  • 202. ஸிம்ஹஸ் - நரசிங்கப் பெருமான்.
  • 203. ஸந்தா⁴தா - பக்தர்களைத் தம்மிடம் சேர்த்துக் கொள்பவன்.
  • 204. ஸந்தி⁴மாந் - தன்னைச் சேர்ந்தவரை விடாது என்றும் வைத்திருப்பவன்.
  • 205. ஸ்தி²ரஹ - என்றும் நிலையாய் இருப்பவன்.
  • 206. அஜோ - பிறவாதவன். பிறப்பில்லாதவன்
  • 207. து³ர் மர்ஷணஸ்² - பகைவர்களால் தாங்கிக் கொள்ள முடியாத ஒளியை உடையவன்.
  • 208. ஸா²ஸ்தா - பகைவர்களைக் கலக்குபவன், சாசனம் பண்ணுபவன்
  • 209. விஸ்²ருதாத்மா - வியந்து கேட்கப்படும் சரித்திரம் உடையவன்.
  • 210. ஸுராரிஹா - தேவர்களின் பகைவர்களைத் தொலைப்பவன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - நாற்பத்தி ஒண்பதாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

049 இக்கரைக்கே சென்றேனோ விபீஷணனைப் போலே|

விபீஷணன் - ராவணனின் இளைய சகோதரன். அரக்கர்களுக்கே உரிய தீய குணங்கள் கொண்ட சகோதர சகோதரிகளிடைய வளர்ந்தாலும் விபீஷணனின் குறிக்கோள் நேர்மை, தர்மம், நீதி. விபீஷணன் ஒற்றைக் காலில் நின்றபடி ஐயாயிரம் வருடங்கள் கடுந்தவம் புரிந்து கடவுளர்களை திருவுளங்கொள்ள வைத்ததால் பிரம்மன் அவனுக்கு மரணமில்லா பெருவாழ்வை வரமாக வழங்கினார்.


ராவணன் சீதையைக் கவர்ந்து வந்த போது கண்டித்தான். பிராட்டியை ராமனிடம் ஒப்படைத்து விட்டு உயிர் பிழைத்துக் கொள்ளுமாறு ராவணனை வலியுறுத்தினான். விபீஷணன் ராவணனின் ஒவ்வொரு கொடிய செய்கையையும் எதிர்த்தான். அவனுடைய அறிவுரைகளை ராவணன் ஏற்கவில்லை.


சீதாதேவி இலங்கையில் சிறைப்பிடிக்கப் பட்டிருப்பதை ஹனுமார் கண்டு வந்த பின், ஸ்ரீ இராமனும் அவருடைய வானரப் படையும் இலங்கை நோக்கி பாலம் அமைக்க, இராவணன் இச்செய்தி கேட்டு அவசரமாக அமைச்சரவையைக் கூட்டினான். அப்பொழுது, அவனது மந்திரிமார்களும் படைத் தளபதிகளும் இராவணனின் வீரத்தையும், இந்தரஜித்தின் போர்த் திறனையும், தங்களின் வீரத்தைப் பற்றியும் பெருமையாக கூறி, வானரங்களுக்கு எதிராக போரிடுவதே தங்களுக்கு இழுக்கு என்று மார் தட்டிக் கொண்டிருக்க, விபீஷணனோ, “ஸ்ரீ இராமனின் பலத்தையும், எதிரிகளின் போர்த்திறனையும் அறியாமல் பேசுவது தவறு. அவர்களின் பக்கம் தர்மம் உள்ளது. தவறு நம் பக்கம் உள்ளது. எனவே, சீதாதேவியை அவர்களிடம் ஒப்படைத்து மன்னிப்புக் கோரினால் ஸ்ரீ இராமன் நிச்சயம் மனமிறங்கி மன்னித்து விடுவார். வீணாக யாரும் உயிர் இழக்க வேண்டாம். எனவே சீதாதேவியிடம் மன்னிப்பு கோரி உயிர் வாழ்வது பற்றி யோசியுங்கள். இல்லையேல் போரில் மடிவீர்.”-என்றான்.


விபீஷணனின் வார்த்தைகள் இராவணனுக்கும் இந்தரஜித்துக்கும் கோபத்தை மூட்ட, விபீஷணனைக் கடிந்து பேசினர். ராவணன் தன்னைப் புண்படப் பேசியதும், சிறுவனாகிய இந்திரஜித்தைக் கொண்டு அவமானப்படச் செய்ததும் விபீஷணன் மனதை விட்டு அகலவில்லை.  உறவுகளை விட்டொழித்து, ஸ்ரீராமன் தான் உண்மையான உறவு என்று தீர்மானித்த விபீஷணன் நான்கு ஆதரவாளர்களுடன் ராமனைச் சரணடைய இலங்கை விட்டு இக்கரைக்கு வந்தான். ராமரிடம் தனது வரவை அறிவிக்கும்படி வானர வீரர்களிடம் வேண்டினான்.

விபீஷணனைத் தங்களுடன் சேர்த்துக் கொள்வது குறித்த ஆலோசனையை நடத்தினார் ராமர். சுக்ரீவனும் மற்ற வானர மந்திரிகளும் எதிர்த்த போதும், அனுமன் ஆராய்ந்து உரைத்த கருத்தின்படி விபீஷணனை தன்னிடம் வரப் பணித்தார் ராமர். ராமரின் திருவடிகளில் விபீஷணன் விழுந்து வணங்கி, சரணாகதி (அடைக்கலம்) வேண்டினான். ராமர் விபீஷணனை ஏற்றருளினார். ராமர் விபீஷணனுக்கு அடைக்கலம் கொடுத்த செயலை அபயப்பிரதானம் என்பர்.

பெருமாளின் திருவடியை இக்கரை என்கிறார் பெரியாழ்வார் ஒரு பாசுரத்தில். நமக்குப் பிடித்த ஒன்று நமக்குப் போதும். அது நம்முடையது. இது நம் மனதிற்குப் பிடிக்கிறது என்றால் அது இக்கரையாகும். பெரியாழ்வார் வைகுண்டத்தை இக்கரை என்கிறார்.

அக்கரையில் விபீடணன், இக்கரையில் இருக்கும் ராமனே. அவர் இருக்கும் இடமே தன்னை கரை சேர்க்கும் என அக்கரையிலிருந்து, இக்கரைக்கு வருகிறான். அதாவது ராமனிடம் அடைக்கலம் ஆகிறான். 

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "அப்படி வீபீடணனைப் போல ராமனைத் தேடிச் சென்றேனா? ராமனிடம் அடைக்கலம் புகுந்த விபீஷணனைப் போல் தான் பகவானிடம் சரணாகதி அடைந்தேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

லீலை கண்ணன் கதைகள் - 42

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

கிருஷ்ணனுடன் கோபியர்|

ஒரு நாள் இரவு நேரம், மல்லிகைமனம் முழுவதும் பரவி இருந்தது. நிலவானது எல்லா இடங்களிலும் குளுமையையும் ஒளியையும் தந்தது. இயற்கை அழகாகவே இருந்தது. கிருஷ்ணன் அவன் கைகளில் புல்லாங்குழல் வைத்துகொண்டு யமுனை நதி கரையில் வாசித்து கொண்டு இருந்தான்.


அவனின் புல்லாங்குழல் ஓசை பிருந்தாவனம் வரை சென்றது. அங்கு இருந்த மாக்கள் அனைத்தும் அதனை கேட்டு கொண்டு இருந்தன. அந்த ஓசை கிருஷ்ணனின் புல்லாங்குழல் ஓசையாக இருக்கும் என்று நினைத்தார்கள் கோபியர். எங்கு இருந்து வருகிறது என்று அறிய அனைத்து கோபியர்களும் அவர்கள் வீட்டில் இருந்து யமுனை நதி கரையை நோக்கி ஆவலுடன் ஓடினார்கள். ஒருத்தி பால் கறந்து கொண்டு இருக்கும் நேரத்தில் குழல் ஓசையை கேட்டு அந்த பாத்திரத்தை அங்கேயே போட்டு விட்டு ஓடினாள். சிலர் பாலினை அடுப்பில் வைத்து விட்டு பாதியில் பொங்கும் என்று கூட நினைக்காமல் கிருஷ்ணன் குழல் ஓசை கேட்டு எழுந்து சென்றனர். அனைத்து பெண்களும் அவர்களுடைய கணவர் குழந்தைகள் பெற்றோர்கள் அனைவரையும் குழல் ஓசையில் மறந்தனர். பெண்கள் அவர்களின் கண்களை மூடி கிருஷ்ணனையே நினைத்தனர், குழல் ஓசையில் மயங்கினர்.


கிருஷ்ணன் அவர்களை பார்த்து "ஏன் இங்கு வந்தீர்கள் என்று கேட்டான், இந்த நிலவு ஒளியை ரசிக்க வந்தீர்களா? இங்கு பல உயிர் கொள்ளும் மிருகங்கள் உள்ளன, திரும்பி சென்று விடுங்கள். உங்கள் முதியோர்கள் கோபமாக இருப்பார்கள், அவர்கள் கோபம் அதிகரிக்கும் முன் சென்று விடுங்கள்" என்று கூறினான்.

கோபியர்கள் இதை கேட்டவுடன் மனம் வருந்தினார்கள், இதை கிருஷ்ணனிடம் அவர்கள் எதிர் பார்க்கவில்லை. அனைவரின் கண்களிலும் நீர் ததும்ப ஆரம்பித்தது. ஒருத்தி மட்டும் கிருஷ்ணனை நோக்கி "நீ இப்படி கூறுவது சரி அல்ல கிருஷ்ணா, எங்கள் குழந்தைகளோ கணவர்களோ எங்களுக்கு சந்தோஷத்தை அளிக்கவில்லை. உன்னுடைய குழல் தான் மகிழ்ச்சியை அளித்தது. உன்னிடம் இருந்து எங்களை பிரிக்க நினைக்காதே. மக்கள் உன்னை கடவுள் என்கிறார்கள், ஆனால் அது எங்களுக்கு முக்கியம் இல்லை. எங்கள் அனைவரின் மனதில் நீ தான் இருக்கிறாய், உன்னை மட்டும் பார்க்கவே எங்கள் கண்கள் உள்ளது. உன்னுடைய குழல் ஓசை கேட்கவே எங்கள் காதுகள் உள்ளன. இந்த அன்பு இன்று வந்தது அல்ல, உன்னுடைய பிறப்பில் இருந்தே இருக்கும் அன்பு. எங்களுடைய அன்பை ஏற்றுகொள்."


கிருஷ்ணன் எல்லாருடைய ஆசைகளையும் நிறைவேற்றுபவன் அல்லவா, இதனை கேட்ட பிறகும் எவ்வாறு நிராகரிக்க முடியும்? பக்தர்களுக்காக எதையும் செய்ய தயாராக உள்ளான். பிறகு கிருஷ்ணன் பாடியும் ஆடியும் அனைவரையும் சந்தோஷபடுத்தினான். ஒவ்வொறு கோபியருடனும் ஆட ஒவ்வொறு கிருஷ்ணன் தோன்றினான். ஆனால் எல்லா கோபியருக்கும் அவர்களுடன் இருக்கும் கிருஷ்ணன் மட்டுமே கண்ணில் தென்பட்டான். எல்லா கோபியருடனும் சந்தோஷமாக விளையாடினான். அனைவரின் மனதிலும் மகிழ்ச்சி பெருக்கொடியது. கிருஷ்ணன் அன்பினை நினைத்து மிகவும் பெருமை பட்டனர். உடனே கிருஷ்ணன் அவர்களுக்கு சினமூட்டுவதர்காக அங்கு இருந்து மறைந்தான்.

கிருஷ்ணனை காணவில்லை என்றவுடன் அனைத்து கோபியரும் மனம் வருந்தினர். அவர்கள் அழுது கொண்டே கிருஷ்ணனின் பாடலை பாடினர். கிருஷ்ணன் இல்லை என்றால் அவர்களின் மூச்சே நின்று விடும் என்பது போல நினைத்தார்கள். மறுபடியும் கிருஷ்ணன் அவர்கள் முன் தோன்றினான், மஞ்சள் நிற ஆடையுடன், கழுத்தை சுற்றி மாலை அணிந்தும், மீனை போன்ற காது வளையமும் நிலவொளியில் மினுமினுத்தது. உடனே அனைவரும் ஆடி பாட ஆரம்பித்தார்கள். நேரம் போவதும் தெரியாமல் இருந்தார்கள்.

எல்லோரும் சேர்ந்து நடனம் ஆட ஆரம்பித்தார்கள். அனைவரும் வட்டமாக நின்ற பின், எல்லா கோபியர் பக்கத்திலும் கிருஷ்ணன் தோன்றினான், எல்லோரும் கிருஷ்ணன் கையை பிடித்து கொண்டதாக நினைத்து கொண்டார்கள். எல்லோரும் சேர்ந்து நடனம் ஆடினர். எல்லாருடைய பக்தியும் இதில் வெளிப்பட்டது. அந்த இரவு முடிவுக்கு வந்தது. அனைவரையும் திரும்ப போக சொல்லி கட்டளை இட்டான் கிருஷ்ணன். விருப்பமே இல்லாமல் அனைவரும் திரும்பினர், இருந்தாலும் முழு இரவு வீட்டுக்கு செல்லாமல் இருந்ததற்கு அனைவரின் மனதிலும் பயம் இருந்தது. ஆனால் அவர்களை யாரும் எதுவும் சொல்லவில்லை. கிருஷ்ணன் ஊரில் உள்ள அனைவரின் மனதையும் மயக்கி இவர்களை காப்பாற்றினான்.

அனைத்தும் கிருஷ்ணனின் லீலைகளே!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 35 - பெரியாழ்வார் திருமொழி - 1.2.13

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 35 - உலகங்களை விழுங்கிய கழுத்து
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - பதிமூன்றாம் பாசுரம்

வண்டமர் பூங்குழல்* 
ஆய்ச்சி மகனாகக்* 
கொண்டு வளர்க்கின்
கோவலக் குட்டற்கு*
அண்டமும் நாடும்* 
அடங்க விழுங்கிய* 
கண்டம் இருந்தவா காணீரே* 
காரிகையீர்! வந்து காணீரே|

  • வண்டு அமர் - வண்டுகள் படிந்திருக்கிற
  • பூ குழல் - பூ அணிந்த குழலையுடையளான
  • ஆய்ச்சி - யசோதைப் பிராட்டியானவள்
  • மகனாக கொண்டு - தன் புத்ரனாக ஸ்வீகரித்து
  • வளர்க்கின்ற - வளர்க்கப் பெற்றவனாய்
  • கோ வலர் - ஸ்ரீநந்தகோபருடைய 
  • குட்டதற்கு - பிள்ளையான கண்ணபிரானுடைய
  • அண்டமும் - அண்டங்களையும்
  • நாடும் - அவற்றினுள்ளே கிடக்கிற சேதநாசேதநங்களையும்
  • அடங்க - முழுதும்
  • விழுங்கிய - ப்ரளயகாலத்தில் கபளீகரித்த 
  • கண்டம் இருந்த வா காணீரே - கழுத்திருந்த படியை வந்து பாருங்கள்
  • காரிகையீர் வந்து காணீரே - அலங்காரம் செய்து கொண்டுள்ள அழகிய பெண்களே! வந்து பாருங்கள்

தேன் நிறைந்த மலர்களைத் மலர்ந்தவுடன் பறித்து, நெருக்கமாய்த் தொடுத்தணிந்த கூந்தலில் உள்ளத் தேனைச் சுவைப்பதற்காக தேனீக்கள் வந்து அமரக்கூடிய அழகிய, மணம் நிறைந்த கூந்தலை உடையவளான யசோதை அன்னை, கண்ணனின் பார்வைக்கும், மனதுக்கும் இனிமையானவளாக இருக்கிறாள். தன் மகன் என்ற எண்ணத்துடன் வளர்க்கப்படுகின்ற யசோதை ஸ்ரீநந்தகோபருடைய சிறு பிள்ளையான கண்ணபிரானுக்கு, பிரளய காலத்தில் அகில அண்டங்களையும் அதனுள் அடங்கிய எல்லாவற்றையும் விழுங்கி வாய்க்குள் அடங்கி விடுமாறு இருக்கின்ற சிறு தொண்டை எத்தனை அழகாய் இருக்கின்றது என்பதை வந்து பாருங்கள். வனப்பாய் அலங்காரம் செய்து கொண்டுள்ள அழகிய பெண்களை இந்த சிறு பிள்ளையின் சிறுதொண்டையின் அழகினை வந்து காணுமாறு யசோதை அழைக்கிறாள். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.36

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.36

நிஹத்ய தா⁴ர்தராஷ்ட்ராந்ந: 
கா ப்ரீதி: ஸ்யாஜநார்த³ந।
பாபமே வாஷ்ரயே த³ஸ்மாந் 
ஹத்வை தாநாத தாயிந:॥

  • நிஹத்ய - கொலை புரிந்து 
  • தார்தராஷ்ட்ராந் - திருதராஷ்டிரரின் புதல்வர்கள் 
  • நஹ - நமது 
  • கா - என்ன 
  • ப்ரீதிஸ் - இன்பம் 
  • ஸ்யாத் - இருக்கப் போகிறது 
  • ஜநார்த³ந - எல்லா உயிர்களையும் பாதுகாப்பவரே
  • பாபம் - பாவங்கள் 
  • ஏவ - நிச்சயமாக 
  • ஆஸ்²ரயேத் - வந்தடையும் 
  • அஸ்மாந்- நன்மை 
  • ஹத்வா - கொல்வதால் 
  • ஏதாந் - இவர்களையெல்லாம் 
  • ஆததாயிநஹ - அக்கிரமக்காரர்கள் 

ஜனார்த்தனா! அக்கிரமக்காரர்கள் இவர்களையெல்லாம் கொல்வதால் பாவங்களே வந்தடையும். அதனால் தகுதியுடைய நாம் திருதராஷ்டிரரின் மகன்களை நண்பர்களுடன் உறவினர்களை கொல்வதால் எவ்வாறு மகிழ்ச்சியை நாம் அடைவோம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.20

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.20

ஏவம் ப்ரஸந்ந மநஸோ 
ப⁴க³வத்³ ப⁴க்தி யோக³த:|
ப⁴க³வத் தத்த்வ விக்ஞாநம் 
முக்த ஸங்க³ஸ்ய ஜாயதே||

  • ஏவம் - இவ்வாறு
  • ப⁴க³வத்³ ப⁴க்தி யோக³த - ஸ்ரீமன் நாராயண பக்தியால்
  • ப்ரஸந்ந மநஸோ - அமைதியுற்ற மனத்தை உடையவனும்
  • முக்த ஸங்க³ஸ்ய - விரக்தனுமான மனிதனுக்கு
  • ப⁴க³வத் தத்த்வ விக்ஞாநம் - ஆத்ம சாக்ஷாத்காரமானது 
  • ஜாயதே – ஏற்படுகிறது

இவ்வாறு பகவானிடம் செய்யும் பக்தி யோகத்தால் மனம் தெளிவடைந்து, உலகியல் ஆசைகளை ஒழித்த ஒருவனுக்கு, அந்த பகவானுடைய உண்மையான ஸ்வரூப ஞானம் (தானாகவே) ஏற்படுகிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 51

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 21

மரீசிர் த³மநோ ஹம்ஸ: 
ஸுபர்ணோ பு⁴ஜகோ³த்தம:|
ஹிரண்ய நாப⁴: ஸுதபா: 
பத்³ம நாப⁴: ப்ரஜாபதி:||

  • 191. மரீசிர் - கிரணமானவன், ஒளியானவன்
  • 192. த³மநோ - அடங்கச் செய்பவன்.
  • 193. ஹம்ஸஸ் - அன்னமாக அவதரித்தவன்.
  • 194. ஸுபர்ணோ - அழகிய இறக்கைகளை உடையவன்.
  • 195. பு⁴ஜகோ³த்தமஹ - திரு அனந்தாழ்வானுக்குத் தலைவன்.
  • 196. ஹிரண்ய நாப⁴ஸ் - அழகிய நாபியை உடையவன்.
  • 197. ஸூதபாஃ - சிறந்த ஞான முள்ளவன்.
  • 198. பத்³ம நாப⁴ஃ - அழகிய தாமரையைத் தன் நாபியில் உடையவன்.
  • 199. ப்ரஜாபதிஹி - நாபித்தாமரையில் உண்டான பிரமனுக்குத் தலைவன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - நாற்பத்தி எட்டாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

048 அரக்கனுடன் பொருதேனோ பெரிய உடையாரைப் போலே|

இங்கு “பெரிய உடையார்” என்று அழைக்கப்படுபவர், ஜடாயுவாகும். ஸ்ரீ இராமன், ஜடாயு மீது கொண்டுள்ள நன்மதிப்பும், தந்தைக்கு நிகராக ஜடாயுவை கண்டதுமே இதற்கு காரணம். ஜடாயு, இராமாயணத்தில் இடம் பெறும் ஒரு கருடன். சூரிய தேவனின் தேரோட்டியான அருணனின் மகன். ஜடாயுவும் அவரது அண்ணனுமான சம்பாதியும் தசரத சக்ரவர்த்தியின் நெருங்கிய நண்பர்கள்.


வனவாசத்தின் முதல் பத்து வருடங்கள் தண்டக வனத்தில் முனிவர்களுடன் தவ வாழ்க்கையை மேற்கொண்ட ஸ்ரீராமன் அதன் பின்னர், சீதாதேவி மற்றும் இலட்சுமணனுடன் அகத்தியரின் குடிலுக்கு சென்றார். அகத்தியரிடம் ஆயுதங்களை பெற்றுக்கொண்டு பஞ்சவடி நோக்கி தன் பயணத்தைத் தொடரும் பொழுது வழியில் ஜடாயுவை சந்தித்தனர்.


தன்னை யார் என்று வினவிய ஸ்ரீ இராமனிடம், ஜடாயு – “நான் அருணனின் புதல்வன். கழுகுகளுக்கெல்லாம் அரசன். சம்பாதியின் தம்பி. தசரத சக்ரவர்த்தியின் நண்பர்கள். இக்காட்டில் வசிப்பவன் நான். நீங்கள் பஞ்சவடியில் வாழும் வரை உங்களுக்கு வேண்டிய உதவிகளையும் வசதிகளையும் செய்து தருகிறேன். என்னுடன் வாருங்கள்.”, என்று கூறி, அவர்கள் குடில் அமைக்க அமைதியான, அழகான இடத்தையும் காட்டினார்.


“அவர் திண்சிறை விரியும் நீழலில் செல்ல விண்சென்றான்” என்ற வரிகளின் வாயிலாக, கம்பர், ஜடாயுவின் பரந்த மனதையும், ஸ்ரீ இராமர், சீதாதேவி மற்றும் இலட்சுமணன் மீது அவர் கொண்டுள்ள அன்பையும் வெளிப்படுத்துகிறார். அவ்வரிகளின் அர்த்தம் , பஞ்சவடி நோக்கி காட்டில் நடந்து செல்லும் ஸ்ரீ ராமரையும், சீதாதேவியையும் இலட்சுமணனையும் வெயிலில் இருந்து பாதுகாக்க, தனது பெரிய அகண்ட சிறகுகளை குடைப் போல் விரித்தார் ஜடாயு.

சீதாப்பிராட்டியை இராவணன் கடத்திச் சென்ற போது, இராவணனின் தவறை சுட்டிக்காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ஜடாயு. இராவணன் கேக்காமல் போக, இராவணனுடன் ஜடாயு மோதுகிறார். இராவணனின் தேரை உடைத்து சுக்குநூறாக்கி, அவனையும் தன் மொத்த பலம் கொண்டு தாக்குகிறார். இறுதியில் இராவணன் வாளுக்கு தன் ஒரு பக்க இறக்கையை இழந்து, ஜடாயு தரையில் விழுகிறார்.

ஸ்ரீ இராமன் மற்றும் இலட்சுமணனின் வருகைக்காக காத்திருந்தவர், அவர்கள் வந்ததும், நடந்தவற்றைக் கூறி, இராவணன் சீதையை கொண்டு போன தென்திசையை அடையாளம் காட்டிவிட்டு, ஸ்ரீ இராமருக்கு மங்களாசாசனம் செய்துவிட்டு உயிர் விடுகிறார்.

தனது தந்தையின் ஸ்தானத்தைக் கொடுத்து, ஜடாயுவை மதித்துப் போற்றிய ராமர், தன் அம்பினால் ஏழு புண்ணிய நதிகளையும் வரவழைத்து, ஒரு புஷ்கரணியை ஏற்படுத்தினார். தன் தந்தையாகவே ஜடாயுவை ஏற்று, தர்ப்பணம் முதலான ஈமக்கிரியைகளை புஷ்கரணியின் கரையிலேயே செய்தார். ஜடாயுவுக்கு மோக்க்ஷமும் கிடைத்தது. இதைவிட ஜடாயூவிற்கு வேறென்ன பாக்கியம் வேண்டும்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, " ஜடாயுவைப் போல் (பெரிய உடையார்) இராவணனுடன் போரிட்டு, பிராட்டிக்கும் பெருமாளுக்கும் உதவி புரிந்தேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

லீலை கண்ணன் கதைகள் - 41

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

சங்காசுரன் வதம்|

ஒரு நாள் பலராமரும் கிருஷ்ணரும் பிருந்தாவன காட்டிற்க்கு சென்றார்கள். அவர்களுடன் விரஜ பூமியின் நங்கையரும் சென்றிருந்தார்கள். அந்நங்கையர் நேர்த்தியான ஆடைகளை அணிந்திருந்தார்கள். சந்தனம் பூசப் பெற்று, மலர்களால் தம்மை அலங்கரித்திருந்தார்கள். ஆகாயத்தில் சந்திரன், நட்சத்திரங்கள் புடை சூழப் பிரகாசித்துக் கொண்டிருந்த, சூழலின் இனிமையில் கிருஷ்ணரும் பலராமரும் இனிமையாகப் பாடினார்கள்.


அப்போது குபேரனின் நண்பனான ஒரு அசுரன் அங்கு தோன்றினான். அவன் தலையில் சங்கு வடிவிலான விலை உயர்ந்த மணியை தரித்திருந்ததால் அவனுக்கு சங்காசுரன் என்ற பெயர் வழங்கியது. குபேரனின் இரு மகன்கள் செல்வத்தால் செருக்கடைந்து நாரத முனியை அசட்டை செய்தது போல் சங்காசுரனும் செல்வச் செருக்கு காரணமாக, கிருஷ்ணரையும் பலராமரையும் ஆயர்குலச் சிறுவர்கள் என எண்ணினான். சங்காசுரன், தான் செல்வம் மிகுந்தவனும், குபேரனின் நண்பனுமாகையால் அங்கிருந்த விரஜ நங்கையர்களை அனுபவிக்க எண்ணி அப்பெண்களைக் கைப்பற்ற விரும்பினான்.


அவர்களிடையே அவன் தோன்றி, அப்பெண்களை வடக்கு திசையை நோக்கி கடத்திச் செல்லலானான். கிருஷ்ணரும் பலராமரும் இருந்தும்கூட சங்காசுரன் தானே அவர்களின் கணவன், உடைமையாளன் என்பது போல் அதிகாரம் செய்தான். சங்காசுரனால் பலவந்தமாகக் கடத்திச் செல்லப்பட்ட பெண்கள், தம்மைக் காப்பாற்றும்படி கிருஷ்ணரையும் பலராமரையும் பெயர் சொல்லிக் கூவியழைத்தார்கள். சகோதரர்கள் கைகளில் எடுத்துக் கொண்டு விரைவாக சங்காசுரனைப் பின் தொடர்ந்தார்கள்.


அவர்களின் பலத்தை எண்ணி அஞ்சிய சங்காசுரன், கோபியர்களை விட்டுவிட்டு உயிருக்குப் பயந்து ஓடினான். ஆனால் கிருஷ்ணர் அவனை விடவில்லை. கோபியர்களை பலராமரின் பாதுகாப்பில் விட்டுவிட்டு கிருஷ்ணர் அசுரன் சென்ற இடமெல்லாம் அவனைத் துரத்திப் பிடித்து, அவனின் தலையில் தன் முஸ்டியால் அடித்து, அவனைக் கொன்றார். பின்னர் அவனின் தலையில் இருந்த சங்கு வடிவிலான மணியை எடுத்துக் கொண்டு திரும்பினார். விரஜ பூமியின் நங்கையர்களின் முன்னிலையில் கிருஷ்ணர் அம்மணியைத் தம் சகோதரரான பலராமருக்கு அளித்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 010 - திருப்புள்ளம் பூதங்குடி 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

010. திருப்புள்ளம் பூதங்குடி 
பூத புரி - கும்பகோணம் 
பத்தாவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த 
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்

1. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) 

  • திவ்ய ப்ரபந்தம் - 1348 -1357 - ஐந்தாம் பத்து - முதலாம் திருமொழி  

-------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி
விரும்பினவை எய்தும் வினை அனைத்தும் தீரும்*
அரும்பரம வீடு அடைவீர் பெரும் பொறிகள்*
கள்ளம் பூதம் குடி கொள் காயமுடையீர் அடிகள்*
புள்ளம் பூதங்குடியில் போம்*

  • பெரும் பொறி கொள் - வலிய ஐம்பொறிகளைக் கொண்டதும்
  • கள்ளம் பூதம் குடி கொள் - வஞ்சனைக் குணமும் பஞ்ச பூதங்களும் பொருந்தப் பெற்றதுமான
  • காயம் - சரீரத்தை
  • உடையீர் - உடையவரான ஜநங்களே! நீங்கள்
  • அடிகள் புள்ளம்பூதங்குடியில் போம் - எம்பெருமான் எழுந்தருளி இருக்கின்ற திருப்புள்ளம் பூதங்குடி என்னும் ஸ்தலத்தில் போய்ச் சேருங்கள்
  • சேர்ந்த மாத்திரத்தில் - விரும்பினவை எய்தும் - நீங்கள் விரும்பியவை எல்லாம் கைகூடும்
  • வினை அனைத்தும் தீரும் - உங்களது எல்லா வினைகளும் நீங்கும்
  • அரும் பரம வீடும் அடைவீர் - பெறுதற்கு அரிய சிறந்த முத்தி உலகத்தையும் சேர்வீர்கள்
-------------
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10

திருமங்கையாழ்வார் 

001. திவ்ய ப்ரபந்தம் - 1348 - வாமனன் வாழும் இடம் திருப்புள்ளம் பூதங்குடி
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - முதலாம் திருமொழி - முதலாம் பாசுரம்
அறிவது அறியான் அனைத்து உலகும் உடையான்* என்னை ஆள் உடையான்*
குறிய மாணி உரு ஆய* கூத்தன் மன்னி அமரும் இடம்* 
நறிய மலர் மேல் சுரும்பு ஆர்க்க* எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட*
பொறி கொள் சிறை வண்டு இசை பாடும்* 
புள்ளம் பூதங்குடி தானே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1349 - யானையின் துயர் தீர்த்தவன் வாழும் இடம்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - முதலாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
கள்ளக் குறள் ஆய் மாவலியை வஞ்சித்து* உலகம் கைப்படுத்து*
பொள்ளைக் கரத்த போதகத்தின்* துன்பம் தவிர்த்த புனிதன் இடம்*
பள்ளச் செறுவில் கயல் உகளப்* பழனக் கழனி அதனுள் போய்*
புள்ளு பிள்ளைக்கு இரை தேடும்* புள்ளம் பூதங்குடி தானே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1350 - மருதம் சாய்த்த மால் மருவும் இடம்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - முதலாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
மேவா அரக்கர் தென் இலங்கை* வேந்தன் வீயச் சரம் துரந்து*
மா வாய் பிளந்து மல் அடர்த்து* மருதம் சாய்த்த மாலது இடம்* 
கா ஆர் தெங்கின் பழம் வீழக்* கயல்கள் பாயக் குருகு இரியும்*
பூ ஆர் கழனி எழில் ஆரும்* புள்ளம் பூதங்குடி தானே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1351 - வல்வில் இராமன் வாழும் இடம்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - முதலாம் திருமொழி - நான்காம் பாசுரம்
வெற்பால் மாரி பழுது ஆக்கி* விறல் வாள் அரக்கர் தலைவன் தன்*
வற்பு ஆர் திரள் தோள் ஐந் நான்கும்* துணித்த வல் வில் இராமன் இடம்*
கற்பு ஆர் புரிசை செய் குன்றம்* கவின் ஆர் கூடம் மாளிகைகள்*
பொற்பு ஆர் மாடம் எழில் ஆரும்* புள்ளம் பூதங்குடி தானே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1352 - மாயன் மன்னும் இடம்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - முதலாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
மை ஆர் தடங் கண் கருங் கூந்தல்* ஆய்ச்சி மறைய வைத்த தயிர்*
நெய் ஆர் பாலோடு அமுது செய்த* நேமி அங் கை மாயன் இடம்*
செய் ஆர் ஆரல் இரை கருதிச்* செங் கால் நாரை சென்று அணையும்*
பொய்யா நாவின் மறையாளர்* புள்ளம் பூதங்குடி தானே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1353 - ஏழு எருதுகளை அடக்கியவன் எழுந்தருளிய இடம்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - முதலாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
மின்னின் அன்ன நுண் மருங்குல்* வேய் ஏய் தடந் தோள் மெல்லியற்கா*
மன்னு சினத்த மழ விடைகள்* ஏழ் அன்று அடர்த்த மாலது இடம்* 
மன்னும் முது நீர் அரவிந்த மலர் மேல்* வரி வண்டு இசை பாட*
புன்னை பொன் ஏய் தாது உதிர்க்கும்* புள்ளம் பூதங்குடி தானே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1354 - வாணன் தோள் துணித்தவன் வாழும் இடம்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - முதலாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
குடையா விலங்கல் கொண்டு ஏந்தி* மாரி பழுதா நிரை காத்து*
சடையான் ஓட அடல் வாணன்* தடந் தோள் துணித்த தலைவன் இடம்* 
குடியா வண்டு கள் உண்ணக்* கோல நீலம் மட்டு உகுக்கும்*
புடை ஆர் கழனி எழில் ஆரும்* புள்ளம் பூதங்குடி தானே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1355 - அருச்சுனனின் தேரை ஓட்டியவன் அமரும் இடம்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - முதலாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
கறை ஆர் நெடு வேல் மற மன்னர் வீய* விசயன் தேர் கடவி*
இறையான் கையில் நிறையாத* முண்டம் நிறைத்த எந்தை இடம்* 
மறையால் முத்தீ அவை வளர்க்கும்* மன்னு புகழால் வண்மையால்*
பொறையால் மிக்க அந்தணர் வாழ்* புள்ளம் பூதங்குடி தானே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1356 - அருமறைகள் அருளியவன் அமரும் இடம்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - முதலாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
துன்னி மண்ணும் விண் நாடும்* தோன்றாது இருள் ஆய் மூடிய நாள்*
அன்னம் ஆகி அரு மறைகள்* அருளிச்செய்த அமலன் இடம்* 
மின்னு சோதி நவ மணியும்* வேயின் முத்தும் சாமரையும்*
பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும்* புள்ளம் பூதங்குடி தானே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1357 - துயர் நள் விலகி விடும்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - முதலாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
கற்றா மறித்து காளியன் தன்* சென்னி நடுங்க நடம் பயின்ற*
பொன் தாமரையாள் தன் கேள்வன்* புள்ளம் பூதங்குடி தன் மேல்* 
கற்றார் பரவும் மங்கையர் கோன்* கார் ஆர் புயல் கைக் கலிகன்றி*
சொல் தான் ஈர் ஐந்து இவை பாடச்* சோர நில்லா துயர் தாமே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்