About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 7 February 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 106

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 76

பூ⁴தா வாஸோ வாசுதே³வ: 
ஸர்வாஸு நிலயோ நல:|
த³ர்ப்பஹா த³ர்ப்பதோ³ த்³ருப்தோ 
து³ர்த⁴ரோ தா² பராஜித:||

  • 713. பூ⁴தா வாஸோ - எல்லா உயிரினங்களுக்கும் இருப்பிடமானவர். தனது பக்தர்களின் இதயங்களில் வாழ்கிறார்.
  • 714. வாசுதே³வஸ் - வியூஹ வாசுதேவர். துவாதச மந்திரம்.
  • 715. ஸர்வாஸு நிலயோ - ஆதரவாக உள்ளவர். அனைத்து ஆத்மாக்களின் தங்கும் இடமாக இருப்பவர்.
  • 716. அநலஹ - அடியார்கட்கு அருள் புரிவதில் மனநிறைவு பெறாதவர். தன் பக்தர்களுக்கு இழைக்கப்பட்ட எந்தக் குற்றத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாதவர். பிராண சக்தியை தனது சொந்தமாகப் பெற்று ஜீவாத்மா வடிவில் செயல்படுகிறார். அவர் வரம்பற்றவர் மற்றும் நித்யமானவர். நெருப்பு வடிவில் இருக்கிறார். ஈடு இணையற்றவர். வாசனை முதலியவற்றிற்கு அப்பாற்பட்டவர். எந்த எதிர்ப்பும் இல்லாதவர். தம்மீது தீவிர ஏக்கத்துடன் இருக்கும் தனது பக்தர்களுக்கு அவர் புத்துயிர் அளிக்கிறார்.
  • 717. த³ர்ப்பஹா - மதத்தை, ஆணவத்தை அடக்குபவர். 
  • 718. த³ர்ப்பதோ³ - பக்தர்களுக்கு பெருமையை வழங்குபவர்.
  • 719. அத்³ருப்தோ - கர்வமற்றவர். தன்னைப் பற்றி பெருமை கொள்ளாதவர். மிகவும் மகிழ்ச்சியாக இருப்பவர்.
  • 720. து³ர்த⁴ரோ - அடக்க முடியாத ஆற்றலுடையவர். தீய எண்ணம் கொண்டவர்களால் அவனை அடக்க முடியாது.
  • 721. அதா² அபராஜிதஹ - வெல்ல முடியாதவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.43

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.43 

காமாத் மாந: ஸ்வர்க³ பரா: 
ஜந்ம கர்ம ப²ல ப்ரதா³ம்|
க்ரியா விஸே²ஷ ப³ஹுலாம் 
போ⁴கை³ ஸ்²வர்ய க³திம் ப்ரதி||

  • காமாத் மாநஸ் - ஆசைகளில் மூழ்கியவர்கள் 
  • ஸ்வர்க³பராஹ - ஸ்வர்கத்தை அடைய எண்ணுவோர் 
  • ஜந்ம கர்ம ப²ல ப்ரதா³ம் - பிறப்புக்கும் தொழிலுக்கும் பயன் வேண்டுவோர்
  • க்ரியா விஸே²ஷ - ஆடம்பரமான சடங்குகள் 
  • ப³ஹுலாம் - பலவகையான 
  • போ⁴க³ - புலனுகர்ச்சியில் 
  • ஐ³ஸ்²வர்ய - செல்வம் 
  • க³திம் - முன்னேற்றம் 
  • ப்ரதி - நோக்கி

புலன் உகர்ச்சியை விரும்பி சொர்க்கத்தை அடைய எண்ணுவோர் நற்பிறவியையும் இதர பலன்களையும் விளைவுகளாக அளிக்கும், பற்பல ஆடம்பரமான சடங்குகள் பற்றி வாதிடுபவர்கள், புலன் உகர்ச்சியிலும், செல்வத்திலும், முன்னேற்றத்தை நோக்கி பல்வேறு குறிப்பிட்ட செயல்களை பரிந்துரைக்கின்றனர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.41

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.41

நி:ஸ்² ரேய ஸாய லோகஸ்ய 
த⁴ந்யம் ஸ்வஸ்த் யயநம் மஹத்|
ததி³ த³ம்  க்³ரா ஹயாம் ஆஸ 
ஸுதம் ஆத்மவ தாம் வரம்||

  • த⁴ந்யம் - மிகவும் புகழத் தக்கதும்
  • ஸ்வஸ்த் யயநம் - மங்களங்களை உண்டாக்கக் கூடியதும்
  • மஹத் - விஸ்தாரமானதுமான
  • லோகஸ்ய நிஸ் ஸ்²ரேய ஸாய - உலகச் க்ஷேமார்த்தமாக
  • தத்³ இத³ம் - அந்த பாகவதத்தை
  • ஆத்மவ தாம் வரம் -  ஆத்ம ஞானிகளில் ஸ்ரேஷ்டரான
  • ஸுதம் - ஸுகருக்கு
  • க்³ரா ஹயாம் ஆஸ - கற்பித்தார்

அனைத்து உலகிற்கும் நன்மையைச் செய்யத் திரு உள்ளம் கொண்ட வியாச முனிவர், புகழ் பெற்றதும் நலன்களை வழங்கக் கூடியதும்,  பொருட்சுவை, சொற்சுவை ஆகியவற்றால் சிறந்ததுமான இந்த ஸ்ரீமத் பாகவத புராணத்தை, ஆத்ம ஞானிகளுக்குள் சிறந்த தனது புத்திரரான ஸ்ரீசுகருக்கு உபதேசம் செய்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.41

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.41

ப்ரவிஸ்²ய து மஹாரண்யம் 
ராமோ ராஜீவ லோசந:|
விராத⁴ம் ராக்ஷஸம் ஹத்வா 
ஸ²ர ப⁴ங்க³ம் த³த³ர்ஸ²ஹ|| 

  • து - இப்பொழுது
  • ராஜீவ லோசந: - செந்தாமரை கண்ணரான
  • ராமோ - ஸ்ரீராமர்
  • மஹாரண்யம் - பெரும் வனத்திற்குள்
  • ப்ரவிஸ்²ய - பிரவேசித்து
  • விராத⁴ம் - விராதன் என்கிற
  • ராக்ஷஸம் - ராக்ஷஸனை
  • ஹத்வா - கொன்று
  • ஸ²ர ப⁴ங்க³ம் - சரபங்கரைக்
  • த³த³ர்ஸ²ஹ - கண்டார்

தாமரைக் கண்ணனான ராமன், அந்தப் பெரும் வனத்திற்குள் நுழைந்து, ராட்சசனான விராதனைக் கொன்று, சரபங்கரைக் கண்டார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திவ்ய ப்ரபந்தம் - பெரியாழ்வார் திருமொழி - 1.7 அறிமுகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஏழாம் திருமொழி – 11 பாசுரங்கள்
திவ்ய ப்ரபந்தம் - 86 - 96

தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

நடக்கத் தெரியாத குழந்தையை நடக்கச் செய்வதும், அது தடுமாறிக் கொண்டு நடந்து வருவதைக் கண்டு மகிழ்வதும் தாயின் செயல்! "கண்ணா, நீயல்லவோ நடையழகன். உன்னைச் சதுர்கதி: என்று எல்லோரும் கூறுகிறார்களே! அந்த நடையழகை எனக்குக் காட்ட மாட்டாயா? 


உன் மெல்லடித் தாமரைகளைத் தரை மீது மெல்ல வைத்து 'யானைக் குட்டி போல்' நடந்து வா!" என்கிறாள் யசோதை. இப்பாடல்களை ஆர்வத்தோடு பாடுவோர் கண்ணனைப் போன்று புகழ் மிக்க மகனைப் பெறுவார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 024 - திருசிறுப்புலியூர் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

024. திருசிறுப்புலியூர் (திருவாரூர்)
இருபத்தி நான்காவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் – 10 பாசுரங்கள்

1. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் – 1628-1637 - ஏழாம் பத்து - ஒண்பதாம் திருமொழி 

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி

ஆ மருவி மேய்த்த அரங்கர் எதிர் ஆர் நிற்பார்
தாம் மருவி வாணனைத் தோள் சாய்த்த நாள் சேமம்
உறு புலி ஊர் வன் தோல் உடையான் உடைந்தான்
சிறு புலியூர் எந்தை மேல் சென்று

  • தாம் - திருவரங்க நாதர் தாம் 
  • கிருஷ்ணாவதாரத்தில் வாணனை மருவி - பாணாசுரனைக் கிட்டி 
  • தோள் சாய்த்த - போரில் அவனது ஆயிரந் தோள்களையும் அறுத்துத் தள்ளிய 
  • நாள் - காலத்தில் 
  • சேமம் உறு - அந்தப் பாணாசுரனுக்குக் காவலாக அமைந்தவனான 
  • புலி ஊர் வல் தோல் உடையான் - புலியானது மேற்கொண்டுள்ள வலிய புலித் தோலை ஆடையாக உடைய சிவபெருமான்
  • சிறுபுலியூர் எந்தைமேல் சென்று - சிறு புலியூர் என்னும் ஸ்ஸ்தலத்தில் எழுந்தருளி உள்ள எமது தந்தையாகிய அவ்வெம்பெருமானை எதிர்த்துச் சென்று,
  • உடைந்தான் - தோற்றோடினான். ஆதலால் 

  • ஆ மருவி மேய்த்த அரங்கர் எதிர் ஆர் நிற்பார் - கிருஷ்ணாவதாரத்தில் பசுக்களை விரும்பி மேய்த்த ஸ்ரீரங்கநாதருக்கு முன்பாக எவர் தாம் எதிர்த்து நிற்க வல்லவர்? எத்தேவராலும் எதிர்த்து நிற்றல் முடியாது

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 97

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

சுருததேவரும் பகுலாச்வனும்|

கிருஷ்ணர் மீது மிகவும் பக்தி கொண்ட ஓர் அந்தணர் இருந்தார். அவர் விதேகநாட்டின் தலைநகரமான மிதிலையில் வசித்தார். அவருடைய பெயர் கருததேவர் என்பது. அவர் போதுமென்ற மனம் கொண்டவர். எது தானாகக் கிடைக்கிறதோ அதைக் கொண்டு திருப்தியடைவார். அவருக்கு ஆசை என்பதே கிடையாது. கிடைத்ததைக் கொண்டு தம் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வார். அவருடைய மனைவியும் குழந்தைகளும் அவரையே பின்பற்றினார். 


அந்த மிதிலை நாட்டின் அரசனின் பெயர் பகுலாச்வன் என்பது. அவனும் கிருஷ்ணரின் பரமபக்தன். இருவரும் கிருஷ்ணரையே எப்பொழுதும் தியானம் செய்துகொண்டிருந்ததனால் அவர்களைப் பார்த்து ஆசிர்வதிக்க வேண்டும் என்று கிருஷ்ணர் நினைத்தார். எனவே அவர் மிதிலையை நோக்கித் தமது ரதத்தில் கிளம்பினார். நாரதர், வாமதேவர், வியாசர் போன்றவர்களும் அவர் கூடவே சென்றார்கள். பல நாடுகளைக் கடந்து சென்றார்கள். அந்த நாடுகளின் அரசர்களும் மக்களும் கிருஷ்ணரைப் பூஜித்தார்கள். 

கிருஷ்ணரின் தாமரையொத்த முகமும், அதில் தவழ்ந்த மோகனப் புன்னகையும் எல்லா மக்களுக்கும் மகிழ்ச்சியையும் சாந்தியையும் கொடுத்தன. கடைசியில், கிருஷ்ணர் மிதிலையை அடைந்தார். அவர் வருகிறார் என்று தெரிந்து, அந்த நகரின் மக்கள் அவரை வரவேற்க ஊருக்கு வெளியே ஓடி வந்தார்கள். அவருடைய தெய்விக வதனத்தைக் கண்டதும் எல்லார் இதயங்களிலும் மகிழ்ச்சி பொங்கியது. எல்லோரும் கீழே விழுந்து, கைகளைக் கூப்பி அவரை நமஸ்கரித்தார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 50

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

யார் வீடு?

ஸ்கந்தம் 03

சௌனகர் கேட்டார். ஸூதரே, பரம பக்தரான விதுரர் யுத்தத்தைக் காண சகியாமல், தீர்த்த யாத்திரை சென்றாராமே. அப்போது மைத்ரேய மஹரிஷியை சந்தித்தார் என்று கூறினீர்களே. இருவருக்கும் பகவத் விஷயமாக ஏதாவது உரையாடல் நடந்ததா? ஒரே தெய்வத்தை வழிபடும் இரு பக்தர்களோ, ஒரே குருவை அடைந்த உண்மையான சீடர்களோ சந்தித்தால் வேறென்ன பேசுவார்கள்? அவர்களது தெய்வத்தைப் பற்றியே அவர்களது பேச்சு இருக்கும். அவர்களின் உரையாடல் எங்கு நடந்தது? விதுரர் எதற்காக சுற்றத்தை வெறுத்துக் கிளம்பினார்?


ஸூதர் சொன்னார், “இதே கேள்வியை பரிக்ஷித்தும் கேட்டார். அதற்கு ஸ்ரீ சுகர் கூறிய பதிலையே உங்களுக்குச் சொல்கிறேன்.

ஸர்வேஸ்வரனான இறைவன் ஸ்ரீ க்ருஷ்ணன் பாண்டவ தூதனாக அஸ்தினாபுரம் சென்றான். அப்போது துரியோதனன் என் வீட்டிலோ அல்லது விருந்தினர் மாளிகையிலோ தங்கலாமே என்றழைத்தான். தூது வந்த இடத்தில் கை நனைக்கலாது என்று சொல்லி விட்டான் கண்ணன். த்ரௌபதியை மானபங்கம் செய்யும் சமயத்தில் வாளாவி ருந்ததால், பீஷ்மர், த்ரோணர் போன்றவர்கள் மீதும் அவனுக்கு வருத்தம் இருந்தது. யார் வீட்டில் தங்கலாம் என்று யோசித்துக் கொண்டு ராஜ வீதியில் இறங்கி நடந்தான். 

பகவான் வீதியில் நடப்பதைக் கண்டு அவன் பின்னால் அனைவரும் வந்தனர். முதலில் வெள்ளை வெளேரென்ற பளிங்கு மாளைகை வந்ததும் “இது யார் வீடு? “ பீஷ்மர் முன் வந்து “என் வீடு தான் கண்ணா. உள்ளே வா“ என்றழைத்தார். “பிறகு வருகிறேன்“ என்று சொல்லி விட்டு நடந்தான். அடுத்து வந்த மாளிகையை துரோணர் தன் வீடென்று அழைத்தார். கர்ணனுக்கும் ஆசை. அவனும் தன் மாளிகையைக் கடக்கும் போது கூப்பிட்டுப் பார்த்தான். கண்ணன் பிறகு வருகிறேன் என்றதும் திட்டினான். வரிசையாக ஒவ்வொரு வீட்டையும் கடந்து சென்று கொண்டே இருந்தான். எங்கே தான் தங்கப் போகிறான் என்ற ஆவல் அனைவர்க்கும் மேலிட்டது. அப்போது மிகச் சாதாரணமாக அந்த சூழலுக்குச் சற்றும் பொருந்தாமல் ஒரு பழைய ஓட்டு வீடு வந்தது. “இது யார் வீடு? “இது உன்னுடைய வீடு தான் கண்ணா “ என்றார் விதுரர். அந்த வீடு கண்ணனுக்கு கோகுலத்து வீட்டை நினைவு படுத்தியது போலும். மிகவும் மகிழ்ந்து போன கண்ணன், “ஆ.. என் அம்மா யசோதைக்குத் தான் என் மீது எவ்வளவு அன்பு. நான் எங்கு போனாலும் அவ்விடத்தில் நான் வசிக்க ஒரு வீடு கட்டி வைத்திருக்கிறாளே.. நான் இன்று இங்கேயே தங்குகிறேன்“ என்று சொல்லி அவனது சொந்த வீட்டிற்குள் நுழைவது போல் உள்ளே போனான். குந்தியும் விதுரர் வீட்டில் தான் தங்கியிருந்தாள். 

“அப்படிப்பட்ட பக்தர் விதுரர் பகவான் எழுந்தருளிய அந்த வீட்டை விட்டுச் சென்றாரே.. அவர் மைத்ரேயரைச் சந்தித்துப் பேசிய உரையாடலை சான்றோர்கள் கொண்டாடுகிறார்கள். அந்த உரையாடலைக் கூறுங்கள்” என்றார் பரிக்ஷித்.

ஸ்ரீ சுகர் சொன்னார். “மறுநாள் பகவான் அவைக்குச் சென்ற போது, அவன் கூறிய நல்லுரைகள் அனைத்தும் குருடனான த்ருதராஷ்ட்ரனுக்கு செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று. அப்போது விதுரர் எழுந்து பல நல்லுரைகளைக் கூறினார். அவையே விதுர நீதி என்று பெரியோரால் போற்றப்படுகிறது.

“விதுரர் சொன்னார், அண்ணா! துரியோதனன் பிறந்த போதே உங்களுக்குக் கூறினேன். இவன் கலி புருஷனின் அவதாரம். இவனால் நாடு கெட்டுப் போகும். குலம் விளங்க ஒருவனைத் தள்ளலாம். கிராமம் விளங்க ஒரு குடும்பத்தைத் தள்ளலாம். நாடு விளங்க ஒரு கிராமத்தையே அழிக்கலாம். ஆத்மாவை உணர உலகையே துறக்கலாம். துரியோதனன் மீது புத்ர பாசம் வேண்டாம். நாடு கடத்துங்கள் அல்லது கொன்று விடுங்கள் என்று சொன்னேன். இவனை இப்போதே விலக்கி விட்டு கண்ணன் சொல்வதைக் கேளுங்கள்” என்றார்.

உடனே துரியோதனன், வெகுண்டு எழுந்து விதுரரைப் பார்த்து ஆத்திரத்துடன், “வேலைக்காரியின் மகனான இவனை யார் சபைக்கு அழைத்தது? நாம் போடும் சோற்றை உண்டு நமக்கு எதிராகப் பேசுகிறான். இவனை நாடு கடத்துங்கள்” என்று கத்தினான்.

அதைக் கேட்டு த்ருதராஷ்ட்ரன் பேசாமல் இருக்கவே, விதுரர், இதுவும் பகவானின் லீலை என்று உணர்ந்து, சிறிதும் கலக்கம் இன்றி, கோட்டை வாசலில் வில்லை வைத்து விட்டு அஸ்தினாபுரத்தை விட்டு வெளியேறினார். கௌரவர்கள் செய்த புண்ணியங்களின் பலன் அன்றே தீர்ந்தது.

தன் ப்ரியனான பகவான் எங்கெல்லாம் அர்ச்சாவதாரமாய் எழுந்தருளி இருக்கிறாரோ அங்கெல்லாம் செல்ல மனம் கொண்டு தீர்த்த யாத்திரை கிளம்பினார் விதுரர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்