About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 7 February 2024

லீலை கண்ணன் கதைகள் - 97

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

சுருததேவரும் பகுலாச்வனும்|

கிருஷ்ணர் மீது மிகவும் பக்தி கொண்ட ஓர் அந்தணர் இருந்தார். அவர் விதேகநாட்டின் தலைநகரமான மிதிலையில் வசித்தார். அவருடைய பெயர் கருததேவர் என்பது. அவர் போதுமென்ற மனம் கொண்டவர். எது தானாகக் கிடைக்கிறதோ அதைக் கொண்டு திருப்தியடைவார். அவருக்கு ஆசை என்பதே கிடையாது. கிடைத்ததைக் கொண்டு தம் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வார். அவருடைய மனைவியும் குழந்தைகளும் அவரையே பின்பற்றினார். 


அந்த மிதிலை நாட்டின் அரசனின் பெயர் பகுலாச்வன் என்பது. அவனும் கிருஷ்ணரின் பரமபக்தன். இருவரும் கிருஷ்ணரையே எப்பொழுதும் தியானம் செய்துகொண்டிருந்ததனால் அவர்களைப் பார்த்து ஆசிர்வதிக்க வேண்டும் என்று கிருஷ்ணர் நினைத்தார். எனவே அவர் மிதிலையை நோக்கித் தமது ரதத்தில் கிளம்பினார். நாரதர், வாமதேவர், வியாசர் போன்றவர்களும் அவர் கூடவே சென்றார்கள். பல நாடுகளைக் கடந்து சென்றார்கள். அந்த நாடுகளின் அரசர்களும் மக்களும் கிருஷ்ணரைப் பூஜித்தார்கள். 

கிருஷ்ணரின் தாமரையொத்த முகமும், அதில் தவழ்ந்த மோகனப் புன்னகையும் எல்லா மக்களுக்கும் மகிழ்ச்சியையும் சாந்தியையும் கொடுத்தன. கடைசியில், கிருஷ்ணர் மிதிலையை அடைந்தார். அவர் வருகிறார் என்று தெரிந்து, அந்த நகரின் மக்கள் அவரை வரவேற்க ஊருக்கு வெளியே ஓடி வந்தார்கள். அவருடைய தெய்விக வதனத்தைக் கண்டதும் எல்லார் இதயங்களிலும் மகிழ்ச்சி பொங்கியது. எல்லோரும் கீழே விழுந்து, கைகளைக் கூப்பி அவரை நமஸ்கரித்தார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment