||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
014. திருநறையூர்
நாச்சியார் கோயில் - கும்பகோணம்
பதிநான்காவது திவ்ய க்ஷேத்ரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 111 - 6
திருமங்கையாழ்வார்
101. திவ்ய ப்ரபந்தம் - 1575 - கண்ணனைக் கண்டு விட்டேன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - மூன்றாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
இனி எப் பாவம் வந்து எய்தும் சொல்லீர்*
எமக்கு இம்மையே அருள்பெற்றமையால்*
அடும் துனியைத் தீர்த்து இன்பமே தருகின்றது ஓர்*
தோற்றத் தொல் நெறியை* வையம் தொழப்படும்
முனியை வானவரால் வணங்கப்படும் முத்தினை*
பத்தர் தாம் நுகர்கின்றது ஓர் கனியை*
காதல் செய்து என் உள்ளம் கொண்ட கள்வனை*
இன்று கண்டு கொண்டேனே|
102. திவ்ய ப்ரபந்தம் - 1576 - என் மனம் திருமாலையே போற்றும்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
என் செய்கேன் அடியேன் உரையீர்*
இதற்கு என்றும் என் மனத்தே இருக்கும் புகழ்*
தஞ்சை ஆளியைப் பொன்பெயரோன்*
நெஞ்சம் அன்று இடந்தவனை தழலே புரை*
மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்பட*
சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும்*
பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை அன்றி*
என் மனம் போற்றி என்னாதே|
103. திவ்ய ப்ரபந்தம் - 1577 - இவற்றைப் பாடுங்கள்; பாவம் பறந்து விடும்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - மூன்றாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
தோடு விண்டு அலர் பூம் பொழில் மங்கையர்* தோன்றல் வாள் கலியன்*
திரு ஆலி நாடன்* நல் நறையூர் நின்ற நம்பி தன்*
நல்ல மா மலர்ச் சேவடி சென்னியில்* சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும்*
தொண்டர்கட்கு அவன் சொன்ன சொல் மாலை*
பாடல் பத்து இவை பாடுமின் தொண்டீர் பாட* நும்மிடைப் பாவம் நில்லாவே|
104. திவ்ய ப்ரபந்தம் - 1611 - ஆதி வராகனே! எனக்கு அடைக்கலம் தர யாருமில்லை
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஏழாம் திருமொழி - நான்காம் பாசுரம்
பரனே பஞ்சவன் பௌழியன் சோழன்*
பார் மன்னர் மன்னர் தாம் பணிந்து ஏத்தும் வரனே*
மாதவனே மதுசூதா* மற்று ஓர் நல் துணை நின் அலால் இலேன் காண்*
நரனே நாரணனே திருநறையூர்* நம்பீ எம் பெருமான் உம்பர் ஆளும் அரனே*
ஆதிவராகம் முன் ஆனாய்* அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே|
105. திவ்ய ப்ரபந்தம் - 1659 - என் மகள் நாணத்தைத் துறந்து விட்டாள்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
நீள் நிலாமுற்றத்து* நின்று இவள் நோக்கினாள்*
காணுமோ* கண்ணபுரம் என்று காட்டினாள்*
பாணனார் திண்ணம் இருக்க* இனி இவள்
நாணுமோ?* நன்று நன்று நறையூரர்க்கே|
106. திவ்ய ப்ரபந்தம் - 1852 - திருநறையூரும் திருமெய்யமும்
பெரிய திருமொழி - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
சுடலையில்* சுடு நீறன் அமர்ந்தது ஓர்*
நடலை தீர்த்தவனை* நறையூர்க் கண்டு*
என் உடலையுள் புகுந்து* உள்ளம் உருக்கி உண்*
விடலையைச் சென்று காண்டும்* மெய்யத்துள்ளே|
107. திவ்ய ப்ரபந்தம் - 2067 - திருமால் செயல் கூறிக் கண்ணீர் விடுகிறாளே!
திருநெடுந்தாண்டகம் - இரண்டாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்*
கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும்*
மன்று அமரக் கூத்து ஆடி மகிழ்ந்தாய் என்றும்*
வட திருவேங்கடம் மேய மைந்தா! என்றும்*
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே! என்றும்
விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாய்! என்றும்*
துன்று குழல் கரு நிறத்து என் துணையே! என்றும்*
துணை முலை மேல் துளி சோர சோர்கின்றாளே|
108. திவ்ய ப்ரபந்தம் - 2068 - எல்லாத் தலங்களையும் பாடுகிறாள் என் மகள்
திருநெடுந்தாண்டகம் - இரண்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
பொங்கு ஆர் மெல் இளங் கொங்கை பொன்னே பூப்ப*
பொரு கயல் கண் நீர் அரும்பப் போந்து நின்று*
செங் கால மடப் புறவம் பெடைக்குப் பேசும்*
சிறு குரலுக்கு உடல் உருகிச் சிந்தித்து*
ஆங்கே தண்காலும் தண் குடந்தை நகரும் பாடித்*
தண் கோவலூர் பாடி ஆடக் கேட்டு*
நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை? என்ன*
நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே|
109. திவ்ய ப்ரபந்தம் - 2706 - தலைவி சென்று தேடிய திவ்ய தேசங்கள்
சிறிய திருமடல் - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம்
நான் அவனைக் கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய்*
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவலூரே*
மதிள் கச்சி ஊரகமே பேரகமே*
பேரா மருது இறுத்தான் வெள்றையே வெஃகாவே*
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்*
ஆராமம் சூழ்ந்த அரங்கம்* கணமங்கை|
110. திவ்ய ப்ரபந்தம் - 2753 - சீதை, வேகவதி, உலூபிகை, உஷை, பார்வதி முதலியவர்களின் செயல்களையே பின்பற்றுவேன்
பெரிய திருமடல் - ஐந்தாம் திருமொழி - முதலாம் பாசுரம்
பாவியேற்கு என் உறு நோய் யான் உரைப்பக் கேள்மின்*
இரும் பொழில் சூழ் மன்னும் மறையோர் திருநறையூர் மா மலை போல்*
பொன் இயலும் மாடக் கவாடம் கடந்து புக்கு*
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன்|
111. திவ்ய ப்ரபந்தம் - 2782 - எனக்குத் திருமால் அருளாவிடில் அவனுடைய இரக்கமிலாச் செயல்களை யாவரிடமும் கூறி மடலூர்வேன்
பெரிய திருமடல் - ஏழாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
மன்னும் மறை நான்கும் ஆனானை*
புல்லாணித் தென்னன் தமிழை வடமொழியை*
நாங்கூரில் மன்னு மணிமாடக்கோயில் மணாளனை*
நல் நீர்த் தலைச்சங்க நாள் மதியை*
நான் வணங்கும் கண்ணனைக் கண்ணபுரத்தானை*
தென் நறையூர் மன்னு மணிமாடக்கோயில் மணாளனை|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்