||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
068 கள்வன் இவன் என்றேனோ லோக குருவைப் போலே|
"கள்வன்: என்பது ஸ்ரீமன்நாராயணனுக்கு இருக்கும் பல பெயர்களில் ஒன்றாகும் கள்வன். எனில், திருடுவது, ஏமாற்றுவது என்று பொருள். எம்பெருமானின் பக்தர்களின் நலனுக்காக இதையும் செய்வார். அவரது திவ்ய தேசங்களில் ஒன்றில் கள்வன் என்ற பெயரிலேயே காணப்படுகிறார்.
மகாபலி யாக சாலையில் வாமனனாக சிறு உருவில் தோன்றி, மூன்று அடி நிலம் கேட்டு, திருவிக்ரமனாக மாறி, உலகை அளக்கிறார் எம்பெருமான். அந்நேரம் அசுரர்களின் லோக குரு நாராயணனை கள்வன் என்கிறார்.
நம்மாழ்வாரையும் லோக குரு எனலாம். பல பாசுரங்களில் பெருமானை அவர் கள்வன் என் கிறார். திருவாய்மொழியில், "கொள்வான் அவன் மாவலி மூவடி தா என்ற கள்வனே" என்கிறார் (வாமன அவதாரத்தை)
தவிர்த்து, சிவபெருமான் ஒரு சமயம் நாராயணனுக்கு வரம் ஒன்று அளித்திருந்தார். அதை கிருஷ்ண அவதாரத்தில், கைலாயம் சென்று கண்ணன் கேட்கிறான். அனைத்து உலகிற்கும் எம்பெருமானே தந்தை. அவர் சிவனிடம் வரம் கேட்பதைக் கண்ட சிவபெருமான் "கள்வனே" என்கிறார்.
(தவிர்த்து திருவாய் மொழியில் ஒரு பாடல்)
கள்வா! எம்மையும் ஏழுலகும் நின் உள்ளே தோற்றிய இறைவ!’ என்று வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர் புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே.
பொழிப்புரை: வெண்மை நிறம் பொருந்திய இடபத்தை வாகனமாக உடைய சிவனும் பிரமனும் இந்திரனும் மற்றைத் தேவர்களும், ‘கள்வனே! எங்களையும் மற்றை உலகங்ளையும் நின்னிடத்தினின்றும் தோன்றச் செய்த இறைவனே!’ என்று, கருட வாகனத்தையுடைய இறைவனுடைய திருவடிகளை வணங்கித் துதிப்பார்கள்
திருமங்கையாழ்வாரும் எம்பெருமானை "கார்வனத்து உள்ளே கள்வா" என்கிறார்
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "இப்படியெல்லாம் லோக குருக்கள் எம்பெருமானை "கள்வன்" என்று அழைத்தாற் போல நான் அழைக்கவில்லையே. இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment