About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 5 November 2023

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.7 

கார்பண்ய தோ³ஷோ பஹத ஸ்வபா⁴வ: 
ப்ருச்சா²மி த்வாம் த⁴ர்ம ஸம்மூட⁴ சேதா:|
யச் ஸ்²ரேய: ஸ்யாந் நிஸ்²சிதம் ப்³ரூஹி தந்மே 
ஸி²ஷ்ய ஸ்தே ஹம் ஸா²தி⁴ மாம் த்வாம் ப்ரபந்நம்||

  • கார்பண்ய - கருமித்தனம் 
  • தோ³ஷ - பலவீனம் 
  • உபஹத - தாக்கப்பட்டு 
  • ஸ்வபா⁴வஹ - குணங்கள் 
  • ப்ருச்சா²மி - நான் வினவுகிறேன் 
  • த்வாம் - உம்மிடம் 
  • த⁴ர்ம - தர்மம் 
  • ஸம்மூட⁴ - குழம்பி 
  • சேதாஹ - இதயத்தில் 
  • யத் - எதை 
  • ஸ்²ரேயஸ் - சாலச் சிறந்தது 
  • ஸ்யாத் - ஆகும் 
  • நிஸ்²சிதம் - நிச்சயமாக 
  • ப்³ரூஹி - கூறுவீராக 
  • தத் - அதை 
  • மே - எனக்கு 
  • ஸி²ஷ்ய - சீடன் 
  • தே - உமது 
  • அஹம் - நான் 
  • ஸா²தி⁴ - அறிவுறுத்துங்கள் 
  • மாம் - எனக்கு 
  • த்வாம் - உம்மிடம் 
  • ப்ரபந்நம் - சரணடைந்தேன்

இதயத்தில், கருமித்தன குணங்களின் பலவீனத்தால் தாக்கப்பட்டு, அறம் இன்னது என்றுணராமல் கடமையில் குழம்பம் அடைந்து, உம்மிடம் வினவுகிறேன். எது எனக்கு சாலச் சிறந்தது ஆகும்? எனக்கு அதை கூறுவீராக. நான் உமது சீடனாக, உம்மிடம் சரணடைந்தேன். எனக்கு அறிவுறுத்துங்கள். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment