About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 5 November 2023

திவ்ய ப்ரபந்தம் - பெரியாழ்வார் திருமொழி - 1 - 4 அறிமுகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - நான்காம் திருமொழி  - 10 பாசுரங்கள்
திவ்ய ப்ரபந்தம் - 54 – 63

சந்திரனை அழைத்தல், அம்புலிப் பருவம்

குழந்தையுடன் விளையாட நிலவினை அழைத்தல்

கலிநிலைத்துறை

கண்ணன் வளர்ந்து தவழ்கிறான். திறந்த வெளியில் வருகிறான். வெண்ணிலவு! சந்திரனைப் பார்க்கிறான். தன்னோடு விளையாட வருவான் என்று நினைக்கிறான். ஆனால் சந்திரன் வான வீதியில் வேகமாக செல்கிறான்.


கண்ணன் தன் சிறு கைகளால் சந்திரனை காட்டி அழைத்தும் சந்திரன் வராததை பார்த்த யசோதை பிராட்டி, சந்திரனை பார்த்து கோபித்துக் கூறும் பாசுரங்கள் தான் இவை. இவனே தெய்வம். இவனை அலட்சியம் செய்தால், நீ தப்ப முடியாது என்று சந்திரனுக்கு கூறி, நமக்கும் உணர்த்துகிறாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment