||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 53 – என்றும் துன்பம் இல்லை
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - மூன்றாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
தரவு கொச்சகக் கலிப்பா
வஞ்சனையால் வந்த*
பேய்ச்சி முலை உண்ட*
அஞ்சன வண்ணனை*
ஆய்ச்சி தாலாட்டிய*
செஞ்சொல் மறையவர் சேர்*
புதுவைப் பட்டன் சொல்*
எஞ்சாமை வல்லவர்க்கு*
இல்லை இடர் தானே! (2)
- வஞ்சனையால் வந்த - வஞ்சக எண்ணத்தோடு
- வந்த - தாய் வேடத்தில் வந்த
- பேய்ச்சி - பேயான பூதனையினுடைய
- முலை உண்ட - தாய்ப்பாலை உண்ட
- அஞ்சனம் வண்ணனை - மை போன்ற நிறத்தை உடையவனான கண்ணபிரானை
- ஆய்ச்சி - யசோதைப் பிராட்டி
- தாலாட்டிய - தாலாட்டின விதத்தை
- செம் சொல் - சிறந்த சொற்கள் நிறைந்த
- மறையவர் - வேதங்களில் வல்லவரான ஸ்ரீ வைஷ்ணவர்கள்
- சேர் - நித்ய வாசம் பண்ணப் பெற்ற
- புதுவை - ஸ்ரீ வில்லிபுத்தூரில் அவதரித்த
- பட்டன் - பெரியாழ்வார் அருளிச் செய்த
- சொல் - இப்பாசுரங்களை
- எஞ்சாமை - குறைவில்லாமல்
- வல்லவர்க்கு - சொல்பவர்களுக்கு
- இடர் இல்லை - துன்பம் ஒன்றுமில்லையாம்
வஞ்சகமே வடிவாக வந்த பூதனையின் விஷமேறிய முலைப்பாலை அமுது செய்தவனும், மை போன்ற நிறத்தை உடையவனுமான கண்ணனை, தாலாட்டிப் பாடிய வரிகளைத் தான், வேதமோதுவோர் செழித்தோங்கிய ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்த பெரியாழ்வார் அருளிச் செய்திருக்கிறார். இப்பாசுரங்களை குறையில்லாமல் ஓத வல்லவர்களுக்கு ஒரு துன்பமும் இல்லையாம்.
அடிவரவு: மாணி உடை என்* சங்கின் எழில் ஓத* கானார் கச்சு மெய்* வஞ்சனை - தன்
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment