About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 9 August 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 12

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

அநாதி நித⁴நம் விஷ்ணும் 
ஸர்வ லோக மஹேஸ்²வரம்|
லோகாத்⁴ யக்ஷம் ஸ்துவந் நித்யம் 
ஸர்வ துக்காதி கோ ப⁴வேத்:||

🎵ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் - 12🙏

ப⁴வேத்: - ப⁴வேத்து

ஆதியும் அந்தமும் இல்லாமல் எல்லாக் காலங்களிலும் இருப்பவரும், எங்கும் நிறைந்துள்ளவரும், எல்லா உலகங்களுக்கும் மேலான தலைவரும், எல்லா நடப்புகளையும் மேலிருந்து பார்த்துக் கொண்டிருப்பவருமாகிய விஷ்ணுவை எப்போதும் போற்றி வருபவர் எல்லாத் துன்பங்களையும் கடந்து எம்பெருமானைச் சேர்ந்து பகவத் அநுபவமான எல்லையற்ற ஆனந்தத்தை அநுபவிப்பார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - பத்தாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

010 முதலடியைப் பெற்றேனோ அஹலிகையைப் போலே|

முதலடி என்றால் ஜனகனின் மிதிலாபுரிக்கு நுழைவதற்கு முதல் அடி. பிரம்மனால் படைக்கப்பட்ட பேரழகி அகல்யா. கௌதம முனிவரின் தர்ம பத்தினி. 

தினமும் விடியற்காலை சேவல் கூவியதும், கௌதமர் நதியில் நீராட சென்று விடுவது வழக்கம். இதை அறிந்த இந்திரன், ஒருநாள், விடிவதற்கு முன் சேவல் போலக் கூவி விடிந்தாற் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினான். கௌதமரும், வழக்கம் போல நீராடச் சென்று விட்டார். அவர் இல்லாத அந்நேரத்தில் இந்திரன், கௌதமரின் உருவத்தில் குடிலுக்குள் சென்று அகல்யையைப் புணர்ந்தான். 


ஏதோ சந்தேகம் ஏற்பட கௌதமர் வீடு திரும்பினார். அங்கு இருவரையும் ஒன்றாகக் கண்டு கோபம் மேலிட அகல்யாவைக் கல்லாகப் போகுமாறு சபித்தார். இந்திரனுக்கும், அவன் எதை அடைய வேண்டும் என ஆசைப்பட்டானோ, அது ஆயிரமாக அவனது உடல் முழுதும் வரட்டும் என சபிக்கிறார். இருவரும், சாப விமோசனம் கேட்டு வேண்ட, இந்திரன் உடலில் அவை ஆயிரம் கண்களாக மாறட்டும் என விமோசனம் கொடுத்தார். அகலிகைக்கோ, "ராமர் இதன் வழியாக போகும் போது அவருடைய திருவடி பட்டு உன் சாபம் தீரும்" என்று விமோசனமும் சொல்கிறார். 


அவருடைய சாபத்தினால் அஹலிகை ஒரு கல்லாக கிடந்து இருக்கிறாள். மிதிலாபுரிக்குள் ராமரும் பின் லக்ஷ்மணரும் விஸ்வாமித்ரருடன் நுழைய போகிறார்கள். அதற்கு முன்னாலேயே கௌதம முனிவருடைய ஆசிரமம் இருக்கிறது. அதன் வழியாக தான் ராமர் மிதிலாபுரிக்கு செல்ல வேண்டும். அப்படி ராமர் அதன் வழியாக போய்க் கொண்டிருந்த போது, அங்கிருந்த கல்லின் மீது ராமருடைய திருவடி பட்டது. கல்லும் பெண்ணாக மாறிற்று. அஹலிகையின் சாபமும் தீர்ந்து விமோசனம் கிடைத்தது.


திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “அஹலிகை மீது ராமரின் திருவடி பட்டது போல எனக்கு நடக்கவில்லையே! அஹலிகையை போலே ராமருடைய திருவடியை நான் பற்றவில்லையே! உலகத்துக்கே முதல்வனான சர்வேஸ்வரன் ஸ்ரீ எம்பெருமான். அவனுடைய திருவடி படும் பாக்கியத்தை நான் பெற்றேனோ? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

லீலை கண்ணன் கதைகள் - 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

கம்சனின் பாசம் நொறுங்கியது|

ரதத்தை ஒட்டி சென்றிருந்த கம்சனுக்கு திடீரென்று வானிலிருந்து ஒரு குரல் கேட்டது: "மூடா! நீ இப்பொழுது யாரை ரதத்தில் வைத்து ஒட்டிக் கொண்டு இருக்கிறாயோ அவளுடைய எட்டாவது குழந்தை உன்னைக் கொல்லப் போகிறது" என்று அது சொன்னது. இதைக் கேட்டக் கம்சன் திடுக்கிட்டான்; நடுங்கினான். உடனேயே லகான்களைக் கீழே போட்டு விட்டு, இடதுக் கையினால் தேவகியின் கூந்தலைப் பற்றினான். அவளைக் கொல்வதற்காக வலதுக் கையினால் தன் கத்தியை உருவினான். 


என்ன ஆச்சரியம் பாருங்கள்! சில நொடிக்கு முன்பு தான் தன் அன்புத் தங்கைக்காக சாரதி வேலையைச் செய்யத் தயாராக இருந்தவன், தன் உயிருக்கு ஆபத்து என்று கேள்விப்பட்டதும், தங்கையின் மீது வைத்திருந்த பாசம் எல்லாம் மறந்து அவளைக் கொல்லத் துணிந்து விட்டான். 


அவன் தேவகியைப் பார்த்துக் கத்தினான். "கேடு கெட்டவளே நான் உன் மீது எவ்வளவு அன்பைப் பொழிந்தேன்! என்னைக் கொல்லப் போகிறவனுக்கு நீ தாயாகிறாயா? இது எப்படி நடக்கிறது என்று பார்க்கிறேன்! இதோ, நான் உன்னைக் கொல்லப் போகிறேன். அதற்குப் பிறகு நான் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை" என்று சொன்னான். தேவகியைக் காப்பற்றுவதற்காக, வசுதேவர் கம்சனைச் சாந்தப்படுத்த முயன்றார். 


"கம்சா! உன் தங்கையை அதுவும் அவளுடைய திருமண நாளன்று கொல்ல உனக்கு எப்படி மனம் துணிந்தது? உன் தங்கை மீது நீ அன்பு காட்ட வேண்டாமா? அவள் மீது இறக்கம் கொண்டு அவளை விட்டு விடு" என்று சொன்னார். ஆனால் வசுதேவரின் சொற்கள் கம்சன் விஷயத்தில் செவிடன் காதில் ஊதிய சங்காகியது. அதனால் வேறு ஒரு வழியில் அவனைத் தடுத்து நிறுத்த வசுதேவர் தீர்மானித்தார். 


அவர் சொன்னார், "இதோ பார், கம்சா! அசரீரி சொன்னதைக் கேட்டு நீ கவலைப்படத் தேவையில்லை. தேவகியைக் கண்டு பயப்படவும் தேவையில்லை. அவளுடைய மகன் உன்னைக் கொல்வான் என்று தானே நீ பயப்படுகிறாய்? அவளுக்குப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் பிறந்த உடனேயே உன்னிடம் கொண்டு வந்து கொடுத்து விடுகிறேன். இது சத்தியம்" என்றார். இதைக் கேட்டதும் கம்சனுக்குப் பெருத்த நிம்மதி ஏற்பட்டது. வசுதேவரின் வார்த்தையில் அவனுக்கு நம்பிக்கை உண்டு. அதனால் தன் தங்கையைக் கொல்லாமல் விட்டான். வசுதேவரும் கம்சனைப் பாராட்டினார். தம் மனைவியுடன் தம்முடைய இருப்பிடத்தை அடைந்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 001 - திருவரங்கம் 5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

001. திருவரங்கம் 
ஸ்ரீரங்கம் - திருச்சி 
முதலாவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 249 - 1

பெரியாழ்வார்

001. திவ்ய ப்ரபந்தம் - 52 - துர்க்கை தந்த பொருள்கள்
பெரியாழ்வார் திருமொழி - முதலாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
மெய் திமிரும் நானப்* பொடியொடு மஞ்சளும்*
செய்ய தடங் கண்ணுக்கு* அஞ்சனமும் சிந்துரமும்*
வெய்ய கலைப்பாகி* கொண்டுவளாய் நின்றாள்*
ஐயா! அழேல் அழேல் தாலேலோ* அரங்கத்து அணையானே! தாலேலோ|

002. திவ்ய ப்ரபந்தம் - 183 -  அழகிய மணவாளனுக்கு மல்லிகைப் பூ
பெரியாழ்வார் திருமொழி - இரண்டாம் பத்து - ஏழாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
கரு உடை மேகங்கள் கண்டால்* உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள்* 
உரு உடையாய்! உலகு ஏழும்* உண்டாக வந்து பிறந்தாய்!* 
திரு உடையாள் மணவாளா!* திருவரங்கத்தே கிடந்தாய்!* 
மருவி மணம் கமழ்கின்ற* மல்லிகைப் பூச் சூட்ட வாராய்|

003. திவ்ய ப்ரபந்தம் - 189 - அணியரங்கனுக்கு இருவாட்சிப் பூ
பெரியாழ்வார் திருமொழி - இரண்டாம் பத்து - ஏழாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
சீமாலிகன் அவனோடு* தோழமை கொள்ளவும் வல்லாய்!* 
சாமாறு அவனை நீ எண்ணிச்* சக்கரத்தால் தலை கொண்டாய்!* 
ஆமாறு அறியும் பிரானே!* அணி அரங்கத்தே கிடந்தாய்!* 
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்!* இருவாட்சிப் பூச் சூட்ட வாராய்|
 
004. திவ்ய ப்ரபந்தம் - 205 - கொண்டல் வண்ணன் கோயில் பிள்ளை
பெரியாழ்வார் திருமொழி - இரண்டாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - நான்காம் பாசுரம்
கொண்டல் வண்ணா! இங்கே போதராயே* 
கோயிற் பிள்ளாய்! இங்கே போதராயே* 
தெண் திரை சூழ் திருப்பேர்க் கிடந்த* திருநாரணா! இங்கே போதராயே* 
உண்டு வந்தேன் அம்மம் என்று சொல்லி* ஓடி அகம் புக ஆய்ச்சி தானும்*
கண்டு எதிரே சென்று எடுத்துக் கொள்ளக்* கண்ணபிரான் கற்ற கல்வி தானே|
                                                                                                    
005. திவ்ய ப்ரபந்தம் - 212 - கோவிந்தன் அடியார்களாவர்
பெரியாழ்வார் திருமொழி - இரண்டாம் பத்து - ஒண்பதாம் திருமொழி -  பதினொன்றாம் பாசுரம்
வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ்* வருபுனற் காவிரித் தென்னரங்கன்*
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம்* பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல்* 
கொண்டு இவை பாடிக் குனிக்க வல்லார்* கோவிந்தன்தன் அடியார்கள் ஆகி* 
எண் திசைக்கும் விளக்காகி நிற்பார்* இணையடி என்தலை மேலனவே| (2)
                                                                                                                          
006. திவ்ய ப்ரபந்தம் - 245 - மன்னிய சீர் மதுசூதனன்
பெரியாழ்வார் திருமொழி - மூன்றாம் பத்து - மூன்றாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
கன்னி நன் மா மதிள் சூழ்தரு* பூம்பொழிற் காவிரித் தென்னரங்கம்* 
மன்னிய சீர் மதுசூதனா! கேசவா!* பாவியேன் வாழ்வு உகந்து*
உன்னை இளங்கன்று மேய்க்கச்* சிறுகாலே ஊட்டி ஒருப்படுத்தேன்* 
என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை* என் குட்டனே முத்தம் தா|

007. திவ்ய ப்ரபந்தம் - 402 - சாந்தீபினியின் மகனைக் கொடுத்தவன் ஊர் அரங்கம்
பெரியாழ்வார் திருமொழி - நான்காம் பத்து - எட்டாம் திருமொழி - முதலாம் பாசுரம்
மா தவத்தோன் புத்திரன் போய்* மறி கடல் வாய் மாண்டானை* 
ஓதுவித்த தக்கணையா* உருவுருவே கொடுத்தான் ஊர்* 
தோத வத்தித் தூய் மறையோர்* துறை படியத் துளும்பி எங்கும்* 
போதில் வைத்த தேன் சொரியும்* புனல் அரங்கம் என்பதுவே| (2)

008. திவ்ய ப்ரபந்தம் - 403 - ஸ்ரீ வைஷ்ணவர் வாழுமிடம் திருவரங்கம்
பெரியாழ்வார் திருமொழி - நான்காம் பத்து - எட்டாம் திருமொழி -  இரண்டாம் பாசுரம்
பிறப்பு அகத்தே மாண்டு ஒழிந்த* பிள்ளைகளை நால்வரையும்* 
இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து* ஒருப்படித்த உறைப்பன் ஊர்*
மறைப் பெருந் தீ வளர்த்திருப்பார்* வரு விருந்தை அளித்திருப்பார்* 
சிறப்பு உடைய மறையவர் வாழ்* திருவரங்கம் என்பதுவே|

009. திவ்ய ப்ரபந்தம் - 404 - பரீக்ஷித்தைப் பிழைப்பித்தவன் வாழுமிடம் திருவரங்கம்
பெரியாழ்வார் திருமொழி - நான்காம் பத்து - எட்டாம் திருமொழி -  மூன்றாம் பாசுரம்
மருமகன் தன் சந்ததியை* உயிர் மீட்டு மைத்துனன்மார்* 
உருமகத்தே வீழாமே* குரு முகமாய்க் காத்தான் ஊர்* 
திருமுகமாய்ச் செங்கமலம்* திருநிறமாய்க் கருங்குவளை* 
பொரு முகமாய் நின்று அலரும்* புனல் அரங்கம் என்பதுவே|

010. திவ்ய ப்ரபந்தம் - 405 - இராக்கதரை அழித்தவன் ஊர் திருவரங்கம்
பெரியாழ்வார் திருமொழி - நான்காம் பத்து - எட்டாம் திருமொழி -  நான்காம் பாசுரம்
கூன் தொழுத்தை சிதகு உரைப்பக்* கொடியவள் வாய்க் கடிய சொற் கேட்டு* 
ஈன்று எடுத்த தாயரையும்* இராச்சியமும் ஆங்கு ஒழிய* 
கான் தொடுத்த நெறி போகிக்* கண்ட கரைக் களைந்தான் ஊர்* 
தேன் தொடுத்த மலர்ச் சோலைத்* திருவரங்கம் என்பதுவே|

011. திவ்ய ப்ரபந்தம் - 406 - இராவணனைக் கொன்றவன் ஊர் திருவரங்கம்
பெரியாழ்வார் திருமொழி - நான்காம் பத்து - எட்டாம் திருமொழி -  ஐந்தாம் பாசுரம்
பெரு வரங்கள் அவை பற்றிப்* பிழக்கு உடைய இராவணனை* 
உரு அரங்கப் பொரு தழித்து* இவ் உலகினைக் கண் பெறுத்தான் ஊர்*
குரவு அரும்பக் கோங்கு அலரக்* குயில் கூவும் குளிர் பொழில் சூழ்* 
திருவரங்கம் என்பதுவே* என் திருமால் சேர்விடமே|

012. திவ்ய ப்ரபந்தம் - 407 - அசுரர்களை ஆழியால் அழித்தவன் ஊர் திருவரங்கம்
பெரியாழ்வார் திருமொழி - நான்காம் பத்து - எட்டாம் திருமொழி -  ஆறாம் பாசுரம்
கீழ் உலகில் அசுரர்களைக்* கிழங்கிருந்து கிளராமே* 
ஆழி விடுத்து அவருடைய* கரு அழித்த அழிப்பன் ஊர்*
தாழை மடல் ஊடு உரிஞ்சித்* தவள வண்ணப் பொடி அணிந்து* 
யாழின் இசை வண்டினங்கள்* ஆளம் வைக்கும் அரங்கமே|

013. திவ்ய ப்ரபந்தம் - 408 - காவிரி அரங்கனின் அடிதொழுமிடம் திருவரங்கம்
பெரியாழ்வார் திருமொழி - நான்காம் பத்து - எட்டாம் திருமொழி -  ஏழாம் பாசுரம்
கொழுப்பு உடைய செழுங்குருதி* கொழித்து இழிந்து குமிழ்த்து எறிய* 
பிழக்கு உடைய அசுரர்களைப்* பிணம் படுத்த பெருமான் ஊர்* 
தழுப்பு அரிய சந்தனங்கள்* தட வரைவாய் ஈர்த்துக் கொண்டு* 
தெழிப்பு உடைய காவிரி வந்து* அடி தொழும் சீர் அரங்கமே|

014. திவ்ய ப்ரபந்தம் - 409 - வண்டுகள் மல்லிகை வெண் சங்கூதும் மதிள் அரங்கம்
பெரியாழ்வார் திருமொழி - நான்காம் பத்து - எட்டாம் திருமொழி -  எட்டாம் பாசுரம்
வல் எயிற்றுக் கேழலுமாய்* வாள் எயிற்றுச் சீயமுமாய்* 
எல்லை இல்லாத் தரணியையும்* அவுணனையும் இடந்தான் ஊர்*
எல்லியம் போது இருஞ்சிறை வண்டு* எம்பெருமான் குணம் பாடி* 
மல்லிகை வெண் சங்கு ஊதும்* மதிள் அரங்கம் என்பதுவே|

015. திவ்ய ப்ரபந்தம் - 410 - நீல நிற நெடுமால் ஊர் ஸ்ரீரங்கம்
பெரியாழ்வார் திருமொழி - நான்காம் பத்து - எட்டாம் திருமொழி -  ஒண்பதாம் பாசுரம்
குன்று ஆடு கொழு முகில் போல்* குவளைகள் போல் குரை கடல் போல்* 
நின்று ஆடு கண மயில் போல்* நிறம் உடைய நெடுமால் ஊர்* 
குன்று ஊடு பொழில் நுழைந்து* கொடி இடையார் முலை அணவி* 
மன்று ஊடு தென்றல் உமாம்* மதிள அரங்கம் என்பதுவே|

016. திவ்ய ப்ரபந்தம் - 411 - திருவரங்கன் புகழ் பாடுவோர்க்கு யாம் அடியோம்
பெரியாழ்வார் திருமொழி - நான்காம் பத்து - எட்டாம் திருமொழி -  பத்தாம் பாசுரம்
பரு வரங்கள் அவை பற்றிப்* படை ஆலித்து எழுந்தானை* 
செரு அரங்கப் பொருது அழித்த* திருவாளன் திருப்பதி மேல்*
திருவரங்கத் தமிழ் மாலை* விட்டு சித்தன் விரித்தன கொண்டு* 
இருவர் அங்கம் எரித்தானை* ஏத்த வல்லார் அடியோமே| (2)

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி தனியன் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

தனியன் 2

பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை 
(இரு விகற்ப நேரிசை வெண்பா)

மின்னார் தட மதிள் சூழ்* 
வில்லிபுத்தூர் என்றொருகால்* 
சொன்னார்* கழற் கமலம் சூடினோம்* 
முன்னாள் கிழி அறுத்தான்* என்றுரைத்தோம்* 
கீழ்மையினில் சேரும்* 
வழி அறுத்தோம் நெஞ்சமே வந்து|

  • மின் - மின்னுதல் - மணிகளால் ஒளி விடுதல்
  • ஆர் - நிறைந்த அதிகமான
  • தடம் - அகலப்பரப்பும் உயர்ந்து ஓங்குகையும் உள்ள
  • மதிள் - திரு மதிளாலே
  • சூழ் - வளைக்கப்பட்ட 
  • வில்லி புத்தூர் என்று - ஸ்ரீ வில்லி புத்தூர் என்று
  • ஒரு கால் சொன்னார் - ஒரு தரம் உச்சரிதவருடைய
  • கழல் கமலம் - திருவடித் தாமரைகளை
  • சூடினோம் - விசேஷ புஷ்பமாக முடித்தோம்
  • முன்னாள் - புருஷார்த்தம் வெளியாக காலத்தில்
  • கிழி - பொருள் முடிப்பை
  • அறுத்தான் என்று - அறுத்து வெளி இட்டவர் என்று
  • உரைத்தோம் - சொல்லப் பெற்றோம் ஆகையால்
  • கீழ்மை - நரகத்தில்
  • இனி - இனிமேல்
  • சேரும் - முன் போல் செல்லுகிற
  • வழி - மார்க்கத்தை
  • அறுத்தோம் - அறப் பண்ணினோம்
  • நெஞ்சே - மனசே
  • வந்து - சம்ஸார ரஹீதராய் வந்து

நெஞ்சே! மின்னலைப் போலே ஒளிவிடும் பெரிய மதிள்களால் சூழப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் திவ்யதேசத்தின் பெயரை ஒரு முறை சொன்னவர்கள் திருவடித் தாமரைகளை எங்கள் தலைக்கு ஆபரணமாகச் சூடுவோம். பெரியாழ்வார் முற்காலத்திலே மதுரை ராஜ ஸபையில் சென்று, தன்னுடைய வாதத்தினாலே பரிசாக இருந்த பொற்கிழியை அறுந்து தன் கையிலே விழச் செய்த பெரியாழ்வாரின் அற்புதச் செயலை நினைத்து, சொல்லி, அதனாலே தாழ்ந்த நிலைகளை அடைவதில் இருந்து எங்களைக் காத்துக் கொண்டோம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - த்யான ஸ்லோகம் 7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்⁴யான ஸ்லோகம் - 7

பாரா ஸர்ய வசஸ் ஸரோஜ மமலம் 
கீ³தார்த² க³ந்தோ⁴த் கடம்
நானாக்² யானக கேஸரம் ஹரி கதா² 
ஸம்போ³ த⁴னா போ³தி⁴ தம்|
லோகே ஸஜ்ஜன ஷட்பதை³ ரஹரஹ꞉ 
பேபீய மானம் முதா³
பூ⁴யாத்³ பா⁴ரத பங்கஜம் கலி மல ப்ரத்⁴ 
வம்ஸி நஸ் ஸ்ரேயஸே||

அடுத்து ஒரு அழகான உருவகம். மகாபாரதம் ஒரு மலர்ந்த தாமரையாக சித்தரிக்கப்படுகிறது. அது வியாசரின் வாக்கென்ற ஏரியில் மலர்ந்திருக்கிறது. அதிலிருந்து கீர்த்தி என்னும் நறுமணம் வீசுகிறது. பலப்பல கதைகள் அதன் கேசரங்கள். ஹரியின் கதை என்ற சூரியனால் முழுவதும் மலர்ந்துள்ளது. இந்த தாமரையின் தேனை அடிக்கடி மகிழ்ந்து பருகும் வண்டுகள் நல்லோராவர். இது கலியின் தீமைகளைப் போக்கி நன்மை விளைவிக்கும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.1.4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² ப்ரத²ம: அத்⁴யாய꞉||
||நைமிஷ க்ஷேத்ரே ஸ்ரீமத் பாகவத விஷயே  
ஸூதம், ப்ரதி ஸொ²னகாதி முனீநாம் ப்ரஸ்ந:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||முதல் அத்யாயம்|| 
||ஞானிகளின் கேள்விகள்||

ஸ்லோகம் - 1.1.4

நைமிஷே நிமிஷ க்ஷேத்ரே 
ருஷயஸ்² ஸொ²ந காத³ய꞉|
ஸத்ரம் ஸ்வர்கா³ய லோகாய 
ஸஹஸ்ர ஸம மாஸத||

  • அநிமிஷ க்ஷேத்ரே - மகாவிஷ்ணுவின் பிரதேசமான
  • நைமிஷே - நைமி சாரண்யத்தில்
  • ஸொ²ந காத³யஹ - சௌனகர் முதலான
  • ருஷயஸ்² - மகரிஷிகள்
  • ஸ்வர்கா³ய லோகாய - சுவர்க்கத்தை அடைவதன் பொருட்டு
  • ஸஹஸ்ர ஸமம் - ஆயிரம் ஆண்டு அனுஷ்டிக்கத்தக்க
  • ஸத்ரம் - ஸத்ர யாகத்தை 
  • ஆஸத - செய்தார்கள்

நைமிஷாரண்யம் என்று அழைக்கப்படும் காட்டில், விஷ்ணுவுக்கு (கண் இமைகளை மூடாத) மிகவும் பிடித்தமான இடத்தில், சௌனக முனிவரின் தலைமையில் இருந்த முனிவர்கள், சொர்க்கத்தில் புகழப்படும் இறைவனுக்கும், இறைவனுடன் எப்போதும் தொடர்பில் இருக்கும் பக்தர்களுக்கும் ஆயிரம் ஆண்டுகள் யாகம் செய்தனர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 11

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

தமேவ சார்ச்சயந் நித்யம் 
ப⁴க்த்யா புருஷம் அவ்யயம்|
த்⁴யாயந் ஸ்துவந் நமஸ்யம்ஸ்² ச 
யஜமா நஸ் தமேவ ச||

ஸஹஸ்ர நாமத்துக்குப் பொருளாக உள்ள மாறுபாடில்லாத அந்தப் பரம் பொருளையே இடைவிடாத நினைவின் தொடர்ச்சியாக தைல தாரையைப் போல் பக்தியுடன் அர்ச்சித்தும், எனதாவியும் உனதே என்று தாளும் தடக்கையும் கூப்பிக் கோல் போல் விழுந்து வணங்கியும் மேலும் தியானித்தும் வணங்கியும் வழிபடுபவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - ஒண்பதாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

009 மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ர பந்துவைப் போலே|

ஸ்ரீ விஷ்ணு தர்மத்தில் 97வது அத்தியாயத்தில் இந்த க்ஷத்ர பந்து கதை வருகிறது. க்ஷத்ர பந்து என்றால் க்ஷத்ரியர்களுக்குள் மிக தாழ்ந்தவன். பிராமண பந்து என்றால் பிராமணர்களுக்குள் மிக தாழ்ந்தவன். விஷ்வரதா என்னும் மன்னனுக்கு க்ஷத்ர பந்து என்னும் மகன் இருந்தான். பிறரைக் கேலி செய்வதும், மற்றவர்களுக்கு இடைஞ்சல் செய்வதுமே அவனது பிறவி குணமாய் இருந்து வந்தது. இளவரசன் வளர வளர, அவனது சேட்டைகளும் வளர்ந்து வந்தன. மகன் மீது கொண்ட அன்பால், மன்னன் இளவரசனை கண்டிக்காமல் விட, க்ஷத்ர பந்துவின் செயல்கள் அதிகமாயின. வழிபோக்கர்கள் அனைவரையும் அடித்து துன்புறுத்தி உயிரை போக்குவதே இவன் வேலை. அவன் தனது கொடுமையான செயல்களால் தாய், தந்தை, மக்கள், மித்திரர் அனைவராலும் கைவிடப் பட்டான். அவன் இங்கிருந்தால் சரியாய் வராது என்று எண்ணிய ஊர்காரர்கள், அவனை ஊரை விட்டு துரத்தினர். உயிருக்கு பயந்து காட்டிற்குள் ஓடிய க்ஷத்ர பந்து, அங்கு சென்றும் தன் சேட்டைகளை நிறுத்திக் கொள்ளவில்லை. 


காட்டில் வசிக்கும் மக்களிடமும், காட்டினை கடக்கும் வழிப் போக்கர்களிடமும் தன் சேட்டைகளை தொடர்ந்தான். மேலும், அங்கு வரும் முனிவர்களுக்கு தொல்லைகள் கொடுத்தும், அவர்கள் நடத்தும் யாகத்தில் இடையூறுகள் செய்தும் கானகத்தில் கவலையின்றி அலைந்துத் திரிந்து கொண்டிருந்தான். 

ஒரு நாள் (என்னவோ எம்பெருமானின் சங்கல்பத்தாலே) ஒரு ரிஷி கடும் வெயிலில் வழி மறந்து அந்த காட்டு மார்கத்தில் வந்து விட்டார். மிகவும் வயசானவர், அவரை க்ஷத்ர பந்து பார்த்து விட்டான். அவர் பரிதாப நிலை கண்டு, அவர் மீது இரக்கம் மிகுந்ததால் க்ஷத்ர பந்து அவரிடம் "முனிவரே, நீங்கள் வழி தவறி வந்து விட்டீர்கள். களைப்புடன் வேறு இருக்கறீர்கள். அருகில் உள்ள குளத்தில் தண்ணீர் அருந்துங்கள். நீங்கள் போக வேண்டிய சரியான வழியும் இது தான்" என அவருக்கு வழியைக் காட்டி விட்டு, ஒரு குளத்தையும் காட்டினான். தாகம் தாங்காமல் ஒரு குளத்தில் தண்ணீர் எடுக்க போன முனிவர் குளத்தருகில் போன போது, கால்கள் வழுக்கி, குளத்தில் விழுந்து விட்டார். அதை பார்த்த க்ஷத்ர பந்து, குளத்தினுள் குதித்து காப்பாற்றியதுடன், அவரை எழுப்பி தூக்கி விட்டு அவருக்குக் கிழங்குகளை உண்ணக் குடுத்து, கை கால்களையும் பிடித்து விட்டு அசுவாச படுத்தினான். 


ஏன் இந்த வழியில் வந்தீர்? காட்டு மார்க்கம் உம்ம வழி இல்லையே என்று ரிஷியை பார்த்து க்ஷத்ர பந்து கேட்க, ரிஷி இவனை பார்த்து, "நீ யார் பிள்ளாய்? நீ ஏன் இங்கு ஒரு மாதிரி வடிவத்தோடு இருக்கிறாய்?" என்று கேட்கிறார். அதற்கு க்ஷத்ர பந்து பதில் சொல்கிறான். "ஐயா, நான் சூரிய வம்சத்தில் விஸ்வநாதன் என்பவருக்கு மகனாகத் தோன்றியவன். நான் ரொம்ப அபசாரம் பட்டிருக்கிறேன். தேவையில்லாத அனைத்து வேலைகளையும் பண்ணியிருக்கிறேன். இங்கிருந்து மீண்டு வருவதற்கு வழியும் தெரியவில்லை” என்று தான் செய்த கொடுமையான செயல்களையும் கூறினான். ரிஷிக்கு கொஞ்சம் கைங்கர்யம் பண்ணி அவரோடு சில நிமிடங்கள் பேசியதால் இவனுக்கும் கொஞ்சம் சாத்வீக குணம் வந்திருக்கு. அதனால் தானே இப்படி பேச முடியும்? நிச்சயமா தீயவர்கள் தாங்கள் பண்ணுவது தப்பு என்று ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். இவன் மனதில் தவறு என்று பட்டிருக்கிறது என்றால் அது சாதுவான ரிஷியோடு சம்பந்தத்தினால் தான் மட்டுமே தான் இப்படி பேச முடியும். 

அதைக் கேட்ட முனிவரும், அவனை கொடுமையான செயல்களை விட்டொழிக்கச் சொன்னார். "ஐயா, காமம், குரோதம், லோபம், மோகம் என்ற தீய குணங்களுக்கு ஆளான நான் எப்படி அவற்றை விட்டொழிப்பேன்" என்றான் க்ஷத்ர பந்து. அவனை எப்படியும் திருத்திட வேண்டும் என முனிவர், "இடைவிடாது கோவிந்த நாமத்தைச் சொல்லிக் கொண்டிரு" என்றார். “அது என்ன, எப்படி” என்று கேட்டான் க்ஷத்ர பந்து. அதற்கு ரிஷி சொன்னார், "ஒரு மூணு எழுத்து சொல்கிறேன், நீ அதை திருப்பி சொல்கிறாயா?" என்று கேட்டார். "மூணே எழுத்தா? சொல்கிறேனே" என்றான் க்ஷத்ர பந்து. அவர் அர்த்தம் எதுவும் சொல்லாமல் வெறும் “கோவிந்த" என்று மட்டும் சொல்லி கொண்டே இரு. உனக்கு தானே நல்லது நடக்கும்" என்று ரிஷி சொல்லி கொடுத்து விட்டு புறப்பட்டு போனார். க்ஷத்ர பந்துவும் அதை திரும்ப திரும்ப கோவிந்த கோவிந்த கோவிந்த என்று சொல்லி கொண்டே இருந்தான். அதன் அருளால் அவன் ஒருநாள் இயற்கை எய்தி, மோக்ஷம் அடைந்தான். அனைவரையும் கொடுமை படுத்தி கொன்று தகாத செயல்களை செய்து கொண்டிருந்தவன், இந்த மூன்றெழுத்தை உச்சரித்துக் கொண்டே இருந்ததால் மோக்ஷத்தை பெற்றான். மீண்டும் நல்குடியில் பிறந்தான்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “இப்படி க்ஷத்ர பந்து சொன்ன மூன்றெழுத்து என் வாயில் ஒரு நாளும் வந்ததில்லையே! நான் எத்தனை அபசாரம் பண்ணி இருந்தாலும் கோவிந்த நாமத்தை சொல்லி கொண்டு இருந்தால் விலகி விடும் என்ற ஞானம் கூட எனக்கு இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

லீலை கண்ணன் கதைகள் - 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

வசுதேவருக்கும் தேவகிக்கும் திருமணம்|

வசுதேவருக்கும் தேவகிக்கும் திருமகனாகப் பிறக்கப் போவதாக மகாவிஷ்ணு அறிவித்தாரே, அந்த வசுதேவரும் தேவகியும் யார்?


அந்தக் காலத்தில் யாதவர்கள் என்ற ஒரு குலத்தினர் இருந்தனர். யது என்கிற அரசனின் வம்சத்தவர்கள் இவர்கள். சூரன் தான் யாதவர்களின் தலைவன். அவனுடைய நாடு மதுரா என்றும், சூரசேனம் என்றும் இரண்டு பாகங்களை கொண்டது. உக்கிர சேனன், தேவகா என்று இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். உக்கிர சேனன் மதுரையை ஆண்டு வந்தான். 

உக்கிர சேனனுக்குக் கம்சன் என்கிற மகனும், தேவகாவுகுத் தேவகி என்கிற மகளும் இருந்தார்கள். கம்சனுக்கு சகோதரி யாரும் இல்லை. அதனால் அவன் தேவகியைத் தன் தங்கையைப் போல் நேசித்தான்.

சூரனுக்கு வசுதேவர் என்று ஒரு மகன் இருந்தார். வசுதேவருக்கும் தேவகிக்கும் திருமணம் நடந்தது. திருமணச் சடங்குகள் முடிந்ததும் வசுதேவர் தம் மனைவி தேவகியைத் தம் ஊர் அழைத்துச் செல்லத் தயாரானார். அதற்குப் பலத்த ஏற்பாடுகள் செய்திருந்தான் கம்சன். நவரத்தினக் கற்கள் இழைத்த தேரில் மணமக்கள் செல்வது என்றும், அதை நூறு தங்க ரதங்கள், நானூறு யானைகள், ஒரு பெரிய சேனை புடை சூழ்ந்து செல்வது என்றும் அவன் ஏற்பாடு செய்திருந்தான்.


தன் தங்கையை விட்டு பிரிய வேண்டியிருக்கிறதே என்று கம்சன் மிகவும் வருந்தினான். அதனால் மணமக்கள் அமர்ந்திருந்த இரதத்தின் பக்கம் சென்று சாரதியைக் கீழே இறங்கச் சொன்னான். பிறகு தானே சாரதியின் இருக்கையில் அமர்ந்து குதிரைகளின் கடிவாளத்தை கையில் பிடித்துக் கொண்டு தங்கையின் மீது இருந்த அன்பு காரணமாக தானே ரதத்தை ஓட்ட ஆரம்பித்தான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 001 - திருவரங்கம் 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

001. திருவரங்கம் 
ஸ்ரீரங்கம் - திருச்சி 
முதலாவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
11 ஆழ்வார்கள் - 249 பாசுரங்கள்

1. பொய்கை ஆழ்வார் - 1 பாசுரம்
1. முதலாம் திருவந்தாதி (மூன்றாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 2087 – முதலாம் திருமொழி - ஆறாம் பாசுரம் (6) 

----------
2. பூதத்தாழ்வார் - 4 பாசுரங்கள் 
1. இரண்டாம் திருவந்தாதி (மூன்றாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 2209 – மூன்றாம் திருமொழி - எட்டாம் பாசுரம் (28) 
  • திவ்ய ப்ரபந்தம் - 2227 – ஐந்தாம் திருமொழி - ஆறாம் பாசுரம் (46)
  • திவ்ய ப்ரபந்தம் - 2251 – ஏழாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (70)
  • திவ்ய ப்ரபந்தம் - 2269 – ஒண்பதாம் திருமொழி - எட்டாம் பாசுரம் (88)

----------
3. பேயாழ்வார் - 2 பாசுரங்கள்
1. மூன்றாம் திருவந்தாதி (மூன்றாம் ஆயிரம்) 

  • திவ்ய ப்ரபந்தம் - 2342, 2343 – ஏழாம் திருமொழி - 1 & 2 பாசுரங்கள் (61, 62)

----------
4. திருமழிசை ஆழ்வார் - 14 பாசுரங்கள்
1. திருச்சந்த விருத்தம் (முதலாம் ஆயிரம்) - 10 பாசுரங்கள் 

  • திவ்ய ப்ரபந்தம் - 772 - மூன்றாம் திருமொழி - முதலாம் பாசுரம் (21) - 1 பாசுரம் 
  • திவ்ய ப்ரபந்தம் - 800 - 801 - ஐந்தாம் திருமொழி - 9 & 10 பாசுரங்கள் (49, 50) -  2 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 802 - 806 - ஆறாம் திருமொழி - 1 to 5 பாசுரங்கள் (51 to 55) - 5 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 844 - பத்தாம் திருமொழி - மூன்றாம் பாசுரம் (93)  - பாசுரம் 
  • திவ்ய ப்ரபந்தம் - 870 - பன்னிரெண்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (119) - பாசுரம் 
2. நான்முகன் திருவந்தாதி (மூன்றாம் ஆயிரம்) - 4 பாசுரங்கள்

  • திவ்ய ப்ரபந்தம் - 2384 - முதலாம் திருமொழி -  மூன்றாம் பாசுரம் (3) - பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 2411 - மூன்றாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (30) பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 2417 - நான்காம் திருமொழி - ஆறாம் பாசுரம் (36) பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 2441 - ஆறாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (60) பாசுரம்

----------
5. நம்மாழ்வார் - 12 பாசுரங்கள்
1. திருவிருத்தம் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் - 2505 - மூன்றாம் திருமொழி - எட்டாம் பாசுரம் (28)
2. திருவாய்மொழி (நான்காம் ஆயிரம்) – 11 பாசுரங்கள் 

  • திவ்ய ப்ரபந்தம் 3464 - 3474 - ஏழாம் பத்து – இரண்டாம் திருவாய்மொழி

----------
6. குலசேகராழ்வார் - 31 பாசுரங்கள் 
1. பெருமாள் திருமொழி (முதலாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 647 - 657 – முதலாம் திருமொழி - 11 பாசுரங்கள் 
  • திவ்ய ப்ரபந்தம் - 658- 667 – இரண்டாம் திருமொழி - 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 668 - 676 – மூன்றாம் திருமொழி - 9 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 728 - எட்டாம் திருமொழி - பத்தாம் பாசுரம் - 1 பாசுரம்

----------
7. பெரியாழ்வார் - 37 பாசுரங்கள் 
1. பெரியாழ்வார் திருமொழி (முதலாம் ஆயிரம்)           

  • திவ்ய ப்ரபந்தம் - 52 - முதலாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் -  1  பாசுரம்  
  • திவ்ய ப்ரபந்தம் - 183, 189 - இரண்டாம் பத்து - ஏழாம் திருமொழி - 2 & 8 - 2  பாசுரங்கள்  
  • திவ்ய ப்ரபந்தம் - 205 - இரண்டாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - நான்காம் பாசுரம் - 1 பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 212 - இரண்டாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - பதினொன்றாம் பாசுரம் - 1 பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 245 - மூன்றாம் பத்து - மூன்றாம் திருமொழி - இரண்டாம் பாசுரம் - 1 பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 402 - 411 – நான்காம் பத்து – எட்டாம் திருமொழி – 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 412 - 422 – நான்காம் பத்து - ஒண்பதாம் திருமொழி - 11 பாசுரங்கள்        
  • திவ்ய ப்ரபந்தம் - 423 - 432 – நான்காம் பத்து - பத்தாம் திருமொழி - 10 பாசுரங்கள்

----------
8. ஸ்ரீ ஆண்டாள் - 10 பாசுரங்கள் 
1. நாச்சியார் திருமொழி (முதலாம் ஆயிரம்)

  •  திவ்ய ப்ரபந்தம் - 607 - 616 - பதினொன்றாம் திருமொழி

----------
9. தொண்டரடிப்பொடி ஆழ்வார் - 55 பாசுரங்கள் 
1. திருமாலை (முதலாம் ஆயிரம்) - 45 பாசுரங்கள்

  • திவ்ய ப்ரபந்தம் - 872 - 881 - முதலாம் திருமொழி - 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 882 - 891 - இரண்டாம் திருமொழி - 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 892 - 901 - மூன்றாம் திருமொழி - 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 902 - 911 - நான்காம் திருமொழி - 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 912 - 916 - ஐந்தாம் திருமொழி - 5 பாசுரங்கள் (1 to 5)
2. திருப்பள்ளியெழுச்சி (முதலாம் ஆயிரம்) - 10 பாசுரங்கள்

  • திவ்ய ப்ரபந்தம் - 917 - 926  

----------
10. திருப்பாணாழ்வார் - 10 பாசுரங்கள் 
1. அமலனாதிபிரான் (முதலாம் ஆயிரம்) 

  • திவ்ய ப்ரபந்தம் - 927 - 936

----------
11. திருமங்கை ஆழ்வார் - 73 பாசுரங்கள் 
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) – 58 பாசுரங்கள் 

  • திவ்ய ப்ரபந்தம் - 1019 - முதலாம் பத்து - எட்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்  - 1 பாசுரம் 
  • திவ்ய ப்ரபந்தம் - 1213 - மூன்றாம் பத்து - ஏழாம் திருமொழி - ஆறாம் பாசுரம் - 1 பாசுரம் 
  • திவ்ய ப்ரபந்தம் - 1378 - 1387 - ஐந்தாம் பத்து - நான்காம் திருமொழி – 10 பாசுரங்கள்      
  • திவ்ய ப்ரபந்தம் - 1388 - 1397 - ஐந்தாம் பத்து - ஐந்தாம் திருமொழி – 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 1398 - 1407 - ஐந்தாம் பத்து - ஆறாம் திருமொழி – 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 1408 - 1417 - ஐந்தாம் பத்து - ஏழாம் திருமொழி – 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 1418 - 1427 - ஐந்தாம் பத்து - எட்டாம் திருமொழி – 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 1506 - ஆறாம் பத்து - ஆறாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் -  1 பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 1571 - ஏழாம் பத்து - மூன்றாம் திருமொழி - நான்காம் பாசுரம் -  1 பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 1664 - எட்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம் - 1 பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 1829 - ஒண்பதாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - இரண்டாம் பாசுரம் - 1 பாசுரம் 
  • திவ்ய ப்ரபந்தம் - 1978 - பதினொன்றாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஏழாம் பாசுரம் - 1 பாசுரம் 
  • திவ்ய ப்ரபந்தம் - 2029 - பதினொன்றாம் பத்து - எட்டாம் திருமொழி - எட்டாம் பாசுரம் - 1 பாசுரம்
2. திருக்குறுந்தாண்டகம் (இரண்டாம் ஆயிரம்) – 4 பாசுரங்கள் 

  • திவ்ய ப்ரபந்தம் - 2038 - முதலாம் திருமொழி - ஏழாம் பாசுரம் (7) 
  • திவ்ய ப்ரபந்தம் - 2043, 2044 - இரண்டாம் திருமொழி - 2 & 3 பாசுரங்கள் (12, 13)
  • திவ்ய ப்ரபந்தம் - 2050 - இரண்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (19)
3. திருநெடுந்தாண்டகம் (இரண்டாம் ஆயிரம்) – 9 பாசுரங்கள்

  • திவ்ய ப்ரபந்தம் - 2062, 2063 - இரண்டாம் திருமொழி - 1 & 2 பாசுரங்கள் (11, 12) - 2 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 2065 - இரண்டாம் திருமொழி - நான்காம் பாசுரம் (14) - 1 பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 2069, 2070 - இரண்டாம் திருமொழி - 8 & 9 பாசுரங்கள் (18, 19) - 2 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 2073 - 2076 - மூன்றாம் திருமொழி - 2 to 5 பாசுரங்கள் (22 to 25) - 4 பாசுரங்கள்
4. சிறிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) – 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் - 2706 - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம் (34)
5. பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) – 1 பாசுரம் 

  • திவ்ய ப்ரபந்தம் - 2773 - ஏழாம் திருமொழி - முதலாம் பாசுரம் - (61)

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்