||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
தனியன் 2
பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை
(இரு விகற்ப நேரிசை வெண்பா)
மின்னார் தட மதிள் சூழ்*
வில்லிபுத்தூர் என்றொருகால்*
சொன்னார்* கழற் கமலம் சூடினோம்*
முன்னாள் கிழி அறுத்தான்* என்றுரைத்தோம்*
கீழ்மையினில் சேரும்*
வழி அறுத்தோம் நெஞ்சமே வந்து|
- மின் - மின்னுதல் - மணிகளால் ஒளி விடுதல்
- ஆர் - நிறைந்த அதிகமான
- தடம் - அகலப்பரப்பும் உயர்ந்து ஓங்குகையும் உள்ள
- மதிள் - திரு மதிளாலே
- சூழ் - வளைக்கப்பட்ட
- வில்லி புத்தூர் என்று - ஸ்ரீ வில்லி புத்தூர் என்று
- ஒரு கால் சொன்னார் - ஒரு தரம் உச்சரிதவருடைய
- கழல் கமலம் - திருவடித் தாமரைகளை
- சூடினோம் - விசேஷ புஷ்பமாக முடித்தோம்
- முன்னாள் - புருஷார்த்தம் வெளியாக காலத்தில்
- கிழி - பொருள் முடிப்பை
- அறுத்தான் என்று - அறுத்து வெளி இட்டவர் என்று
- உரைத்தோம் - சொல்லப் பெற்றோம் ஆகையால்
- கீழ்மை - நரகத்தில்
- இனி - இனிமேல்
- சேரும் - முன் போல் செல்லுகிற
- வழி - மார்க்கத்தை
- அறுத்தோம் - அறப் பண்ணினோம்
- நெஞ்சே - மனசே
- வந்து - சம்ஸார ரஹீதராய் வந்து
நெஞ்சே! மின்னலைப் போலே ஒளிவிடும் பெரிய மதிள்களால் சூழப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் திவ்யதேசத்தின் பெயரை ஒரு முறை சொன்னவர்கள் திருவடித் தாமரைகளை எங்கள் தலைக்கு ஆபரணமாகச் சூடுவோம். பெரியாழ்வார் முற்காலத்திலே மதுரை ராஜ ஸபையில் சென்று, தன்னுடைய வாதத்தினாலே பரிசாக இருந்த பொற்கிழியை அறுந்து தன் கையிலே விழச் செய்த பெரியாழ்வாரின் அற்புதச் செயலை நினைத்து, சொல்லி, அதனாலே தாழ்ந்த நிலைகளை அடைவதில் இருந்து எங்களைக் காத்துக் கொண்டோம்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment