About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 9 August 2023

லீலை கண்ணன் கதைகள் - 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

கம்சனின் பாசம் நொறுங்கியது|

ரதத்தை ஒட்டி சென்றிருந்த கம்சனுக்கு திடீரென்று வானிலிருந்து ஒரு குரல் கேட்டது: "மூடா! நீ இப்பொழுது யாரை ரதத்தில் வைத்து ஒட்டிக் கொண்டு இருக்கிறாயோ அவளுடைய எட்டாவது குழந்தை உன்னைக் கொல்லப் போகிறது" என்று அது சொன்னது. இதைக் கேட்டக் கம்சன் திடுக்கிட்டான்; நடுங்கினான். உடனேயே லகான்களைக் கீழே போட்டு விட்டு, இடதுக் கையினால் தேவகியின் கூந்தலைப் பற்றினான். அவளைக் கொல்வதற்காக வலதுக் கையினால் தன் கத்தியை உருவினான். 


என்ன ஆச்சரியம் பாருங்கள்! சில நொடிக்கு முன்பு தான் தன் அன்புத் தங்கைக்காக சாரதி வேலையைச் செய்யத் தயாராக இருந்தவன், தன் உயிருக்கு ஆபத்து என்று கேள்விப்பட்டதும், தங்கையின் மீது வைத்திருந்த பாசம் எல்லாம் மறந்து அவளைக் கொல்லத் துணிந்து விட்டான். 


அவன் தேவகியைப் பார்த்துக் கத்தினான். "கேடு கெட்டவளே நான் உன் மீது எவ்வளவு அன்பைப் பொழிந்தேன்! என்னைக் கொல்லப் போகிறவனுக்கு நீ தாயாகிறாயா? இது எப்படி நடக்கிறது என்று பார்க்கிறேன்! இதோ, நான் உன்னைக் கொல்லப் போகிறேன். அதற்குப் பிறகு நான் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை" என்று சொன்னான். தேவகியைக் காப்பற்றுவதற்காக, வசுதேவர் கம்சனைச் சாந்தப்படுத்த முயன்றார். 


"கம்சா! உன் தங்கையை அதுவும் அவளுடைய திருமண நாளன்று கொல்ல உனக்கு எப்படி மனம் துணிந்தது? உன் தங்கை மீது நீ அன்பு காட்ட வேண்டாமா? அவள் மீது இறக்கம் கொண்டு அவளை விட்டு விடு" என்று சொன்னார். ஆனால் வசுதேவரின் சொற்கள் கம்சன் விஷயத்தில் செவிடன் காதில் ஊதிய சங்காகியது. அதனால் வேறு ஒரு வழியில் அவனைத் தடுத்து நிறுத்த வசுதேவர் தீர்மானித்தார். 


அவர் சொன்னார், "இதோ பார், கம்சா! அசரீரி சொன்னதைக் கேட்டு நீ கவலைப்படத் தேவையில்லை. தேவகியைக் கண்டு பயப்படவும் தேவையில்லை. அவளுடைய மகன் உன்னைக் கொல்வான் என்று தானே நீ பயப்படுகிறாய்? அவளுக்குப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் பிறந்த உடனேயே உன்னிடம் கொண்டு வந்து கொடுத்து விடுகிறேன். இது சத்தியம்" என்றார். இதைக் கேட்டதும் கம்சனுக்குப் பெருத்த நிம்மதி ஏற்பட்டது. வசுதேவரின் வார்த்தையில் அவனுக்கு நம்பிக்கை உண்டு. அதனால் தன் தங்கையைக் கொல்லாமல் விட்டான். வசுதேவரும் கம்சனைப் பாராட்டினார். தம் மனைவியுடன் தம்முடைய இருப்பிடத்தை அடைந்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment