About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 3 March 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 118

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 88

ஸுலப⁴ஸ் ஸுவ்ரதஸ் ஸித்³த⁴ஸ் 
ஸ²த்ருஜிச் ச²த்ரு தாபந:|
ந்யக்³ ரோதோ⁴ து³ம்ப³ரோ ஸ்²வத்த²ஸ்² 
சாணூ ராந்த்⁴ர நிஷூத³ந:||

  • 823. ஸுலப⁴ஸ் - அடியவர்க்கு எளியவர். இலைகள், பூக்கள், பழங்கள் போன்றவற்றை முழு பக்தியுடன் சமர்ப்பிப்பதன் மூலம் எளிதில் அடையக் கூடியவர். எளிதில் மகிழ்ச்சி அடைகிறார்.
  • 824. ஸுவ்ரதஸ் - சரணம் என்று வந்தவரைக் கட்டாயம் காப்பேன் என்னும் நல்ல, வலுவான விரதம் உடையவர். தன்னலமற்ற பக்தர்களால் நேர்மையுடன் வழங்கப்படும் தூய்மையான உணவை மட்டுமே ஏற்றுக் கொள்பவர். தனது நர, நாராயண அவதாரத்தில் கடுமையான தவம் கடைப்பிடித்தவர். இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் கட்டுப்படுத்தி அவற்றை ஒழுங்காக வைத்திருப்பவர். பரமாத்மாவாக இருந்தாலும் தனது கிருஷ்ண அவதாரத்தில் அனைத்து விரதங்களையும் கடுமையாகக் கடைப்பிடித்தவர்.
  • 825. ஸித்³த⁴ஸ் - முயற்சியின்றியே தானாகவே அடையக் கூடியவனாக இருப்பவர். யாரையும் அல்லது வேறு எதையும் சார்ந்திருக்காமல், முழுமையாகச் சாதித்தவர். நமக்கு சாஸ்திரங்களைக் கொடுத்தவர். மங்களத்தை அளிப்பவர். தனது அனைத்து முயற்சிகளையும் குறைபாடில்லாமல் முழுமையாக நிறைவேற்றுகிறார்.   
  • 826. ஸ²த்ருஜிச் ச²த்ரு தாபநஹ - பகைவரை வென்றவர் மூலம் பகைவர்க்குத் துன்பம் தருபவர். அவர் தேவர்களின் எதிரிகளை வென்று அவர்களை துன்புறுத்துகிறார். எப்போதும் வெற்றியாளராக இருப்பார்.
  • 827. ந்யக்³ ரோதோ⁴ து³ம்ப³ரோ - தான் உயர்ந்தவனாயினும், தாழ்ந்த நிலையிலுள்ள அடியார்கட்குக் கட்டுப்படுபவர். மஹாலக்ஷ்மியுடன் கூடிய உன்னதமான, மகத்துவமான அனைத்தையும் கொண்ட பரம இருப்பிடத்தை உடையவர். ஆனால் கூப்பிய கைகளுடன் தன்னை அணுகும் பக்தர்களின் கட்டளைக்கு இணங்குபவர். ஆதிமூலமானவர், எல்லாவற்றிற்கும் மேலாக இருப்பவர். உறுதியாக வேரூன்றி, பிரபஞ்சத்தின் வடிவில் எல்லாத் திசைகளிலும் விரிந்து கிடப்பவர். அவரை வழிபடுபவர்களால் அவர்களின் இதயங்களில் விரும்பப்படுபவர்
  • 828. அஸ்²வத்த²ஸ்² - தேவர்கள் மூலமாக உலகங்களை நியமித்து ஆள்பவர். பல்வேறு செயல்பாடுகளைச் செய்வதற்கு நிலையற்ற கடவுள்களை நிறுவியவர். சம்சாரத்தின் நித்ய அஸ்வத்த மரத்தின் வேர் என்று வர்ணிக்கப்படுபவர். எப்போதும் ஒரே மாதிரியாக இல்லாத பிரபஞ்சத்தை நித்யமாக ஆள்பவர், தொடர்ந்து மாறிக் கொண்டே இருப்பார். ஐம்பெரும் கூறுகளின் வடிவில் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருப்பவர். 
  • 829. சாணூ ராந்த்⁴ர நிஷூத³நஹ - இந்திரனுக்குப் பகைவனான சாணூரன் என்னும் பெயருடைய மல்லனைக் கொன்றவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.55

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.55
 
ஸ்ரீ ப⁴க³வாநுவாச||
ப்ரஜ ஹாதி யதா³ காமாந் 
ஸர்வாந் பார்த² மநோக³ தாந்|
ஆத்மந்யே வாத்மநா துஷ்ட: 
ஸ்தி²த ப்ரஜ்ஞஸ் ததோ³ச் யதே||

  • ஸ்ரீப⁴க³வாநுவாச - ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
  • ப்ரஜ ஹாதி - துறந்து 
  • யதா³ - எப்போது 
  • காமாந் - புலனுகர்ச்சிக்கான ஆசைகள் 
  • ஸர்வாந் - எல்லாவிதமான 
  • பார்த² - பிருதாவின் மைந்தனே 
  • மநோக³ தாந் - மன கற்பனையின் 
  • ஆத்மநி - ஆத்மாவின் தூய நிலையில் 
  • ஏவ - நிச்சயமாக 
  • ஆத்மநா - தூய்மையான மனதால் 
  • துஷ்டஹ - திருப்தியடைந்து 
  • ஸ்தி²த ப்ரஜ்ஞஸ் - ஸ்திர புத்தியுடையவனென்று 
  • ததா³ - அப்போது 
  • உச்யதே - சொல்லப்படுகிறான்

ஸ்ரீ பகவான் கூறுகிறார்: அர்ஜுநா! எப்போது ஒருவன் மன கற்பனையின் எல்லாவிதமான புலனுகர்ச்சிக்கான ஆசைகளைத் துறந்து, தூய்மையான மனதால், ஆத்மாவின் தூய நிலையில், திவ்யமாக நிலைபெறுகிறானோ, திருப்தியடைகிறானோ, அப்போது ஸ்திர புத்தியுடையவன் என்று சொல்லப்படுகிறான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.8

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.8

ஸ கோ³தோ³ஹந மாத்ரம் ஹி 
க்³ருஹேஷு க்³ருஹ மேதி⁴ நாம்|
அவேக்ஷதே மஹா பா⁴க³ஸ்
தீர்தீ² குர்வம்ஸ் ததா³ ஸ்²ரமம்||

  • மஹா பா⁴க³ஸ் - மஹா பாக்கியவானான
  • ஸ - அந்த சுகர்
  • க்³ருஹ மேதி⁴ நாம் - இல்லத்தில் உள்ளவர்களுடைய
  • க்³ருஹேஷு - வீடுகளில்
  • ததா³ ஸ்²ரமம் - அவர்களது ஆசிரமத்தை
  • தீர்தீ² குர்வம்ஸ் - புனிதமாக செய்பவராய்
  • கோ³தோ³ ஹந மாத்ரம் -  எவ்வளவு நேரத்தில் பசு கறக்கப்படுமோ அவ்வளவு நேரம் மட்டுமே
  • அவேக்ஷதே ஹி - எதிர்பார்ப்பார் அல்லவா?

மகாபாகவதராகிய ஸ்ரீ ஸுகர் பிக்ஷைக்காகச் செல்லும் போது கூட, இல் வாழ்வார் வீட்டு வாயிலில், அவர்கள் வீட்டைப் புனிதமாக்கும் 'கோ தோஹன காலம்' வரையில் தான் காத்திருப்பார்.

'கோ தோஹன காலம்' என்பது பால் கறக்கும் போது, பசுவின் மடிக் காம்பிலிருந்து பாத்திரத்தினுள் பால் விழுவதற்கு உண்டாகும் நேரம். அதாவது, சுமாராக ஐந்து நிமிடம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.53

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.53

ஜஹார பா⁴ர்யாம் ராமஸ்ய 
க்³ருத்⁴ரம் ஹத்வா ஜடாயுஷம்|
க்³ருத்⁴ரம் ச நிஹதம் த்³ருஷ்ட்வா 
ஹ்ருதாம் ஸ்²ருத்வா ச மைதி²லீம்||

  • ஜடாயுஷம் - ஜடாயு என்கிற 
  • க்³ருத்⁴ரம் - கழுகை 
  • ஹத்வா - மிக்க காயப்படுத்தி 
  • ராமஸ்ய - ஸ்ரீ ராமருடைய 
  • பா⁴ர்யாம் - மனைவியை 
  • ஜஹார - தூக்கிக் கொண்டு போய் விட்டான் 
  • மைதி²லீம் - மைதிலியை 
  • ஹ்ருதாம் - அபஹரிக்கப்பட்டவளாக 
  • ஸ்²ருத்வா - அறிந்து 
  • ச - அதுவும் தவிர 
  • நிஹதம் - அடிக்கப்பட்ட 
  • க்³ருத்⁴ரம் ச - கழுகையும் 
  • த்³ருஷ்ட்வா - பார்த்து

ராமனின் மனைவி சீதை, ராவணனால் அபகரிக்கப்பட்டாள்; ஜடாயு என்கிற கழுகையும் மிக்கக் காயப்படுத்தி கொன்றான். வீழ்ந்து கிடக்கும் ஜடாயுவைக் கண்ட ராமன், சீதை அபகரிக்கப்பட்டதைக் கேட்டு,

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - பெரியாழ்வார் திருமொழி - 1.8 அறிமுகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - எட்டாம் திருமொழி – 11 பாசுரங்கள்

அச்சோப் பருவம்

அணைத்துக் கொள்ள அழைத்தல்: 

கலித்தாழிசை

பகவான் பக்தி சபலன். பக்தியுள்ளவர்கள் அழைத்தவுடன் எதிரில் வந்து நிற்பான். பெரியாழ்வார் அழைத்தால் எதிரில் வந்து நிற்பான். நச்சுவார் முன் நிற்கும் நாராயணன் அவன். 


யசோதைக்குக் கண்ணன் மீது அன்பு மிகுதி. குழந்தை தாயைக் கண்டவுடன் ஓடிவந்து அவளை அணைத்துக் கொள்ளும். குழந்தை கண்ணனும் அவ்வாறே வந்து தன்னை அணைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறாள் யசோதை!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 028 - திருக்காழி சீராம விண்ணகரம் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

028. திருக்காழி சீராம விண்ணகரம் (சீர்காழி)
இருபத்தி எட்டாவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் – 10

001. திவ்ய ப்ரபந்தம் - 1178 - பக்தர்களே! சீர்காழிப் பதி சேருங்கள்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - நான்காம் திருமொழி - முதலாம் பாசுரம்
ஒரு குறள் ஆய் இரு நிலம் மூவடி மண் வேண்டி* 
உலகு அனைத்தும் ஈர் அடியால் ஒடுக்கி ஒன்றும்*
தருக எனா மாவலியைச் சிறையில் வைத்த* 
தாடாளன் தாள் அணைவீர் தக்க கீர்த்தி*
அரு மறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும்* 
அங்கங்கள் அவை ஆறும் இசைகள் ஏழும்*
தெருவில் மலி விழா வளமும் சிறக்கும்* 
காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1179 - திருமால் திருவடி அணைவீர்! காழி நகர் சேருங்கள்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - நான்காம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
நான்முகன் நாள் மிகைத் தருக்கை இருக்கு வாய்மை* 
நலம் மிகு சீர் உரோமசனால் நவிற்றி நக்கன்*
ஊன்முகம் ஆர் தலை ஓட்டு ஊண் ஒழித்த எந்தை* 
ஒளி மலர்ச் சேவடி அணைவீர் உழு சே ஓடச்*
சூல் முகம் ஆர் வளை அளைவாய் உகுத்த முத்தைத்* 
தொல் குருகு சினை என்னச் சூழ்ந்து இயங்க எங்கும்*
தேன் முகம் ஆர் கமல வயல் சேல் பாய்* 
காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1180 - வாணாசுரனின் தோள்களை அறுத்தவன் இடம் காழி
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - நான்காம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
வை அணைந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்று ஆய்* 
மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து*
நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள்* 
நேர்த்தவன் தாள் அணைகிற்பீர் நெய்தலோடு*
மை அணைந்த குவளைகள் தம் கண்கள் என்றும்* 
மலர்க் குமுதம் வாய் என்றும் கடைசிமார்கள்*
செய் அணைந்து களை களையாது ஏறும்* 
காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1181 - ஏழு எருதுகளை அடக்கியவனின் காழி சேர்மின்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம்
பஞ்சிய மெல் அடிப் பின்னைதிறத்து முன் நாள்* 
பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னன் பைம் பூண்*
நெஞ்சு இடந்து குருதி உக உகிர் வேல் ஆண்ட* 
நின்மலன் தாள் அணைகிற்பீர் நீலம் மாலைத்*
தஞ்சு உடைய இருள் தழைப்ப தரளம் ஆங்கே* 
தண் மதியின் நிலாக் காட்ட பவளம் தன்னால்*
செஞ் சுடர் வெயில் விரிக்கும் அழகு ஆர்* 
காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1182 - பரசுராமனாக அவதரித்தவனின் காழி சேர்க
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - நான்காம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
தெவ் ஆய மற மன்னர் குருதி கொண்டு* 
திருக் குலத்தில் இறந்தோர்க்குத் திருத்தி செய்து*
வெவ் வாய மா கீண்டு வேழம் அட்ட* 
விண்ணவர் கோன் தாள் அணைவீர் விகிர்த மாதர்*
அவ் ஆய வாள் நெடுங் கண் குவளை காட்ட* 
அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல்*
செவ் வாயின் திரள் காட்டும் வயல் சூழ்* 
காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1183 - இராமபிரானுக்குரிய காழி சேருங்கள்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - நான்காம் திருமொழி - ஆறாம் பாசுரம்
பைங் கண் விறல் செம் முகத்து வாலி மாளப்* 
படர் வனத்துக் கவந்தனொடும் படை ஆர் திண் கை*
வெம் கண் விறல் விராதன் உக வில் குனித்த* 
விண்ணவர் கோன் தாள் அணைவீர் வெற்புப்போலும்*
துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும்* 
துடி இடையார் முகக் கமலச் சோதி தன்னால்*
திங்கள் முகம் பனி படைக்கும் அழகு ஆர்* 
காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1184 - சேர்தற்குரிய இடம் காழியே
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - நான்காம் திருமொழி - ஏழாம் பாசுரம்
பொரு இல் வலம் புரி அரக்கன் முடிகள் பத்தும்* 
புற்று மறிந்தன போலப் புவிமேல் சிந்த*
செருவில் வலம் புரி சிலைக் கை மலைத் தோள் வேந்தன்* 
திருவடி சேர்ந்து உய்கிற்பீர் திரை நீர்த் தெள்கி*
மருவி வலம்புரி கைதைக் கழி ஊடு ஆடி* 
வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி*
தெருவில் வலம்புரி தரளம் ஈனும்* 
காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1185 - வளம் நிறைந்த காழி சேர்க
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - நான்காம் திருமொழி - எட்டாம் பாசுரம்
பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவளச் செவ் வாய்* 
பணை நெடுந் தோள் பிணை நெடுங் கண் பால் ஆம் இன்சொல்*
மட்டு அவிழும் குழலிக்கா வானோர் காவில்* 
மரம் கொணர்ந்தான் அடி அணைவீர் அணில்கள் தாவ*
நெட்டு இலைய கருங் கமுகின் செங் காய் வீழ* 
நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு பீனத்*
தெட்ட பழம் சிதைந்து மதுச் சொரியும்* 
காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1186 - இலக்குமியை மார்பில் கொண்டவனது காழி சேர்மின்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - நான்காம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
பிறை தங்கு சடையானை வலத்தே வைத்துப்* 
பிரமனைத் தன் உந்தியிலே தோற்றுவித்து*
கறை தங்கு வேல் தடங் கண் திருவை மார்பில்* 
கலந்தவன் தாள் அணைகிற்பீர் கழுநீர் கூடித்*
துறை தங்கு கமலத்துத் துயின்று கைதைத்* 
தோடு ஆரும் பொதி சோற்றுச் சுண்ணம் நண்ணி*
சிறை வண்டு களி பாடும் வயல் சூழ்* 
காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1187 - இவற்றைப் படிப்போர் உலகத் தலைவர் ஆவர்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - நான்காம் திருமொழி - பத்தாம் பாசுரம்
செங் கமலத்து அயன் அனைய மறையோர் காழிச்* 
சீராம விண்ணகர் என் செங் கண் மாலை*
அம் கமலத் தட வயல் சூழ் ஆலி நாடன்* 
அருள் மாரி அரட்டு அமுக்கி அடையார் சீயம்*
கொங்கு மலர்க் குழலியர் வேள் மங்கை வேந்தன்* 
கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன*
சங்க முகத் தமிழ் மாலை பத்தும் வல்லார்* 
தடங் கடல் சூழ் உலகுக்குத் தலைவர் தாமே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 62

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 7

ஸ்கந்தம் 03

மைத்ரேயர் தொடர்ந்து கூறலானார். ப்ரும்மா தனக்கு ஆதாரமான பரம்பொருளைத் தியானத்தில் கண்டு தன் மனத்திற்கும் வாக்கிற்கும் எட்டியவாறு பலவாறு துதித்துக் களைப்படைந்து ஓய்ந்தார். அப்போது மானஸீகமாகவே பகவான் அவருடன் பேசினார்.


"ப்ரும்ம தேவரே! நீர் வேதத்தை உம்முள் கொண்டிருக்கிறீர். நீர் மனந்தளர்ந்து சோர்வடையலாகாது. நீர் என்னிடம் வேண்டப் போவதை நான் முன்னமேயே தயார் செய்து விட்டேன். நீங்கள் மறுபடி தவம் செய்யுங்கள். பக்தி செய்யுங்கள். தாங்கள் படைக்கப்போகும் அனைத்தையும் உங்கள் இதயத்திலேயே தெளிவாய்க் காண்பீர்கள். அப்போது ஒருமுகப்பட்ட மனத்தில் ப்ரபஞ்சம் முழுதும் நான் வியாபித்திருப்பதையும், என்னுள் அடங்கிய முழு ப்ரபஞ்சத்தையும் காண்பீர்கள். பக்தி செய்யும் உங்களை ரஜோ குணம் பாதிக்காது.

உங்களுக்கு என்னைப் பற்றி பூரண அறிவு இருக்கிறது. நீர் ஸகுணனாக என்னைக் கண்ட பின்னும் நிர்குணனாக அறிந்து துதித்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் துதித்த இந்தத் துதியினால் என்னைத் துதிப்பவர்க்கு வேண்டியதெல்லாம் அளிப்பேன். மக்கள் அனுஷ்டிக்கும் பூர்த்த தர்மம் (குளம் வெட்டுதல் போன்ற), தவம், வேள்விகள், தானங்கள், யோக ஸாதனைகள், ஸமாதி, தியானம் முதலியவற்றால் பெறும் நன்மைகள் எவையோ அவை எனது மகிழ்ச்சியால் தான். அவற்றின் உண்மையான பலன் நான் மகிழ்வதே. நீர் எனது ஆத்மா. என்னை மூலகாரணமாக உடையவர். எனவே, யாருடைய உதவியும் இன்றி, அனைத்து லோகங்களையும், ஜீவராசிகளையும், முந்தைய கல்பத்தில் இருந்தபடியே உங்களிடமிருந்தே படைக்கத் துவங்குவீர்."

பின்னர் பகவான் ப்ரும்மாவின் ஹ்ருதய கமலத்தினின்றும் மறைந்தார்.

இப்போது விதுரர் இடை மறித்தார். "ப்ரும்மா தன் உடலிலிருந்தும் மனத்திலிருந்தும் எவ்விதமான படைப்புகளைச் செய்தார்?" மைத்ரேயர் அவரது ஆர்வத்தைக் கண்டு புன்முறுவல் பூத்துக் கொண்டே கூறத் துவங்கினார்.

பகவான் கூறியபடி ப்ரும்மா மனத்தை நாராயணனிடம் ஒருமுகப்படுத்தி நூறு தேவ வருஷங்கள் தவமியற்றினார். ஊழிக் காற்றினால் அவர் வீற்றிருக்கும் தாமரை மலரும், ப்ரளய ஜலமும் வெகு வேகமாக அசைந்தன. தனது தவத்தால் தன் சக்தியும், ஞானமும் பெருகுவதை உணர்ந்து அந்தத் திறனால் ஊழிக் காலக் காற்றை ஊழி நீருடன் விழுங்கினார். அவர் அமர்ந்திருந்த தாமரை மலர் ஆகாயம் முழுதும் பரவி நின்றது. அதைக் கொண்டே அத்தனை லோகங்களையும் முன் கல்பத்தில் இருந்த படியே படைக்க விழைந்தார். தாமரையின் உட்பகுதிக்குள் நுழைந்து அதை பூ:, புவ:, ஸ்வ: என்ற மூன்று லோகங்களாகப் பிரித்தார்.

அத்தாமரையோ பதினான்கு லோகங்களையும், அதற்கு மேலும் படைக்கலாம் போல் பெரிதாக இருந்தது. பூ:, புவ:, ஸ்வ: ஆகிய மூன்று உலகங்களும் கர்மாக்களை அனுபவிக்கும் இடங்களாகும். ப்ரும்ம தேவரும் ஜீவராசிகளில் ஒருவரே. அவருடைய லோகத்திற்குப் படைப்பு இல்லையா என்ற கேள்வி எழலாம்.

ப்ருமா பயனை எதிர் நோக்கா அறங்களின் முழுப் பயனாவார். மேற்சொன்ன மூன்று லோகங்களுக்கும் ஒவ்வொரு கல்பத்தின் முடிவிலும் தோற்றமும் அழிவும் உண்டு. மஹர் லோகம், ஜன லோகம், தபோ லோகம், ஆகியவை நிஷ்காம கர்மங்களின் பயனை அனுபவிக்கும் இடங்கள்.

அங்குள்ளவர்களுக்கு ப்ரும்மாவின் இரண்டு பரார்த்தங்களும் முடியும் வரை அழிவில்லை. இரண்டு பரார்த்தங்கள் முடியும் போது ப்ரும்மாவுடன் சேர்ந்து இந்த லோகங்களில் உள்ளவர்களுக்கும் மோக்ஷம் தான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்