||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா:
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம்
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||
ஸ்லோகம் - 1.2.23
ஸத்த்வம் ரஜஸ் தம இதி ப்ரக்ருதேர் கு³ணாஸ்தைர்
யுக்த: பர: புருஷ ஏக இஹாஸ்ய தத்தே|
ஸ்தி²த் யாத³யே ஹரி விரிஞ்சி ஹரேதி ஸம்ஜ்ஞா:
ஸ்²ரேயாம்ஸி தத்ர க²லு ஸத்த்வ தநோர் ந்ருணாம் ஸ்யு:
- ஸத்த்வம் - நற்குணம்
- ரஜஸ் - தீவிர குணம்
- தம - அறியாமை இருள்
- இதி - என்று சொல்லக்கூடிய
- ப்ரக்ருதேர் - ஜட இயற்கையின்
- கு³ணாஸ் - குணங்கள்
- தைர் - அவற்றால்
- யுக்தஃ - தொடர்புகொண்டு
- பரஃ - உன்னதமான
- புருஷ - புருஷர்
- ஏக - ஒருவரே
- இஹாஸ்ய - இந்த உலகத்தினுடைய
- தத்தே - ஏற்கிறார்
- ஸ்தி²த் யாத³யே - படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் முதலான செயல்களுக்காக
- ஹரி - பரம புருஷ பகவானாகிய விஷ்ணு
- விரிஞ்சி - பிரம்மா
- ஹரே - சிவபெருமான்
- இதி - இவ்வாறாக
- ஸம்ஞாஹா - வேறுபட்ட அம்சங்களை
- ஸ்²ரேயாம்ஸி - முடிவான நன்மை
- தத்ர - அவைகளில்
- க²லு - மத்தியில்
- ஸத்த்வ - ஸத்வ குண ரூபியான
- தநோர் - வாசுதேவனாலேயே (உருவம்)
- நிரணாம் - இந்த உலகில் மக்களுக்கு
- ஸ்யுஹு - ஏற்படுகின்றன
ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களும் பிரகிருதியான மாயையின் குணங்கள். இம்முக்குணங்களையும் ஏற்று பரம்பொருளான பகவான் ஒரவரே, இவ்வுலகின் ஆக்கல், அளித்தல், அழித்தல், ஆகியவற்றின் பொருட்டு, பிரும்மா, விஷ்ணு, சிவன் என்ற பெயர் பெயர்களையும் ஏற்கிறார். அந்த மூவருள் சத்துவ மூர்த்தியாகிய பகவான் வாசூதேவானால்தான் இவ்வுலக மக்களுக்கு நன்மைகள் உண்டாகின்றன.
ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment