About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 27 August 2023

லீலை கண்ணன் கதைகள் - 29

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

பிரம்மன் கிருஷ்ணனைச் சோதிக்கிறார்l

படைப்புக் கடவுளான பிரம்மன், பிருந்தாவனத்தின் அதிசியச் சிறுவனான கண்ணனைப்பற்றி நிறையக் கேள்விபட்டிருந்தார். கிருஷ்ணனிடம் ஒரு வேடிக்கை செய்து, அவனுடைய சக்திகளைக் கண்டறிய வேண்டும் என்று நினைத்தார். அதனால் கன்றுகளை அவர் மறைத்துவைத்துவிட்டார்.! கிருஷ்ணன் எங்கெல்லாமோ தேடித் பார்த்தான். கன்றுகள் அகப்படவில்லை. அதனால் அவன் ஏமாற்றத்துடன் தன் நண்பர்களைத் தேடிக்கொண்டு திரும்பி வந்தான். ஆனால் என்ன ஆச்சரியம்! அங்கே நண்பர்களையும் காணவில்லை!


பிறகு தன் நண்பர்களை எங்கெல்லாமோ தேடினான். நண்பர்களையும் காணோம், கன்றுகளையும் காணோம்! பிறகு யோசனை செய்து பார்த்து, இவ்விதம் யாரோ சூது செய்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். கண்களை மூடிச் சற்று நேரம் தியானம் செய்தான். உண்மையில் அவன் கடவுள் அல்லவா! ஒரு நொடியில் அவனுக்கு எல்லாம் விளங்கி விட்டது. கிருஷ்ணன் புன்னகை பூத்து, "ஓ! இது பிரம்மனின் வேலையா? 


அவருக்கு மேல் எனக்கும் விளையாட தெரியும்" என்று சொல்லி கொண்டான். உடனேயே அவன் அந்த கன்றுகளையும் சிறுவர்களையும் சிருஷ்டித்தான். அதாவது, தானே அந்தக் கன்றுகளாகவும், சிறுவர்களாகவும் ஆனான். பிரம்மன் சிருஷ்டித்த அந்தச் சிறுவர்களுக்கும் கன்றுகளுக்கும் கிருஷ்ணன் இப்பொழுது சிருஷ்டித்த சிறுவர்களுக்கும் கன்றுகளுக்கும் ஒரு வித்தியாசமும் இருக்கவில்லை.


இது பெரிய வேடிக்கையாகத்தான் இருந்தது. கிருஷ்ணனே கன்றுகள், கிருஷ்ணனே அந்த கன்றுகளை மேய்க்கும் சிறுவர்கள், கிருஷ்ணனே அவர்கள் வைத்துகொண்டிருந்த விளையாட்டு பொருட்கள் எல்லாம் பல உருவங்களைக் கொண்ட கிருஷ்ணன் பிருந்தாவனத்தை அடைந்தான். தண்டைகளின் ஒலியும், புல்லாங்குழல்களின் ஒலியும் கேட்டதுமே, தாய்மார்கள் தங்கள் குழந்தைகளைப் பார்க்க வெளியே ஓடிவந்தார்கள். அந்தச் சிறுவர்கள் தாங்கள் ஈன்றெடுத்த பிள்ளைகள் அல்லர் என்பதை அவர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த சிறுவர்களுக்கு அன்னமூட்டுவதிலும், அவர்களுடன் கொஞ்சிவிளையாடுவதிலும் இவர்கள் முன்பைவிட அதிக மகிழ்ச்சியடைந்தார்கள். பகவானுக்கே அவர்கள் அன்னமூட்டினார்கள், பகவானுடனேயே அவர்கள் கொஞ்சி விளையாடினார்கள் என்பதை அவர்கள் எப்படி அறிவார்கள்! இப்படி ஒரு வருடம் கழிந்தது.. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment