||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தையின் அத்யாயம் சிறிய விளக்கம் 2
பத்தாவது அத்யாயம் - விபூதி யோகம்
அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது. இயற்கையில் உள்ள இறைவனின் அவதாரங்களை பற்றி விவரிப்பது.
பதினொன்றாவது அத்யாயம் - விஷ்வரூப தர்ஷந யோகம்
ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்வது. அர்ஜுனன் கண்ணால் பார்த்த முதலும் முடிவும் இல்லா இறைவனின் தோற்றத்தை விவரிப்பது.
பன்னிரண்டாவது அத்யாயம் - பக்தி யோகம்
துன்பம், விருப்பு-வெறுப்பு, ஏழை - பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது. இறைவனிடம் பக்தி செலுத்தும் முறைகளையும், இறைவனுக்குப் பிரியமானவர்களை பற்றி விவரிப்பது.
பதின்மூன்றாவது அத்யாயம் - க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம்
எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல். இயற்கையின் அங்கங்கள் அதன் தன்மைகள் இயக்கத்தின் கர்த்தா பற்றி விளக்குவது
பதினான்காவது அத்யாயம் - குணத்ரய விபாக யோகம்
பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே. சத்வ ரஜோ தமஸ் மூன்று குணங்களை பற்றி விளக்குவது.
பதினைந்தாவது அத்யாயம் - புருஷோத்தம யோகம்
தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக் கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது. பரமாத்மா ஜீவாத்மா பற்றி விளக்குவது.
பதினாறாவது அத்யாயம் - தைவாஸுர ஸம்பத் விபாக யோகம்
இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது. அசுர குணங்களை பற்றி விளக்குவது.
பதினேழாவது அத்யாயம் - ஷ்ரத்தாத்ரய விபாக யோகம்
சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது. மூன்று குணங்களால் மாறும் ஈடுப்பாட்டை விளக்குவது.
பதினெட்டாவது அத்யாயம் - மோட்ச சன்யாஸ யோகம்
யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது. மூன்று குணங்களால் மாறும் அறிவு, செயல், செய்பவன், புத்தி, சுகம் பற்றி விவரிப்பது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment