||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 66
ஸ்வக்ஷ: ஸ்வங்க³: ஸ²தா நந்தோ³
நந்தி³ர் ஜ்யோதிர் க³ணேஸ்²வர:|
விஜிதாத்மா விதே⁴யாத்மா
ஸத் கீர்த்திஸ்² சி²ந்ந ஸம்ஸ²ய:||
- 621. ஸ்வக்ஷஸ் - தாமரை போன்ற அழகிய கண்களை உடையவர். கருணையுள்ள இருண்ட அகன்ற கண்களை உடையவர்.
- 622. ஸ்வங்க³ஸ்² - மங்களமான திருமேனியை உடையவர். அழகான உறுப்புகளையும், வசீகரிக்கும் வான உடலையும் உடையவர்.
- 623. ஸ²தா நந்தோ³ - எப்பொழுதும் அளவற்ற ஆனந்தம் உடையவர். எல்லையற்ற பேரின்பத்தின் ஆதாரம்.
- 624. நந்தி³ர் - ஆனந்திப்பவர். நித்ய மகிழ்ச்சியில் இருக்கிறார்.
- 625. ஜ்யோதிர் க³ணேஸ்²வரஹ - சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் போன்ற ஒளி நிறைந்தவர்களும், குற்றமற்றவர்களும் ஆகிய நித்ய சூரிகளுக்குத் தலைவர்.
- 626. விஜிதாத்மா - பக்தர்களால் வெல்லப்பட்ட ஆத்ம வடிவினன்.
- 627. விதே⁴யாத்மா - பக்தர்களுக்குக் கட்டுப்பட்டவர். பக்தர்களுக்கு அடிபணியும் இயல்புடையவர். பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்ற மனமுவந்து அடிபணிகிறார்.
- 628. ஸத் கீர்த்திஸ்² - நிகரில் புகழாளன். உயர்ந்தவர்.
- 629. சி²ந்ந ஸம் ஸ²யஹ - ஐயத்துக்கு இடமின்றி அணுகுதற்கு எளியவர். எல்லா சந்தேகங்களையும் நீக்குபவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment