||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
பிரம்மாவும் சிவனும் தேவகியின் முன் தோன்றுதல்|
எப்போதும் குழந்தையின் நினைப்பாகவே இருந்த கம்சன் பார்க்கும் எல்லாம் குழந்தை என்று நினைத்து பெரும் அச்சத்துடன் இருந்தான்.
கம்சன் விஷயம் இப்படி இருக்க, இங்கே தேவகி இருந்த சிறையில் ஒரு நாள் பிரம்மா, சிவன், நாரதர், வியாசர் முதலானோர் தேவகிக்கு முன்னால் தோன்றி, கூப்பிய கைகளுடன் குழந்தைக் கிருஷ்ணனாகப் பிறக்கப் போகும் ஸ்ரீமந்நாராயணனைத் துதி செய்யத் தொடங்கினார்கள்.
"பகவானே! எங்களையும் இந்த உலகத்தையும் காப்பாற்றுவதற்காகத் தாங்கள் இதற்கு முன்பு மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன் , இராமன் என்று பல அவதாரங்கள் எடுத்தீர்கள். இப்பொழுதும் நாங்களும் உலகமும் படும் துன்பத்திலிருந்து எங்களைக் காப்பற்றியருள வேண்டும். தங்களை நாங்கள் வணங்குகிறோம்" என்று பகவானைத் துதித்தார்கள்.
பிறகு அவர்கள் தேவகியைப் பார்த்து "தாயே! நம் எல்லோருடைய நல்ல அதிர்ஷ்டம், பகவானே உன்னுடைய கருவில் தோன்றியுள்ளார். ஆகவே நீ கம்சனைக் கண்டு இனிப் பயப்படத் தேவையில்லை. உலக இரட்சகரான அவரால் கம்சன் நிச்சயமாகக் கொல்லப் படுவான்" என்று தேவகியைச் சமாதானப்படுத்திவிட்டு எல்லா தேவர்களும் தங்கள் இருப்பிடம் திரும்பினார்கள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment