About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 11 August 2023

108 திவ்ய தேசங்கள் - 001 - திருவரங்கம் 9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

001. திருவரங்கம் 
ஸ்ரீரங்கம் - திருச்சி 
முதலாவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 249 - 5

குலசேகராழ்வார்

069. திவ்ய ப்ரபந்தம் - 668 - அரங்கனிடமே மயங்குகிறேன்
பெருமாள் திருமொழி - மூன்றாம் திருமொழி - முதலாம் பாசுரம்
மெய் இல் வாழ்க்கையை* மெய் எனக் கொள்ளும்* 
இவ் வையம் தன்னொடும்* கூடுவது இல்லை யான்*
ஐயனே* அரங்கா என்று அழைக்கின்றேன்*
மையல் கொண்டொழிந்தேன்* என் தன் மாலுக்கே| (2)

070. திவ்ய ப்ரபந்தம் - 669 - மாலிடம் மால் கொண்டேன்
பெருமாள் திருமொழி - மூன்றாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
நூலின் நேர் இடையார்* திறத்தே நிற்கும்* 
ஞாலம் தன்னொடும்* கூடுவது இல்லை யான்*
ஆலியா அழையா* அரங்கா என்று* 
மால் எழுந்தொழிந்தேன்* என் தன் மாலுக்கே|

071. திவ்ய ப்ரபந்தம் - 670 -  நான் அரங்கனின் பித்தன்
பெருமாள் திருமொழி - மூன்றாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
மாரனார்* வரி வெஞ் சிலைக்கு ஆட்செய்யும்* 
பாரினாரொடும்* கூடுவது இல்லை யான்*
ஆர மார்வன்* அரங்கன் அனந்தன்* 
நல் நாரணன்* நரகாந்தகன் பித்தனே|

072. திவ்ய ப்ரபந்தம் - 671 - நான் அரங்கனின் பக்தன்
பெருமாள் திருமொழி - மூன்றாம் திருமொழி - நான்காம் பாசுரம்
உண்டியே உடையே* உகந்து ஓடும்,* 
இம் மண்டலத்தொடும்* கூடுவது இல்லை யான்*
அண்டவாணன்* அரங்கன் வன் பேய் முலை*
உண்ட வாயன் தன்* உன்மத்தன் காண்மினே|

073. திவ்ய ப்ரபந்தம் - 672 - தாமரைப் பேதை மணாளனின் பித்தன்
பெருமாள் திருமொழி - மூன்றாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
தீதில் நன்னெறி நிற்க* அல்லாது செய்*
நீதியாரொடும்* கூடுவது இல்லை யான்*
ஆதி ஆயன்* அரங்கன் அந் தாமரைப்* 
பேதை மா மணவாளன்* தன் பித்தனே|

074. திவ்ய ப்ரபந்தம் - 673 - எம்பிரானுக்கே எழுமையும் பித்தன்
பெருமாள் திருமொழி - மூன்றாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
எம் பரத்தர்* அல்லாரொடும் கூடலன்*
உம்பர் வாழ்வை* ஒன்றாகக் கருதலன்*
தம்பிரான் அமரர்க்கு* அரங்க நகர்*
எம்பிரானுக்கு* எழுமையும் பித்தனே|

075. திவ்ய ப்ரபந்தம் - 674 - அத்தனே அரங்கா என்கின்றேன்
பெருமாள் திருமொழி - மூன்றாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
எத் திறத்திலும்* யாரொடும் கூடும்* 
அச்சித்தந் தன்னைத்* தவிர்த்தனன் செங்கண் மால்*
அத்தனே* அரங்கா என்று அழைக்கின்றேன்*
பித்தனாய் ஒழிந்தேன்* எம்பிரானுக்கே|

076. திவ்ய ப்ரபந்தம் - 675 - பேயரே எனக்கு யாவரும்
பெருமாள் திருமொழி - மூன்றாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
பேயரே* எனக்கு யாவரும்* 
யானும் ஓர் பேயனே* எவர்க்கும் இது பேசி என்*
ஆயனே!* அரங்கா என்று அழைக்கின்றேன்*
பேயனாய் ஒழிந்தேன்* எம்பிரானுக்கே|

077. திவ்ய ப்ரபந்தம் - 676 - அரங்கனின் பக்தர்க்குத் துன்பம் இல்லை
பெருமாள் திருமொழி - மூன்றாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
அங்கை ஆழி* அரங்கன் அடியிணை*
தங்கு சிந்தைத்* தனிப் பெரும் பித்தனாய்க்*
கொங்கர்கோன்* குலசேகரன் சொன்ன சொல்*
இங்கு வல்லவர்க்கு* ஏதம் ஒன்று இல்லையே| (2)

078. திவ்ய ப்ரபந்தம் - 728 - யாவரையும் படைத்தவனே! தாலேலோ
பெருமாள் திருமொழி - எட்டாம் திருமொழி - பத்தாம் பாசுரம் 
தேவரையும் அசுரரையும்* திசைகளையும் படைத்தவனே* 
யாவரும் வந்து அடி வணங்க* அரங்கநகர்த் துயின்றவனே* 
காவிரி நல் நதி பாயும்* கணபுரத்து என் கருமணியே* 
ஏ வரி வெஞ்சிலை வலவா* இராகவனே தாலேலோ| (2)

திருமழிசை ஆழ்வார் 

079. திவ்ய ப்ரபந்தம் - 772 - கடல் கடைந்த போது அசுரர்கள் என் செய்தனர்?
திருச்சந்த விருத்தம் - மூன்றாம் திருமொழி - முதலாம் பாசுரம் (21)
அரங்கனே! தரங்க நீர்* கலங்க அன்று குன்று சூழ்* 
மரங்கள் தேய மாநிலம் குலுங்க* மாசுணம் சுலாய்*
நெருங்க நீ கடைந்த போது* நின்ற சூரர் என் செய்தார்?* 
குரங்கை ஆள் உகந்த எந்தை!* கூறு தேற வேறு இதே|

080. திவ்ய ப்ரபந்தம் - 800 - நாதனின் ஊர் அரங்கம்
திருச்சந்த விருத்தம் - ஐந்தாம் திருமொழி - முதலாம் பாசுரம் (49)
கொண்டை கொண்ட கோதை மீது* தேன் உலாவு கூனி கூன்* 
உண்டை கொண்டு அரங்க ஓட்டி* உள் மகிழ்ந்த நாதன் ஊர்*
நண்டை உண்டு நாரை பேர* வாளை பாய நீலமே* 
அண்டை கொண்டு கெண்டை மேயும்* அந்தண் நீர் அரங்கமே|

081. திவ்ய ப்ரபந்தம் - 801 - வில் வீரரின் ஊர் அரங்கம்
திருச்சந்த விருத்தம் - ஐந்தாம் திருமொழி - இரண்டாம் பாசுரம் (50)
வெண் திரைக் கரும் கடல்* சிவந்து வேவ முன் ஒர் நாள்* 
திண் திறல் சிலைக் கை வாளி* விட்ட வீரர் சேரும் ஊர்*
எண் திசைக் கணங்களும்* இறைஞ்சி ஆடு தீர்த்த நீர்* 
வண்டு இரைத்த சோலை வேலி* மன்னு சீர் அரங்கமே|

082. திவ்ய ப்ரபந்தம் - 802 - பிரமன் பணிந்த கோயில் அரங்கம்
திருச்சந்த விருத்தம் - ஆறாம் திருமொழி - முதலாம் பாசுரம் (51)
சரங்களைத் துரந்து* வில் வளைத்து இலங்கை மன்னவன்* 
சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த* செல்வர் மன்னு பொன் இடம்*
பரந்து பொன் நிரந்து நுந்தி* வந்து அலைக்கும் வார் புனல்* 
அரங்கம் என்பர் நான்முகத்து அயன் பணிந்த* கோயிலே|

083. திவ்ய ப்ரபந்தம் - 803 - பற்றற்றவர்கள் சூழ்ந்து வாழும் ஊர் அரங்கம்
திருச்சந்த விருத்தம் - ஆறாம் திருமொழி - இரண்டாம் பாசுரம் (52)
பொற்றை உற்ற முற்றல் யானை* போர் எதிர்ந்து வந்ததைப்* 
பற்றி உற்று மற்ற தன்* மருப்பு ஒசித்த பாகன் ஊர்*
சிற்றெயிற்று முற்றல் மூங்கில்* மூன்று தண்டர் ஒன்றினர்* 
அற்றபற்றர் சுற்றி வாழும்* அந்தண் நீர் அரங்கமே|

084. திவ்ய ப்ரபந்தம் - 804 - வாணனைக் கொன்றவன் ஊர் அரங்கம்
திருச்சந்த விருத்தம் - ஆறாம் திருமொழி - மூன்றாம் பாசுரம் (53)
மோடியோடு இலச்சையாய* சாபம் எய்தி முக்கணான்* 
கூடுசேனை மக்களோடு* கொண்டு மண்டி வெஞ்சமத்து ஓட* 
வாணன் ஆயிரம்* கரங்கழித்த ஆதிமால்* 
பீடு கோயில் கூடுநீர்* அரங்கம் என்ற பேரதே|

085. திவ்ய ப்ரபந்தம் - 805 - இலங்கையை அழித்தவன் தங்கும் ஊர் அரங்கம்
திருச்சந்த விருத்தம் - ஆறாம் திருமொழி - நான்காம் பாசுரம் (54)
இலைத் தலைச் சரம் துரந்து* இலங்கை கட்டழித்தவன்* 
மலைத் தலைப் பிறந்து இழிந்து* வந்து நுந்து சந்தனம்*
குலைத்து அலைத்து இறுத்து எறிந்த* குங்குமக் குழம்பினோடு* 
அலைத்து ஒழுகு காவிரி* அரங்கம் மேய அண்ணலே|

086. திவ்ய ப்ரபந்தம் - 806 - உன் பாதங்களை என் மனத்தில் தங்க வைத்தாயே!
திருச்சந்த விருத்தம் - ஆறாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் (55)
மன்னு மாமலர்க் கிழத்தி* வைய மங்கை மைந்தனாய்* 
பின்னும் ஆயர் பின்னை தோள்* மணம் புணர்ந்து அது அன்றியும்*
உன்ன பாதம் என்ன சிந்தை* மன்ன வைத்து நல்கினாய்* 
பொன்னி சூழ் அரங்கம் மேய* புண்டரீகன் அல்லையே|

087. திவ்ய ப்ரபந்தம் - 844 - அம்பு எய்த வில்லி ராமன்
திருச்சந்த விருத்தம் - பத்தாம் திருமொழி - மூன்றாம் பாசுரம் (93)
சுரும்பு அரங்கு தண் துழாய்* துதைந்து அலர்ந்த பாதமே* 
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு* இரங்கு அரங்க வாணனே*
கரும்பு இருந்த கட்டியே!* கடல் கிடந்த கண்ணனே* 
இரும்பு அரங்க வெஞ்சரம்* துரந்த வில் இராமனே|

088. திவ்ய ப்ரபந்தம் - 870 - நின்னை நினைந்தால் வாட்டம் நீங்கும்
திருச்சந்த விருத்தம் - பன்னிரெண்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (119)
பொன்னி சூழ் அரங்கம் மேய* பூவை வண்ண! மாய! கேள்* 
என்னது ஆவி என்னும்* வல்வினையினுட் கொழுந்து எழுந்து*
உன்ன பாதம் என்னநின்ற* ஒண் சுடர்க் கொழு மலர்* 
மன்ன வந்து பூண்டு* வாட்டம் இன்றி எங்கும் நின்றதே| (2)

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment