||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் – 3 - இராமனைப் பாடு
திருப்பல்லாண்டு - மூன்றாம் பாசுரம்
வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல்*
வந்து மண்ணும் மணமும் கொண்மின்*
கூழாட்பட்டு நின்றீர்களை*
எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்*
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள்*
இராக்கதர் வாழ்*
இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்குப்*
பல்லாண்டு கூறுதுமே|
இது தொடக்கமாக மூன்று பாசுரங்களில் இவ்வுலக இன்பத்தை விரும்புமவர்கள், ஆத்மாவை அனுபவிக்க விரும்புமவர்கள் மற்றும் பகவத் கைங்கர்யத்தை விரும்புமவர்கள் ஆகிய மூன்று வர்க்கத்தினரையும் தன்னுடன் சேர்ந்து எம்பெருமானுக்கு மங்களாசாஸனம் செய்ய அழைக்கிறார். இப்பாசுரத்தில், பகவத் கைங்கர்யத்தை விரும்புமவர்களை அழைக்கிறார்.
- வாழ் ஆள் - கைங்கர்யம் பண்ண
- பட்டு - தகுதியுடையவர்களாக
- நின்றீர் - அடிமையாகி
- உள்ளீரேல் வந்து - இருக்க விரும்பினீர்களானால்
- மண்ணும் - உற்சவத்திற்கு மண் சுமந்து
- மணமும் - உத்ஸவத்துக்கு அபிமாகிகளாக
- கொண்மின் - இருங்கள்
- கூழாட்பட்டு - உணவுக்காக அடிமைகளாக
- நின்றீர்களை - நிற்கும் உங்களை
- எங்கள் குழுவினில் - எங்களுடைய கோஷ்டியிலே
- புகுதலொட்டோம் - நுழைய விட மாட்டோம்
- நாங்கள் - நாங்களோவெனில்
- ஏழு ஆள் காலும் - ஏழு தலைமுறைகளிலும்
- பழிப்பு இலோம் - ஒருவகைக் குற்றமும் இல்லாமலிருப்பவர்கள்
- இராக்கதர் வாழ் - அரக்கர்கள் வாழும்
- இலங்கை - இலங்கை
- பாழ் ஆள் ஆக - வேரோடே அழிந்து போகும் படி
- படை - வாநர சேனையைக் கொண்டு
- பொருதானுக்கு - போர் செய்த பெருமானுக்கு
- பல்லாண்டு கூறுதுமே - பல்லாண்டு பாடுகிறவர்களாய் இருக்கின்றோம்
ஆழ்வார் அக்கறையுடன் எல்லோரையும் எம்பெருமானை வழிபட அழைக்கிறார். கைங்கர்யமாகிற வாழ்ச்சியை ஆசைப்படுபவர்களானால், விரைவாக வந்து, எம்பெருமானின் உத்ஸவத்துக்கு/ கைங்கர்யத்துக்கு மண் எடுப்பது, விருப்பத்துடன் இருப்பது ஆகியவற்றைச் செய்யுங்கள். சோற்றுக்காக ஆசைப்படுபவர்களை எங்கள் கூட்டத்தில் நாங்கள் சேர்ப்பதில்லை. நாங்கள் பல தலைமுறைகளாக கைங்கர்யத்தைத் தவிர வேறு விஷயங்களை ஆசைப்படும் குற்றம் அற்றவர்கள். ராக்ஷஸர்கள் வாழ்ந்த இலங்கையில் இருந்த எதிரிகள் அழியும்படி வில்லெடுத்துப் போர் புரிந்தவனுக்கு நாங்கள் மங்களாசாஸனம் செய்பவர்கள். நீங்களும் எங்களுடன் வந்து பல்லாண்டு பாடுங்கள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment