||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
001. திருவரங்கம்
ஸ்ரீரங்கம் - திருச்சி
முதலாவது திவ்ய க்ஷேத்ரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 249 - 7
தொண்டரடிப்பொடி ஆழ்வார்
110. திவ்ய ப்ரபந்தம் - 893 - மாசற்றார் மனத்தில் உள்ளான் அரங்கன்
திருமாலை - மூன்றாம் திருமொழி - இரண்டாம் பாசுரம் (22)
பேசிற்றே பேசலல்லால்* பெருமை ஒன்று உணரலாகாது*
ஆசற்றார் தங்கட் கல்லால்* அறியல் ஆவானும் அல்லன்*
மாசற்றார் மனத்துளானை* வணங்கி நாம் இருப்பதல்லால்*
பேசத் தான் ஆவதுண்டோ?* பேதை நெஞ்சே! நீ சொல்லாய்|
111. திவ்ய ப்ரபந்தம் - 894 - அரங்கனை எப்படி மறக்க முடியும்?
திருமாலை - மூன்றாம் திருமொழி - மூன்றாம் பாசுரம் (23)
கங்கையில் புனிதம் ஆய* காவிரி நடுவு பாட்டு*
பொங்கு நீர் பரந்து பாயும்* பூம் பொழில் அரங்கம் தன்னுள்*
எங்கள் மால் இறைவன் ஈசன்* கிடந்ததோர் கிடக்கை கண்டும்*
எங்ஙனம் மறந்து வாழ்கேன்* ஏழையேன் ஏழையேனே|
112. திவ்ய ப்ரபந்தம் - 895 - மனமே! காலத்தை வீணாக்காதே
திருமாலை - மூன்றாம் திருமொழி - நான்காம் பாசுரம் (24)
வெள்ள நீர் பரந்து பாயும்* விரி பொழில் அரங்கம் தன்னுள்*
கள்வனார் கிடந்த வாறும்* கமல நன் முகமும் கண்டும்*
உள்ளமே! வலியைப் போலும்* ஒருவனென்று உணர மாட்டாய்*
கள்ளமே காதல் செய்து* உன் கள்ளத்தே கழிக்கின்றாயே|
113. திவ்ய ப்ரபந்தம் - 896 - கடல் வண்ணா! எனக்கு அருள் செய்
திருமாலை - மூன்றாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் (25)
குளித்து மூன்றனலை ஓம்பும்* குறி கொள் அந்தணமை தன்னை*
ஒளித்திட்டேன் என் கண்ணில்லை* நின் கணும் பத்தனல்லேன்*
களிப்பதென் கொண்டு நம்பீ!* கடல் வண்ணா! கதறுகின்றேன்*
அளித்தெனக்கு அருள் செய் கண்டாய்* அரங்கமா நகருளானே|
114. திவ்ய ப்ரபந்தம் - 897 - நான் ஏன் பிறந்தேன்?
திருமாலை - மூன்றாம் திருமொழி - ஆறாம் பாசுரம் (26)
போதெல்லாம் போது கொண்டு* உன் பொன்னடி புனைய மாட்டேன்*
தீதிலா மொழிகள் கொண்டு* உன் திருக்குணம் செப்ப மாட்டேன்*
காதலால் நெஞ்சம் அன்பு* கலந்திலேன் அது தன்னாலே*
ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே!* என் செய்வான் தோன்றினேனே|
115. திவ்ய ப்ரபந்தம் - 898 - அரங்கனுக்கு அடிமை செய்யத் தயங்குகின்றேனே!
திருமாலை - மூன்றாம் திருமொழி - ஏழாம் பாசுரம் (27)
குரங்குகள் மலையை தூக்கக்* குளித்துத் தாம் புரண்டிட்டு ஓடி*
தரங்க நீர் அடைக்கல் உற்ற* சலமிலா அணிலும் போலேன்*
மரங்கள் போல் வலிய நெஞ்சம்* வஞ்சனேன் நெஞ்சு தன்னால்*
அரங்கனார்க்கு ஆட் செய்யாதே* அளியத் தேன் அயர்க்கின்றேனே|
116. திவ்ய ப்ரபந்தம் - 899 - அரங்கனுக்கு அடியனாகாமல் ஏன் இருக்கின்றேன்?
திருமாலை - மூன்றாம் திருமொழி - எட்டாம் பாசுரம் (28)
உம்பரால் அறியலாகா* ஒளி உளார் ஆனைக்கு ஆகி*
செம் புலால் உண்டு வாழும்* முதலை மேல் சீறி வந்தார்*
நம் பரமாயது உண்டே?* நாய்களோம் சிறுமை ஓரா*
எம்பிராற்கு ஆட் செய்யாதே* என் செய்வான் தோன்றினேனே|
117. திவ்ய ப்ரபந்தம் - 900 - உன்னைத் தவிர ரக்ஷகர் யார்?
திருமாலை - மூன்றாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (29)
ஊரிலேன் காணியில்லை * உறவு மற்றொருவர் இல்லை*
பாரில் நின் பாத மூலம்* பற்றிலேன் பரம மூர்த்தி*
காரொளி வண்ணனே! (என்)* கண்ணனே! கதறுகின்றேன்*
ஆருளர் களை கண் அம்மா!* அரங்கமா நகருளானே|
118. திவ்ய ப்ரபந்தம் - 901 - எனக்கு இனி என்ன கதி?
திருமாலை - மூன்றாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (30)
மனத்திலோர் தூய்மை இல்லை* வாயிலோர் இன் சொல் இல்லை*
சினத்தினால் செற்றம் நோக்கித்* தீவிளி விளிவன் வாளா*
புனத் துழாய் மாலையானே!* பொன்னி சூழ் திருவரங்கா*
எனக்கினிக் கதியென் சொல்லாய்* என்னை ஆளுடைய கோவே|
119. திவ்ய ப்ரபந்தம் - 902 - வீணாகப் பிறவி கொடுத்தாய்!
திருமாலை - நான்காம் திருமொழி - முதலாம் பாசுரம் (31)
தவத்துளார் தம்மில் அல்லேன்* தனம் படத்தாரில் அல்லேன்*
உவர்த்த நீர் போல* என் தன் உற்றவர்க்கு ஒன்றுமல்லேன்*
துவர்த்த செவ்வாயி னார்க்கே* துவக்கு அறத் துரிசன் ஆனேன்*
அவத்தமே பிறவி தந்தாய்* அரங்கமா நகருளானே|
120. திவ்ய ப்ரபந்தம் - 903 - உன்னைக் காண வழி தெரியவில்லையே!
திருமாலை - நான்காம் திருமொழி - இரண்டாம் பாசுரம் (32)
ஆர்த்து வண்டலம்பும் சோலை* அணி திருவரங்கம் தன்னுள்*
கார்த் திரள் அனைய மேனிக்* கண்ணனே! உன்னைக் காணும்*
மார்க்கம் ஒன்றறிய மாட்டா* மனிசரில் துரிசனாய*
மூர்க்கனேன் வந்து நின்றேன்* மூர்க்கனேன் மூர்க்கனேனே|
121. திவ்ய ப்ரபந்தம் - 904 - உன் அருள் பெற வந்து நின்றேன்
திருமாலை - நான்காம் திருமொழி - மூன்றாம் பாசுரம் (33)
மெயெல்லாம் போக விட்டு* விரி குழலாரில் பட்டு*
பொயெல்லாம் பொதிந்து கொண்ட* போழ்க்கனேன் வந்து நின்றேன்*
ஐயனே! அரங்கனே!* உன் அருள் என்னும் ஆசை தன்னால்*
பொய்யனேன் வந்து நின்றேன்* பொய்யனேன் பொய்யனேனே|
122. திவ்ய ப்ரபந்தம் - 905 - எனது நினைவை அறிவாய்
திருமாலை - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம் (34)
உள்ளத்தே உறையும் மாலை* உள்ளுவான் உணர்வு ஒன்றில்லா*
கள்ளத் தேன் நானும் தொண்டாய்த்* தொண்டுக்கே கோலம் பூண்டு*
உள்ளுவார் உள்ளிற் றெல்லாம்* உடனிருந்து அறிதியென்று*
வெள்கிப் போய் என்னுள்ளே நான்* விலவறச் சிரித்திட்டேனே|
123. திவ்ய ப்ரபந்தம் - 906 - உன்னையே நான் சேவிப்பேன்
திருமாலை - நான்காம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் (35)
தாவி அன்று உலகமெல்லாம்* தலை விளாக் கொண்ட எந்தாய்*
சேவியேன் உன்னை அல்லால்* சிக்கெனச் செங்கண் மாலே*
ஆவியே! அமுதே! என் தன்* ஆருயிரனைய எந்தாய்*
பாவியேன் உன்னை அல்லால்* பாவியேன் பாவியேனே|
124. திவ்ய ப்ரபந்தம் - 907 - உன்னைத் தானே நான் அழைக்கின்றேன்!
திருமாலை - நான்காம் திருமொழி - ஆறாம் பாசுரம் (36)
மழைக்கு அன்று வரை முன்னேந்தும்* மைந்தனே மதுரவாறே*
உழைக் கன்றே போல நோக்கம்* உடையவர் வலையுள் பட்டு*
உழைக்கின்றேற்கு* என்னை நோக்காது ஒழிவதே*
உன்னை அன்றே அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி!* அரங்கமா நகருளானே|
125. திவ்ய ப்ரபந்தம் - 908 - என் தந்தையும் தாயும் நீரே
திருமாலை - நான்காம் திருமொழி - ஏழாம் பாசுரம் (37)
தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ்* திருவரங்கத்துள் ஓங்கும்*
ஒளியுளார் தாமே அன்றே* தந்தையும் தாயுமாவார்*
எளியதோர் அருளும் அன்றே* என் திறத்து எம்பிரானார்*
அளியன் நம் பையல் என்னார்* அம்மவோ கொடியவாறே|
126. திவ்ய ப்ரபந்தம் - 909 - நானும் வேஷம் போட வேண்டுமா?
திருமாலை - நான்காம் திருமொழி - எட்டாம் பாசுரம் (38)
மேம் பொருள் போக விட்டு* மெய்ம்மையை மிக உணர்ந்து*
ஆம்பரி சறிந்து கொண்டு* ஐம்புலன் அகத்தடக்கி*
காம்பறத் தலை சிரைத்து* உன் கடைத் தலை இருந்து வாழும்*
சோம்பரை உகத்தி போலும்* சூழ் புனல் அரங்கத்தானே| (2)
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment