||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||
குருஷேத்திரத்தில் நடக்கும் போர்களத்துக் காட்சிகளைத் திருதராஷ்டிரனுக்கு, ஸஞ்ஜயன் விவரிக்கிறான். துரியோதனன் அங்கே அணிவகுத்து நிற்கும் இரண்டு படைகளையும் ஒப்பிட்டு, தன் படை அளவிடக்கரிதென பெருமை கொள்கிறான். போர் சங்குகள் முழுங்கப் போர் தொடங்க இருக்கையில் அர்ஜுனன் தன் தேரை இரண்டு படைக்களுக்கு நடுவே நிறுத்த சொல்கிறான். தன் முன்னால் போர் புரிய உள்ள கெளரவப் படைகளைப் பாச பந்தத்தினால் எதிர்களாகப் பார்க்காமல் உறவினர்களாகப் பார்க்கிறான்.
ஏர்க்காலிலும், தன் காலிலும் மிதிபட்டு இறக்கும் புழுக்களையும், பயிர்களையும் நாசம் செய்யும் பூச்சிகளையும் கொல்வது பாவமென்று விவசாயம் செய்ய மறுக்கின்ற விவசாயியைப் போல், பட்டுப் புழுக்களைக் கொள்வது பாவமென்று தன் பணியைச் செய்ய மறுக்கின்ற நெசவாளியைப் போல், தவறு செய்யும் உறவினர்களைத் தண்டிக்க மறுக்கும் நீதிபதியைப் போல், தப்பிக்க விடும் காவலாளியைப் போல், தன் கடமையை மறந்து, கடமையைத் தவிர்க்க காரணங்களை கற்பிக்கும் சராசரி மனிதனைப் போல், உறவினர்களைத் தானே கொல்லப் போவதாக நினைத்து, அதனால் பாவம் வரும் என்று அஞ்சி, ராஜ போகம் வேண்டி, குலநாசம் செய்து, அதனால் வரும் பாவங்களினால் நரகத்திற்குச் செல்ல தான் விரும்பவில்லை. அதை விட நிராயுதபானியாகக் கொல்லப் படுவதே மேல். இதனால் மூவுலகமே கிடைத்தாலும் தனக்கு வேண்டாம் என்று ஒரு போர் களத்தில் போர் வீரனுக்குப் பொருந்தாத நியாங்களை கூறிக் கவலையுடன் உடல் தளர, ஏந்திய வில் கை நழுவ அப்படியே தேர் தட்டிலேயே அமர்ந்து விடுகிறான். விஷாத யோகம் ஒரு போர்வீரனின் போர்களத்து தயக்கம் .
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment