About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 10 August 2023

ஸ்ரீமத் பாகவதம் - 1.1.6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² ப்ரத²ம: அத்⁴யாய꞉||
||நைமிஷ க்ஷேத்ரே ஸ்ரீமத் பாகவத விஷயே  
ஸூதம், ப்ரதி ஸொ²னகாதி முனீநாம் ப்ரஸ்ந:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||முதல் அத்யாயம்|| 
||ஞானிகளின் கேள்விகள்||

ஸ்லோகம் - 1.1.6

ருஷய ஊசு꞉
த்வயா க²லு புராணாநி 
ஸேதி ஹாஸாநி சாநக⁴|
ஆக்²யா தாந் யப்ய தீ⁴தாநி 
த⁴ர்ம ஸா²ஸ்த்ராணி யாந் யுத||

  • ருஷய ஊசுஹு - முனிவர்கள் சொன்னார்கள்
  • அநக⁴ - ஹே பாபமற்றவரே
  • த்வயா - உம்மால்
  • ஸேதி ஹாஸாநி - பாரதம் முதலான இதிஹாஸங்களோடு கூடிய 
  • புராணாநி உத - புராணங்களும்
  • யாநி த⁴ர்ம ஸா²ஸ்த்ராணி ச - எந்த தர்ம சாஸ்திரங்கள் உண்டோ அவைகளும்
  • அதீ⁴தாநி - கற்கப் பட்டன

  • அபி ஆக்²யா தாநி க²லு - மேலும் உபதேசிக்கவும் செய்யப்பட்டன

முனிவர்கள் சொன்னார்கள்: முற்போக்கான வாழ்க்கைக்கு சரியான வழி காட்டுதல்களைக் கொடுக்கும் வேதங்கள், சரித்திரங்கள் (இதிஹாசம்) ஆகியவற்றுடன், விளக்கக் கதைகளுடன் (புராணம்) வேதங்களுக்கு துணைப் பொருட்களைச் சொன்னீர்கள். இவை அனைத்தும் நீங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி விளக்கி அனைத்து தீமைகளிலிருந்தும் விடுவித்துள்ளீர்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment