||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 56
அஜோ மஹார் ஹ: ஸ்வாபா⁴வ்யோ
ஜிதா மித்ர: ப்ரமோ த³ந:|
ஆநந்தோ³ நந்த³நோ நந்த³:
ஸத்ய த⁴ர்மா த்ரிவிக்ரம:||
- 524. அஜோ - அ எனும் அகாரத்தால் பேசப்படும் நாராயணன். அவர் பிறக்காதவர், மாறாதவர்.
- 525. மஹார் ஹஸ் - வழிபாட்டுக்கு மிக உரியவர். மகாபூஜைக்கு தகுதியானவர், பிரபத்தி (சரணடைதல்) பெற தகுதியானவர்.
- 526. ஸ்வாபா⁴வ்யோ - தியானிக்கத் தக்கவர். ஆரம்பமும் முடிவும் இல்லாதவர். அவரது இயல்பில் வேரூன்றிய அவர் நித்யமானவர்.
- 527. ஜிதா மித்ரஃ - பகைவர்களை வென்றவர். கோபம், பேராசை, காமம், பொறாமை போன்ற உள் (அகம்) எதிரிகளும் மற்றும் அசுரர்களைப் போன்ற வெளிப் புறம்பான எதிரிகள் அனைவரையும் அவர் வென்றார்.
- 528. ப்ரமோ த³நஹ - மகிழ்பவர். பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பவர். தன்னை உணர்ந்து கொள்வதற்கான தடைகளை நீக்கி பேரின்பத்தை அளித்து தனது பக்தர்களை மகிழ்விக்கிறார்.
- 529. ஆநந்தோ³ - ஆனந்தமே வடிவானவர்.
- 530. நந்த³நோ - ஆனந்தம் அளித்து நிரப்புபவர். பக்தர்களுக்கு தூய மகிழ்ச்சி அளிப்பவர்.
- 531. நந்த³ஸ் - எல்லாம் நிரம்பியிருப்பவர். பக்தர்களுக்கு பேரின்பக் கோபுரமாக இருப்பவர். ஆனந்தமான பொருட்களால் நிறைந்தவர்.
- 532. ஸத்ய த⁴ர்மா - தர்மத்தை உண்மையுடன் நடத்திச் செல்பவர். தனது தர்மத்தை உண்மையாகச் செய்யும் (நிறைவேற்றும்) பேரின்ப காரியங்களால் நிறைந்தவர்.
- 533. த்ரிவிக்ரமஹ - மூவுலங்களையும் அளந்து கொண்டவர். வாமன அவதாரத்தில் திரிவிக்கிரமனாக மூன்று பிரமாண்டங்களை எடுத்து மூன்று உலகங்களையும் மறைத்தார். மூன்று வேதங்களிலும் வியாபித்திருப்பவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment