About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 20 September 2023

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - நாற்பத்தி ஏழாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

047 அக்கரைக்கே விட்டேனோ குஹப் பெருமாளைப் போலே|

குகன், கங்கை ஆற்றின் கரையில் இருந்த சிருங்கிபேரபுரம் என்ற பகுதியின் நிசாதார்களின் வேடுவ மன்னர் ஆவார். பொய் நீங்கிய மனத்தினன். இராமனிடம் அன்பு கெள்ளும் குணத்தினன். யானைக் கூட்டம் போன்ற சுற்றத்தினரைப் பெற்றவன். அவன் ஆயிரம் ஓடங்களுக்குத் தலைவன்.


இராமன், சீதை மற்றும் இலக்குமணனுடன் 14 ஆண்டு வனவாசத்தை கழிக்கும் பொருட்டு, அயோத்தி நகரத்தை விட்டு வெளியேறி, கங்கை ஆற்றை கடப்பதற்கு தேரில் வந்து கொண்டிருப்பதை அறிந்த குகன், தன் படை வீரர்களிடம், வருபவர்களை வரவேற்க உரிய ஏற்பாடுகளை செய்ய வைத்தான். ராமருடன் வரும் மக்கள், மந்திரிகள் என அனைவருக்கும் உண்ண உணவும், தங்க இடமும் தயார் செய்து வைத்தான்.


இராமன் சிரிங்கிபேரபுரம் வந்ததும், அவர் பாதங்களில் விழுந்து வணங்கினான். கானகம் சென்று வாழ்வதற்கு பதில், இங்கு தங்கிக்கொள்ளுமாறு வேண்டினான். 'உங்களை வைத்துத் தாங்க, நாங்கள் இருக்கிறோம். விளையாட மான்களும், கங்கை நதியும் உண்டு. நீங்கள் இங்கேயே தங்கி இருக்கலாம்" என்றான். புன்முறுவலுடன் அதை கேட்ட இராமன், “உன் நண்பன் தந்தைக்கும் தாய்க்கும் கொடுத்த சத்தியத்தை மீற விடுவாயா? இரவாகிவிட்டதால் இன்றிரவு இங்கு தங்கிக் கொள்கிறோம். நாளை காலை கங்கையை கடப்போம். நீ எங்களை கங்கையின் தென் கரையில் கொண்டு சேர்ப்பாய். அங்கு இருக்கும் முனிவர்களுடன் எங்கள் வாழ்வை மேற்கொண்டு விடுகிறோம்.”, என்றார். அன்று இரவு இராமர் முதலானவர்களுக்கு உண்பதற்கு குகன் உணவு வழங்கி உபசரித்தார்.


மறுநாள் காலையில் கங்கை ஆற்றை கடக்க, குகன் தனது படகில் சீதை மற்றும் இராம-இலக்குமணர்களை அமர வைத்து, கங்கை ஆற்றின் மறு கரை வரை படகோட்டிச் சென்றார். பின்னர் இராமர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, குகன் சித்திரகூடம் செல்லும் வழி கூறினார். ராமனும் குகனுடன் ஐவரானோம் என குகனை தன் சகோதரனாக ஏற்கிறான்

வனவாசம் சென்ற இராமரை காண்பதற்கு கங்கை ஆற்றின் கரைக்கு வந்த பரதன் முதலானவர்கள் கங்கை ஆற்றைக் கடக்க காத்து நிற்க, அடியார்களுக்கு செய்யும் சேவையாய் கருதி, அவர்கள் ஆற்றை கடக்க உதவி புரிந்தான் குகன்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "குகன் போல் சேவை செய்து, பரமாத்மாவையும், அவரது அடியார்களையும் ஆற்றை கடக்க உதவி புரிந்தேனா? அந்த பாக்கியம் கிடைத்ததா இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment