||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
கிருஷ்ணரின் யோசனை|
தாம் அவதாரம் எடுத்த நோக்கம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்று கிருஷ்ணர் நினைக்க ஆரம்பித்தார். அரசர்களின் உருவத்தில் இருன்ஷா அரக்கர்களை அழிக்கத் தான் அவர் வந்தார்.
கிருஷ்ணராகப் பிறப்பதற்கு முன்பு அவர் பகவான் நாராயணனாக இருந்தார். அப்பொழுது தம் உதவிக்காக தேவர்கள் அனைவரையும் பூலோகத்தில் யாதவர்களாகப் பிறக்கும்படி சொன்னார். கிருஷ்ணர் வந்த காரியம் முடிந்ததும், அவர்களும் தேவலோகத்துக்குத் திரும்ப வேண்டியவர்கள்தாம்.
அவர்கள் தேவர்களானதாலும், அவர்கள் எப்பொழுதும் கிருஷ்ணனுடனே இருந்ததனாலும், யாராலும் அவர்களைக் கொல்ல முடியாது. கிருஷ்ணர் இவ்விதம் நினைக்க ஆரம்பித்தார். "நான் போனதும் துவாபரயுகம் முடிந்து கலியுகம் ஆரம்பிக்கும். கலியுகத்தில் இந்த யாதவர்கள் தங்கள் தர்மங்களை மறந்து எல்லோருக்கும் இடைஞ்சலாக இருப்பார்கள். ஆகவே நான் வைகுண்டத்திற்குத் திரும்புவதற்கு முன்பு யாதவர்கள் இறந்தாக வேண்டும். அவர்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ளும் ஒரு நிலைமையை நான் ஏற்படுத்துவேன். அது அவர்களை அழித்துவிடும்".
இதைக் சாதிக்க அவர்களுக்குப் பிராம்மண சாபம் ஏற்படுவது தான் சரியான வழி என்று கிருஷ்ணர் நினைத்தார். ஆகவே ஒரு யாகத்திற்குப் பல ரிஷிகளை அவர் துவாரகைக்கு அழைத்தார்.
இந்த ரிஷிகளைக் கிருஷ்ணரும் பலராமரும் மிகவும் மரியாதையுடன் வரவேற்றார்கள். அவர்களில் விசுவாமித்திரர், அஸிதர், கண்வர், துர்வாசர், நாரதர் முதலானோர் இருந்தனர். அவர்கள் எல்லோரையும் கிருஷ்ணர் அரண்மனைத் தோட்டத்தில் தங்க வைத்தார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment