||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 118 - சங்கமிடத்தான்
பெரியாழ்வார் திருமொழி
இரண்டாம் பத்து - முதலாம் திருமொழி - முதலாம் பாசுரம்
மெச்ச ஊது சங்கம் இடத்தான்* நல் வேய் ஊதி*
பொய்ச் சூதில் தோற்ற* பொறை உடை மன்னர்க்காய்*
பத்து ஊர் பெறாது அன்று* பாரதம் கை செய்த*
அத் தூதன் அப்பூச்சி காட்டுகின்றான்*
அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்*
- மெச்ச - அனைவரும் கொண்டாடும்படி
- ஊது - ஊதுகின்ற
- சங்கம் - ஸ்ரீ பாஞ்ச ஜந்யத்தை
- மிடத்தான் - இடக் கையில் ஏந்தியுள்ளவனும்
- நல்வேய் - நல்ல வேய்ங் குழலை
- ஊதி - ஊதுபவனும்
- பொய் சூதில் - க்ருத்ரிமமான சூதிலே
- தோற்ற - தம்முடைய சொத்துக்களை எல்லாம் இழந்தவர்களாய்
- பொறை உடை - பொறுமை சாலிகளான
- மன்னர்க்கு - பாண்டவர்கட்கு
- ஆய் - தான் எல்லா வகைத் துணையுமாய் இருந்து துர்யோதநாதிகளிடத்துத் தூது போய்க் கேட்டுப் பார்த்தும் அவர்களிடத்தினின்றும்
- பத்து ஊர் - பத்து ஊரையும்
- பெறாது - அடைய முடியாமல்
- அன்று - அக் காலத்திலே
- பாரதம் - பாரத யுத்தத்தை
- கை செய்த - அணி வகுத்துச் செய்து
- அத் தூதன் - அந்தப் பாண்டவ தூதனான கண்ணன்
- அப் பூச்சி காட்டுகின்றான் - அப்படிப் பட்ட மிகவும் பயங்கரமான பூச்சி காட்டுகின்றான்;
- அம்மனே - அம்மா!
- அப் பூச்சி காட்டுகின்றான் - தலை கேசம் வைத்து மறைத்து, கண்ணை புரட்டி, சங்கு சக்கரம் காட்டி அப்பூச்சி காட்டுதல்
அனைவராலும் போற்றும்படி ஊதும் பாஞ்சஜந்யத்தை இடக்கையில் பிடித்தவனும், நல்ல மூங்கிலால் செய்யப்பட்ட குழலை ஊதியும், முன்பொரு சமயம், பொய்ச் சூதில் பாண்டவர்கள் சொத்துக்களை இழந்து, பத்து ஊர்களை மட்டுமே துர்யோதனாதிகளிடம் கேட்டும் பெற முடியாமல் துன்பப்பட்ட போது, பாண்டவர்களுக்குத் துணையாய் நின்று பாரதப் போர் செய்த அப்பாண்டவத் தூதனான கண்ணன், ஆச்சர்யமாக பயமுறுத்தி விளையாடுகின்றான்!
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment